நோன்புக்கு ஷீஆக்கள் வழங்கும் முக்கியத்துவம்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு இஸ்லாத்தினால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு கடமையாகும். நோன்பிருக்க சக்தி பெற்றவர்கள் ரமழான் மாதத்தில் நோன்பை விடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மரணத்தின் பின்பும் இந்த உலகத்தில் வாழுவதற்கும் நோன்பிருப்பது இன்றியமையாத ஒன்றாகும்.
 
நோன்பின் மூலம் நரகத்திலிருந்து மனிதன் விடுதலை பெறுகிறான், தக்வாவைப் பெறுகிறான், பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, மனதை ஆளும் பயிற்சி வழங்கப்படுகிறது, மன்னிப்பு சகிப்புத்தன்மை, பொறுமை போன்ற நற்குணங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால், அல்குர்ஆனிலும் அல்ஹதீஸிலும் நோன்பு தொடர்பான அதிகமான வழிகாட்டல்கள் பொதிந்திருக்கின்றன.
 முஸ்லிம்களை அவர்களுடைய மார்க்கத்தை விட்டும் தூரமாக்கி, அவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்குவதற்காக அஹ்லுல் பைத் என்ற பெயரில் உருவாக்கப்பட்டவர்கள் ஷீஆக்கள் என்பதனால் நோன்பு தொடர்பில் இஸ்லாத்திற்கு முரணான பல கொள்கைகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்திற்கும் ஷீஆக்களின் சிந்தனைக்கும் இடையிலுள்ள தூரத்தைப் புரிந்துகொள்வதற்காக அது தொடர்பாக சுருக்கமாக நோக்குவோம்.
 
முஸ்லிம்கள் சத்தியத்தில் இருந்தாலும் அதற்கு முரண்பட்டிருப்பதே ஷீஆக்களின் கொள்கை. அது அவர்களின் நம்பிகை சார்ந்த விடயம். வெளிப்படையாக முரண்பட முடியாதபோது எண்ணத்திலாவது முரண்படவேண்டும் என்பது ஷீஆ அறிஞர்களின் வழிகாட்டல்.
 
நோன்புக்கு ஷீஆக்கள் வழங்கும் முக்கியத்துவம்.
 
நோன்புக்கு ஷீஆக்களிடம் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர்களுடைய நூல்களில் நோன்பின் முக்கியத்துவம் தொடர்பான செய்திகளைக் காண்பது அரிதிலும் அரிது. நோன்பின் சிறப்புப் பற்றியும் அதில் வரும் லைலதுல் கத்ர் போன்றவற்றின் சிறப்புப் பற்றியும் இஸ்லாம் எவ்வளவோ பேசியிருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் ரமழான் வருவதற்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்னிருந்தே அதில் அமல் செய்வதற்கும் நோன்பு நோற்பதற்கும் தயாராகின்றனர். நோன்பு மாதத்தை அடைவதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். ஆனால், ஷீஆக்களிடம் இப்படி எந்த ஆரவாரமுமில்லை. இத்தகைய முன்கூட்டிய ஏற்பாடுகளை எல்லாம் விடுத்து ஷீஆ அறிஞர்கள் ரமழானில் வரும் தங்களின் சில தினங்களின் முக்கியத்துவம் குறித்தே பேசியிருக்கிறார்கள்.
 
நோன்பு 15: ஹஸன் (ரழி) அவர்களின் பிறந்த தினத்தை ஷீஆக்கள் கொண்டாடுகின்றனர். இதற்கு ‘‘லைலத்துல் கர் கைஆன்’’ என்றும் ‘‘அல் கர்காஊன்’’ என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
 
நோன்பு 17: பத்ரு ஸஹாபாக்கள் தினத்தைக் கொண்டாடுகின்றனர். இந்த தினம் ஷீஆக்களால் உருவாக்கப்பட்டு போசிக்கப்படுகின்ற தினம் என்பதைப் புரிந்துகொள்ளாமல் எமது முஸ்லிம்களும் சில போது ரமழானின் ஏனைய நாட்களுக்கு கொடுக்கும் சிறப்பை விட அந்த நாளுக்கு அதிக சிறப்பைக் கொடுத்து விடுகின்றனர். அந்த நாளில் விசேட போட்டிகள் மற்றும் தொடர் நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்துகின்றனர் பள்ளிகள் அதற்காக விசேடமாக அலங்கரிக்கப்படுகின்றன.
 
இந்த தினத்தில் பத்ர் யுத்தம் நடந்திருந்தபோதிலும் அதை ஒரு கொண்டாட்டமாக எடுத்துக்கொள்வது ஷீஆக்களின் வழிமுறையாகும். எனவே, அதை முடியுமான அளவு நாம் தவிர்ந்துகொள்வது சிறந்தது. பத்ரு ஸஹாபாக்களைப் பற்றியும், அந்த நிகழ்வு பற்றியும் அந்த தினத்தில்தான் பேச வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு இல்லை. ஷீஆக்களின் பண்டிகைகளில் நாம் கலந்துகொள்ளாமல் இருக்க விளிப்போடு இருக்கவேண்டியது இக்கால மக்களின்  கட்டாயமாக மாறிவிட்டது.
 
நோன்பு 21-23வரை: அலி (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர்.  

ஒப்பாரி வைத்தலும், தங்களை வருத்திக்கொள்வதும்.
 
ரமழானில் ஷீஆக்கள் குறிப்பிடும் முக்கியமான அமல் கொலை செய்யப்பட்ட தங்களின் தலைவர்களுக்காக ஒப்பாரி வைத்து அழுதலும், தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதுமாகும். இதை அவர்களின் பிரதானமான நூல்களில் காணலாம்.
 
இஸ்லாம் ஒப்பாரி வைத்து அழுவதையும் துன்பத்தின் போது தங்களை வருத்திக்கொள்வதற்கும் தடை விதித்திருப்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம்.
 
பிறையை உறுதிப்படுத்தல்.
 
ரமழானின் பிறையை உறுதிப்படுத்திக் கொள்ள முஸ்லிம்களிடம் நீதமான இரண்டு சாட்சிகள் தேவை. ஆனால் ஷீஆக்களிடம் அதிகமான சாட்சிகள் இருக்க வேண்டும், மேலும் பெண்களின் சாட்சியங்களையோ பிரித்தறியத்தெரிந்த சிறுவர்களின் சாட்சியங்களையோ அல்லது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து அறிவிக்கும் செய்தியையோ அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
 
இதை ஷீஆக்களின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான ஜஃபர் முர்தலா அல் ஆமிலி அவர்கள் தனது ‘‘அஸ்இலதுன் வ அஜ்விபா பித்தீனி வல் அகீதா’’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
 
இதனால், முஸ்லிம்கள் நோன்பிருக்கும் தினத்தில் ஷீஆக்கள் நோன்பிருப்பதும் அவர்கள் பெருநாள் கொண்டாடும் தினத்தில் ஷீஆக்கள் பெருநாள் எடுப்பதும் மிகவும் குறைவு. இலங்கை போன்ற ஷீஆக்கள் மிகவும் குறைவாக வாழும் நாடுகளில் இது விதிவிலக்காக இருக்கலாம்.
 
நோன்பு துறத்தல்.
 
முஸ்லிம்கள் இரவின் ஆரம்ப நேரத்திலேயே (மஃரிபுரைடய நேரத்தில்) நோன்பை துறக்கின்றனர் அதில்தான் பரகத் உள்ளதாகவும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, அந்த நேரத்தில் பிற்படுத்தாமல் நோன்பை துறக்குமாறு நபியவர்கள் பணித்தார்கள்.
 
எல்லா விடயங்களிலும் முஸ்லிம்களுக்கு முரண்படுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள ஷீஆக்கள் இதிலும் முரண்பட்டே இருக்கின்றனர். 
 
மஃரிபுடைய நேரம் முடிந்து முழுமையாக இருள் வந்த பிறகே ஷீஆக்கள் நோன்பை துறக்கின்றனர். ஷீஆக்களின் நோன்பு துறக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களும், அவர்களின் நூல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. இது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானதாகும்.

இதையும் பார்க்க >>
 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget