அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்
வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்' என்று வரும் ஹதீஸின் விளக்கம் ' அவனுடைய அருள் இறங்குகிறது' என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா?
விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது எந்தவொரு ஆதாரமான ஹதீஸிலும் ' அர்ஷிலிருந்து அல்லாஹ் இறங்குகின்றான்' என்ற வார்த்தை வரவில்லை என்றாலும் ' அர்ஷிலிருந்து இறங்குகிறான்' என்ற வார்த்தையை குறிப்பிட்டு இக் கேள்வி கேட்கப்பட்டிருக்கும் காரணத்தை வாசகர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.