இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் இன்றைய நிலை


கடந்த காலங்களில் இலங்கையில் பெளத்தர்கள் , தமிழர்கள் , மலையகர்கள் என்று மூன்று சாரார்களுமே கல்வியைக் கற்பதில் கூடிய கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் இன்று இலங்கை முஸ்லிம் சமுகம் கல்வி வரலாற்றில் மலையக சமூகத்தையும் தாண்டி தமிழில் சமூகத்தையும் தாண்டும் அளவுக்கு பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது . அல்ஹம்துலில்லாஹ் இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது மார்கத்தின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு அதிகம் உள்ளது. காரணம் நாங்கள் இலங்கை என்ற பெளத்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம். இன்று பத்திரிகைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் , சமூக வலைத்தளங்களிலும் இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ மாணவிகள் பரிதாவ நிலைபற்றி கேட்கின்ற போது மிகவும் மனவேதனையைத் தெரிகின்றது .

இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் உயர் கல்வியில் ஆர்வம் காட்டுகின்றன். இதனை கடந்த காலங்களில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் தெரிவான மாணவ மாணவிகளின் பட்டியல்களில் எமக்கும் பார்க் முடியும். இதே நிலை இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் அதிகரித்துள்ளது. முஸ்லிம் மாணவர்களைவிட முஸ்லிம் மாணிகளே அதிகம் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்குத் தெரிவாகின்றன். கடந்த 5 ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம் ஆண்கள் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்குத் தெரிவாகுவதைவிட முஸ்லிம் பெண்கள்தான் அதிகம் தெரிவாகியுள்ளனர். இது ஒருபுறம் எமது பெண்கள் படிக்கின்றார்கள் என்ற சந்தோசத்தையும் இன்னொரு புறம் எமது முஸ்லிம் ஆண்களின் கல்வி நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற கவலையையும் தருகின்றது.

இன்று இலங்கையின் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் முஸ்லிம் ஆண்களை விடவும் முஸ்லிம் பெண்களே அதிகம் உள்ளனர் . அது மருத்துவப்பீடமாக இருக்கலாம், வர்தகப் பீடமாக இருக்கலாம் , கலைப்பீடமாக இருக்கலாம் இப்படி முஸ்லிம் பெண்கள் பல துறை சார்ந்து கற்று வருகின்றனர் . இவ்வாறு கற்றுவரும் முஸ்லிம் மாணவிகளின் அன்மைக்காலப் போக்கில் பாரிய கலாச்சார வீழ்சியை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது . முஸ்லிம் மாணவிகளின் அந்நிய ஆண் தொடர்புகள் , அவர்களின் இஸ்லாமிய வரையறையைத் தாண்டியா ஆடை ஒழுங்குகள் இவைகள் பிற சமூகங்களுக்கிடையில் இஸ்லாத்தைப் பற்றியும் இலங்கை முஸ்லிம்களின் பண்பாடுகள்பற்றியும் பல கசப்புணர்வுகளை எற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஒரு சில பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற இடம்பெற்ற சில நிகழ்வுகளை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன் .

1) குறிப்பிட்ட அந்த பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவிவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவி அதே கலைப் பிரிவைச் சேர்ந் ஒரு அந்நிய ( கிறுஸ்தவ ) மாணவனுடன் நெருக்கமான உறுவுவைத்து கூட்டிக் ஒடிய நிகழ்வு அந்தப் பல்கலைக்கழகத்தில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியது . அதேபோல் அங்கு முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் பிழையான பதிவை ஏற்படுத்தியது.

2) அதே பல்கலைக்கழகத்தில் குழு கற்றல் என்ற பெயரில் ( Group study ) ஒரு முஸ்லிம் மாணவியும் ஒரு மாற்றுமத மாணவனும் சேர்ந்து கணவன் மனைவி போன்று வாழ்ந்து பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் தார்வாத்தமை .

3) மற்றொரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமாணவி இஸ்லாமிய வரையறையைமீறிய ஆடையை அணிந்து பலபல்கலைக்கழகத்திற்கு வருகின்றமை ( பர்தா இல்லை , டீஷேட் , ஜீன்ஸ் ) கவலை என்னவென்றால் இவர் முஸ்லிம் என்றே அங்கு இருக்கும் முஸ்லிம் மஜிலிஸுக்குத் தெரியாது.

4) மற்றொரு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் முஸ்லிம் ஆண் பெண் தகாத உறவு மூலம் கருகட்டியமை , கருகட்டலின் பின் கருவைக் கலைப்பதற்கு பல்கலைக்கழக வைத்தியசாலையை அணுகியமை.

5) மற்றொரு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக இரவுநேர கிளப்களில் கலந்து கொண்டு அந்நிய ஆண்களுடன் கும்மியடித்து முஸ்லிம்கள் பற்றி பிழையான பதிவுகளை ஏற்படுத்தியமை.
இவை வெறும் கதைகள் அல்ல . இவை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தற்போது இடம்பெறும் உண்மைச் சம்பவங்கள் .

மேலும் எமது முஸ்லிம் மாணவிகளின் பல்கலைக்கழகத்தில் அணியும் ஆடைகள் மிகவும் மோசமாக உள்ளது . குறிப்பிட்ட ஒரு சில முஸ்லிம் பெண்களைத் தவிர. மற்றமுஸ்லிம் பெண்களின் ஆடைகள் ஆண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது . பெண்கள் தங்களது முகம் மற்றும் கை தவிர்ந்த அனைத்து உறுப்புக்களையும் மறைப்பதன் நோக்கம் தங்களின் அழகு மற்ற ஆண்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக . அவ்வாறு தெரிந்தால் பல குழப்பங்கள் ஏற்படும் என்பதற்காக . ஆனால் இன்று தனது உடம்பை ஆண்களுக்குக் வெளிக்காட்டும் வகையிலேயே அவர்களின் ஆடை அலங்காரங்கள் அமைந்துள்ளது .

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "நான் நரகில் அதிகமாக பெண்களையே கண்டேன் " இந்த ஹதீஸ் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் நிலையாக இருக்க வேண்டும் . இதை மனதில் வைத்து உங்களின் ஆடை அலங்காரங்களை வரையறுக்க வேண்டும்.

1) பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் கவனத்திற்கு
* பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் முஸ்லிம் மஜ்லிஸி அமைப்பு அனைத்து மாணவ மாணவிகளையும் அங்கத்தும் வகிப்பதற்கு வலியுறுத்த வேண்டும் . அவ்வாறு முஸ்லிம் மஜ்லிஸுடன் சேராவிட்டால் அவர்களுக்கு முஸ்லிம் மஜிலிசூடாக வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் .

* முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பினால் வாராந்தம் காலத்திற்குப் பொருத்தமான இஸ்லாமிய விரிவுரைகள் நடத்த வேண்டும் .

2) பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் கவனத்திற்கு

* இஸ்லாமிய வரையறைகளுடன் உங்கள் ஆடை அலங்காரங்களை வைத்து கொள்ள வேண்டும்.
* மேலும் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இரவு நேர கிளப்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் .
* இஸ்லாமிய வரையறை மீறிய குழு கற்கைகளைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் .
* இஸ்லாமிய வரையறைகளுடன் ஆண்களுடனான தொடர்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும் .

3) பெற்றோர்களின் கவனத்திற்கு

* உங்கள் பெண் பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்ற போது திருமணம் பேசி ( நிகாஹ் ) செய்து அனுப்புவது மிகவும் பொருத்தமானது.
* அப்படி திருமணம் பேசுவது கடினம் என்றால் உங்கள் பெண் பிள்ளைகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு கண்கானிக்க வேண்டும் .
Eg:- அவர்களின் துலைபேசி பாவனையை கண்கானிப்பது , அவர்களின் ஆடை அலங்காரத்தில் கூடிய கவனம் செலுத்தல் ( எப்படியான ஆடையை எனது பிள்ளை அணிகிறாள் என்று பார்க்க வேண்டும் )

4) இஸ்லாமிய நிறுவனங்களின் கவனத்திற்கு 
* இலங்கையில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும் .
* பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் முஸ்லிம் மஜ்லிஸுடன் இணைந்து காலத்திற்குப் பொருத்தமான இஸ்லாமிய விரிவுரைகள் நடத்த வேண்டும் .
இதில் " இஸ்லாத்தில் ஆண் பெண் உறவுகள் " இஸ்லாத்தின் ஆடை ஒழுங்குகள் , போன்ற தலைப்பில் நடத்துவது வரவேற்கக் கூடியது .
* பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குக் கஷ்டப்படும் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்குவதற்கு முன்வர வேண்டும் .
இதை எமது பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின்மீதுள்ள அக்கரையினால் நான் எழுதியது . இவற்றை எமது இலங்கை முஸ்லிம் சமூகம் பொருட்படுத்துகின்றபோது . எமது முஸ்லிம் சமூகத்தில் பாரிய இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்படும். மேலும் இலங்கை இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் சரியான தெளிவு கிடைக்கும் .

                                                                                                                  கட்டுரை
                                                                                                    ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
                                                                                                      
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget