April 2016

                           தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
அன்பின் இஸ்லாமிய சகோரர்களே! சகோதரிகளே!
பொதுவாக முஸ்லிம்கள் தமது நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் பிறை தொடர்பாக ஊருக்கு ஊர் பிறை பார்க்கவேண்டும், நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும், இஸ்லாமிய கலண்டர் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் செயற்பட வேண்டும் அல்லது முழு உலகிற்கும் ஒரு பிறை பார்த்தால் போதும் என்பது போன்ற நிலைப்பாடுகலை கொண்டிருக்கின்றார்கள்.

அக்கரைப்பற்று மண்ணில் மாபெரும் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு உங்கள் அனைவரையும் அழைக்கின்றது ஏட்பாட்டுக் குழுவினர்கள்  மாற்றத்தை நோக்கிய பயணம் இன்ஷா அல்லாஹ் மே 07 சனிக்கிழமை காலை 09 மணி இருந்து இரவு 10 மணி வரை பெண்களுக்கான தனிப்பட்ட இட வசதிகள் வெளி ஊரில் இருந்து வரும் சகோதர சகோதரிகளுக்கு உணவு வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் மறந்துவிடாமல் அழை திரண்டு வாருங்கள்.            

                                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனை படைத்தான். மனிதனை காலமெல்லாம் உலகில் வாழவைக்காமல் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வாழவைத்து பிறகு மரணமடையச் செய்கிறான். மனிதன் மட்டுமல்லாமல் அவன படைத்த அனைத்து படைப்புகளுக்கும் மரணத்தை அடையக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆனால் மனிதனை மட்டும் இவ்வுலகில் வாழும்போது அவனை வணங்கவும் அவனது தூதர்களை பின்பற்றி வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் மரணத்திற்குப்பின் ஒரு சிறந்த வாழ்க்கையை நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கு நரகத்தையும் ஏற்படுத்தி உள்ளான்.    

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
துாக்கத்தில் கனவின் மூலம் விந்து வெளிப்பட்டால் என்ன செய்ய வேண்டும். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும். ஏற்படும். பின் வரக்கூடிய ஹதீஸை அவதானியுங்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டுத் தம்மீது அவள் (மதன)நீரைக் கண்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

                                           தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
மாதவிடாய் காலங்களில் பெண்கள் தாங்களது கணவனோடு எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்பதனை நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்துள்ளார்கள். அவற்றை இந்த கட்டுரையின் மூலம் கற்றுக் கொள்வோம்.

மாதவிடாய் பெண்ணும், கணவனும்
மாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள். அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்… என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்

                                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
இன்று கேள்வி கேட்டவுடன் பதில் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தன் இமேஜ் பாதிக்கப்பட்டு விடும் என்ற அடிப்படையில் குர்ஆன் ஹதீஸிற்கு அப்பால் சொந்த சிந்தனையின் அடிப்படையில் உடனுக்கு உடன் சில கேள்விகளுக்கு பதில் சொல்வதால் பிறகு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அந்த வரிசையின் பட்டியலில் online மூலமாகக் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு உடனே சொல்லப்பட்ட தவறான பதில்தான்நூற்றி இருபது நாளைக்கு முன் உண்டான கருவை தாராளமாக களைக்களாம் என்ற பதிலாகும். இந்த பதில் சரி தானா? அல்லது அவசரத்தில் பிழையாக சொல்லப் பட்டதா? என்பதை கவனிப்போம்.

                                               தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித் தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷீஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இது குறித்து இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் பின்வருமறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


‘ஷீஆக்கள்  யஹூதி,  நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று யூதர்களிடம் கேட்கப்பட்டால் மூஸாவின் தோழர்கள் எனப் பதில் கூறுவார்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று கிறிஸ்தவர்களிடம் கேட்கப்பட்டால் இயேசுவின் தோழர்கள் என்பார்கள். உங்கள் மார்க்கத்தில் கெட்டவர் யார்? என ஷீஆக்களிடம் கேட்கப்பட்டால் முஹம்மதின் தோழர்கள் என அவர்கள் பதில் கூறுவார்கள். நபித்தோழர்களுக்குப் பாவமன்னிப்புக் கேட்குமாறு இவர்கள் ஏவப்பட்டார்கள். ஆனால், இவர்கள் அவர்களைத் திட்டுகின்றனர்.’ (அல் மவ்லூஆத்: 1/339)

                                                               தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...! 
இம்மார்க்கத்தைத் தழுவுவதில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்’தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ‘ (2:256)
‘லா இக்ராஹ பித்தீன்’ மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாத்தை ஏற்றவர் தொழுமாறு கட்டாயப்படுத்தப்படுவார். ஸகாத் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவார். இஸ்லாமிய கடமைகளைப் பேணுமாறும், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுமாறும் வலியுறுத்தப்படுவார். ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிறரை இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப் படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.
‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.’ (109:6)
உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்பது இஸ்லாத்தின் சுலோகமாகும்.
‘லனா அஃமாலுனா வலகும் அஃமாலுகும்:’எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு!’ (28:55, 42:15) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.
‘சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே! எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக! அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) உதவி தேடினால் முகங்களைப் பொசுக்கி விடும் உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். பானத்தில் அது மிகக் கெட்டது. மேலும், அது மிகக்கெட்ட வசிப்பிடமாகும்.’ (18:29)
விரும்பியவர் ஏற்கலாம், விரும்பியவர் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுத்தவர்கள் மறுமைப் பேற்றைப் பெற முடியாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். இந்த அடிப்படையிலும் இஸ்லாத்தைப் போதிக்கலாம். யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.
இஸ்லாத்தை ஏற்குமாறு யாரையும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை என்பதற்கு இஸ்லாம் அழகான காரணத்தையும் கூறுகின்றது.
வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. சாதாரண அறிவுள்ளவனும் சிந்தித்தால் இஸ்லாம் சொல்லும் கருத்துத்தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இஸ்லாம் சத்தியமானது என்பதால் அதை ஏற்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. சிந்தனை உள்ளவன் உண்மையைத் தானாகவே ஏற்றுக் கொள்வான்.
சிலை வணக்கம் அறிவீனமானது. பலதெய்வ நம்பிக்கை மூடத்தனமானது. ஜாதி வேறுபாடு என்பது பகுத்தறிவுக்கும், மனித நேயத்திற்கும் முரணானது என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்த பின்னும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவனை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை விட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இஸ்லாத்தில் உளத்தூய்மை என்பது முக்கியமான தாகும். நிர்ப்பந்தத்திற்காக ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, இஸ்லாம் நிர்ப்பந்த மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பாதுகாக்க வாள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதைப் பரப்புவதற்கு வாள் பயன் படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தவும் கூடாது! இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா? முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா? போர்களே நடக்காத இந்தோனேசியா பகுதிகளில்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கட்டுக் கதையே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கூற்றாகும். இஸ்லாம் இந்த சிந்தனைக்கே எதிரானது என்பதை இந்த வசனத்தின் மூலம் உறுதியாக அறியலாம்.
                                                                
                                                                                        மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
இதையும் பார்க்க:- 
                        * ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம். 
                        * புது வருடக் கொண்டாட்டமும் இஸ்லாமும்......!
                  * இஸ்லாத்தை முறிக்கும் 10 விஷயங்கள்..
                  * இஸ்லாமிய தாடியின் புதிய விஞ்ஞான ஆய்வு...!
                  * நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget