October 2016

தண்டனையை கண்டு பயப்படுகின்றபோதுதான் ஒரு மனிதன் குற்றச்செயல்களில ஈடுபதை தவிர்ப்பதற்கு முயற்சிப்பான். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாவிட்டால் ஐநூறு ரூபா அபராதம் விதிக்கப்படுவது ஒரு ஏழைத்தொழிலாளிக்கு தாங்க முடியாத சுமையாகும்.
 
ஆனால் அந்த ஐநூறு ரூபாவை இழக்கவேண்டியேற்படும் என்ற பயத்தினால் மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது தலைகவசம் அணிவதில் கவனமாக இருக்கிறான். இதுவே ஐம்பது ரூபாய் அபராதமாக இருந்தால் யாரவது அந்த சட்டத்தை மதிப்பார்களா என்றால் ஒருபோதும் அது நடக்காது. அதேபோன்றுதான் ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்தால் பதிலுக்கு அக்கொலையாளி அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவான் என்ற சட்டம் எந்தவித வளைவு, நெளிவுகளும் இன்றி நாட்டில் அமுல்ப்படுத்தப்படுமானால் எந்தவொரு கொலைச்சம்பவமும் இந்த நாட்டில் நடைபெறாமல் நிச்சயமாக தடுக்கமுடியும்.

இன்று குறிப்பாக சமூக வலைத்தளங்களில் எதற்கு எடுத்துக்கொண்டாலும் அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் என்று கூறும் சமுதாயமாக நமது சமுதாயம் மாறி விட்டது. அதுவும் ஒரு முஸ்லிம் பெண் தொடர்பான ஒரு போஸ்ட் போட்டு விட்டால் போதும் மூட மூடையாக லைக் பண்ணி கலக்கிவிடுவார்கள்.       

பெண்கள் காரி என்ற பெயரில் வயசுக்கு வந்த பெண் மக்களை ஆண்கள் கும்பலுக்கு மத்தியில் மேடை ஏற்றி குர்ஆனை ஓத வைகிறார்கள். ராகம் என்ற பெயரில் தொண்டை கிளியும் அளவுக்கு சத்தம் போட்டு குர்ஆன் ஒதுகிறார்கள். இவ்விடயம் இஸ்லாமிய விடயம் தான் ஆனால் பெண்கள் குரல் உயர்த்தி பேசுவதை இஸ்லாம் அங்கீகரிப்பது இல்லை அது குர்ஆன் ஓதுவதாக இருந்தாலும் சரியே..
இப்படியான வீடியோக்களை முகநூலில் பார்க்கும் போது மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று காமெண்ட் போடுவார்கள்.

 தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும்.

முஸ்லிம்களில் சிலரின் தவறான இந்த நடத்தையால் பெண் இனத்தின் மீது இழைக்கப்பட்டு வந்த கொடுமையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முத்தலாக் சட்டத்தையே மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் பெண்ணினத்தின் மீதான கொடுமையாகப் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர்.
ஒருவர் தன் மனைவியைத் தலாக் கூறுகின்றார். இத்தா காலத்திற்குள் அவர்கள் சேர்ந்து வாழ்வதாக இருந்தால் சேர்ந்த வாழலாம். தவணை முடிந்துவிட்டால் அவர்களிடையே கணவன்-மனைவி உறவு முறிந்து விடுகின்றது. அவர்கள் மீண்டும் மீதியுள்ள இரண்டு தலாக்கையும் கூறி முற்றாகப் பிரிய வேண்டும் என்பதற்கில்லை.

இறைநம்பிக்கை கொண்டவர்களே.! நீங்கள் 'ருகூவும்' ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள்.
 
அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் - வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.  உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு 'முஸ்லிம்கள்' என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு அதே பெயர்தான்!) - தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!
எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள், மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன் தான் உங்களுடைய பாதுகாவலன், அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்! (திருக்குர்ஆன் 22 : 77,78)

வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் உள்ளன.வாந்தி எடுத்தால் உளூ நீங்கி விடும் என்று கூறுவோர் தமது கருத்துக்கு ஆதரவாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
 
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள். உடனே நோன்பை முறித்தார்கள். உளூச் செய்தார்கள்'' என்று அபுத்தர்தா (ரலி) கூறினார். நான் டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசலில் ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினேன். அதற்கவர்கள், "அபுத்தர்தா உண்மையே கூறினார். நான் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீரை ஊற்றியவன்'' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஃதான் பின் அபீதல்ஹா (ரலி) நூல்கள்: திர்மிதி 80, அபூதாவூத் 2033, அஹ்மத் 26261

கேள்வி -  இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா..? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா..? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா..?  -

 பதில் - தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கூடாது! அது ஹராம்!' எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  நூல்: புகாரி 2236 

 னி மனித வழிபாட்டின் மொத்த வடிவமாக ஷீஆயிஷம் உள்ளது. அலி (ரழி) அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த மதமே நிறுவப்பட்டுள்ளது. அலி (ரழி) அவர்களையும் தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான் இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது. இவர்களில் சிலர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர். இவர்களது ஒரு பாடலில், ‘லாஇலாஹ இல்லஸ் ஸஹாரா’ பாத்திமா தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.

தமது பன்னிரெண்டு இமாம்களும் மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட மஃசூம்கள் என்றும் நம்புகின்றனர். தமது இமாம்களுக்கு முர்ஸலான தூதர்களோ, சங்கையான மலக்குகளோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.

முஸ்லிம் சமூகத்திற்குள் கப்று வழிபாட்டை நுழைவித்ததில் இவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஹஜ்ஜுக்கு வந்தாலும் இவர்கள் கப்றுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

ஹுஸைன் (ரழி) அவர்களது கப்ரை ஸியாரத் செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர் போலாவார் என்று இன்றுவரையும் பிரசாரம் செய்கின்றனர். கப்றுக்குச் செல்லும்போது தவழ்ந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.

கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தை விட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ‘யா ஹுஸைன்! யா ஹுஸைன்!’ என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

இஸ்லாமிய வரலாற்றில் கர்பலா எனும் தினம் எங்கும் இல்லை. அது புதிதாக ஷீஆ மதத்தினரால் உருவாக்கப்பட்டது. கர்பலா எனும் இடத்தைத்தான் காண முடிகிறது. மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களிள் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் இருந்து கர்பலாவின் பின்னணி துவங்குகிறது.

நான்காம் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அலி (ரழி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டார்கள். அதில் மிக முக்கியமானது உஸ்மான் (ரழி) அவர்களை படுகொலை செயதவர்களை கண்டு பிடித்து ஷரீஆத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதாகும். இவ்விடயம் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட இரு குழுக்களாக முஸ்லிம்கள் பிரிகின்றனர். இதன் ஒரு கட்டமாக கலீபா அலி (ரழி) அவர்களுக்கும் ஆயிஷா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற ஜமல் யுத்தம் காணப்படுகிறது.

பின்பு கலீபா அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற “சிப்பீன்” யுத்தம் என்பன கர்பலா நிகழ்வின் வழிகோலிய காரணிகளாக இருந்ததன. இவ்யுத்தம் இடையில் நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக அலி (ரழி) அவர்கள் தரப்பு இரண்டாக பிளவு படுகிறது. இந்நிமிடத்தில் இருந்து அலி (ரிழி) அவர்களின் படையிலிருந்து வெளியேரிச் செய்றவர்கள் “காவாரிஜ்” என்றும், சேர்ந்து இருந்தவர்கள் “ஷீஅது அலி” என்றும் இரு பிரிவுகளாக பிரிந்தனர்.

அன்றய காலத்தில் அழைக்கப்பட்ட ஷீஅது அலி என்பதற்கும் இன்றைய ஷீஆ மதத்திற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. கலீபா அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனைக்கமைய அலி (ரழி) அவர்களின் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு சார்பாக இருந்தார்களே தவிர இன்றைய நவீன ஷீஆ மதத்திற்கும் அவர்களுக்குமிடையில் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அலி (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்பட்ட பின்பு ஆட்சி பொறுப்பை அவரின் புதல்வர் ஹஸன் (ரழி) ஏற்றார்கள். இஸ்லாமிய உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தனது பதவியை விட்டுக் கொடுத்து முஆவியா (ரழி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை கையளித்தார்கள். முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக்கு பின்னர் அவரது மகன் யசீத் பின் முஆவியா (ரஹ்) ஆடசிப் பீடம் ஏறினார்.

யசீத் பின் முஆவியா (ரஹ்) அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் கர்பலா எனும் இடத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். யசீத் (ரஹ்) ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹுஸைன் (ரழி) மற்றும் சிலர் “பைஅத்” செய்ய மறுக்கிறார்கள்.

இந்நிலையில் ஈராக் வாசிகள் தொடர்ந்தேர்ச்சியாக கடிதங்கள் அனுப்புகிறார்கள். தாங்களை அங்கு வரும் படியும் தங்களுக்கு தலைமை பொறுப்பை ஏற்குமாறும் கூறினார்கள். ஈராக் வாசிகளின் உண்மை நிலையை முஸ்லிம் பின் அகீல் என்பவரிடம் உறுதிப்படுத்திக் கொண்ட பின் ஈராக்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார்கள். இதன் போது மூத்த நபித்தோழர்கள் குறிப்பாக இப்னு அப்பாஸ், இப்னு உமர் போன்றோர் ஹீஸைன் (ரழி) அவர்களை ஈராக் போவதை தடுக்க முயற்சித்தார்கள். இறுதியில் அனைத்தும் தோல்வியடையவே, பயணம் தொடர்கிறது வழியில் கர்பலா எனும் இடத்தை ஹுஸைன் (ரழி) அடைந்தார்கள். அங்கே யசீதின் படைவசம் சிக்கிட சில நிகழ்வுகளுக்கு பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்படுகின்றார்கள்.

Picture
ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு நிகழ்ந்த இத்துயர சம்பவத்தை ஞாபகப்படுத்தும் முகமாக ஷீஆக்கள் மேற்கொள்ளும் சடங்குதான் இந்த கர்பலா நிகழ்வு. அதில் நடக்கும் அசிங்கமான சடங்குகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு காணப்படுகின்றன.

கர்பலா தினத்தன்று ஷீஆ மத அறிஞர் மிம்பர் மேடை ஏரி சிறப்புரையும், குத்பாவும் நிகழ்த்துவதுடன் இவ்வுரைகள் ஏனைய குத்பாக்களைப் பேன்றல்லாது உரத்த சப்தத்துடன் கத்துவதுடன், இறம் பாடும் தொணியில் கர்பலா நிகழ்வை கவிதை வடிவில் பாடுவார்கள்.

ஒவ்வெரு ஷீஆ மதத்தினரும் வாலினால், அல்லது கூரிய ஆயுதத்தினால் தனது தலையிலிருந்து இரத்தத்தை ஓட்டி ஹுஸைன் ரழி அவர்களை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள்.


அஹ்லுல் பைத், மற்றும் ஹுஸைன் ரழி அவர்கள் பட்ட கஷ்டத்தை உணரும் விதமாக தீ மிதித்து கொள்வார்கள். இதன் பின் “லைலதுல் மஃசூஸ்” எனும் களியாட்டம் இடம்பெறும். அதாவது ஆண்களும் பெண்களுமாக ஓர் அறையில் ஒன்று சேர்ந்து, விளக்குகள் படிப்படியாக அணைக்கப்பட்டு, ஆடைகள் கழைந்து கூட்டு வழிபாடு நிகழ்த்துதல் என்பது இதன் பொருளாகும்.

Picture
கர்பலா எனும் இடத்திலிருந்து ஹுஸைன் (ரழி) அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு நெற்றி பூமியை முத்தமிட்ட படி நடைப்பவணி மேற்கொள்வார்கள். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்கக்கூடிய பல்வேறு அனாச்சாரங்களை கைகொள்வார்கள்.

இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் தனிமனித வழிபாடு எப்படி சாத்தியமாகும். ஷீஆக்களால் உருவாக்கப்பட்ட அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி) யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.


இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்க தினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீபாக்கள் ஆட்சி நடத்தினார்கள். அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.

Picture
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி)
இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை ஷிர்க்குகளை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “(மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.”
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன் (ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும்
 
                                                                                                          அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) 
இதையும் பார்க்க:-
 
 

திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் இரு வகையினர் :
1.எப்போதும் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤبدا ):  எத்தருணத்திலும் ஒரு ஆணாகிறவன் இவர்களை திருமணம் செய்வது  கூடாது .
  1. நிகழ் காலத்தில் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤقتا):
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை காரணமாக ஆண்கள் இவ்வகையின பெண்களை திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது . அந்த சூழலோ அல்லது ஒரு திருமண உறவு முறியும் பட்சத்தில் திருமணம் செய்ய ஹலாலாகுவாள் .

இவ்விருவகையின பெண்களைப்பற்றி விரிவாக பார்ப்போம்
1 .எப்போதும் ஹராமாக்கப் பட்டவர்கள் :
1 ).உறவுவின் (காரணமாக ) ஹராமாக்கபட்டவர்கள் (ஏழு நபர்கள் )
(1) தாய்மார்கள் :  ஒரு ஆணை பெற்றேடுத்ததின் வகையில் தாய்வழி உறவும், தந்தை வழி உறவும் ஹராம், அதாவது தாய் , தாயுடைய தாய் (பாட்டி), தந்தையுடைய தாய் (பாட்டி ) என முன் செல்லும் சந்ததி ஹராமாகும் .

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget