காதல் என்றால் என்ன.? இஸ்லாம் இதற்கு அனுமதிக்கிறதா.?

காதல் என்றால் என்ன.? இஸ்லாம் இதற்கு அனுமதிக்கிறதா? காதல் திருமணம்தவறா.? இந்த கேள்விகள் இளம் வயதை அடியெடுத்து வைக்கும் அனைத்து யுவன்,யுவதிகள் அனைவருக்கும். எழுகிற சாதாரண விடயமே!!! முதலில் இது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், சினிமா என்ற விடயம் இல்லாவிட்டால் காதல் என்ற வார்த்தையை நாம் இப்படி அறிந்திருக்கமாட்டோம். காதல் என்றால் ஒரு ஆணும், பெண்ணும் பார்த்தல், பேசுதல், இவற்றினால் காதல் உருவாகிறது. அது புனிதமான உறவு, அதனை குடும்பம் எதிர்கிறது, அதனை தாண்டி அவர்கள் சேர்வார்கள்.


இதை தான் பலகாலமாக சினிமா இந்த இளைய வட்டத்தின் பாலியல் உணர்வை தூண்டிவிட்டு
காசு பார்கிறார்கள் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. சிறுபிராயத்தில் இருந்தே சிறுவர்,சிறுமியர், இந்த சினிமாக்களை காண்பதால், அதில் வருவதை போல் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போதே தங்களுக்கான துணையை தேடுகின்றனர். சினிமாவை பார்த்துபார்த்து வளர்ந்த யுவன்கள்” நீதான் என் உயிர் நீ இல்லாமல் என்னால் உயிரோடு இருக்க முடியாது” என சூனிய வார்த்தைகளை பேச இந்தபெண்ணும் உணர்ச்சிவசபட்டு அவனையே, தன்னுடைய துணையென முடிவுசெய்கின்றனர்.


அதற்கான காரணம் பெற்றோர்கள் பையனோ பெண்ணோ,   அல் குர்ஆன் ஒரு குறிப்பிட்ட வயதை வந்ததும் அவர்கள் தங்களின் அன்பையும் நெருக்கத்தையும் குறைத்து கொள்கின்றனர்
இதனால் அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டு பேசுவதில்லை. எனவேஅவர்களுக்கு இளம்வயதில் விரக்தி அதிகமாகவே இருக்கும், அன்பை எதிர்பார்ப்பர். தங்களுக்கு என யாரும் இல்லை என்ற உணர்வு மேலோங்கும். இதுவே முதல் காரணம். கேள்விக்கான பதிலே சொல்லவில்லையே என்று நினைக்கலாம்.


காதல் என்பது ஒருஉறவே இல்லை என்றபோது நாம் என்ன கூறுவது!!, என்னை பொறுத்தவரை அது ஒரு இச்சை, காமத்தின் கிளர்ச்சி எனலாம். காதலுக்கு ஜாதி மதம் எல்லாம்கிடையாது என்கின்றனர்.
முதலில் அதுஒரு உறவே கிடையாது, அது ஒரு இளம் பருவ கிளர்ச்சி . இஸ்லாத்தில் உறவு என்பது இரு வகையில் மட்டுமே ஏற்படும்.


*இரத்தவழிஉறவுகள்
*திருமண பந்தத்தால் உருவாகும் உறவுகள்.
இவ்விரண்டையும் தவிர்த்து வரும் உறவுகள் தவறானவையே. இஸ்லாம் அதை ஒருகாலும் அனுமதிக்காது.
திருமணம் என்னும் பந்தத்தில் மனைவிமட்டும் உறவாகுவதில்லைஅவர்களின் குடும்பமே உறவாகிறது.
ஒரு திருமண உடன்படிக்கை இரு வேறு குடும்பங்களுக்கு பலாமாகி விடுகிறது.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி – 1905.)


திருமணம் ஏற்ற பந்தம் காதல் போன்ற மனோஇச்சைகளை விட்டு காப்பாற்றுகிறது என்பதை நபிகளார் ஆயிரத்துநானுறு வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது வெகுசீக்கிரம் முடிப்பது பல மனோஇச்சைகளை விட்டும் விபசாரத்தை விட்டும் பாதுகாக்கும் ஆக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் என்ன கடமைகளை நிறைவேற்ற வேண்டுமோ அதுபோல் வயது வந்தததும் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது அவர்களின் கடமை ஆகும்….

 
அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘. (அல்குர்ஆன் 4:25)

மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது. திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.

சரி தனக்கு பிடித்த பெண்ணைஇப்படி திருமணம் செய்யவது? சஹாபாக்கள் காலத்தில் ஒருபெண்ணை திருமணம் செய்ய நாடினால் அவர்களின் வீட்டிற்கு ஒருநபரின் மூலம் தூது அனுப்பிவிடுவார்கள்.
இப்போது உள்ளதுபோல் தனக்கு பிடித்த பெண்னிடம் நேரடியாக சொல்லி மனதை கெடுத்து பெற்றோருக்கு தெரியாமல் பேசுதல் பழகுதல் நிச்சயமாக விபசாரமே!!! அல்லாஹ் நம் அனைவரையும் விபசார பார்வையிலிருந்து காப்பாற்றுவானாக , !!! ஆமீன்
 
 
இதையும் பார்க்க:-
                * காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்...!
                 * கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை அல... 
                * இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ... 
                * 35ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்
                 * கற்பமான,பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்க வேண்டும...
                 * வெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம...
                 * ரமழான் மாதத்துடன் சம்பந்தப்பட்ட ஆதாரமற்ற ஹதீஸ்கள்
Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget