March 2017

உணவு , உடை போன்று தன் மனைவிக்காக ஒரு இருப்பிடத்திற்கும் ஏற்பாடு செய்யும் போதுதான் உண்மையில் ஒரு ஆண் திருமணம் முடிக்க சக்தி பெற்றவனாக ஆகிறான். அதை அவன் வசதிக் கேற்றாற் போல் சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ அமைத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் தன் இருப்பிடத்திற்கு மனைவியை அழைத்துச் சென்று பின்னர் திருமண விருந்தளிப்பது கணவனின் பொறுப்பாகும் இறை தூதரோ தோழர்களோ மனைவியின் வீட்டில் விருந்தளித்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

;என்றாலும் மனைவி வீட்டில் வலீமா கொடுக்கலாம் என்று கூறும் சில மௌலவிமார்கள் நபி (ஸல்) ஸைனப் (ரழி)யை திருமணம் செய்த வேளை அவரது வீட்டிலேயே தங்கி அங்கேயே விருந்தளித்ததாக சொல்கின்றனர்;. அதற்கு ஸைனப் (ரழி)யின் திருமணம் குறித்து சொல்லும் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகிறார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல் குர்ஆன்-5:8)


( குர்ஆன் சூரத்துல் அந் நம்ல் 27:21-28 ) குர்ஆனில் இடம் பெற்றுள்ள ஹுத் ஹுத் பறவைக்கும் சுலைமான் (அலை) அவர்களுக்கும் இடையே உண்டான உரையாடல் .

ஹுத்ஹுத் பறவையை இன்று காணவில்லையே என்று தேடிகொண்டிருந்த சுலைமான் (அலை) அவர்கள் அது வருவதில் தாமதமானதால் அப்பறவை மீது கோபம் கொண்டார்கள்.
சிறிது நேரத்தில் ஹுத்ஹுத் பறவை வந்தது.அப்போது அது கூறியது ““தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”

“நிச்சயமாக அந்த தேசத்தில் ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்;மேலும் அவளுக்கு பல பொருட்களும் மகத்தான அரியனையும் இருப்பதை கண்டேன் . அவளும் அவளுடைய சமூகமும் அல்லாஹுவை வணங்காமல் , சூரியனை வணங்குகின்றனர் .ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.என்று ஹுத் ஹுத் பறவைகூறியது. அப்பறவையை பார்த்து சுலைமான்  (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகளை கவனியுங்கள் அதில் தான் நான் கூறவரும் படிப்பினை உள்ளது .

இது ஒரு விழிப்புணர்வுக்காக பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவு இதை அதிகமாக மற்றவர்களுக்கும் பகிர்ந்து எமது சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வையும் நன்பிக்கையும் தைரியத்தையும் தெளிவு படுத்தவும்.   

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.

நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். ( 2:25 )

மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான். அல்லாஹ் கூறுகிறான்:
மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ

நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) நூல்: திர்மிதி 1935)
 
(இந்த ஹதீஸின் அறிவிப்பு தொடர் பலகீனமானதாகும்)
 
நமதருகில் நின்று தொழுவோரில் பலர் ருகூவு  சுஜுது மற்றும் தக்பீர்களில் இமாமை முந்திச் செல்கின்றனர். இமாமுக்கு முன்னரே ஸலாம் கொடுத்து விடுகின்றனர். சில சமயங்களில் நாமே இவ்வாறு நடந்துகொள்கிறோம். இதனை நாம் தவறாக நினைப்பதே கிடையாது. ஆனால் நபி(ஸல்)அவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளை கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் ! அவர்களே குற்றம் புரிபவர்கள் . அல்குர் ஆன் : 24:4)


 

மனிதனில் முளைக்கக் கூடிய முடிகளை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்

  1.  எடுத்துவிட வேண்டாம் எனவும் வைக்குமாறும் ஏவப்பட்டுள்ள முடிகள் (தாடி, புருவமுடி,,,)
  2. முற்றாகவோ அல்லது பகுதியளவோ எடுத்துவிடுமாறு ஏவப்பட்டுள்ள முடிகள் (அக்குள் முடி, மர்மஸ்தான முடி,,,)
  3. எடுத்துவிடுமாறோ அல்லது வைக்குமாறு கூறப்படாத முடிகள் ( நெஞ்சுமுடி, கால் முடி, கைமுடி,,,)

நெஞ்சுமுடி விடயத்தில் அதை எடுக்கலாமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும்,

பொதுவாக இஸ்லாத்தில் ஏவல் விலக்கல் எதுவும் கூறப்படாமல் மௌனம் சாதிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் அல்லாஹ்வினால் எமக்கு மன்னிக்கப்பட்டு, விட்டுக் கொடுக்கப்பட்ட அம்சங்களாகும் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

"ஹலால் என்பது அல்லாஹ் அவனது வேதப் புத்தகத்தில் ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் மாத்திரமாகும். ஹறாம் என்பதும் அல்லாஹ் அவனது வேதப்புத்தகத்தில் ஹறாமாக்கிய விடயங்களாகும் (இவை தவிர ஹலால் என்றோh ஹறாம் என்றோ) கூறப்படாமல் மௌனம் சாதிக்கப்பட்டிருப்பது, அல்லாஹ் எமக்காக விட்டுத்தந்திருக்கின்ற அம்சங்களாகும்)"  திர்மிதி 1726.

இந்த ஹதீஸை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஹஸன் தரத்தில் உள்ள ஹதீஸ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.இக்கருத்தையே லஜ்னதுத் தாயிமாவும், இமாம் உதைமீன் (ரஹ்) அவர்களும் சரிகாண்கின்றனர். பார்க்க : பதாவா அல் மர்அதில் முஸ்லிமா 3ஃ879

நாம் : ஒருவருக்குத் தனது நெஞ்சில் முளைக்கும் முடிகள் அசௌகரியத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அம்முடியை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தேவையான அளவு எடுத்துவிடுவதில் தவறில்லை
 
அல்லாஹ் மிக அறிந்தவன்
 
மேலும்பார்க்க > 
 
 

⥀தூய வழி.காம் - பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்! அதுபோன்று உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்!

முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!
நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒருபடைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப்பீர்களா.?

கடமையான தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்கு செல்லும் நாம் எவ்வாறு செல்ல வேண்டும்? வீட்டிலே வுழு செய்து கொண்டு பள்ளிக்கு செல்வதன் மூலம் நாம் பெறக்கூடிய நன்மைகள் என்ன? பள்ளியில் இகாமத்தை செவியுற்றால் நாம் எவ்வாறு செல்ல வேண்டும்? அவசரமாக தொழுகையில் சேர்ந்து கொள்ள முடியுமா? மஃமும்கள் தொழுகைக்காக அவசரப்படுத்தலாமா? போன்ற கேள்விகளுக்கு இவ்வுரை பதிலாக அமைகிறது பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

மனித வாழ்வின் பல் வேறு அம்சங்களைப் பற்றிப் பேசிய இஸ்லாம் மார்க்கம் பொருளதாரம் தொடர்பிலும் மிகச்சிறப்பான, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. பொதுவாக பொருளாதரம் பற்றிப் பேசியுள்ள சித்தாந்தங்கள், கொள்கைள் யாவும் பொருளாதரம் பற்றிய சட்ட விதிகளை மட்டுமே வகுத்துள்ளன. ஆனால் இஸ்லாம் இவற்றிலிருந்து வித்தியாசப்படும் வகையில் பொருளாதரம் பற்றிய சட்டங்களைச் சொல்வதோடு பொருளாதரம் பற்றிய பார்வை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.

இஸ்லாம்  எத்துறையைப் பற்றிப் பேசும் போதும் முதலில் அது பற்றிய சுருக்கமான தெளிவான பார்வையை நமக்குத் தந்துவிடும். ஒரு திட்டத்தை வகுத்து அதை நடை முறைப்படுத்த விளையும் போது அதனால் ஏற்படும் உடனடிப் பாதிப்புக்களை நம்மால் ஓரளவு கண்டு கொள்ள முடியும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதிப்பை வைத்து அத்திட்டத்தை உடனே மாற்றி விடுவோம். ஆனால் இப்போது போடப்படும் ஒரு திட்டத்தால் 50 வருடங்களுக்குப் பின் ஏற்படப் போகும் பாதிப்புக்களை நம்மால் அறிய முடியாது அல்லது திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அல்லாஹ் ஒருவனாலேயே அவற்றைத் துல்லியமாய்ச் சொல்ல முடியும்.

தூயவழி.காம் மனிதர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு, நேசம், நட்பு ஆகியன நீடித்து நிலை பெறுவதற்குரிய காரணிகளை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவைகளில் ஒன்று அன்பளிப்புகளை பரஸ்பரம் வழங்கிக் கொள்வது.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். ''அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அதற்கு பதிலாக (அதே சமயம் அல்லது வேறொரு சமயத்தில்) தாமும் ஏதேனும் வழங்குவார்கள்''. (நூல்: புகாரீ 2585)
 
அன்பளிப்பு பொருட்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமும் அதற்கு பிரதியாக அன்பளிப்புகளை நம்மால் இயன்றளவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செய்து காட்டி நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

நாம் படுத்துக் கிடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் உடனே எழுந்து உட்கார வேண்டும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது. இது சரியா.?

இந்த நம்பிக்கைக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

*626-حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا سكت المؤذن بالأولى من صلاة الفجر قام فركع ركعتين خفيفتين قبل صلاة الفجر بعد أن يستبين الفجر ثم اضطجع على شقه الأيمن حتى يأتيه المؤذن للإقامة

ஃபஜ்ரு தொழுகையின் பாங்கை முஅத்தின் சொல்லி முடித்தவுடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுவார்கள். ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரீ 626)

 இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன்’என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது. ‘உனக்காக நான் இதைச் செய்கிறேன்’ என்று இறைவனிடம் நாம் கூறும் போது ’அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான்’ என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது. 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget