ஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா?

மனிதனில் முளைக்கக் கூடிய முடிகளை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்

  1.  எடுத்துவிட வேண்டாம் எனவும் வைக்குமாறும் ஏவப்பட்டுள்ள முடிகள் (தாடி, புருவமுடி,,,)
  2. முற்றாகவோ அல்லது பகுதியளவோ எடுத்துவிடுமாறு ஏவப்பட்டுள்ள முடிகள் (அக்குள் முடி, மர்மஸ்தான முடி,,,)
  3. எடுத்துவிடுமாறோ அல்லது வைக்குமாறு கூறப்படாத முடிகள் ( நெஞ்சுமுடி, கால் முடி, கைமுடி,,,)

நெஞ்சுமுடி விடயத்தில் அதை எடுக்கலாமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும்,

பொதுவாக இஸ்லாத்தில் ஏவல் விலக்கல் எதுவும் கூறப்படாமல் மௌனம் சாதிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் அல்லாஹ்வினால் எமக்கு மன்னிக்கப்பட்டு, விட்டுக் கொடுக்கப்பட்ட அம்சங்களாகும் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

"ஹலால் என்பது அல்லாஹ் அவனது வேதப் புத்தகத்தில் ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் மாத்திரமாகும். ஹறாம் என்பதும் அல்லாஹ் அவனது வேதப்புத்தகத்தில் ஹறாமாக்கிய விடயங்களாகும் (இவை தவிர ஹலால் என்றோh ஹறாம் என்றோ) கூறப்படாமல் மௌனம் சாதிக்கப்பட்டிருப்பது, அல்லாஹ் எமக்காக விட்டுத்தந்திருக்கின்ற அம்சங்களாகும்)"  திர்மிதி 1726.

இந்த ஹதீஸை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஹஸன் தரத்தில் உள்ள ஹதீஸ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.இக்கருத்தையே லஜ்னதுத் தாயிமாவும், இமாம் உதைமீன் (ரஹ்) அவர்களும் சரிகாண்கின்றனர். பார்க்க : பதாவா அல் மர்அதில் முஸ்லிமா 3ஃ879

நாம் : ஒருவருக்குத் தனது நெஞ்சில் முளைக்கும் முடிகள் அசௌகரியத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அம்முடியை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தேவையான அளவு எடுத்துவிடுவதில் தவறில்லை
 
அல்லாஹ் மிக அறிந்தவன்
 
மேலும்பார்க்க > 
 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget