குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது தெழ வேண்டும்..?
கேள்வி:- குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது சுத்தமாகி தொழுது கொள்வாள்..? அவளின் பிரசவ ருதுக்கான நாட்கள் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதா..?
விடை:- பிரசவ ருது என்பது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்திலோ அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவோ அவளிற்கு வெளியாகும் இரத்தமாகும். அந்த ருது வெளியானதும் அவள் மாதவிலக்கையடைந்த ஒரு பெண்ணைப் போன்று தொழுகை, நோன்பு ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வாள்.
அதே போலவே இரத்தம் துண்டிக்கப்பட்டதும் மாதவிலக்கிலிருந்து விடுபட்ட ஒரு பெண்ணைப் போன்று தன்னை சுத்தமாக்கி கடமையான குளிப்பைக் குளித்துக் கொள்வாள். பிரசவ விடயத்தில் அதிகபட்சமாக அல்லது குறைந்த பட்சமாக இத்தனை நாட்கள் தான் ஒரு பெண் தன் மீது தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வாள் என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் விபரித்ததாக ஆதாரபூர்வமான எந்தவொரு செய்தியையும் நாம் காணவில்லை.