அதிகரித்துவரும் ஷீஆக்களின் ஊடுருவலும் ஆதிக்கமும்.

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
டந்த ஒரு தசாப்தகாலமாக ஷீஆக்களின் ஊடுறுவல் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. தூய இஸ்லாமிய சிந்தனையை பாழ்படுத்தும் இந்த ஷீஆக்கள், உலகளாவிய ரீதியில் பல தில்லுமுல்லுகளை செய்து வருகின்றனர்.

இலங்கையில் ஷீஆக்களின் ஊடுறுவல் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பிவரும் நம் சகோதரர்கள் சிலர் ஷீஆக்களாக திரும்பி  வருவது மிக கவலையான விடயமாகும். மேலும் இன்று அந்த சகோதர்கள் சில இணையத்தளங்களில் தம்மை பகிரங்கமாக  ஷீஆ என அறிமுகப் படுத்தி வருகின்றனர். இவர்கள் இன்று எந்த அளவு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால்,

சில நாட்களுக்கு முன்பு (01/10) இலங்கையில் ஒரு மௌலவியிற்கு இந்த ஷீஆ மதத்தை சேர்ந்த ஒரு நபர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு  “நீங்கள் தானே குறித்த இந்த மஸ்ஜிதில் இந்த வெள்ளிக் கிழமை ஜும்மா பிரசங்கம்  செய்ய போகிறீர். சென்ற வாரம் ஒரு மௌலவி எங்களுக்கு எதிராக ஜும்மா பிரசங்கம் செய்தார். அவரை நாம் பிடிக்க வேண்டிய இடத்தில் பிடித்துக்கொள்வோம். உங்களது கடந்த கால உரைகள் எமக்கு எதிராக இருக்கிறது.” கவனமாக இருக்கவும் என எச்சரித்துள்ளார்.

ஷீஆக்கள் என்பவர்கள் இலங்கையில் சிறு தொகையினரே. அவர்களால் என்ன செய்ய முடியும். இவர்கள் குறித்து அலட்டிக்கொள்வது தேவை தானா? மிம்பர் மேடைகளில் இவர்கள் குறித்து பேச வேண்டுமா? என்று சில மக்கள் நினைக்கின்றனர்.

தெளிவாக விளங்குங்கள் :ஷீஆக்களிடம் அவர்கள் குறித்து கேட்டால் அவர்கள் சொல்வார்கள், எங்களுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, நாங்களும் முஸ்லிம்கள் தான், நாங்களும் குர்ஆனைத்தான் பின்பற்றுகிறோம், நாங்களும் ஹதீஸை பின்பற்றுகிறோம், ஆனால் நாங்கள் அலி(ரலி) அவர்களை மதிக்கிறோம், அலி(ரலி) அவர்களை மதிக்க கூடாதா? அலி(ரலி) அவர்களின் சிறப்பை கூறிக்கொண்டே போவார்கள். (அஹ்லுஸ்சுன்னா வல் ஜமாஅத்தை சேர்ந்த முஸ்லிம்களாகிய நாங்களும் அலி(ரலி) அவர்களை ஏற்றுக் கொள்கின்றோம்,  நாங்களும் அலி(ரலி) அவர்களை மதிக்கின்றோம்).  எங்களையும் உங்களையும் யஹூதி நசரனிகள் பிரித்து வைத்துள்ளனர் என்ற ஒரு கதையை சொல்வார்கள்.

உண்மையில் இவர்கள் சொல்லும் அலி(ரலி) அவர்கள், நாங்கள் சொல்லும் அலி(ரலி) அல்ல. ஷீஆக்கள் அலி(ரலி)  அவர்களை நபிமார்களை விட அதிகமாக அந்தஸ்து கொடுத்து, நபிமார்கள் ஒவ்வொருவருடைய காலத்திலும் அலி(ரலி) அவர்களை சம்பந்தப்படுத்தி வரலாறு என்று திரிபு படுத்தி கூறுகிறார்கள். அவர்களுடைய  3௦௦ க்கு மேற்பட்ட புத்தகங்களில்  இது குறித்துப் பேசி இருக்கின்றனர். மேலும் கண்ணியத்துக்குரிய சஹாபாக்களை இகழ்ந்தும், உம்மஹாதுல் முஃமீன்கள் சிலரை இகழ்ந்தும் வருகின்றனர். இன்னும் பல.........

இலங்கையில் ஷீஆக்கள்......
தரீக்கா சகோதரர்களிடம் சென்று நாங்களும் நீங்களும் ஒன்று. இருவரும் நபி(ஸல்) அவர்கள் மேல் அன்பு வைக்கிறம். வஹாபிகள் ஒன்று சேர்ந்து  எங்களிருவரையும் இல்லாமல் ஆக்கபோகின்றனர், எதிர்க்கின்றனர் என்றும், இன்னும் சிலரிடம் சென்று நாங்கள் இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க போகிறோம், இதற்கு இஸ்லாமிய புரட்சிதான் ஒரே வழி என்றும், வேறு சிலரிடம் சென்று தக்வாதான் முக்கியம், யஹூதிகள் எங்களை பிரித்து வைத்திருக்கின்றனர் என்றும்,


பெளத்த மத சகோதரர் ஒருவரிடம் சென்று “ஆரியர்கள் என்றால் வெளிநாட்டவர்கள், ஆரியர்கள் பாரசீகத்திலிருந்து வந்து இருக்கின்றனர், ஆரியர்கள் எல்லாரும் ஷீஆக்கள், ஆகவே நீங்களும் நாங்களும் ஒரே பரம்பரை தான். பழைய, பரம்பரை முஸ்லிம்கள் ஷீஆக்கள்தான், ஏனைய முஸ்லிம்கள் தான் அடிப்படைவாதிகள் ” இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பொருத்தமானவாறு கதைகளை சொல்லி வருகின்றனர்.

இலங்கையில் ஷீஆக்களின் சதி வலைகள்:
  • உண்மையில் இலங்கையில் ஷீஆக்களின் சதி வலையில் அதிகம் சிக்கி இருப்பவர்கள் கல்விமான்களும் சில உலமாக்களுமே. அது தான் அவவர்களின் இலக்கும் கூட.
  • இவர்களது பிரதானமான இலக்கு முழு முஸ்லிம் சமூகமுமே. இதனை அடையவே அவர்கள் மேற்சொன்னவர்களை இலக்கு வைத்து காய் நகர்த்துகின்றனர்.
  • இன்று பிராந்திய ரீதியில் இவர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • பாடசாலைகளும் மாணவச் செல்வங்களையும் இவர்களது வலையில் சூட்ஷுமமாக சிக்க வைத்து வருகின்றனர்...
  • இலங்கையில் இவர்களுடைய பல அமைப்புக்கள், மற்றும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஈரான் நாட்டின் தூதுவராலயம் மூலம் இவர்கள் போஷிக்கப் படுகின்றனர்.
  • புலமைப் பரிசில்கள் என்றும், போட்டி நிகழ்ச்சிகள் என்றும், நிவாரணப் பணிகள் என்றும், உதவிகள் என்றும், மனிதாபிமான பணிகள் என்றும் ஷீஆக்கள் அவர்கள் அமைப்பை, மதத்தை எம் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
  • ஷீஆக்கள் அவர்களுடைய புத்தகங்களுக்கு அணித்துரையை நாங்கள் கண்ணியமாக பார்க்கும்  எமது உலமாக்கள் மூலமாக பெற்றுக் கொண்டு, அதை எம் மக்கள் மத்தியில் விநியோகிக்கின்றனர், எமது உலமாக்கள் சிலர் இவர்களது சதிவலை அறியாது அணிந்துரை வழங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு அவர்களது சதிவேலைகளுக்காக அதிகமான பணம் வந்து கொண்டிருக்கின்றது.

மிக கவலையான விடயம் என்னவெனில் ஷீஆக்களின்  சதிவலையில் கற்றறிந்த சில உலமாக்களும், கல்விமான்களும், ஆசிரியர்களும் சிக்கி இருப்பது தான்.

என்னுடைய தனிப் பட்ட கருத்து: ஷியாக்களும் இவர்கள் போன்றோரும் தான் முஸ்லிம்களின் முதல் எதிரி.

உலமாக்களே.... உலமா சபையினரே.... இஸ்லாமிய தஃவா இயக்கங்களே.... கல்விமான்களே....
உங்களிடம் வினயமாக ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்...

ஷீஆக்கள் பற்றியும் அவர்களது சதி வலைகள் பற்றியும்  உரத்து சொல்லி இந்த சமூகத்துக்கு விளங்கப்படுத்த வேண்டிய காலம் வந்திருக்கின்றது....

மிம்பர் மேடைகள் இது குறித்து உரத்துப்பேச வேண்டும்...

எமது மக்களை ஷீஆக்களின் வலையிலிருந்து பாதுகாக்க உங்களாலான முயற்சிகளினை மேற்கொள்ளுங்கள்...

இன்று அல்லது நாளை எமது பிள்ளைகள் அவர்கள் வழிசெல்ல மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகவே ஒவ்வொருவரும் தனதும் தனது குடும்பத்தாரும் சீரான அகீதாவை பின்பற்றி வாழ திடஉறுதிபூண்டு வாழ வேண்டும்.

(குறிப்பு: இந்த கட்டுரை இலங்கையை சேர்ந்த சில உலமாக்களின் உரைகளிலிருந்தும், தனிப்பட்ட அவதானிப்புகளிலிருந்தும் தொகுக்கப்பட்டுள்ளது )

யா அல்லாஹ், எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் சரியான  இஸ்லாமிய அகீதாவுடன் வாழ்ந்து, அதே அகீதாவுடன் மரணிக்கச் செய்வாயாக. ஆமீன்.


இதையும் பார்க்க :-
                  * சீயா இஸ்லாமிய வரலாறில் இருந்து அப்புறப் படுத்த வேண...
                  * இஸ்லாத்தில் சிறந்தது ஸலாம் கூறுவது..!!
                          * பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா.?
                          * மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்..!
                          * நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்ட... 

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget