May 2016

அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்’ (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி பேசும் போது பெண்பால் வினைச் சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

நாம் குளிப்பது என்பது சாதரரண விடயம் தான். ஆனால் குளிப்பு கடமையானால் அதற்கு என்று சில வழிமுறைகளை நபியவர்கள் நமக்கு காட்டித்தருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ். 

“ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) கழுவுவார்கள். பிறகு வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றிப் பிறவி உறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். அதன் பின்னர் தண்ணீரை அள்ளி மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழைத்துத் தலையைத் தேய்ப்பார்கள். தலைமுடி முழுவதும் நனைந்துவிட்டதாகத் தெரிந்ததும் இரு கைகளிலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளி தலையில் ஊற்றுவார்கள்.   பிறகு மேனி முழுவதிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் கால்களைக் கழுவுவார்கள். முஸ்லிம் 526

சர்வதேசப் பிறை விடயத்தில், அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை விடுத்து, பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களான இஹ்வானிகளும், தனிமனிதர்களை கண்மூடிப் பின்பற்றும் தப்லீக்வாதிகளும், மார்க்கத்தை விட்டு வெளியேறிய கப்றுவணங்கிகளும் தவ்ஹீத்வாதிகளை மிகப்பெரும் பாவிகளாக சித்தரித்து வந்த காலம் சென்று, தவ்ஹீத்வாதிகள் என அறியப்படுகின்ற சில சகோதரர்கள் சர்வதேசப் பிறையை சரிகண்டவர்களை மிகத் தாறுமாறாக விமர்சிக்கின்ற நிலமைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)
 
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்… கோபம் ஏன் ஏற்படுகின்றது?  கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

மாதவிடாய் பெண்கள் அந்த நாட்களில் எந்த தொழுகையையும் தொழுக் கூடாது. அது போல அந்த நாட்களில் விடுப்பட்ட தொழுகைகளை களா செய்யவும் கூடாது. என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துகிறது. பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர் தொழுதால் மட்டும் போதுமா?’ என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘நீ ‘ஹரூர்’ எனும் இடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவ மாட்டார்கள்’ என்று அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழ மாட்டோம்” என்று ஆயிஷா(ரலி) கூறினார்” என முஆதா அறிவித்தார். புகாரி 321 

அக்கரைப்பற்றில் நடந்து முடிந்த இத் தேசிய மாநாடு ஒரு தனி நபருக்கு அல்ல. இதில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை சுமார் 10000
தஃவா பணி செய்வதர்க்கு எந்த அமைப்புக்களுடனும் மசூறா செய்ய வேண்டும் என்பது சுன்னா அல்ல
மூத்த அழைப்பாளர்கள்தான் பயான் செய்ய வேண்டும் என்ற தேவை இல்லவே இல்லை. ஏனெனில் பலர் எது வித ஆய்வுகளும் இல்லாமல் இடித்ததையியே இடிக்கிறார்கள் படித்ததையே படிக்கிறார்கள். அதனால் துடிப்பான புதிய அழைப்பாளர்கள் நல்லதே
...
சுயநலமற்ற நல்ல தஃவா உணர்வுள்ள பள்ளிவாயல் நிருவாகிகள் புறக்கனித்ததாய் தெரியவில்லை.
பிரச்சாரத்தில் முன்னணி பின்னணி எல்லாம் கிடையாது சொல்லப்படுவது குர்ஆன் ஹதீஸில் உள்ளதா என்பதே மேட்டர்
அன்சார் தப்லீகி யார் வரலாம் யார் வரக்கூடாது என்று நிபந்தனையிட்டு பிரிவினைக்கு தூபமிட்டதாய் தெரியவில்லை. காழ்ப்புணர்ச்சியின் காரணத்தால் சத்தியத்தை புரக்கணிப்போர் சாத்தானிகளே.

இஸ்லாம் பெண்களுக்கென தடைசெய்யப்பட்ட விஷயங்களில், காது குத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறி காது குத்தக்கூடாது என விலக்குவதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை! மாறாக, நபித்தோழியர் காது குத்தி காதணிகளும் அணிந்திருந்தனர் என்பதற்கு மறுக்க முடியாத மார்க்க ஆதாரமுள்ளது. அவற்றைப் பார்ப்பதற்கு முன், பெண்களுக்கென தடைசெய்யப்பட்ட சிலவற்றை அறிந்து கொள்வோம்!

பச்சை குத்திக் கொள்வதும், பச்சை குத்தி விடுவதும் பொதுவாக ஆண், பெண் இருபாலினத்தாருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பான சில செயல்களுக்காக, பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள் என ஆதாரப்பூர்வ நபிமொழிகளிலிருந்து அறிந்து வைத்திருக்கிறோம்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget