முஸ்லிமகளே சோதணைகள் நமது ஈமானை சோதிப்பதற்காகத்தான்

என் கொள்கை சஹோதர ..!! சஹோதிரிகளே.. !!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !! இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே  
 
இறைவன் நமது வாழ்வில் பலவிதமான சோதனைகளையும் நமக்குத் தந்து நம்மை சோதிப்பான் அந்த நேரத்தில் உண்மையான ஓர் ஏகத்துவவாதி பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் நமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். தளர்ந்து விடாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள் .அல்குர்ஆன்:3:139
 
ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2-155)

 
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நம்மை எப்படியெல்லாம் சோதிப்பான் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறான். குறிப்பிட்டு விட்டு வசனத்தின் இறுதியில் பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! என்றும் குறிப்பிடுகிறான். நமக்கு துன்பங்களை அல்லாஹ் தந்து நம்மை சோதிக்கும் போது பொருமையாக நாம் இருக்கிறோமா.? இல்லையா.? என்பதைத் தான் இறைவன் கண்காணிக்கிறான்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 2-156)
 
அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (அல்குர்ஆன் 2-157) மேற்கண்ட வசனங்களில் துன்பம் நேருகின்ற நேரத்தில் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் குறிப்பிடுகின்றான்.செல்வம் இருப்பதும் சோதனை இல்லாமல் இருப்பதும் சோதனையே!செல்வத்தைப் பொருத்தவரையில் அது நம்மிடம் நிறைய இருப்பதும் சோதனை தான் இல்லாமல் இருப்பதும் சோதனைதான். இருப்பவன் அதை எப்படியெல்லாம் செலவு செய்கிறான் என்று இறைவன் சோதிப்பான் இல்லாதவன் செல்வம் இல்லாத போது இறைவன் விஷயத்தில் எப்படி இருப்பான் என்று இறைவன் சோதிப்பான்.

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குறிய சோதனை செல்வமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் கஃப் பின் இயாழ் (ரழி) நூல் திர்மிதி

 சோதனையான ஒரு விஷயத்தில் இறைவனிடமே நமது கோரிக்கையை நாம் ஒப்படைக்க வேண்டும்.நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் . என் அடியானின் இரு கண்களை நான் (போக்கிவிடுவது) கொண்டு அவனைச் சோதித்து அவன் அப்போது பொருமையாக இருப்பானானால் அவ்விரு கண்களுக்குப் பகரமாக சுவர்க்கத்தை வழங்குவேன் என நபியவர்கள் கூறியதை நான் செவிமடுத்தேன் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் – புகாரி 5653)

இப்படி பல சந்தர்ப்பங்களில் சோதனைகளை பொருத்துக் கொள்வர்களுக்கு இறைவன் தனது அருளைப் பொழிவதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட நேரங்களில் நாம் கண்டிப்பாக பொருமையாக இருப்பதுதான் மிகவும் சிறந்த பண்பாகும்.
 
பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் (39-10)
அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான் (அல்குர்ஆன் 2-153)
ஆக அன்பின் சகோதரர் அவர்களே உங்கள் பிரச்சினையை இறைவனிடம் கூறி மன்றாடுங்கள் இறைவன் கண்டிப்பாக அவற்றை நீக்குவான்…
 
 
இதையும் பார்க்க:-
                 * இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறைகள்.
                 * மாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா..?
                 * சகாதுல்பித்ர் பருவ வயதை அடையாத சிறுவர்களுக்கு கடமை...

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget