சகாதுல்பித்ர் பருவ வயதை அடையாத சிறுவர்களுக்கு கடமையா ?

நபி ஸல் கூறினார்கள்  “காதுல் பித்ர் ஈச்சம் பழத்தில் இருந்து ஒரு சாவும் கோதுமையில் இருந்து ஒரு சாவும் முஸ்லிம்களில் அடிமை , சுதந்திரவான் ,ஆண், பெண் ,சிறியவர் மற்றும் ,பெரியவர் போன்றோர் மீது கடமையாகும் அதனை தொழுகைக்கு செல்லுமுன் நபி ஸல் அவர்கள்  கொடுக்க ஏவினார்கள்  “ (புகாரி 1506) என ஒரு செய்தி வந்துள்ளது .இதே போன்று இன்னும் பல தகவல்கள் இது தொடர்பாக வந்துள்ளது

இந்த செய்தியின் அடிப்படையில் சிறார்கள்  என்போர் யார் ? என நாம் பார்க்கும் போது  பொதுவாக சிறுவர் என்போர் இஸ்லாமிய சரியாவில் பருவமடைந்தவர்களை மட்டுமே சட்டத்தில் குறிக்கும் .இஸ்லாமிய கடமைகளை இவர்களுக்குத்தான் இஸ்லாம் கடமையாகவும் ஆக்கியுள்ளது .இதனை பற்றி நபி ஸல் அவர்கள் கூறும் போது

மூன்று  பேருக்கு பேனை உயர்த்தப்பட்டுள்ளது  ‘ தூக்கத்தில் ஒருவர் எழும்பும் வரை ,ஒரு சிறுவன் பருவமடையும்வரை மற்றும் பைத்தியக்காரன் பைத்தியம் தெளியும்வரை “ (அஹ்மத் )என நபி ஸல் கூறினார்கள் .இங்கு சிறுவர்கள் என்போர் யார் என்ற ஒரு வரைவிலக்கணம் நபி ஸல் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது .இங்கு கொடுக்கப்பட்ட விளக்கம்தான் இஸ்லாத்தில் எல்லா சட்டங்களுக்கும் பொருந்தும் .அவர்களுக்கு நன்மை தீமை எந்த பெறுமானமும்  இல்லை .

எனவே சிறுவர்கள்  என்போர் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்த கேள்வி கணக்கும் இல்லை. மேலும் நன்மை தீமை போன்ற பதிவுகளும் இல்லை.இதைதான் நாம் மேலே உள்ள நபி ஸல் கூறிய செய்தியில் விளங்கிக்  கொள்ளகூடியதாகவும்  உள்ளது   
.
அதே வேளை நாம் சிறுவர்கள் என்போர்   பருவ வயதடையாதவர்களை சிலவேளை நாம்   சுட்டினாலும் அவர்களுக்கு இந்த சட்டம் மேற்குறித்த செய்தியின்படி சட்டமாக இருக்காது.அது இஸ்லாம் சிறுவர்களை சிலவேளை குழந்தை எனக் கூறுவதுபோல் ஒரு உலக நடைமுறைதான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் .

ஏனனில் இஸ்லாம் கூறும்   சயீர்  الصغير,திப்ல்  الطفل வலத்  الولدஎன்ற சொற்றொடர் எல்லாம் நாம் சட்டமாக எடுக்கும் போது அவர்களை பருவ வயதை அடைந்தவர்கள் என்றே நோக்க வேண்டும் இல்லா விட்டால் ஏனைய சட்ட முறைமைகள் எல்லாம் பிழையாகிவிடும் .மேலும் இதனை விளங்கிக் கொள்ள..உதாரணமாக ஏழு வயதானதும் தொழுகையை ஏவி பத்து வயதானதும் அடித்து  பழக்க சொல்லும் இஸ்லாம் அந்த ஏவலில்  சிறுவன் என்ற சொல்லையும்  பயன்படுத்துகின்றது.

எனவே பிரயோகங்கள் எப்படியும் இருக்கலாம் ஆனால் சட்டங்கள் என வரும் போது அது சரியான முறைமை இருக்க வேண்டும் .இங்கு தொழுகை பற்றி இஸ்லாம் சிறார்களை பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்தாலும் .அவர்கள் பருவ வயதை அடையும் போதுதான் அவர்களுக்கு தொழுகை சட்டமாக ஆகிவிடும் .இல்லாவிட்டால் நமக்கு தொழுகை பற்றிய முரண்பட்ட கருத்தை தரலாம் .

மேலும் இதை அவதானியுங்கள் அல்லாஹ் கூறும் போது
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
(சூரா நூர் 59) இங்கு அல்லாஹ் அறையில் செல்லும் போது சிறார்கள்  அனுமதி கேட்பது தொடர்பாக வரும் விடயத்தில் திப்ல் பருவ வயதை அடைந்தால் என்று குறிப்பிட குழந்தை என்னும்சொல்லையே பயன்படுத்துகின்றான் .இப்படி கூறப்பட்டதால்  நாம் கையில் உள்ள குழந்தையை கற்பனை பண்ணுவதா ? இல்லையே ? எனவே சொற்கள்  மாறி மாறி வரும் இத்தகைய பிரயோகங்களை கொண்டு நாம் சட்டமாக கணிக்க முடியாது .

எனவே இஸ்லாமிய சரியத்தில் சகாதுல் பித்ர் பருவமடையாத சிறுவர்களுக்கு இது சட்டமல்ல என்பதைத்தான் இஸ்லாமிய சட்டங்கள் மூலம் உணர முடிகின்றது  அப்படி இது பருவ வயதை அடையாத சிறுவர்களுக்கு சட்டம் என்று நாம் விளங்க காரணம் ஓன்று உண்டு. அதாவது சில தவறான வியாக்கியானங்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் சகாதுல் பித்ர் கடமை என்று சிலர் சட்டமாக கூறி இருப்பதே எனலாம்.  

வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு  அரபியில் الجنين என அரபியில் அழைப்பர். இவர்களுக்கு  சகாத் பித்ர் கொடுக்க வேண்டும் என்பது பற்றிய தகவல் ஆதார பூர்வமற்றது .அப்படி இஸ்லாம் ஒரு சட்டத்தை எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை எனவே எது இஸ்லாத்தில் சட்டமாக சொல்லப்பட்டுள்ளதோ அதனை நாம் பின் பற்றுவதுதான் நமக்கு உவப்பானது .அதேவேளை நன்மை கருதி பருவா வயதை அடையாத சிறார்களுக்கு சகாதுல் பித்ர் கொடுத்தால் அது சிறப்பாக அமையும் ஆனால் சட்டம் அவர்களுக்கு இருக்காது அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

                                                                                                                       ஆய்வு மௌலவி  றஸ்மி மூஸா சலபி
 இதையும் பார்க்க >>
                 * இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது..!! 
                 * வெள்ளிக் கிழமைகளில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்...
                 * மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்..!
                 * அழகு படுத்த அழகு நிலையத்திற்குச் செல்லலாமா.?


 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget