ஸஜ்தாவுடைய வசனங்கள் ஓர் ஆய்வு..!
ஸஜ்தா திலாவா என்பது ஓதலிற்கான ஸுஜூத் என்று பொருள்படும். ஸுஜூத் செய்வதை சிலாகித்துச் சொல்லும் வசனங்கள் வரும்போது ஸுஜூது செய்வதை இது குறிக்கிறது. குர்ஆனில் ஸுஜூதை சிலாகித்து எந்த வசனங்கள் வந்தாலும் நாம் ஸுஜூது செய்யலாம். இந்த ஸஜ்தாவை நபிகளார் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகத்தில் கருத்து வேறுபாடின்றி இப்படித்தான் புரிந்துள்ளார்கள். நபியவர்கள் ஸுஜூது செய்ததாக நேரடியாக செய்திகள் உள்ள வசனங்கள் மட்டும்தான் ஸஜ்தாவுடைய வசனங்கள் என்று யாரும் புரிந்துகொள்ளவில்லை. இந்த ஸஜ்தாவிற்கு வுழூ தேவையில்லை. தக்பீர் இல்லை. ஸலாம் சொல்ல வேண்டியதில்லை. அதே நேரம் தொழுகையில் இந்த ஸஜ்தாவை செய்யும்போதும் எழும்பும் பொழுதும் தக்பீர் சொல்லலாம் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.