ஒரு பெண் கணவர் பெயரை சேர்த்து சொல்ல வேண்டுமா?

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
பெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்பதை பார்ப்போம்.
பெயர் என்ற குறியீடு ஒருவரை அடையாளப்படுத்துவதற்கான வழியாகும். அடையாளப்படுத்துதல் என்பது சில நேரம் சூழ்நிலையைப் பொருத்து மாறுபடும்.
குழந்தைகளை தந்தையின் பெயர்களை மாற்றி அடையாளப்படுத்தக் கூடாது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ فَإِن لَّمْ تَعْلَمُوا آبَاءهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ
நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர் களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (அல்குர்ஆன் 33:5)
எந்த சந்தர்பத்திலும் தந்தையின் பெயரை மாற்றி குழந்தைகளை அடையாளப்படுத்தக் கூடாது என்பதை இஸ்லாம் வலியறுத்துகின்றது. தந்தையே அறியப்படாத நிலை இருந்தாலும் வேறு யாரும் தன்னை தந்தை என்று முன்மொழியக் கூடாது என்ற தெளிவான அறிவுரை மேற்கண்ட வசனத்தில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை இன்னாரென்று அறியப்படாவிட்டால் அத்தகையோர் நமக்கு மார்க்க சகோதரர்களாக - நண்பர்களாக ஆகிவிடுவார்கள். (தந்தை மாற்றப்படவே கூடாது என்பது இஸ்லாமிய கோட்பாடுகளில் மிக முக்கிய ஒன்றாகும்).
இந்த வசனத்தின் பொருள், எல்லா சந்தர்பத்திலும் எல்லோரையும் அவர்களின் தந்தையில் பெயரை இணைத்தே அழைக்க வேண்டும் என்பதல்ல. தந்தை மாற்றப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியே தந்தைப் பெயரால் அழையுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்பதை அந்த வசனத்தை சிந்தித்தால் புரிந்துக் கொள்ளலாம்.
மற்றப்படி சூழ்நிலை, சந்தர்பம், தேவையை முன்னிட்டு நம் பெயருடன் பிற பெயர்கள் - குறியீடுகள் இணைந்தால் அதை தவறென்று இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை.
இதற்ககான ஆதாரங்களை காணலாம்
يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا
"ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (அல்குர்ஆன் 19:28)
மரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பெற்றெடுத்துக் கொண்டு அவர் சமூகத்தாரிடம் வந்தபோது அந்த மக்கள் மர்யமே.. என்று அழைக்காமல் மரியம் (அலை) அவர்களின் குடும்பம் அல்லது கோத்திரத்தில் அல்லது சொநதத்தில் இருந்த ஒரு நல்ல மனிதரை இணைத்து அவரை "ஹாரூன் சகோதரியே.." என்று அழைக்கிறார்கள். (அந்த மக்கள் அவ்வாறு அழைத்தது தவறென்று கூட்டிக்காட்டப்படவில்லை)
ஒரு பெண் தான் இன்னாரின் சகோதரி என்பதை எழுதியோ - சொல்லியோ வெளிபடுத்தலாம் என்பதை விளங்கலாம்.    
وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا اِمْرَأَةَ فِرْعَوْنَ
நம்பிக்கையாளர்களுக்கு பிஃர்அவுனுடைய மனைவியை இறைவன் உதாரணமாக்குகிறான்.
 (அல்குர்ஆன் 66:11)
وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ
ஃபிர்அவுன் மனைவி இவ்வாறு சொன்னார் (அல்குர்ஆன் 28:9)
وَقَالَ نِسْوَةٌ فِي الْمَدِينَةِ امْرَأَةُ الْعَزِيزِ تُرَاوِدُ فَتَاهَا عَن نَّفْسِهِ قَدْ شَغَفَهَا حُبًّا إِنَّا لَنَرَاهَا فِي ضَلاَلٍ مُّبِينٍ
அப்பட்டினத்தில் சில பெண்கள்; "அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்" என்று பேசிக் கொண்டார்கள்
(அல் குர்ஆன் 12:30)
திருமணமான ஒரு பெண்ணை தேவையின் நிமித்தம் அடையாளப்படுத்தும் போது இன்னாரின் மனைவி என்று - தந்தைப் பெயரைத் தவிர்த்து - சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே திருமணமான பெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்வதை தவறென்று சொல்ல முடியாது. அதே சமயம் சிலதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வஹிதா அலி (அலி என்பது கணவர் பெயரா? தந்தைப் பெயரா?) என்று தெரியவில்லை. இந்தக் குழப்பம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். அலி கணவர் என்றால் வஹிதா w/o அலி என்று எழுதுவதே மிக சரியாகும்.
உறவு முறை சுட்டிக்காட்டப்படாமல் ஒருபெயர் தன் பெயருடன் இணையும் போது அது நாம் வாழும் நாடு போன்ற இடங்களில், பதிவு ஆவனங்களில் (பாஸ்போர்ட், ரேஷன், வங்கி கணக்கு போன்றவை) பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இதையும் பார்க்க:-
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget