February 2017

கேள்வி : முஸ்லிம் பெண் இந்துவை திருமணம் செய்யலாமா?
 
பெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா?
 
அவ்வாறு திருமணம் செய்தால் பெற்றோரின் பங்கு என்ன?
 
இந்நிலையில் ஜமாத்தார்களின் நிலை என்ன?
 
பதில் :  இந்துக்கள் இணைவைப்பவர்கள் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. இணைவைப்பவர்களை திருமணம் செய்து கொள்ள முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதற்கு கீழ்காணும் வசனம் சான்றாக உள்ளது. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்.

நோபல் பரிசு பெரிசு பெற்ற முதல் அரேபிய பெண்மணி எப்படி போர்க்கள நாயகி ஆனார் ?  இவர் பற்றிய சுவாரஸ்யங்கள் ஏராளம் உண்டு. தவக்குல் பிறந்தது ஏமன் நாட்டில். 2011 ல்  'அலி அப்துல்லா சாலே' அரசுக்கு  எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கிணைத்து எதிர்த்ததும் அதனைத் தொடர்ந்து அவர் சிறை சென்றும் கூட விடுதலையான அடுத்த நாளே மீண்டும் பெரும் போராட்டத்தை நிகழ்த்தியதும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று இருக்கும் இந்த இடத்திற்கு அவர் அத்தனை எளிதில் வந்துவிடவில்லை என்பதைக் காணும்போது நம் ஒவ்வொருவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.

இஸ்லாமிய நாட்டில் பெண்கள் வீதிக்கு வந்து போராடியது ஏன்.? இதற்கான விடை தெரிய வேண்டுமானால் ஏமனின் அரசியல் வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் பரவிக்கிடக்கும் நாடு தான் ஏமன். வடக்கே சவுதி அரேபியா கிழக்கில் ஓமான். 19 நூற்றாண்டின் ஏமனின் ’சனா’வைத்  தலைநகரமாகக் கொண்டு துருக்கிய  ஒட்டமான்கள் ஆட்சி செய்தனர். ஏமன் ஒரே நாடாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட வடக்கு ஏமன் தனியானதாகவும் பிரிடிஷ் காலனியாகத் தெற்கு ஏமன் தனியானதாகவும் கருதப்பட்டன.

வட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.


 

தலையனை மற்றும் கால்மிதிகள் போன்ற பொருட்களிலுள்ள உருவங்கள் பதிக்கப்படாத நிலையிலிருந்தால் அவற்றைப் பாவிப்பது குற்றம் இல்லையென சகோதரர் பீ.ஜே. அவர்கள் தமது தீர்ப்பை வெளியிட்டுள்ளதை பலரும் அறிந்திருக்கலாம்.

இதற்கு ஆதாரமாக 'இமாம் அஹமதிற்குரிய முஸ்னத்' என்ற கிரந்தத்தில் இடபெற்றுள்ள 'அன்னை ஆயிஷா (ரழி)' அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸை முக்கிய சான்றாக அவர் முன்வைக்கின்றார். அதனுடன் 'அபூ ஹுறைறா (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படக்கூடிய 'இமாம் அபூதாவுத்துக்குரிய சுனன்' என்ற கிரந்தத்தில் இடம்பெறும் மற்றுமொரு ஹதீதையும் முன்வைக்கின்றார். ஆனால் எமது நிலைப்பாட்டின்படி இவ்விரு ஹதீஸ்களிலும் அவர்கள் ஆதாரத்திற்கு எடுத்துக் கொண்ட பகுதி பலஹீனமான, ஆதாரமற்ற செய்தியாகும். அதன் விபரம் பின்வருமாறு 

பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.

பெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது.

நாம் அல்குர்ஆனை நடைமுறைப்படுத்த வில்லை என்றால் யார் நடைமுறைப் படுத்துவது? என்பதை ஈமான் உள்ள ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளான்.  தவறான சொத்துப்பங்கீட்டால் சமுகம் சந்தித்த , சந்தித்துக் கொண்டிருக்கின்ற இழப்புகள் ஏராளம் ஏராளம். ஜாஹிலிய்யக் காலத்தில் எப்படி ஆண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கப்பட்டதோ அது எமது சமுகத்தில் மாறி பெண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கும் நவீன ஐhஹிலிய்ய சிந்தனை அரங்கேறுகிறது.
 
 

 

இஸ்லாமிய ஷரிஅத் என்பது பல வனக்க வழிபாடுகளை தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அந்த வணக்கங்களை வித்தியாசம் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்றுவது இன்றியமையாத கடமையாகும். இவ்வாறான வணக்கவழிபாடுகளில் சிலதை ஏற்று சிலதை நிராகரிக்கும் மனப்பான்மை ஒரு முஸ்லிமிடத்தில் இருக்க முடியாது. அல்லாஹ்வின் அனைத்து சட்டங்களையும் தன்னுடைய வாழ்வில் செயற்படுத்துவது ஒரு முஸ்லிமின் இன்றியமையாத கடமையாகும்,
 
நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள் இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. 2:85

தங்களின் பன்னிரண்டாவது இமாமான மஹ்தி வந்தால் சில வேலைகளைச் செய்ய இருப்பதாக ஷீஆக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அறிவிப்புக்களை முழுமையாகப் பார்த்தால் ஷீஆக்கள் சொல்லும் மஹ்தி ஒரு யூதனாக இருக்க வேண்டும் அல்லது தஜ்ஜாலாக இருக்க வேண்டும். மூன்றாம் நபராக இருக்க முடியாது என்பது தெளிவாகின்றது. இதை நீங்களும் தெளிவாக அறிந்துகொள்ள அது தொடர்பாக அவர்களின் நூல்களில் வந்திருக்கும் அறிவிப்புகள் சிலவற்றைப் பாருங்கள்.

01. அபூபக்ர்உமர்ஆயிஷா (ரழி) போன்றவர்களைப் பழிவாங்கல்:எதிர்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் அபூபக்ரையும், உமரையும் உயிர்ப்பிப்பார். பின்பு அவர்கள் இருவரையும் ஈத்தம் குற்றியிலே அறைவார். பின்பு ஒவ்வொரு நாளும் அவர்கள் இருவருக்கும் ஆயிரம் கசையடிகளை வழங்குவார். (ஈகாழும் மினல் ஹஜ்ஆ) ஷீஆக்களின் முக்கியமான அறிஞர் மஜ்லிஸி என்பவர் குறிப்பிடுகின்றார்: ‘‘எதிர்பார்க்கப்படும் மஹ்தி வந்தால் ஆயிஷாவை உயிர்ப்பிப்பார். அவருக்கு விபச்சாரத்திற்கான தண்டனையை வழங்குவார்.’’ (ஹக்குல் யகீன்)

வுளு என்பது ஓர் அமலாகும் ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரங்களிலும் வுளுடன் இருப்பதை இஸ்லாம் விரும்புகிறது. வுளு இல்லாவிட்டால் தொழுகையே கூடாது. வுளு முறிந்து விட்டால் தொழுகைக்காக உடனே வுளு செய்து கொள்ள வேண்டும்.
 
அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘சிறு தொடக்கு ஏற்பட்டவன் வுழூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புஹாரி 135 -முஸ்லிம் )
 
வுளு எப்போதெல்லாம் முறியும் என்பதை இஸ்லாம் நமக்கு தெளிவுப் படுத்தியுள்ளது. அந்த வரிசையில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் வுளு முறியுமா, அல்லது என்ன செய்ய வேணடும் என்று தொடர்ந்தும் அவதானிப்போம்.

ஒரு குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்க அழகான முறையில் தெளிவுப்படுத்தியுள்ளது. குழந்தை பிறந்து ஏழாம் நாள் பெயர் வைக்க வேண்டும், தலை முடியிறக்க வேண்டும், கத்னா (சுன்னத்) செய்ய வேண்டும், தஹ்னீக் செய்ய வேண்டும் ( தேன் அல்லது பேரீத்தம் பழத்தை குழந்தையின் வாயில் சுவைக்க கொடுக்க வேண்டும்) அகீகா கொடுக்க வேண்டும். இவைகளை நபியவர்கள் நமக்கு மார்க்கமாக வழிக் காட்டியுள்ளார்கள்.

ஆனால் குழந்தை பிறந்து நாட்பதாவது நாள் என்று சாப்பாடு போட்டு வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். ”பெயர் சூட்டும் விழா” என்று பத்திரிகை அடித்து பந்தல் போட்டு, (மண்டபங்களிலும்) கொண்டாடக் கூடிய நிலையை பார்க்கிறோம். இந்த நாட்பதுக்கும் அந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம். ? என்று தேடிப் பார்த்தால் குழந்தைக்கும் நாட்பதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஆனால் தாயிக்கும், நாட்பதுக்கும் சம்பந்தம் உள்ளது.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget