குளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா ?
ஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தின் மூலம், அல்லது கனவின் மூலம் ஸ்கலிதமானல் குளித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சற்று தாமதித்து குளிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வதற்காக இதை நாம் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.
குளிப்பு கடமையானவர் உறங்குவது.
ஈமான் கொண்டவர்களே! …… மேலும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள், பாதையை கடந்து செல்பவராக இருந்தாலே தவிர. (4-43)