September 2016

 கேள்வி:- திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா..? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா..?

பதில் :- ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ
الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري

விடை:
இஸ்லாம் மனிதர்களுக்கு இடையில் பரஸ்பரத்தையும், ஒழுக்க நெறிகளையும் ஏற்படுத்தும் பல வழிமுறைகளைக் காட்டித்தந்துள்ளது. அதனுள் : இருவர் சந்திக்கும் போது அல்லது வீட்டிற்குள் செல்ல அனுமதி கோரும் போது 'சலாம்' சொல்வது முக்கியமான ஒரு அம்சமாகும். 
ஸலாத்தின்
 
 சிறப்புக்களையும் முக்கியத்துவத்தையும் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்திய நபி (ஸல்) அவர்கள் 'நடந்து செல்பவர், அமர்ந்திருப்பவருக்கு ஸலாம் கூற வேண்டும்' என்பதைப் போன்ற பல ஒழுங்கு முறைகளையும் கற்றுத்தந்துள்ளார்கள்.  எனினும் ஸலாத்தைப் பரப்பும் விடயத்தில் ஆண் பெண் என்ற எந்தவொரு வரையறைகளையும் குறிப்பிட்டதாக நாம் காணவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

குழந்தைகளை தத்தெடுக்கும் விடயம் எம்மத்தியில் பரவலாக நடந்து வருகின்றது. சிலர் தமக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றும், இன்னும் சிலர் ஆண் புதல்வர்களை மாத்திரம் கொண்டிருப்பதால் பெண் குழந்தை தேவையென்றும், வேறு சிலர் ஆண் குழந்தை தேவையென்றும், ஏனையோர் அனாதைகளுக்கு கைகொடுக்கின்றோம் என்றும் பல காரணங்களைக் கருவாகக் கொண்டு பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களிடம் தங்களைப் பெற்றோரென அறிமுகம் செய்து வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தக் குழந்தைகளின் அந்தஸ்தில் வைத்துப் பார்ப்பதை காணமுடிகின்றது. எனவே இது விடயமாக இஸ்லாம் என்ன கூறுகிறது? இதன் சாதக பாதகங்கள் யாவை? எனப் பார்ப்போமானால்,

காதல் என்றால் என்ன.? இஸ்லாம் இதற்கு அனுமதிக்கிறதா? காதல் திருமணம்தவறா.? இந்த கேள்விகள் இளம் வயதை அடியெடுத்து வைக்கும் அனைத்து யுவன்,யுவதிகள் அனைவருக்கும். எழுகிற சாதாரண விடயமே!!! முதலில் இது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், சினிமா என்ற விடயம் இல்லாவிட்டால் காதல் என்ற வார்த்தையை நாம் இப்படி அறிந்திருக்கமாட்டோம். காதல் என்றால் ஒரு ஆணும், பெண்ணும் பார்த்தல், பேசுதல், இவற்றினால் காதல் உருவாகிறது. அது புனிதமான உறவு, அதனை குடும்பம் எதிர்கிறது, அதனை தாண்டி அவர்கள் சேர்வார்கள்.


இதை தான் பலகாலமாக சினிமா இந்த இளைய வட்டத்தின் பாலியல் உணர்வை தூண்டிவிட்டு
காசு பார்கிறார்கள் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. சிறுபிராயத்தில் இருந்தே சிறுவர்,சிறுமியர், இந்த சினிமாக்களை காண்பதால், அதில் வருவதை போல் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போதே தங்களுக்கான துணையை தேடுகின்றனர். சினிமாவை பார்த்துபார்த்து வளர்ந்த யுவன்கள்” நீதான் என் உயிர் நீ இல்லாமல் என்னால் உயிரோடு இருக்க முடியாது” என சூனிய வார்த்தைகளை பேச இந்தபெண்ணும் உணர்ச்சிவசபட்டு அவனையே, தன்னுடைய துணையென முடிவுசெய்கின்றனர்.

இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான பல சட்டங்களை பிரித்து வழி காட்டியுள்ளது. அந்தந்த சட்டங்களில் இரண்டு சாராரும் தெளிவாக இருக்க வேண்டும்.
ஆண்கள் பெண்கள் இரண்டரக் கலக்கும் விடயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஏனைய நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.? என்பதை இஸ்லாம் நமக்கு அழகாக வழி காட்டியுள்ளது.
நபியவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் ஒன்று சேரும் கட்டங்கள் வந்த போது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை முதலில் கவனிப்போம்.

சந்தோசம் என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே, சந்தோசத்தை விரும்பாத எவரும் இருக்க முடியாது. மக்கள் சந்தோசத்தை பல அளவுகோல்களில் மட்டிட்டு வைத்திருந்தாலும் அவற்றுள் எது எதார்த்தமான சந்தோசம் என்பதை அவசியம் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் வேண்டும்.
ஸகாபாக்களைப் பொருத்தளவில் அவர்கள் இது விடயத்தில் நல்ல முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். அதனால் தான் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடத்தில் வந்து: “அல்லாஹ்வின் தூதரோ! மறுமைநாளில் உங்களுடைய சிபார்சைக் கொண்டு மனிதர்களில் மிகவும் மகிழ்ச்சிக்குரியவர் யார்?” என்று வினவினார்கள். (புகாரி) அந்த அடிப்படையில் நாமும் உண்மையான மகிழ்ச்சி எது என்பதைப் பற்றித் தெரிய வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளளோம்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget