மீலாதுன் நபி” எனும் வழிகேட்டை ஆரம்பித்தவர்கள் ஷீஆக்களே!

மீலாதுன் நபி (நபி பிறந்த தினம்) எனும் கொண்டாட்டடம் இஸ்லாத்தில் ஷீஆக்களாலேயே திட்டமிட்டு புகுத்தப்பட்டது என்பதற்கு சான்றாக இஸ்லாமிய அறிஞர்களும்  வரலாற்று ஆசிரியர்களும் ஒரு வரலாற்றுப்பின்னணியை சொல்கிறார்கள்:

அதாவது எகிப்திலே நான்காம் நூற்றாண்டு நடுப்பகுதியில் ஒரு ஆட்சி நிலவுகிறது. எகிப்தையும் அதை அண்டிய  பகுதிகளையும் ஒரு குழு ஆட்சி செய்கிறது,  நபிகளாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர்கள் நாம் அலி (ரழி)யின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர் இவர்களுக்கு பாத்திமியர்கள் என்று பெயர் வழங்கப்பட்டது.

பொதுவாகவே இவர்களைப்பற்றி எல்லா மார்க்க அறிஞர்களும் இவர்களை மஜூசிகள் (நெருப்புவனங்கிகள்) என்றனர். இவர்கள் இஸ்லாம் எனும் போர்வையை போர்த்திக்கொண்டு ஷீஆ கொள்கையை சொல்லக்கூடிய அதிலும் மிக மோசமான இஸ்மாயிலிய்யா எனும் அவர்களுடைய உட்பிரிவுகளில் ஒன்றை  சேர்ந்தவர்கள்.

இவர்கள் மக்கள் மத்தியில் ''பாத்தினியாக்கள்'' என்றும் அறியப்பட்டார்கள், அதாவது மார்க்கத்தில் உள்ளார்ந்த தோற்றப்பாடும் வெளிப்படையான   தோற்றப்பாடும் இருக்கிறது உள்ளார்ந்ததைத்தான் பார்க்க வேண்டும் வெளிப்படையானதை பார்க்கக்கூடாது, தொழுகை என்பதெல்லாம் வெளிரங்கமானது என்றும் ஏனைய சட்டங்கள் உள்ரங்கமான  வேறு விஷயம் என்றும் சொல்வார்கள், இந்த சிந்தனையை முஸ்லீம்கள் மத்தியில் பரப்புவதற்காக நாம் நபியுடைய குடும்பத்தவர்கள் என்றும் நாம் நபியவர்களை நேசிக்கிறோம் என்றும் கூறி ஷீஆ போர்வையை போர்த்திக்கொண்டார்கள்.  இவர்கள் மீலாதை மட்டுமல்ல ஏகப்பட்ட விழாக்களை உருவாக்கினார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
  • வருட ஆரம்பத்தை கொண்டாடுவார்கள்.
  • ஆஷுரா தினம் கொண்டாடுவார்கள்.
  • அலி பிறந்த தினம் கொண்டாடுவார்கள்.
  • ஹசன் பிறந்த தினம், ஹுசைன் பிறந்த தினம், பாத்திமா பிறந்த தினம் போன்றவற்றை கொண்டாடுவார்கள் .
  • ரஜப் மாத முதல் தின இரவு கொண்டாடுவார்கள்.
  • ரஜப் மாத நடு இரவையும்   ஷாபான் முதல் நாள்  பெருநாளாகவும்  ஷஃபான் மாத நடுப்பகுதி பெருநாளாகவும்.
  • ரமளான் முதல் நாள் பெருநாளாகவும் கொண்டாடுவார்கள்.
 
இப்படி அனேகமான பெருநாட்களை கொண்டாடியிருக்கிறார்கல். இன்று முஸ்லீம்கள் நபி பிறந்த தினத்தை மட்டும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்,  ஏனையவை ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளது.
 
அல்முஅத்தீனுல்லாஹ் என்ற பாதிமியீன்களின் ஆட்சியாளர் தான் முதன் முதலில் மக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பெயரால் மொலூது ஓதுவதற்கும் அன்றைய தினத்தை சந்தோஷமாக கொண்டாடுவதற்கும் கட்டளைப் பிறப்பித்தார். இது மக்களால் நடைமுறை படுத்தப் பட்டதை அறிந்தவர் அதற்கடுத்த வருடம் ஹஸன்(ரழி), ஹுசைன்(ரழி), பாத்திமா(ரழி) அவர்களுடைய பிறந்த தினத்திலும் மொலூது ஓதிக் கொண்டாடுவதற்கு ஏவினார் இவர் ஷிஆ கொள்கையினை உடையவர் என்பது குறிப்பிட தக்கது. (பார்க்க وأحسن الكلام للمطيعي صـ : 44/45 كتاب المواعظ والاعتبار للمقريزي  1/490
 
இந்த பாத்திமியர்கள் பற்றி அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பாருங்கள்:
இவர்கள் வழிகெட்ட ஷீஆக்கள், இஸ்லாம் எனும் போர்வையை போர்த்திக்கொண்டு இவர்களுடைய வழிகெட்ட கொள்கையான உள்ரங்கம் வெளிரங்கம் எனும் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பியிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்காலத்தில் மிம்பரில்  அபூபக்கர் (ரழி)  உமர் (ரழி)  உஸ்மான் (ரழி) போன்ற சஹாபாக்களை சபித்தே ஆகவேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்திருந்தனர். ஏனைய சஹாபாக்கள் சிலரை காபிர்கள் என்றும் அலி (ரழி)யின் எதிரிகள் என்றும் மஸ்ஜித் சுவர்களில் எழுதியும் வைத்திருந்தனர்.

அலி மற்றும் அவர்கள் பிள்ளைகள் பற்றிய புகழுக்கு மட்டும் குறைவில்லாமல் இருக்கும் இவர்களுடைய இந்த கொள்கையைத்தான் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள எல்லா அறிஞர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையாயின் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என சட்டமியற்றி இஸ்லாத்தில் இல்லாதவைகளை புகுத்திய இந்த வழிகெட்ட ஷீஆக்கள்  கண்டு   பிடித்து  ஏற்றுமதி செய்ததுதான் இந்த மீலாது விழா.


இதையும் பார்க்க:-
                  * இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இன்றைய மீலாது விழாக்கள்.?
                  * கர்பலா வரலாற்று பின்னணி என்ன..?
                  * நோன்புக்கு ஷீஆக்கள் வழங்கும் முக்கியத்துவம்.
                  * இணைவைக்கும் சமூகத்தை எவ்வாறு தூய இஸ்லாத்திற்கு அழை...
                  * மிஃராஜ் தினத்தில் இட்டுக்கட்டப்பட்ட நோன்பும், அமல்...
                          

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget