கேள்வி : இஸ்லாத்தின் பார்வையில் credit card பாவனை அனுமதியாகுமா.?

பதில் : அல்ஹம்து லில்லாஹ் , வஸ்ஸலாது வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் வஅலா ஆலிஹி வ சஹ்பிஹி வமன் தபியஹும் பிஇஹ்சான் இலா யவ்மீத்தீன்
.
சில சகோதரர்கள் credit card பாவனை சம்பந்தமாக கேட்டிருக்கிறார்கள் .எந்த ஒரு விடயமாக இருந்தாலும் நாம் அல்குரான் ,சுன்னாஹ் அடிப்படையிலேயே தீர்வைக் கூற வேண்டும் . அதுவே எம் கடமையுமாகும் .

அந்த வகையில் இந்த credit card யை பொறுத்த வரையில் முதலாவதாக இதை பெறுபவர்கள் அதனை வழங்குபவர்களிடம் ஒரு ஒப்பந்தம்செ ய்து விட்டு எடுக்கிறார்கள் .அதாவது , நான் எடுக்கின்ற குறிக்கப் பட்ட கொடுப்பனவை உரிய நேரத்தில் கொடுப்பதற்கு தாமதமாகிவிட்டால் அதற்குரிய வட்டியை நான் கட்டுவேன் என்ற நிபாந்தனையிலேயே எடுக்கிறேன் . இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்காது . ஏனெனில் இது எமக்கு உயிர் போகும் தருவாயில் உள்ள நிர்ப்பந்தம் இல்லை . ஆக “ வட்டி கட்டுவேன் , அல்லது வட்டி கொடுப்பேன் “ என்று ஒரு நிபந்தனையில் ஒப்பந்தம் ஒன்றிலே ஈடுபடுவதானது அல்லாஹ்வுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு தயாராகிவிட்ட ஒரு நிலையாகும் .

எனவே , இதுவே ஒரு பாவமான ஒப்பந்தமாக இருப்பதால் முதலாவது இது ஹராமாகிவிடும் ...
இரண்டாவது, ஒருவர் ஒருவிடம் கடன் வாங்கினால் வாங்கியவர் ஒரு செழிப்பான நிலைக்கு வரும் வரை கடன் கொடுத்தவர் அவருக்கு தவணைகொடுக்குமாறு அல்குரான் எமக்கு அறிவுரை சொல்கிறது . .
{ وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ} [البقرة: 280]
சிரமமுடையவராக இருந்தால் வசதி வரும் வரை சில காலம் காத்திருப்பது (உங்கள் மீது கடமையாகும் ) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை) தர்மமாக விட்டு விடுவது சிறந்ததாகும் . (2:180)

.ஆக , கடனை தருவதற்கு அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லையெனில் நாம் விரும்பினால் அவருக்கு தர்மம் செய்யலாம் என்று அல்லாஹ் அறிவுரை பகர்கிறான் .இந்தளவு சொல்லியிருக்க வட்டி வாங்குவது என்பது முற்றிலும் தடுக்கப் பட வேண்டும் .  அடுத்ததாக வட்டி என்ற பெயரில் அல்லாமல் “தண்டப் பணம்(fine ), தாமதக் கொடுப்பனவு என்ற பெயர்களில் வாங்கினால் இந்த நேரத்தில் நாமாக பெயரை மாற்றிக் கொண்டோமே தவிர இஸ்லாத்தின் பார்வையில் அது வட்டியேதான் .

அது மற்றுமன்றி கடன் அல்குரானின் போதனைக்கு இது மாற்றமான ஒன்றாகும் . ஏனென்றால் கடன் தர தாமதமானால் “தண்டப் பணம் அறவிடுங்கள் என்று கூறாமல் “தவணை கொடுத்து காத்திடுங்கள் அல்லது தர்மமாக விட்டு விடுங்கள் “ என்பதே அல்லாஹ்வின் கட்டளையாகும் . எனவே , இந்த அடிப்படையில் “ கடன் தர தாமதமானால் fine செலுத்துவேன் “ என ஒப்பந்தம் இடுவதும் மார்க்க அடிப்படையில் பிழையாக ஆகிவிடும் . அன்பிற்குரிய சகோதரர்களே ..!!! ஒரு காரியம் நடக்கும் போது அந்த காரியத்திற்கு இஸ்லாத்தில் ஒரு பெயரிருக்க எமது விருப்பத்திற்காக நாம் அந்த பெயரை மாற்றிக் கொள்வதால் நாம் வைக்கும் பெயர்கள் ஹராமை ஹலாலாக்க முடியாது ..

அதே போல் பிற்காலத்தை பற்றி இறைதூதர் (ஸல் ) அவர்கள் சொல்லும் போது “ பின்னர் ஒரு கூட்டம் வருவார்கள் . அவர்கள் மதுபானத்தை அருந்துவார்கள் . மேலும் அதற்கு வேறு பெயர்கள் வைத்துக் கொள்வார்கள் “ என கூறுகிறார்கள் .(முஸ்னத் அஹ்மத் )

உண்மையில் இது மதுபானத்திற்கு சொல்லப் பட்டாலும் இதுபோன்று ஹராத்தை ஹலாலாக்கும் எல்லாப் பாவங்களையும் எச்சரிக்கை செய்யும் விதத்தினாலான ஒரு முற்கூட்டிய அறிவிப்பாகும் .
எனவே இது அனுமதியாகாது . இன்றைக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் சந்தோசம் , அன்பளிப்பு என்ற பெயரிலே கொடுக்கிறார்கள் . இந்த அன்பளிப்பை மார்க்கம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை . பெயர்களை நாம் மாற்றிக் கொள்வதால் ஹராம் ஹலாலாக ஆகாது .

எனவே மொத்தத்தில் நாம் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் .எமக்கு கடன் தந்தவர் எவ்வளவு தொகையை தருகிறாரோ அதையே நாம் திருப்பி செலுத்த வேண்டும் . மேலதிகமாக நாம் ஒரு தொகையை கொடுக்க ஒப்பந்தம் செய்யும் போது உண்மையில் எமக்கு இங்கே கடன் தருபவர்கள் வட்டிக் கொடுக்கல் வாங்கலையே வியாபாரம் முறையில் செய்கிறார்கள் .

முஸ்லிம் அல்லாதவர்களிடம் வட்டி என்ற பெயர் சொல்லப் பட்டாலும் முஸ்லிம்களிடம் இவ்வாறான வேறு பெயர்களை வைத்து ஹலால் என்ற பெயரில் இந்த கொடுக்கல் வாங்கலை அறிமுகப் படுத்துகிறார்கள் . இது முஸ்லிம்களை கவர வைப்பதற்கான ஒரு தந்திரயுபயோகமாகும் .
எனவே , இந்த விடயத்தில் நாம் அல்லாஹ்வை பயந்து எமது சக்திற்கு உட்பட்ட வகையில் எம் செலவினங்களை கட்டுப் படுத்தி ஹலாலாலான முறையில் சம்பாத்தியத்தை ஆக்கி எம் தேவைகளை நிறைவேற்றுவோம் . அல்லாஹ் எம் அனைவருக்கும் நல்லருள்பாளிப்பானாக ...!!!

                                                                                                                           உஸ்தாத் அன்சார் தப்லீகி

மேலும்பார்க்க >
                         * இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் 
                         * குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்… 
                         * நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்ட... 
                         * மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!
                         * கற்பமான,பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்க வேண்டும...
                         * ஆடை அணிந்தும் விபச்சாரியாக மாறும் பெண்கள்!

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget