ரமழான் மாதத்துடன் சம்பந்தப்பட்ட ஆதாரமற்ற ஹதீஸ்கள்

தூயவழி வலயத்தளம்:-  ரமழான் மாதத்துடன் சம்பந்தப்பட்ட, அதிகமான மிம்பர்களில் அடிக்கடி கூறப்படக்கூடிய ஒரு பிரபலமான பலஹீனமான ஹதீஸை பார்ப்போம்.

இந்த ஹதீஸ் ''ஸல்மான் அல் பாரிஸ் (ரழி)'' அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டு இமாம் ''இப்னு ஹூஸைமா''வின் ''ஸஹீஹ்'' என்ற கிரந்தத்திலும், இமாம் ''முஹாமிலியின்'' அமாலி எனும் கிரந்தத்திலும் பதியப்பட்டுள்ளது. அது பின்வருமாறு.

 
''எங்களுக்கு ஸஃபானின் இறுதி நாளில் ரஸூலுள்ளாஹ் (ஸல்) உரை நிகழ்த்தினார்கள் ''அப்போது கூறினார்கள் ஏ மனிதர்களே! மகத்தான மாதம் உங்களுக்கு வந்திருக்கிறது. அந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது. அதில் நோன்பு பிடிப்பதை கடமையாகவும், அதில் இரவில் வணங்குவதை உபரியானதாகவும் ஆக்கியிருக்கிறான்.

 யார் அதிலே ஒரு நன்மையான காரியத்தைக் கொண்டு இறைவனை வணங்குவானோ அது அல்லாத மாதங்களில் ஒரு பர்ழை நிறைவேற்றுபவன் போன்றாவான். யார் அதிலே ஒர பர்ழை நிறைவேற்றுவானோ அது அல்லாததில் 70 பர்ழை நிறைவேற்றியவன் போன்றாவான்.

இவ்வாறு பல விடயங்களை உள்ளடக்கியதாக ஓர் நீளமான ஹதீஸாக இது வந்துள்ளது. அந்த ஹதீஸில் சொல்லப்பட்ட இன்னும் சில விடயங்கள்  'இந்த மாதத்தின் ஆரம்பம் அருளாகும். அதன் நடுப்பகுதி பாவமன்னிப்பாகும். அதன் இறுதி நரகத்திலிருந்து விடுதலையாகும்''

''யார் இதில் ஒரு நோன்பாளியை நோன்பு திறப்பிக்கிறாரோ அவரின் பாவங்களுக்கு மன்னிப்பாகவும், நரகத்திலிருந்து விடுதலையாகவும் ஆகிவிடும். யார் ஒரு நோன்பாளியை வயிறு நிறையச் செய்வானோ (மறுமையில்) அல்லாஹ் ஹவ்லுர் (கவ்தரி)ல் இருந்து அவருக்கு பானத்தை வழங்குவான். அவர் சுவனம் நுழையும் வரை தாகிக்கமாட்டான்'' இவ்வாறு இன்னும் பல விடயங்களை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது.

 
அறிவிப்பாளர் விமர்சனம் :
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறக்கூடிய ''அலி இப்னு ஸைத் இப்னு ஜத்ஆன்'' என்பவர் மிகப் பிரபல்யமான பலஹீனமான அறிவிப்பாளர் ஆவார். இவரைப்பற்றி ''இமாம் அஹ்மத், இமாம் யஹ்யா இப்னு மயீன்'' இன்னும் பல இமாம்கள் ''பலஹீனமானவர்'' என்றும் ''இவருடைய செய்திகளை ஆதாரத்திற்கு எடுக்க முடியாது'' என்றும் மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளனர். மேலும் ''ஷீயா'' க் கொள்கையில் திழைத்தவர் என்றும் ''இமாம் ஜூர்ஜானி'' அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். மற்றும் ''இமாம் புஹாரி, இமாம் நஸாயி, இமாம் அபூஹாத்தம்'' போன்றோரும் இவரை ஆதாரத்திற்கு எடுக்க முடியாது. இவர் பலஹீனமானவர் என்ற செய்திகளை குறிப்பிட்டுள்ளனர்.
 
மொத்தத்தில் ''33'' இமாம்கள் இவரை பலஹீனமானவர் என விமர்சித்துள்ளனர். இவ்வாறு ஹதீஸ்கலை அறிஞர்களால் பலஹீனமானவர், நம்பகமற்றவர் என்று ஒருமித்த குரலில் சொல்லப்பட்ட இவரின் ஊடாகவே எமது சமுதாயத்தில் பரவியுள்ள மிம்பர்களில் மௌலவிமார்களால் அதிகமாக முழங்கக்கூடிய இந்த பிரபல்யமான ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விபரீதங்கள் ஒரு சுன்னத்தை செய்தால் ஒரு பர்ழின் நன்மை கிடைக்கும் என்ற பிழையான நம்பிக்கையும், ஒரு பர்ழுக்கு 70 பர்ழின் நன்மை என்ற பிழையான நம்பிக்கையும் மக்களுடைய உள்ளத்தில் இடம்பிடித்துள்ளது. ஆனால் அல்லாஹூத் தஆலா ஒருவருடைய அமலை ஏற்றுக் கொண்டால் அதன் நன்மைகளை பன்மடங்காக்கி கண்க்கின்றிக் கொடுத்திடுவான் என்பதை திருக்குர்ஆன் வசனங்களிலும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் பல இடங்களிலும் காணலாம்.
 
ரசூலுள்ளாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவன் ஒரு நன்மையைச் செய்துவிட்டால் அல்லாஹ் அவனுக்கு 10லிருந்து 70மடங்கு வரையும் அதற்கப்பால் அதிகமான மடங்குகள் அளவிலும் எழுதிடுவான். (ஆதாரம் - புஹாரி)
 
இது போன்ற ஆதாரமான ஹதீஸ்கள் இருக்கின்ற போது ஒருவர் நல்லமல் செய்வதைத் தூண்டுவதற்கு நம்பகமற்ற, ஆதாரமற்ற செய்திகளின் பால் இஸ்லாம் ஒரு போதும் தேவையுடையதாகாது.  இந்த ஆதாரமற்ற ஹதீஸின் பின்னணியில் சில பிரார்த்தனைகளை மௌலவிமார்கள் உருவாக்கி, முதல் பத்துக்கு வேறாக, இரண்டாம் பத்துக்கு வேறாக, மூன்றாம் பத்துக்கு வேறாக என பிரித்திருப்பது அல்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸிற்கு முற்றிலும் முரணான கூற்றாகும்.
 
நபிகளாரால் காட்டித்தரப்படாத இந்த ''பித்அத்'' ஆன பிரார்த்தனைகளை தராவீஹ் தொழுகையுடன் இடைநடுவேயும், தொழுகையின் பின்னரும் இமாமும், மஹ்மூன்களும் கையை ஏந்தி ஒன்றாக ஓதிவருவது வழிகேடான பிழையான காரியமாகும்.  இந்த ஹதீஸின் பின்னணியில் சிலர் நோன்பு திறப்பித்தால் நரக விடுதலை கிடைக்கும் என்றும் ஹவ்லுள் (கவ்தர்) இன் பானம் கிடைக்கும் என்றும் நம்பியதால் அவர்களின் சம்பாத்தியம் வட்டி போன்ற ஹராமான வழியில் இருந்தாலும் அப்பாவங்களில் இருந்து விடுபடுவதை விட்டு ஹறாமான வழியில் உழைத்த பொருளைக் கொண்டு நோன்பு திறப்பித்து நரகவிடுதலை பெற்று சுவனம் போகலாம் என எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.
நோன்பு திறக்கச் செய்வது நன்மையான காரியமாக இருந்தாலும் ஹலாலான சம்பாத்தியம் மூலம் அமையும் போதே அதற்கு நன்மை கிடைக்கும்.  எனவே இது போன்ற பலஹீனமான ஹதீஸ்களை நபிகளாரின் பெயரால் கூறுவது நரகத்திற்குச் செல்லுவதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதால் மௌலவிமார்கள் இதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.  அறியாத மௌலவிமார்கள் தங்களின் உரைகளில் இது போன்ற செய்திகளைச் சொல்வதைச் செவிமடுப்பவர்களில் விடயத்தைத் தெரிந்தவர்கள் அவர்களிடம் நாகரீகமான முறையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட பின்வாங்கக் கூடாது.
குறிப்பு : ஒரு நோன்பாளி நோன்பு திறப்பதின் சிறப்புப்பற்றி வந்த மற்றுமொரு ஹதீஸைப்பற்றி இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
''யார் ஒருவர் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலியில் குறைவில்லாமல் அவரின் கூலியைப் போன்றது கிடைக்கும்'' இந்த ஹதீஸின் பின்னணியில் நோன்பாளியின் கூலி கிடைக்க வேண்டும் என்று எம்மில் அதிகமானவர்கள் தம் சகோதரர்களுக்கு நோன்பு திறப்பிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸின் நிலை
இந்த ஹதீஸை எடுத்து ஆய்வு செய்த போது இதன் அறிவிப்பாளர் ''அதா'' என்பவர் ''ஸைத் இப்னு காலித்'' என்பவரிடம் எந்த செய்தியையும் செவியுறவில்லை என்று அறிவிப்பாளர்களைப் பற்றிய ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற இமாம் புஹாரியின் ஆசிரியர் ''அலி இப்னு மதனீ'' குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த ஹதீஸூம் பலயீனமானதாகும் அதனால் அதனால் ரசூலுள்ளாஹ் (ஸல்) கூறினார்கள் என்று இந்த செய்தியை நபிகளாரின் பெயரில் கூறக்கூடாது. என்றாலும் ஒரு நோன்பாளியை நோன்பு திறப்பதற்காக அவருக்கு ஆகாரம் வழங்கிய கூலியை அல்லாஹ் நிச்சயம் கொடுப்பான்.
எங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ளும் முகமாகவும் அன்பை பரிமாறிக கொள்ளும் விதமாக பெருமை அடிக்காமலும், முகஸ்துதி இல்லாமலும் ஒருவருக்கொருவர் நோன்பு திறப்பிப்பது வரவேற்கத்தக்க அழகான காரியமாகும்.
 
 
                                                                                              ஆய்வு மொளவி:- அன்சார் தப்லீகி  ICFCG

 இதையும் பார்க்க:-
                   * தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு 
                     * இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு... 
                     * சுன்னத் (கத்னா) செய்வதன் நன்மைகள் மருத்துவ ஆய்வுகள...
                     * இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறைகள்.
                     * மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார...
                     * ஸஜ்தாவுடைய வசனங்கள் ஓர் ஆய்வு..!


 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget