May 2017

உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகி வருகின்றனர். புற இரீதியான வரவேற்பை விட அக இரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது.
வருடந்தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரமாயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும், ஒவ்வொரு ரமழானையும் அத்தகைய விரிந்த பார்வைகளோடு தான் நாம் எதிர்நோக்கியுள்ளோமா? என்ற கேள்வி எம்மை நோக்கி எழுகின்றது.
ரமழான் அது கண்ணியமான மாதம். அதிலே தான் புனிதமிகு இறை வேதமான அல்-குர்ஆன் அருளப்பட்டது. அதிலே தான் ஆயிரம் மாதங்களை விட சங்கை மிக்க லைலதுல் கத்ர் எனப்படும் மகத்தான இரவு அமைந்துள்ளது. அதன் பகற்பொழுது நோன்பிலும் இராப்பொழுது வணக்கத்திலும் செலவிடப்படுகின்றது. அது பரஸ்பரம் அன்பும் பாசமும் பரிமாறப்படும் மாதம். அது பொறுமையையும் தக்வா என்கின்ற இறையச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் உன்னதமான மாதமாகும்.
ரமழான் பல நன்மைகளை வழங்குகின்றது. அவை தனி மனிதர்களையும் குடும்பங்களையும் தழுவியதாகக் காணப்படுகின்றது. ரமழான் மாதம் ஏற்படுத்தும் ஆன்மீகப்பயிற்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் தனித்துவமானவை. தினமும் 12-14 மணித்தியாலங்கள் என ஒரு மாத காலம் சுமார் 368 மணித்தியாலங்கள் நோன்பு நோற்பதில் ஒரு அடியானால் கழிக்கப்படுகின்றது. இதனால் தான் நோன்பு ஒரு மனிதனின் ஆன்மாவை நெறிப்படுத்தி நன்மை அடி பணிவு பொறுமை போன்ற பண்புகளை ஏற்படுத்துகின்றது.
பொதுவாக அனைத்து வணக்கங்களும் வெளிரங்கமாக நிறைவேற்றப்படுகின்றன. உதாரணமாக தொழுகையில் அடியான் எழுந்து நிற்பதும் உட்காருவதும் குனிவதும் சிரம் தாழ்த்துவதும் போன்ற அசைவுகள் மக்கள் பார்வைக்கு எட்டுகின்றது. தவிர ஹஜ், ஸகாத்போன்ற வணக்கங்களும் ஏதோ ஒரு வகையில் வெளிரங்கமானவை.
ஆனால், நோன்பு இதற்கு முற்றிலும் மாற்றமானது. இது இறைவனுக்கும் அவனது அடியானுக்கும் மாத்திரம் தெரியுமான இரகசிய இபாதத்தாகும். இதனால் தான் நோன்பிற்குரிய கூலியை அல்லாஹ்வே உறுதிப்படுத்துகிறான். ‘‘நோன்பைத்தவிர மனிதனது அனைத்துச் செயற்பாடுகளும் அவனுக்குரியவை. அது எனக்குறியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். (புஹாரி)
ரமழான் மாதம் எத்தகைய மகத்துவமுடையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. (21-85)
ரமழான் அல்-குர்ஆனின் மாதமாகும். அதனைஓதுவதற்கும் விளங்குவதற்கும் அதன் போதனைகளை வாழ்வில் எடுத்து நடப்பதற்கும் ஊக்குவிப்பு வழங்கப்படுகின்றது. ரமழானுடைய மாதத்தில் முழுமையாக ஒரு முறையாவது அல்-குர்ஆனை ஓதி முடித்து விட வேண்டுமென்ற மனோநிலை பொதுவாக எல்லோரின் உள்ளத்திலும் ஏற்படும். இம்மாத்தில் அல்-குர்ஆனின் கருத்துக்களை விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் முயல்கின்ற போது, அது எமது ஆன்மாவை ஒரு படி மேலே உயர்த்தி விடுகின்றது. மனோரீதியான அமைதியும் நிம்மதியும் அதனால் கிடைக்கின்றன. ஏனெனில், அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன.
ரமழான் முஸ்லிமிடத்தில் நற்பண்புகளையும் சீறிய ஒழுக்கத்தையும் உருவாக்குகின்றது. அவற்றில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் குர்ஆன் ஓதுதல் தவிர வேறு விடயங்களில் நாவை ஈடுபடுத்தாது மெளனம் காத்தல். தேவையேற்படும் போது நல்லதை மாத்திரம் பேசுதல் பொய் கூறுதல் புறம் பேசுதல் கோள் சொல்லுதல் போன்ற துர்க்குணங்களிலிருந்து நாவைப்பேணுதல் நன்மையை ஏவுதல் தீமையைத்தடுத்தல் போன்ற பண்பாடுகள் மிக முக்கியமானவையாகும்.
இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இப்படி பிரஸ்தாபித்தார்கள். பொய்யுரைத்து அதனடிப்படையில் செயற்படுவதை விட்டு விடாதவர் உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத்தேவையுமில்லை. (புகாரி)
ரமழானின் பகற்பொழுதில் உணவு குடிபானம் உடலுறவு போன்றவற்றைத் தடுத்துக்கொள்வதன் மூலம் மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றது. தனக்கு முன்னால் அறுசுவை உணவும் இனிய பாணமும் ஹலாலான மணைவியும் இருந்த போதிலும் இறை கட்டளைக்குப் பயந்து அவற்றை அனுபவிக்காமல் மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான்.
பொதுவாக மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்விருக்கிறது. அது உலக இருப்புக்கும் உயிரினங்களின் பரவலுக்கும் தேவைப்படுகின்றது. எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த வகையில், ஒரு நோன்பாளியைப் பொறுத்த மட்டில் ஹலாலான செயற்பாடுகளையே அல்லாஹ்வின் கட்டளைக்காகதத் தவிர்த்துக் கொள்ள முனையும் போது ஹராமானவற்றிலிருந்து தனது உள்ளத்தைத் தற்காத்துக் கொள்ளவும் மனோ இச்சைகளை நெறிப்டுத்தவும் முடியமான நிலையைப் பெற முடிகின்றது.
ஒரு வகையில் இப்படியான செயற்பாடுகள் மனிதர்களை மலக்குகளின் நிலைக்கே கொண்டு செல்கிறது. ஏனெனில், அவர்கள் உணவு குடிபானம் உடலுறவு போன்ற சடரீதியான தேவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். முழுமையாக அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள்.
ரமழானின் இராக்காலம் முஸ்லிமின் ஆன்மீக மேம்பாட்டுக்கு அதிகம் இடங்கொடுக்கும் காலப்பகுதியாகும். அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருந்து இரவு நேரத்தொழுகைகளில் ஈடுபட்டு அவனைத் துதித்து புகழ்ந்து அவனிடமே தஞ்சமடைந்து தன் இயலாமையை அவனிடம் ஒப்புவித்து பாவமன்னிப்புக்கேட்டு மீளும் செயற்பாடுகள் அப்பொழுதுகளில் இடம்பெறும்.
அதே போல், குர்ஆன் திலாவத்துக்களாலும் தராவீஹ் தொழுகைகளாலும் இஃதிகாப்களாலும் நம் உள்ளும் புறமும் ஒளியேற்றப்படுகின்றது. எனவே தான் எமது இராப்பொழுதுகள் அமல்களால் விழிப்படைகின்றன.
அதே போல் ரமழானின் இரவுகளை வீண் கேளிக்கைகளிலும் விளையாட்டுக்களிலும் கழிக்கும் ஒரு சிலரும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். தொழுகையிலும் திக்ரிலும் இபாதத்களிலும் கழிக்கப்பட வேண்டிய ரமழானின் இரவுகள் தெருக்கள் தோறும் கும்மாளமிட்டுத் திரியும் சில இளைஞர்களால் கேளிக்கைக்குரிய இரவுகளாக மாற்றம் பெறுகின்றன.
உண்மையில் சொல்லப்போனால், அநேக இஸ்லாமிய இளைஞர்கள் ரமழானின் இரவுகளை வீணாகக் கழித்துக்கொண்டிருப்பது தான் கசப்பான உண்மை. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாகப் பெற்றுக் கொண்டது பசியையும் தாகத்தையும் விட்டதைத் தவிர வேறேதுமில்லை (புஹாரி)
நோன்பு பிறரின் உணர்வுகளை மதிக்கும் பழக்கத்தைஏற்படுத்துகின்றது. இம்மாதத்தில் நியாயமான சில காரணங்களுக்காக நோன்பு நோற்பதை விட்டவர்கள் நோன்பாளிகளின் பார்வைக்கப்பால் மறைவாக உணவு உட்கொள்ளுதல் அருந்துதல் அசௌகரியம் தொல்லை என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளுதல் என்பன போன்ற செயற்பாடுகள் பிற மனிதர்களின் உணர்வுகளை மதிப்பதன் சிறந்த வெளிப்பாடாகும். இது நோன்பாளியின் உணர்வை மதிப்பதற்காகவே செய்யப்படுகின்றது.
எனவே தான் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சுயநலம் தன்னலம் போன்ற துர்மனப்பாங்குகளிலிருந்து அவனது ஆத்மாவைச் சுத்திகரித்து பிறர் நலம் பேணுதல் என்ற சிறப்பான பயிற்சியை நோன்பு தருகிறது.
பொதுவாக ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் மத்தியிலேயே சர்வ சாதாரணமான காரணங்களுக்காக சண்டைகளும் முரண்பாடுகளும் வந்து விடுகின்றன. எனவே தான் அறிமுகமில்லாத மனிதர்கள் மத்தியில் முரண்பாடுகள் பிணக்குகள் எழுவதையொட்டி ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில். சமூகத்தில் சண்டையையும் சச்சரவையும் பிணக்குகளையும் அத்துமீறலையும் தடுத்து விடுகின்ற ஒரு காலமாக ரமழான் காணப்படுகின்றது. ஒருவன் உன்னோடு சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி நான் நோன்பாளி எனக்கூறட்டும். (புகாரி) என்றநபி (ஸல்) அவர்களின் போதனை முஸ்லிம் சமூகத்திற்குள் பிரச்சினைகளற்ற ஒரு நிலையைத் தோற்றுவிப்பதோடு அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த சூழலை உருவாக்குகின்றது.
ரமழான் சமூகரீதியாக பசியின் கொடுமையை உணரவும் வசதியுள்ளவன் வறியவனின் துன்பங்களை அறியவும் அவற்றுள் பங்கு கொள்ளவும் துணை செய்கிறது. இது ஏழை பணக்காரன் என்ற பொருளாதார இடைவெளியை மானசீகமாகக் குறைத்து விடுவதற்கும் சமூகத்திற்குள் தோன்றும் வகுப்புவாதத்தையும் ஏற்றத்தாழ்வையும் அகற்றி மனிதர்களின் சமூக அந்தஸ்து உறுதிப்படுத்தவும் உதவுகின்றது.
ஏனெனில், கண்ணியம் எடை போடப்படும் அளவு கோள் பொருளாதார வசதியோ சமூக அந்தஸ்தோ கிடையாது. மாறாக, இறைவன் பற்றிய அச்சமே உங்களில்அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் உங்களில் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே! (4913)
ரமழானின் இறுதியில் நோன்பு காலம் முடிவடைந்து பெருநாள் தினத்தில் கோபதாபங்களை மறந்து பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வதனாலும் கைலாகு கொடுத்து ஆரத்தழுவிக்கொள்வதனாலும் முஸ்லிம்கள் மத்தியில் சகோதரத்துவ வாஞ்சையும் அன்னியொன்யமும் ஏற்படுகிறது. இது சமூகம் மனோ நிம்மதியுடன் வாழ்வதற்குத் துணை செய்கிறது. மகிழ்ச்சியும் மன நிறையவும் உள்ளத்தை ஆட்கொண்டு அதே மகிழ்ச்சியும் மன நிறைவும் குடும்ப அங்கத்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கின்ற மனப்பாங்கும் ஏற்படுகின்றது. எனவே, ஒட்டு மொத்தமாக முழு முஸ்லிம் சமூகமும் உள மகிழ்ச்சியோடு கழிக்கின்ற ஒரு நாளாக பெருநாள் அமைகின்றது.
எனவே, ரமழான் புனிதமான மாதம் மனிதனின் ஆன்மாவைச்சீர்படுத்தி கசடுகளையும் துருக்களையும் நீக்கி இறைநேசத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி மனித வாழ்வைச்சீர்படுத்தி சமூக உணர்வுகளையும் ஏற்படுத்த வருகின்ற ஒரு மாதமாகும். எனவே அதனது உண்மையான தத்துவங்களைப்புரிந்து அதனை முழு அளவில் பயன்படுத்தி இறைதிருப்தியைப் பெற்றுக் கொள்ள முனைவோமாக

1) பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள். 
2) தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் கொண்டு ரமழானை வரவேற்கத் தயாராகுங்கள். 
3) மன உறுதிஎனது உடல், மன வலிமைகளை இயன்ற வரை பயன்படுத்தி எவைகளெல்லாம் நற்கருமங்களோ அவைகளில் முந்திச் சென்று அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்து இறை திருப்தியை பெறுவேன் என உறுதி பூணுங்கள்.
4) பாவ மீட்சி: கடந்த காலத்தில் நிழக்ந்த அனைத்து பாவங்களுக்கும் உள முறுகி தூய உள்ளத்துடன், மன உறுதியுடன் அந்தப் பாவங்களை மறு படியும் எனது வாழ்வில் நான் எண்ணிக் கூட பார்க்க மாட்டேன் என்ற மன உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி அவன் பால் மீண்டவராக, எந்தப் பாவமும் அற்ற தூய மனிதராக ரமழானுக்குத் தயாராகுங்கள். 
5)நேரத்தை நன்றாகத் திட்டமிடுங்கள்: ரமழான் வேகமாக நகரும் சில நாட்கள், அதன் ஒவ்வொரு நொடியும் நிமிடமும் மிகவும் பெருமதியானவை. 30 நாடகள் என்றால் 720 மணி நேரம் இதை உரிய முறையில் திட்டமிடுங்கள். ஒரு நாளுடைய 24 மணி நேரத்தை சரியாக திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள். கடமையாக தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுங்கள், இரவுத் தொழுகையில் கவனம் செலுத்துங்கள், பிந்திய இரவில் எழுந்து தொழுது பாவ மன்னிப்பு தேடுங்கள், 
இரவுத் தொழுகையில் அதிகம் குர்ஆனை ஓதுங்கள், ஸஹர் உணவை எடுத்து விட்டு பஃஜ்ரின் முன் சுன்னத், பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் பிரார்த்தனை, அல்குர்ஆன் ஓதுதல், பஃஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதல், கடமையான தொழுகையின் பின் ஓத வேண்டிய திக்ருகள், பிரார்த்தனைகள், அல்குர்ஆன் ஓதுதல். 
காலை திக்ருகளை, பிரார்த்தனைகளை ஓதுதல், ழுஹாத் தொழுகையை தொழுதல், ஸதகாக்கள் செய்தல், நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், உடல் உறுப்புக்களை பாவங்களை விட்டு பேணிக் கொள்ளல். குறிப்பாக நாவையும், கண்களையும், காதுகளையும் பேணல். ஆகக் குறைந்தது குர்ஆனை ஒரு முறையேனும் ஓதி முடித்தல். மார்க்க மஜ்லிஸ்களை தேடிச் செல்லல். இவ்வாறு ரமழானுடைய ஒவ்வொரு நாளின் நேரங்களையும் நன்றாகத் திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள்.
6) மனம் நிறைந்த மகிழ்ச்சி: ஒரு முஃமினின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைகள். சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற, நரகின் வாயில்கள் மூடப்படுகின்ற, ஷைத்தான்கள் விளங்கிடப்படுகின்ற, நரகத்திற்குரியவர்கள் ஒவ்வொரு இரவும் விடுதலை செய்யப்படுகின்ற, ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவுள்ள இப்படி அதிக பாக்கியங்கள் நிறைந்த சிறப்புமிகு ரமழானின் வருகை எப்படி ஒரு முஃமினுக்கு மகிழ்ச்சி தராமல் இருக்க முடியும்?
7) ரமழான் மற்றும் நோன்பு தொடர்பான சிறப்புகளை மார்க்க சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்: ரமழான் மற்றும் நோன்பின் சிறப்புகள், மார்க்க சட்டதிட்டங்கள் தொடர்பாக மார்க்க ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஆக்கங்களை, நூற்களை வாசிப்பது, ஆதாரங்களுடன் கூடிய உரைகளை செவிமடுப்பது, அப்படியான சிறப்பு நிகழச்சிகளில் பங்கெடுப்பது. முன் சென்ற நல்லோரின் வாழ்வில் ரமழான் எப்படி இருந்தது என்ற ஆக்கங்களை அதிகம் படித்து அந்த முன்மாதிரிகளை நமது வாழக்கைக்கு எடுத்துக் கொள்வது. இன்னும் குடும்ப உறவுகளுக்கும், மனைவி, மக்களுக்கும் அவைகளை வாசிப்பதற்கு கேட்பதற்குள்ள வசதிகளை செய்து கொடுப்பது.
8) ரமழானுக்கு முன் உலகியல் தேவைகளை முடித்துக் கொள்ளுங்கள்:
இயன்ற வரை ரமழானுக்கு முன்னரே உலகியல் தேவைகளை முடித்துக் கொள்வது, ரமழானுக்குப் பின்னர் வரையில் தள்ளிப் போட முடியமானவைகளைத் தள்ளிப் போடுவது. ரமழான் மாதம் என்பது நற்கருமங்கள் புரிவதற்குள்ள பொற்காளம் என்பதை மறந்து விடாமல் செயல் படுவது. உலகியல் தேவைகள், வகை வகையான உணவுகள் என்று பெறுமதியான நேரங்களை வீணடித்து விடாமல் புத்தியுடன் சிந்தித்து செயல் படுங்கள்.

இஸ்லாம் வழங்கிய சலுகைகளில் ஒன்றுதான் ஜம்உ (சேர்த்துத் தொழல்) கஸ்று (சுருக்கித் தொழல்). கஸ்று பிரயாணிக்கு மட்டுமே உரிய ஒன்று. அச்சமான போர்ச்சூழலிற் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் சொந்த ஊரில் கஸ்ரு செய்தல் கூடாது. ஜம்உவை பொருத்தவரைக்கும் பிரயாணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தொழுகை தப்பிப் போகின்ற தவிர்க்க முடியாத காரணம் ஒன்றிருக்குமானால் சொந்த ஊரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் தப்பிப்போகின்ற தவிர்க்க முடியாத காரணம் ஒன்றிற்காக ஜம்உ செய்வதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். எனவே ஒவ்வொரு சிறிய தலைப்பாய் அவற்றை நாம் பகுத்து நோக்குவோம்.  

1 – ஜம்உ என்றால் என்ன?
ழுஹரையும் அஸரையும் அல்லது மஃரிபையும் இஷாவையும் சேர்த்து உரிய நேரத்தை விட்டும் முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ தொழுவதே ஜம்உ என்று அழைக்கப்படுகிறது.

2 – எந்தத் தொழுகைகளிற்கு மத்தியில் ஜம்உ செய்வது கூடாது?

சுப்ஹையும் அஸரைம் எந்தக்காரணங் கொண்டும் பிற்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்வது நிபாக்கின் அடையாளமாகும். எனவே சுப்ஹை ழுஹருடன் தொழுவதோ அஸரை மஃரிபுடன் தொழுவதோ கூடாது.
(மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களிற்குரிய ஆதாரங்களை புகாரியில் 1055,1061 இலக்கங்களிலும் முஸ்லிமில் 703,706 இலக்கங்களிலும் கண்டுகொள்ளலாம்)

3 – இன்னொரு ஜம்உ முறையும் இருக்கிறதா?

நாம் இல.1 இல் சொன்ன முறையிலேயே ஜம்உ செய்யப்பட வேண்டும். அல்-குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் பெறப்பட்ட அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையே இது. இப்னு ஹஸ்ம்- ஷவ்கானி போன்ற அறிஞர்கள் ஊரில் செய்யப்படுகின்ற ஜம்உவை அல்ஜம்உஸ் ஸுவரி என்கிறார்கள். அதாவது ழுஹரை அதனது கடைசி நேரத்திலும் அஸரை அதனது ஆரம்ப நேரத்திலும் மஃரிபை அதனது கடைசி நேரத்திலும் இஷாவை அதனது ஆரம்ப நேரத்திலும் தொழுவதுதான் அம்முறை.

(பார்க்க:- நய்னுல் அவ்தார்3:- 264-268 அத்-தராரில் முலியா1:- 85 முஹல்லா3:- 172-175 இன்னும் சில அறிஞர்களும் இக்கருத்தில் இருக்கிறார்கள் பார்க்க:- பத்ஹுல் பாரீ2:- 580-581) இது அல்குர்ஆன் ஸுன்னாவிற்கு மாற்றமான ஒன்றாகும்.

4 – சொந்த ஊரில் ஜம்உ செய்வதற்கு ஆதாரம் உண்டா?

நபியவர்கள் மதீனாவிலே பயம்-மழை போன்ற எக்காரணமும் இன்றி ழுஹரிற்கும் அஸருக்குமிடையிலும் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையிலும் ஜம்உ செய்தார்கள். இமாம் வகீஃ சொல்கிறார்;:- ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று அறிவிப்பாளர் இப்னு அப்பாஸிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்:- தன் உம்மத்திற்கு கடமையை விட்ட குற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக என்று பதில் அளித்தார்கள். (முஸ்லிம் :- 705)

இந்த நபிமொழி ஊரில் நபியவர்கள் ஜம்உ செய்துள்ளார்கள் என்பதையும் ஏன் செய்தார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இவ்வடிப்படையில் ஒருவரிற்கு ஒரு ஞாயமான காரணத்தினால் ஒரு தொழுகை விடுபடுமென்ற அச்சம் ஏற்பட்டால் முற்படுத்தியும் விடுபட்டால் பிற்படுத்தியும் ழுஹரிற்கும் அஸரிற்குமிடையிலும் மஃரிபிற்கும் இஷாவிற்குமிடையிலும் ஜம்உ செய்யலாம்.

இந்த நபிமொழி ஊரில் நபியவர்கள் ஜம்உ செய்துள்ளார்கள் என்பதையும் ஏன் செய்தார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இவ்வடிப்படையில் ஒருவரிற்கு ஒரு ஞாயமான காரணத்தினால் ஒரு தொழுகை விடுபடுமென்ற அச்சம் ஏற்பட்டால் முற்படுத்தியும் விடுபட்டால் பிற்படுத்தியும் ழுஹரிற்கும் அஸரிற்குமிடையிலும் மஃரிபிற்கும் இஷாவிற்குமிடையிலும் ஜம்உ செய்யலாம்.

5 – மழை காரணமாக ஜம்உ செய்யலாமா?
இது பல உப தலைப்புக்களின் கீழ் ஆயப்படவேண்டிய அம்சம்.

1 – மழை காரணமாக நபியவர்கள் ஜம்உ செய்ததாக எந்த ஹதீஸும் கிடையாது.

நபியவர்கள் மழைக்கு ஜம்உ செய்ததாகவோ செய்யச்சொன்னதாகவோ எந்த ஹதீஸும் கிடையாது. ஏராளமான கடந்த கால ஹதீஸ்களை அறிஞர்கள் அவ்வாறு எந்த ஹதீஸும் கிடையாது என மறுத்துள்ளார்கள் மறுமைநாள் வரையில் அப்படியொரு ஹதீஸைக் காட்டவும் முடியாது. இவர்கள் மறுத்த அறிஞர்களில் சிலர்:-
  1. இமாம் லைஸ் இப்னு ஸஃத் (தாரிகு யஹ்யா பின் ம
  2. இமாம் இப்ராஹீம் இப்னுல் முன்திர் அந்நைஸாபூரி (அல் அவ்ஸத்-430-434)
  3. இமாம் அல்பானி (தமாமுல் மின்னா-320)
2 – எந்த நபித்தோழராவது ஜம்உ செய்துள்ளாரா?
எங்களுடைய தலைவர்கள் மழையிரவுகளில் மஃரிபை தாமதித்தும் சிவப்பு மறைவதற்கு முன்னர் இஷாவை முற்படுத்தியும் தொழும்போது இப்னு உமரும் தொழுவார். அவர் அதனைத் தவறாகக் கருதவில்லை. அறிவிப்பவர்:- நாபிஃ  (ஆதாரம்:- இப்னு அபீ ஷைபா 2:- 234)

இங்கே இப்னு உமர் ஜம்உ செய்திருப்பது நமக்குத் தெரியவருகிறது. ஆனால் முறைவேறுபடுகிறது. நபித்தோழர்களுடைய கூற்றுக்களை ஆதாரமாக எடுப்பவர்கள் இவ்வடிப்படையில் ஜம்உ செய்வதாயின் மேற்கூறிய முறைப்படியே ஜம்உ செய்ய வேண்டும். எங்களைப் பொருத்த வரைக்கும் நபித்தோழர்களது கூற்றோ செயற்பாடோ மார்க்க ஆதாரம் அல்ல. 

3-ஜம்உ செய்யாத நபித்தோழர்கள்.
இமாம் மாலிக் அவர்களுக்கு எழுதிய பதில் கடிதத்திலே அவரது நண்பர் இமாம் லைஸ் இப்னு ஸஃத் இவ்வாறு அவருக்கு எழுதிகிறார்.

“மழை இரவுகளில் சொந்த ஊரில் ஜம்உ செய்யக்கூடாது என்று நான் சொன்னதை நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். ஷாமுடைய மழை உங்களது மதீனா மழையை விட எவ்வளவோ அதிகமானது. அதன் அளவை அல்லாஹ் மாத்திரமே அறிவான். எந்த இமாமும் எப்பொழுதும் அங்கு ஜம்உ செய்தது கிடையாது. அவர்களிலே காலித் இப்னு வலீத்- அபூ உபைதா-யஸீத் இப்னு அபூ ஸுப்யான்-அம்று இப்னு ஆஸ்-முஆத் இப்னு ஜபல்-பிலால் இப்னு ரபாஹ்- போன்ற எத்தனையோ நபித்தோழர்கள் இருந்தார்கள் அவர்களில் எவறும் மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையில் எப்பொழுதும் ஜம்உ செய்ததே இல்லை.” (தாரீகு யஹ்யா )

4 – நபியவர்கள் ஜம்உ செய்யாமல் இருந்ததற்கு ஆதாரம் உள்ளதா?

நபியவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்கு முன்னால் நபியவர்களின் தாடிவழியாக மழை நீர் துளித்துளியாய் வடிவதைக்கண்டேன். அன்றைய தினம் தொடங்கிய மழை அடுத்த ஜும்ஆ வரை நீடித்தது நபியவர்கள் எதைச் செய்தாலும் அதை அணு அணுவாக ஆராய்ந்து அறிவிக்கக் கூடிய ஸஹாபாக்கள் நபியவர்கள் இந்த மழை வாரத்தில் ஒருமுறையாவது மழைக்காக ஜம்உ செய்திருந்தால் அதை அறிவித்திருப்பார்கள். அவ்வாறு அறிவிக்காமை அடைமழையின் போதும் நபியவர்கள் ஜம்உ செய்யவில்லை என்பதற்கு போதிய சான்றாகும்

5 – அப்படியானால் ஊரில் மழைகாரணமாக ஜம்உ செய்யவே கூடாது?

நபியவர்கள் மதீனாவிலே பயம்-மழை போன்ற எக்காரணமும் இன்றி ழுஹரிற்கும் அஸரிற்கும் இடையிலும் மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையிலும் ஜம்உ செய்தார்கள். இமாம் வகீஃ சொல்கிறார்:-‘ ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று அறிவிப்பாளர் இப்னு அப்பாஸிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்:- ”தன் உம்மத்திற்கு கடமையை விட்ட குற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக’ என்று பதில் அளித்தார்கள். (ஆதாரம்:- முஸ்லிம் 705)

இந்த நபி மொழி ஊரில் நபியவர்கள் ஜம்உ செய்துள்ளார்கள் என்பதையும் ஏன் செய்தார்கள் என்பதையும் தெளிவுபடுத்திகிறது. இவ்வடிப்படையில் ஒருவரிற்கு ஒரு ஞாயமான காரணத்தினால் ஒரு தொழுகை விடுபடுமென்ற அச்சம் ஏற்பட்டால் முற்படுத்தியும் விடுபட்டால் பிற்படுத்தியும் ழுஹரிற்கும் அஸரிற்குமிடையிலும் மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையிலும் ஜம்உ செய்யலாம். 

எனவே தனி நபராக அல்லது கூட்டாக பள்ளியில் உரிய நேரத்தில் தொழுதவர்களிற்கு கடும் மழை காரணமாக இஷாவை ஜமாஅத்தாக தொழ முடியாமல் போகும் என்ற அச்சம் ஏற்படுமானால் அவர்களும் ஜம்உ செய்யலாம்; என்பது இந்நபிவழியில் இருந்து தெளிவாகிறது. “தன் உம்மத்திற்கு கடமையை விட்ட குற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக” என்ற வசனத்தில் இக்காரணமும் அடங்கும்.

ஆனால் சேறு சகதிக்காய் ,மழை வரப்போகிறது ,வானம் இருட்டி விட்டது ,தூரல்கள் இது போன்றவற்றிற்கெல்லாம் மழைக்கு ஜம்உ செய்தல் ஸுன்னா என்ற பெயரில் ஜம்உ செய்கின்ற வழமை மிகலும் கண்டிக்கத்தக்கதாகும். மாத்திரமல்ல அது பித்அத்தும்தான் என்பதில் சந்தேகம் கிடையாது.

அல்லாஹ் குர்ஆன் ஸுன்னாவைப் பின்பற்றும் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி உளத்தூய்மையான அமல்களை ஏற்றுக்கொள்ள போதுமானவன்.

கேள்வி> ஹரம் ஷரீஃபில் நபி வழிக்கு மாற்றமாக 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன்? 8+3 (or) 12+3 என்று இங்கு தொழும் தொழுகைகள் தஹஜ்ஜுதைக் குறிக்குமா? அல்லது நோன்புகாலச் சிறப்பு தொழுகை என்றாகுமா?

பதில்- ரமழான் இரவுகளில் நாம் சிறப்பித்துத் தொழும் "தராவீஹ்" என்ற தொழுகையை ஹதீஸ்களில் நாம் எங்கும் காண முடியவில்லை. ஹதீஸ் நூல்களில் ""தராவீஹ்" என்ற வார்த்தையே இத் தொழுகையைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது யாவரும் தெரிந்த விஷயமாகும். ஆனால் ரமழான் மாதம் மட்டுமின்றி எல்லா மாதங்களிலும் இரவுத் தொழுகை தொழப்பட்டடுள்ளதற்கான ஆதாரங்களை ஹதீஸ்களில் பரவலாக காண முடிகிறது.

ஸலாத்துல்லைல் = இரவுத் தொழுகை, கியாமுல்லைல் = இரவு நின்று வணங்கள், தஹஜ்ஜத் என்ற தொழுகை என்ற மூன்று பெயர்களில் இத்தொழுகைப் பற்றி விபரங்களை காண முடிகிறது.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: இரவின் பகுதியில் உமக்கு உபரி (நபிலான) யான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் சிறப்பால்) உம்முடைய இறைவன் "மகாமம் மஹ்மூதா" என்னும் (சிறப்பு மிக்க) இடத்தில் உம்மை எழுப்பக் கூடும். (அல்குர்ஆன் 17:79)

மீண்டும் ஒரு முறை இவ்வசனத்தைக் கவன மாக படிக்கவும். அல்லாஹ் இரவின் பகுதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழும்படி ஆணையிடும் தஹஜ்ஜத் தொழுகை- நபிலா (உபரியா)னது என்பதை அறியலாம். இதனை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவ்வென தினசரி செய்து வந்ததால் அது நமக்கு சுன்னத் -நபி வழி-ஆகியுள்ளது. இவ்விதம் தினசரி இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதது 8+3=11 ரகா அத்துக்கள் தான் என்பதை நாம் பல்வேறு ஆதாரங்கள் மூலம் இது வரை பல தடவைகள் விளக்கியுள்ளோம்.

சிறப்புமிக்க ரமழான் மாதத்தின் இரவுகளை வணக்கங்களில் ஈடுபடுத்த இதே தொழுகையை நீட்டி, தங்களது கால்கள் வீங்குமளவு நின்று பெரும் சூராக்களை ஓதி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதுள்ளதற்கு ஆதாரங்களையும் ஹதீஸ் நூல்களில் காண முடிகிறது. 

அதுவும் இரவின் பிற்பகுதியில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதுள்ளதையே காண முடிகிறது. இன்று நடை முறையிலுள்ளது போல வெகு வேகமாக- ஓதுவதையோ என்னவென விளங்கிக் கொள்ள முடியாத வேகத்தில்-ஓதுவதையோ,அதுவும் இரவின் முற்பகுதியில் நடந்தையோ நபி வழிகளில் காண முடியவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபரியான (நபிலான) இரவுத் தொழுகைகளை இரண்டிரண்டாக தொழும்படி ஆணையிட்டிருப்பதையும் எல்லா ஹதீஸ் நூல்களிலும் காணலாம். இது ஒரு முதவாதிரா-பல நபித் தோழர்களால் அறிவிக்கப்பட்ட-நபி மொழியாகும். இதன்படி நாம் இரவில் உபரியான- நபிலான-கவனிக்க: சுன்னத்தானதல்ல நபிலான தொழுகைகளை இரண்டிரண்டாக தொழலாம்.

நபிலான தொழுகைக்கு ஒரு வரையறை கிடையாது. அவரவர் விருப்பப்படி எத்தனை ரகாஅத்துக்கள் வேண்டுமானாலும் இரண்டிரண்டாக தொழலாம். இதனை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது. ஆனால் சுன்னத்தானதாக தொழ நாடினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்தவை மட்டுமே சுன்னதாகும் என்பதை அறிந்தால் எங்கும் தகராறு வராது.

மக்கா ஹரம் ஷரீபில் ரமழானின் இரவுகளில் 20 ரகாஅத்துக்கள் மட்டுமல்ல இரவு முழுவதும் இமாம்கள் மாறி மாறி இரண்டிரண்டாக இரவுத் தொழுகை நடத்தப்படுகிறது. விரும்புகிறவர்கள் விரும்புகிறவரை தொழுதுவிட்டு சடைவு ஏற்பட்டால் எழுந்து போய்விடுவதையும் அங்கு பார்க்கலாம்.

இமாமும் மக்களும் அங்கு மாறிக் கொண்டேயிருப்பார்கள். இது நாமும் அறிந்ததே! தயவு செய்து மக்கா ஹரம் ஷரீபின் இமாம்களை விசாரியுங்கள். அவர்கள் நபில் தொழுவதாக, தொழ வைப்பதாகவுமே கூறுவார்கள். அதனை நாம் எப்படி மறுக்க முடியும்? நபி மொழிக்கு தவறானது என எப்படி கூற முடியும்.?

மாறாக அவர்கள் சுன்னத்தான தொழுகை தொழு வைப்பதாகக் கூறினால் அதனை நாம் ஏற்கத் தேவையில்லை. அதற்கான முடிவை அல்லாஹுவிடம் விட்டு விட்டு சுன்னத்தான தொழுகை எனில் 8+3 தொழுங்கள். நபிலான தொழுகை எனில் தாங்கள் நாடியளவு, முடிந்த அளவு இரண்டிரண்டாக தொழுங்கள். அல்லாஹ் உங்களுக்கும், நமக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன். ( தூயவழி.காம் ) 

நாட்டுக்கு நாடு பிறைபார்த்தல் என்பது எமது நாட்டுக்கு சாத்தியம் சில நாடுகளுக்கு சாத்தியமில்லை என்பதிலிருந்து அது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்பதனை புரிந்து கொள்வதுடன் அசாத்தியமான விடயங்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் மார்க்கமாகாது என்பதனையும் விளங்க வேண்டும்.

o ரமளானில் ஏற்படும் வாய் நாற்றத்தைப் போக்கிக் கொள்வது சம்பந்தமாக
o கண்மை, சுருமா, மருதாணி மற்றும் ஒப்பனைப் பொருட்களை (cosmetics) உபயோகப்படுத்துவது
o நோன்பிருக்கும் நிலையில் நகம் வெட்டுவது, அக்குல் மற்றும் மர்மஸ்தான முடிகளை அகற்றுவது
o நோன்பில் வாசனைத் திரவியங்கள் பூசிக் கொள்வது
o நோன்பாளியாக இருப்பவர் குளிக்கலாமா?  
o நோன்பாளி தலைக்கு எண்ணெய் தேய்ப்பது

ரமளானில் ஏற்படும் வாய் நாற்றத்தைப் போக்கிக் கொள்வது
கேள்வி : வாய் நாற்றத்தைப் போக்குவதற்காகவே மருந்துக் கடைகளில் ஸ்பிரே வடிவில் வாசனைத் திரவம் விற்கப்படுகின்றது. வாய் துர்நாற்றத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒருவர் இத்தகைய ஸ்பிரேக்களை ரமளான் காலங்களில் உபயோகித்துக் கொள்ள முடியுமா.?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! நோன்பு நாட்களில் ஸ்பிரேக்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமான அளவில் ஊக்கப்படுத்திய மிஸ்வாக் குச்சியைப் பயன்படுத்தலாமே. ஸ்பிரேக்களைப் பயன்படுத்தும் பொழுது அது தொண்டைக்குழிக்குள் போகாத வரைக்கும் ஆகுமானதே.

ஆனால், நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரக் கூடிய துர்நாற்றமானது, அவர் நோன்பிருக்கின்ற காரணத்தால் வரக் கூடியதே தவிர வெறுக்கக் கூடியதொன்றல்ல, இது இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் விளைவாகம். நபி மொழியில், ''நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரக் கூடிய துர்நாற்றமானது, அல்லாஹ்வின் முன்னிலையில் மஸ்க் என்று சொல்லக் கூடிய கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாக இருக்கின்றது". அல்லாஹ் மிக அறிந்தவன். 

கண்மை, சுருமா, மருதாணி மற்றும் ஒப்பனைப் பொருட்களை  (cosmetics) உபயோகப்படுத்துவது
கேள்வி: நோன்பிருக்கும் நிலையில் பெண்கள் தங்களது கண்களுக்கு கண்மை மற்றும் சுருமா இடுவது, மருதாணி போன்ற ஒப்பனைப் பொருட்களை உபயோகிக்கலாமா? இந்தப் பொருட்கள் நோன்பினை முறித்து விடுமா அல்லது முறித்து விடாதா.?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ஆண் அல்லது பெண் இருவரில் எவர் கண்மை இட்டாலும் அவரது நோன்பு முறிந்து விடாது, உலமாப் பெருமக்களின் மிகச் சிறந்த கருத்தாக இது இருக்கின்றது, ஆனால் அவர் நோன்பிருக்கக் கூடிய ஒருவர் இதனை இரவில் பயன்படுத்திக் கொள்வது விரும்பத்தக்கது. இதனைப் போலவே ஒருவர் தனது முகத்தை அழகுபடுத்திக் கொள்வதற்காக கிரீம்கள் பூசிக் கொள்வது, சோப் மற்றும் இது போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்வது, மற்றும் தோலுக்கு வெளியே - உடம்பில் பூசிக் கொள்ளக் கூடிய இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதனைப் போலவே மருதாணி, ஒப்பனைப் பொருட்களும், இன்னும் அதனைப் போல உள்ளவையும், ஆனால் மேக்அப் செய்து கொள்வது முகத்தைப் பாதிக்கும் என்றிருந்தால் அதனைச் செய்து கொள்வது ஹராமாகும். 

நோன்பிருக்கும் நிலையில் நகம் வெட்டுவது, அக்குல் மற்றும்  மர்மஸ்தான முடிகளை அகற்றுவது
கேள்வி: நோன்பிருக்கக் கூடிய ஒருவர் தனது நகத்தை வெட்டிக் கொள்வது, அக்குல் மற்றும் மர்மஸ்தான முடிகளை அகற்றிக் கொள்வது, நோன்பைப் பாதிக்கும் என்பது உண்மையா.?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! மேற்கண்ட செயல்கள் நோன்பிருக்கக் கூடிய ஒருவரின் மீதுள்ள கட்டாயக் கடமை போன்றதல்ல, ஆனால் மேற்கண்ட செயல்கள் நோன்பிற்கு எதிரான செயல்களுமல்ல. இதனைக் காட்டிலும் நோன்பிருக்கக் கூடிய ஒருவர் உண்பது, குடிப்பது மற்றும் உடலுறவு கொள்வது போன்றவற்றிலிருந்து தான் தவிர்ந்திருக்க வேண்டியது கட்டாயம். இன்னும் பாவமான காரியங்களிலிருந்தும், தீமையானவற்றிலிருந்தும், இன்னும் இதனைப் போல உள்ள புறம் பேசுதல் மற்றும் அவதூறானவற்றைப் பரப்புதல் போன்ற வற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும், இவை நோன்பில் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பாதித்து விடும்.

ஆனால் நகத்தை வெட்டிக் கொள்வது மற்றும் அக்குல், மர்மஸ்தான முடிகளை அகற்றிக் கொள்வது என்பது மனிதனின் இயற்கையின் அடிப்படை (ஃபித்ரா-இயற்கைத் தன்மையில் அமைந்த, இன்னும் இறைவனது வழிகாட்டுதலின்படியும், ஷரீஅத் சட்ட அடிப்படையிலும் நாற்பது நாட்களுக்கு மேலாக அதனை வெட்டாமல் வளர விட்டு விடக் கூடாது. நகத்தை வெட்டுவதும், அக்குல் முடிகளைக் களைவதும் நோன்பினை எந்தவிதத்திலும் பாதிக்காது. அல்லாஹ் மிக அறிந்தவன்..

நோன்பில் வாசனைத் திரவியங்கள் பூசிக் கொள்வது
கேள்வி: ரமளானின் பொழுது வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளலாமா.?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ரமளானில் வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வது, நோன்பை எந்தவிதத்திலும் பாதித்து விடாது. ஃபதாவா அல் லஜ்னா அல்-தாஇமா (ஃபதாவா - மார்க்கத் தீர்ப்புகளுக்கான சிறப்பு கமிட்டி) கூறுவதாவது: அனைத்து வித வாசனைகளும், பொதுவாக நறுமணங்களும், அவை அத்தர் அல்லது அது போன்றவைகளும், நோன்பை எந்தவிதத்திலும் பாதிக்காது அல்லது இன்னும் மற்ற நேரங்களில் அணிந்து கொண்டாலும், அதாவது அந்த நோன்பு கடமையான நோன்பாக இருந்தாலும் அல்லது கடமையல்லாத விரும்பி நோற்கப்படும் நஃபிலான நோன்புகளாக இருந்தாலும் சரி.

இந்தக் கமிட்டி மேலும் கூறுவதாவது: எந்தவிதமான வாசனைத் திரவியங்களை ரமளான் மாதத்து நோன்பு நாளில் எவர் அணிந்து கொண்டாலும் அது அவரது நோன்பை பாதிக்காது, ஆனால் அவர் அதன் நறுமணப் புகையை அல்லது கஸ்தூரி போன்ற வாசனைத் துகள்களை (மூக்கிற்கு அருகில் வைத்து) நுகர்ந்து உள்ளிழுத்தல் கூடாது.

ஷேக் இப்னு உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: வாசனைத் திரவியங்களைப் பொறுத்தவரையில், நாளின் ஆரம்பத்திலும் மற்றும் நாளின் முடிவிலும் இட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட்டதே, அந்த வாசனைத்திரவியம் நறுமணப் பொருளாகவோ அல்லது எந்த நிலையில் இருந்தாலும் சரியே, நறுமணப் புகையை நுகர்வது அனுமதிக்கப்பட்டதல்ல ஏனென்றால் நறுமணத்தில் உள்ள துகள்களை (மூக்கினால் உறிஞ்சுவது மற்றும்) நுகர்வதன் காரணமாக அவை மூக்கின் வழியாக வயிற்றுக்குள் சென்று விடலாம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லகீத் இப்னு ஸப்ரா என்பவரிடம் கூறினார்கள் : ''உங்களது மூக்கினை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் நோன்பாளியாக இருக்கும்பட்சத்தில்". அல்லாஹ் மிக அறிந்தவன். 

நோன்பாளியாக இருப்பவர் குளிக்கலாமா?
கேள்வி: குளிப்பது நோன்பை முறிக்குமா.?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! நோன்பிருக்கக் கூடியவர் குளிப்பதற்கு அனுமதி உள்ளது, அவ்வாறு செய்வது அவரது நோன்பை முறித்து விடாது. இப்னு குதாமா அல்-முக்னீ, 3-18 ல்: நோன்பாளி குளிப்பதில் தவறில்லை. புகாரீ (1926) மற்றும் முஸ்லிம் (1109) 

ஆகிய ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நபிமொழிகளினை ஆதாரமாகக் காட்டி, ஃபஜ்ருத் தொழுகைக்கான நேரம் வரவிருக்கின்றன நிலையில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவியுடன் உடலுறவு கொண்டு குளிப்புக் கடமையான ஜுனுபாளியாக (அசுத்தமாக) இருக்கக் கூடிய நிலையில் குளித்து விட்டு, நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அபூதாவூது (2365)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவர் கூறுவதாவது : ''நோன்பிருக்கும் நிலையில், தாகத்தின் காரணமாக அல்லது வெப்பத்தின் காரணமாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்''. அல்பானி அவர்கள் இந்த நபிமொழி ஸஹீஹ் - தரத்தில் அமைந்தது என்று கூறுகின்றார்கள். (ஸஹீஹ் அபூதாவூது). அவ்ன் அல்-மாஃபூத் ல் :

வெப்பத்தின் கொடுமையிலிருந்து நிவாரணம் பெற விரும்புகின்ற நோன்பாளி தனது உடம்பு முழுவதிலும் தண்ணீரை ஊற்றிக் கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும். இதுவே அநேக மார்க்க அறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது, குளிப்பது என்பது கடமையானதா அல்லது கடமையானதல்லதா என்பதில் அவர்களுக்கிடையில் எந்தக் கருத்துவேறுபாடும் கிடையாது, இன்னும் அது பரிந்துரைக்கப்பட்டது அல்லது அனுமதிக்கப்பட்டது..

இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ''நோன்பு வைத்திருப்பவர் குளிப்பது'' என்ற அத்தியாயத்தில்: நோன்பிருக்கும் நிலையில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் துணியை நனைத்து தன்மீது போட்டுக் கொண்டார்கள், இன்னும் அல் ஷாஃபி நோன்பிருக்கும் நிலையில் குளியளறையில் நுழைந்தார்கள்.., இன்னும் அல் - ஹஸன் கூறுகின்றார்: நோன்பாளி தனது வாயைக் கொப்பளித்துக் கொள்வதும் இன்னும் தன்னைக் குளிர்ச்சியாக்கிக் கொள்வதிலும் எந்தத் தவறுமில்லை.

அல் - ஹாஃபிஸ் அவர்கள் கூறுவது: ''நோன்பாளி குளிப்பது" என்ற அத்தியாயத்தில் அனுமதிக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். அல் ஸைன் இப்னு அல் முனீர் அவர்கள் கூறுவது: குளிப்பதானது சுன்னாவும், கடமையானதும் இன்னும் அனுமதிக்கப்பட்டதுமாகும், அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாகக் கூறப்படுகின்ற நபிமொழியில், நோன்பாளியாக இருக்கக் கூடியவர் குளியலறையில் நுழையக் கூடாது என்று வரக் கூடிய நபிமொழி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு இருப்பதாக அப்த் அல் ரஸ்ஸாக் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.  

நோன்பாளி தலைக்கு எண்ணெய் தேய்ப்பது
கேள்வி: மளானில் நோன்பு நோற்றிருக்கக் கூடியவர் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா.?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கக் கூடிய ஒருவர் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதில் தவறில்லை, அவரது நோன்பை அது பாதிக்காது. மார்க்கத் தீர்ப்புகளுக்கான கமிட்டி (10-253) யிடம்:

கண்மை அல்லது கிரீம் போன்றவற்றை நோன்பாளி பயன்படுத்தலாமா, அது அவரது நோன்பை முறிக்குமா அல்லது முறிக்காதா?

அதற்கு அவர்களது பதிலாவது: ரமளானில் நோன்பிருக்கக் கூடியவர் கண்ணுக்கு இடக்கூடிய சுருமா அல்லது கண்மை போன்றவற்றை இட்டுக் கொள்வது அவன் அல்லது அவளது நோன்பை முறிக்காது. ரமளான் மாதத்தில் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்பவர்களுக்கும் மேற்கண்ட சட்டம் பொருந்தும் நோன்பாளியின் அவரது நோன்பைப் பாதிக்காது. அல்லாஹ் மிக அறிந்தவன். தூயவழி.காம்  


சர்வதேசப்பிறை தொடர்பான அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆதாரங்கள்

இன்றைய நடைமுறையில் உள்ளது போல் இஸ்லாமிய அடிப்படையில் ஒரு வருடத்தின் மாதங்கள் பன்னிரன்டுதான் என அல்குர் ஆனின் பின்வரும் வசனம் உறுதி செய்கிறது. ” நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் என்னிக்கை களாகும். இவை அல்லாஹ்வின் நியதியில் அவன் வானங்கள், பூமியயை படைத்த நாள்முதல் இருந்து வர்கின்றன.” (அல்குர்ஆன்)நோன்பு திறப்பதற்காக எம்மில் அதிகமானவர்கள் ஈத்தம் பழத்தையும் தண்ணீரையுமே அதிகமாக பயன்படுத்துபவர்களாக இருக்கின்றோம். இதற்கு அடிப்படை காரணம் '' எவர் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு திறந்து கொள்ளட்டும். 

இல்லையெனில் நீரைக்கொண்டு நோன்பு திறக்கட்டும் ஏனெனில் நிச்சயமாக அது தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.''  என்ற ஹதீதே. இந்த ஹதீதின் உண்மை தன்மையை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். வாசித்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

கருப்புக் கொடிகள் மஹ்தி வருவார் என்று ஹதீஸ் ஓர் ஆய்வு

கருப்புக் கொடியைக் கொண்டவர்கள் இந்த உம்மத்தின் விடுதலைக்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் அவர்களில்தான் மஹ்தி வருவார் என்றும் வாதங்களை முன்வைத்து தங்களை மஹ்தியென்றும் அல்லது மஹ்தஸத்தை ஆதரித்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தோன்றியதை வரலாறு எமக்கு பாதுகாத்து வைத்துள்ளது. அவர்களில் பலர் இஸ்லாமிய ஆட்சிகளில் மரண தண்டனை வழங்கப்பட்டார்கள். இவர்களை வரலாற்றில் “மஹ்தவிய்யா’ என அழைப்பார்கள். இச்சிந்தனை மறுபடியும் உதயமாகும் அடையாளங்கள் தென் படுவதால் அந்தப் போலி அடையாளங்களை முன்வைக்கும் ஹதீஸ்களை இக்கட்டுரை மூலம் தரப்படுத்த விளைகிறோம்.
 
முதலாவது ஹதீஸ்-
سنن ابن ماجه – (ج 2  ص 1367)
4084 – حدثنا محمد بن يحيى وأحمد بن يوسف قالا حدثنا عبد الرزاق عن سفيان الثوري عن خالد الحذاء عن أبي قلابة عن أبي أسماء الرحبي عن ثوبان قال قال رسول الله صلى الله عليه و سلم
: ( يقتيل عند كنزكم ثلاثة كلهم ابن خليفة . ثم لا يصير إلى واحد منهم . ثم نطلع الرايات السود من قبل المشرق . فيقتلونكم قتلا لم يقتله قوم )
ثم ذكر شيئا لا أحفظه . فقال ( فإذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج . فإنه خليفة الله المهدي )


நேசம் யாருக்காக.? நேசம் கொள்வதிலே ஏற்படுத்தப்படும் ஷிர்க்
(அஷ் ஷேஹ் ஸாலிஹ் அல் பவ்ஷான் அவர்களின் அல்இர்ஷாத் இலா சஹீஹில் இஃதிகாத் என்ற நூலில் இருந்து )  அல்லாஹ்வை நேசிப்பதானது, அது அவன் மீதான நேசத்தோடு பிணைக்கபட்டதாக இருப்பது அவசியமாகும். ஏனெனில், அச்சத்தை கொண்டு மாத்திரம் நீ அல்லாஹ்வை வணங்குவதானது, அது கவாரிஜ்களின் அடிப்படை அம்சமாகும். அல்லாஹ்வை நேசிப்பதானது, அது இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படை விடயமாகும். அல்லாஹ்வை பூரணமாக நேசிப்பதால் தான் ஒரு மனிதனின் மார்க்கம் பூரணத்துவம் பெறும். அது குறைவதால் அவன் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதிலே குறைவு ஏற்படும்.

இங்கே, "நேசம்" என்பதன் மூலம் நாடப்படுவது: தாழ்வையும், பணிவையும், பூரணத்துவம் பெற்ற வழிபாட்டையும், மேலும் ஏனையோரை விட நேசிக்கப்படவேண்டியவரை(அல்லாஹ்வை) சிறப்புப்படுத்துவதை வேண்டி நிற்கும் வணக்க ரீதியான நேசம் ஆகும். இந்த நேசமானது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரித்தானதாகும். அதிலே அவனோடு வேறொருவரை இணையாக்குவது எந்த ஒருவருக்கும் அனுமதி ஆகாது; ஏனெனில் நேசம் கொள்ளல் என்பது பிரதானமாக இரு வகைப்படும்.

1. தனித்துவமான நேசம்: இது தான் நேசிக்கப்பட வேண்டியவனுக்கான (அல்லாஹ்வுக்கான) பூரண பணிவையும்,பூரண வழிபாட்டையும் வேண்டிநிற்கும் வணக்க ரீதியான நேசம். இது அல்லாஹ்வுக்கு மாத்திரம் தனித்துவமானது.
2. பங்கு போடப்படக்கூடிய நேசம்: இது மூன்று வகைப்படும்.

I. இயற்கையான விருப்பு; உதாரணமாக பசித்தவர் உணவை விரும்பல்.
II. இரக்கத்தை வெளிப்படுத்தும் நேசம்; உதாரணமாக தந்தை தனது பிள்ளையை நேசித்தல்.
III. ஆறுதல் , பரஸ்பரம் பரிமாறும் நேசம் : உதாரணமாக, ஒருவர் தன துணையை நேசித்தல், ஒருவர் தன் நண்பனை நேசித்தல். 

இம்மூன்று வகையான நேசமானது  மகத்துவப்படுதுவதையோ பணிந்து நடப்தையோ வேண்டி நிற்காது. அதற்காக எந்த ஒருவரும் குற்றம் பிடிக்கப்படவும் மாட்டார்கள். மேலும் இந்த வகையான நேசமானது (அல்லாஹ் மீது மாத்திரம் வைக்கப்படவேண்டிய) தனித்துவமான நேசத்தோடு போட்டி போடவும் மாட்டாது. மேலும் இந்த வகையான நேசம் இருப்பது ஷிர்க்’ஆகவும் மாட்டாது. என்றாலும்; (அல்லாஹ் மீது மாத்திரம் வைக்கப்பட வேண்டிய) தனித்துவமான நேசமானது இதை விட முற்படுத்தப்பட்டதாக இருப்பது அவசியம் ஆகும்.

மேலும், தனித்துவமான நேசம்-வணக்க ரீதியான் நேசம்- அது குறித்து தான் பின்வரும் அல்லாஹ்வின் கூற்றிலே கூறப்படுகிறது. “மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு நித்’களை-இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக்கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர். (ஆனால்) விசுவாசிகளோ, அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடினமானவர்கள்”
 (அல்பகறா:165)

இமாம் இப்னுல் கையும் (ரஹ்) இந்த வசனத்தை பற்றி கூறுகையில்; அல்லாஹ்வை நேசிப்பது போல யார் அல்லாஹ் அல்லாததை நேசிக்கின்றாரோ அவர் நேசிப்பதிலும், மகத்துவப்படுத்துவதிலும் அல்லாஹ் அல்லாத நித்’களை (இணையாளர்களை) எடுத்துக்கொண்டவர் ஆவார் என அல்லாஹ் தெரிவிக்கிறான்
.
மேலும், இப்னு கஸீர்(ரஹ்) கூறுகையில்; முஷ்ரிகீன்கள் அல்லாஹ்வுக்கு நித்’களை; அதாவது இணையாளர்களையும், நிகரானவற்றையும் எடுத்துக்கொண்ட ரீதியிலே, இம்மையிலே அவர்களுடைய நிலை குறித்தும் மறுமையிலே அவர்களுக்காக இருக்கும் வேதனை, தண்டனை குறித்தும் அல்லாஹ் கூறுகிறான். “அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை (நித்’களை) நேசிக்கின்றனர்.” அதாவது: நேசிப்பதிலும், மகதுவப்படுதுவதிலும் அவற்றை அல்லாஹ்வுக்கு சமப்படுத்துகின்றனர். இப்னு கஸீர்(ரஹ்) கூறிய இக்கூற்றானது, அது தான் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) இனது தேர்வுமாகும். அதே போல தான், அல்லாஹ் அவர்களுடைய இந்த சமப்படுத்தல் செயல் குறித்து தன கூற்றிலே பின்வருமாறு கூறுகிறான்:

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தோம். அகிலத்தாரின் இரட்சகனாக இருப்பவனுக்கு (இணையாக்கப்பட்ட) உங்களை நாங்கள் சமமாக ஆக்கி வைத்த போது_ (நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தோம்)”
(அஷ்ஷுஅரா:97,98).

இன்னுமொரு கூற்றிலே: அதன் பின்னரும்,  நிராகரிப்போர் (அல்லாஹ்வாகிய) தங்கள் இரட்சகனுக்கு (அவன் படைத்தவற்றில் சிலதை) சமமாக்குகின்றனர்” (அல்அன்ஆம்:1).

இன்னுமொரு கூற்றிலே “விசுவாசிகளோ, அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடினமானவர்கள்” அதாவது, இணையாளர்களை வணங்கக்கூடியவர்களது அல்லாஹ்வுக்கான நேசத்தை விட மு’மின்களினது அல்லாஹ்வுக்கான நேசமானது கடினமானதாகும். மேலும் “இணையாளர்களை வணங்கக்கூடியோர் அவர்கள் இணையாளர்களை நேசிப்பதை விட (மு’மின்களது) அல்லாஹ்வுக்கான நேசம் கடினமானதாகும்.” எனவும் கூறப்படுகிறது. எனவே, இந்த வசனமானது யார் அல்லாஹ்வை நேசிப்பதை போல் வேறொரு விடயத்தை நேசிக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்காக ஒரு இணையை ஏற்படுத்தி விட்டார் என்பதை உணர்த்தி நிற்கிறது.

ஷேக் முஹம்மத் இப்னு அப்ததில்வஹ்ஹாப் கூறுகிறார்: அல்லாஹ்வை நேசிப்பதற்கு சமனாகின்ற அளவுக்கு ஒருவர் (அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட)ஒரு இணையை நேசிப்பது, அது பெரிய வகை ஷிர்க் ஆகும்- எனும் விடயமும் இந்த வசனத்திலே இருக்கிறது. வணக்க ரீதியான நேசமான அல்லாஹ்வின் மீதான நேசமானது, அதை அது அல்லாத நேசத்தை விட-. அதாவது, பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிமார்கள், செல்வத்தை போன்றவற்றை நேசிப்பதை விட முற்படுத்துவது அவசியமாகும். ஏனெனில், இந்த நேசத்தை அல்லாஹ்வை நேசிப்பதை விட முற்படுத்துபவரை அல்லாஹ் எச்சரித்து கூறுகிறான். அல்லாஹ் கூறுகிறான்:

நீர் கூறுவீராக! உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய ஆண்மக்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவியரும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் எதனை சம்பாதித்து வைத்திருக்கிறீர்களோ அந்த செல்வங்களும் , நீங்கள் எதனுடைய நஷடத்தை பயப்படுகிறீர்களோ அத்தகைய வியாபாரமும், நீங்கள் எதனை திருப்திபடுகிறீர்களோ அத்தகைய குடியிருப்பிடங்களும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவனுடைய பாதையில் போர் செய்வதையும் விட உங்களுக்கு மிக விருப்பமானவைகளாக இருந்தால், அப்போது நீங்கள் (தண்டனைப்பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் எதிபார்த்திருங்கள். மேலும், அல்லாஹ் பாவிகளான கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.
(அத்தவ்பா:24)

ஆகவே, அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவன் விரும்பக்கூடிய செயல்களையும் நேசிப்பதை விட அற்பகிரயங்களுக்காக நேசிக்கப்படக்கூடிய இவற்றை முற்படுத்துபவரை அல்லாஹ் எச்சரிக்கின்றான். அல்லாஹ் இந்த விடயங்களை நேசிப்பதற்காகவே மாத்திரம் எச்சரிக்கவில்லை. ஏனெனில், இவை தேர்வோடு சம்பந்தப்படாமல் மனிதன் மீது வலுகட்டயமாக்கப்பட்ட சில விடயங்களாகும். அந்த வகையில், அல்லாஹ் எச்சரிப்பதெல்லாம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மேலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் நேசிக்கக்கூடியவற்றை நேசிப்பதை முற்படுத்துவபவரைத்தான். ஆகவே, ஒரு அடியான் தான் விரும்புவதையும், தான் நாடுவதையும் விட அல்லாஹ் தான் அடியானிடமிருந்து விரும்புவதையும், நாடுவதையும் சிறப்புப்படுத்துவது அவசியமாகும்.

அல்லாஹ்வை நேசிப்பதை உணர்த்தி நிற்கக்கூடிய சில அடையாளங்கள்
யார் அல்லாஹ்வை நேசிக்கிறாரோ அவர் நிச்சயமாக தான் விருப்பம் கொள்ளும் மனோ இச்சைகள், சுவாரஷ்யமானவைகள், செல்வங்கள், பிள்ளைகள், பிரதேசங்கள் போன்றவற்றை விட அல்லாஹ் விரும்பும் அமல்களை முற்படுத்துவார்.

யார் அல்லாஹ்வை நேசிக்கிறாரோ அவர் நிச்சயமாக அவனது தூதரை அவர் எடுத்து வந்தவற்றிலே பின்பற்றுவார். அவர் ஏவியதை செய்வார். அவர் தடுத்ததை விட்டு விடுவார். அல்லாஹ் கூறுகிறான்:"
நீர் கூறுவீராக! “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிகக் கிருபை உடையவன்”. நீர் கூறுவீராக! அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்; பின்னர் அவர்கள் புறக்கணித்தால்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை நேசிக்க மாட்டான்.”
(ஆலுஇம்ரான்: 31,32).

ஸலபுகளில் சிலர் கூறுகின்றனர்; அல்லாஹ்வை நேசிப்பதை குறித்து ஒரு கூட்டத்தினர் வாதிட்டனர். அப்போது அல்லாஹ் (அவனை) நேசிப்பது குறித்த இந்த வசனத்தை இறக்கி வைத்தான். “நீர் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; உங்களை அல்லாஹ் நேசிப்பான்” (ஆலுஇம்ரான்: 31)

மேலும் இந்த வசனத்திலே அல்லாஹ்வை நேசிப்பதற்கான ஆதரத்தினது தெளிவும், அதனது பிரதிபலனினது தெளிவும், அதனது பிரயோசனத்தினது தெளிவும் இருக்கிறது. அந்த வகையில், அல்லாஹ்வை நேசிப்பதன் ஆதாரமும், அடையாளமும் ஆனது; அவனது தூதரை பின்பற்றுவதாகும். அதனது பிரயோசனமும், பிரதிபலனும் ஆனது; அல்லாஹ்வின் நேசம் அடியானை அடைவதும், அவனது பாவத்திற்கான அல்லாஹ்வின் பாவமன்னிப்பும் ஆகும்.

அல்லாஹ் தன கூற்றிலே பின்வருமாறு கூறுவதும் ஒரு அடியான் அல்லாஹ்வை நேசிப்பதை உண்மைப்படுத்தும் அடையாளமாகும்
. “விசுவாசம் கொண்டோரே! உங்களில் இருந்து எவர் தன மார்க்கத்தை விட்டும் ,மாறிவிடுவாரானால் (அப்பொழுது அவர்களுக்கு பகரமாக) வேறு சமூகத்தாரை அல்லாஹ் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்; அவர்கள் விசுவாசம் கொண்டவர்களிடம் இரக்கம் காட்டுபவர்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவார்கள்; இன்னும் பழிப்பவரின் பழிப்புக்கும் அஞ்சமாட்டார்கள்”
(அல்மா’இதா: 54).

இந்த வசனத்தில் அல்லாஹ்வை நேசிப்பதற்கு நான்கு அடையாளங்கள் இருப்பதாக அவன் கூறிக்காட்டுகிறான்.
1. அல்லாஹ்வை நேசிக்கக்கூடியோர் மு’மின்களிடம் இரக்கம் காட்டுவார்கள்; அதாவது, அவர்களோடு பாசம் கொள்வார்கள், அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்கள், அவர்களோடு மென்மையாக நடந்து கொள்வார்கள். அதா (ரஹ்) கூறுகிறார்; தந்தை தன பிள்ளையோடு இருப்பதைப்போன்று அவர்கள் மு’மின்களோடு நடந்துகொள்வார்கள்.

2. அவர்கள் காபிர்களோடு கண்டிப்பாக நடந்து கொள்வார்கள். அதாவது, அவர்கள் காபிர்களுக்கு கோபத்தையும், கடினத்தன்மையையும், அவர்களில் இருந்து ஒதுங்கிக்கொள்வதையும் வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்காக பணிவையும், பலவீனத்தையும் வெளிக்காட்டமாட்டர்கள்.

3. அவர்கள் தன ஆன்மா, கை, செல்வம், நாவு போன்றவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை கண்ணியப்படுதுவற்காகவும் அதன் பகைவர்களை ஒழிப்பதற்காகவும் ஒவ்வொரு ஊடகத்தைக்கொண்டும் அல்லாஹ்வின் பாதையிலே போராடுவார்கள்.

4. அல்லாஹ்வின் விடயத்திலே பழிக்கக்கூடிய எவரினது பழிப்பும் அவர்களை பீடிக்காது. அவர்கள் இருக்கின்ற மார்க்கத்தின் உண்மைத்தன்மையையைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்ததமை யினாலும், அவர்களது ஈமானின் பலத்தினாலும், அவர்களது உறுதியாலும் சத்தியத்தின் வெற்றிற்காக தங்களையும் தம் செல்வத்தையும் அர்ப்பணிப்பதிலே அவர்களை மக்கள் கேவலமாக பார்ப்பதும், பழிப்பதும் அவர்களிலே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பழிப்பு தன்னிலே தாக்கம் செலுத்தி அதன் காரணத்தால் தன நேசதிற்குரியவருக்கு உதவுவதிலே பலவீனமடையும் ஒவ்வொரு நேசகனும் உண்மையிலே ஒரு நேசகனாக இருக்க மாட்டான்.

இமாம் இப்னுல் கையும்(ரஹ்) கூறும் அல்லாஹ்வின் நேசத்தை வரவழைக்கக்கூடிய 10 காரணிகள்
1. அல்குர்ஆனின் கருத்துக்களை மேலும் அதன் மூலம் நாடப்படுபவைப்பற்றி சிந்தித்தவாறும், விளங்கி எடுத்தவாறும் அதை ஓதிவருதல்.

2. பர்ளான கடமைகளுக்கு பின் நபீலான வணக்கங்களை கொண்டு அல்லாஹ்வை நெருங்கிக்கொள்ளல்.

3. நாவாலும், உள்ளதாலும், செயலாலும் அல்லாஹ்வைப்பற்றிய திக்ரிலே நீடித்திருத்தல்.

4. இரண்டு நேசகங்கள் ஒன்றோடு ஓன்று போட்டியிடும் வேளை அடியான் தான் விரும்பும் அம்சங்களை விட அல்லாஹ் விரும்பும் அம்சங்களை தேர்வு செய்தல்.

5. அல்லாஹ்வின் திருனாமங்களையும், அவனது பண்புகளைப் பற்றியும் மேலும் அவனது பூரணத்துவத்தையும் கண்ணியத்தையும் உணர்த்தக்கூடியவற்றைப்பற்றியும் மேலும் இவற்றுக்கென இருக்கும் புகழுக்குரிய தாக்கத்தைப்பற்றியும் ஆழமாக சிந்தித்தல்.

6. அல்லாஹ் அளித்திருக்கும் வெளிப்படையான, உள்ரங்கமான அருட்கொடைகளையும், அவன் அடியார்களுக்கு நலவு நாடுவதையும், நல்லுபகாரம் செய்வதையும், அருள்புரிவதையும் உற்று நோக்கல்.

7. அல்லாஹ்வுக்கு முன்னிலையில் உள்ளம் உடைந்து போய், அவன் பால் தேவையுடையவனாக நிற்றல்.

8. இரவின் மூன்றில் ஒரு பங்கின் இறுதி மீதமாக இருக்கும் போது இறைவன் இறங்கி வரும் வேளையில் அல்லாஹ்வோடு தனித்திருத்தல். மேலும் இந்நேரத்திலே அல்குர்ஆன் ஓதுவதோடு பாவமன்னிப்பு கோருவதன் மூலமும், பாவமீட்சியில் ஈடுபடுவதன் மூலமும் அந்நேரத்தை நிறைவு செய்தல்.

9. அல்லாஹ்வை நேசிக்கக்கூடிய நல்லோர்களோடும், சீர்திருத்தவாதிகளோடும் அமர்ந்திருந்து அவர்களது பேச்சின் மூலம் பிரயோசனம் பெறல்.

10. உள்ளத்திற்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் சூழ்ந்து கொள்ளும் பராக்காக்கக்கூடிய காரணிகளிலிருந்து தூரமாக இருந்து கொள்ளல்.

இன்னும், அல்லாஹ்வை நேசிக்கும் விடயத்தோடு பின்தொடரக்கூடியதுமான மேலும் அதற்கு மிக அவசியமானது தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசித்தல். இமாம் புகாரி(ரஹ்) அனஸ்(ரழி) அவர்களைத் தொட்டும் ஒரு ஹதீஸை வெளிக்கொணர்ந்து கூறுவது போல “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; நான் உங்களின் ஒருவர் பால் அவரது பிள்ளை, பெற்றோர், மக்கள் அனைவரையும் விட மிக விருப்பத்திற்குரியவராகும் வரை அவர் ஈமான் கொள்ள மாட்டார்.”
அதாவது எவர் பால் தூதர்(ஸல்) அவர்கள் தன்னை விடவும் நேசதிற்குரியவராகவும், மக்களிலே மிக நெருக்கமானவராகவும் இருக்கிறாரோ அவரைத்தவிர வேறொருவரும் பூரணமான ஈமானை உணரமாட்டார். அல்லாஹ்வின் தூதரை நேசிப்பதானது அல்லாஹ்வை நேசிப்பதோடு பின்தொடர்ந்து வரக்கூடியதும் அதனோடு இணைபிரியாததுமாகும்.

யார் தூதர்(ஸல்) அவர்களை உண்மையாக நேசிக்கிறாரோ அவர் அவரை பின்பற்றுவார். ஆனால் அவர் கொண்டு வந்ததிலே முரண்பட்டுக்கொண்டும், தடம் புரண்டோர் மற்றும் பித்’அத்வாதிகள் மற்றும் புத்திகெட்டோர் போன்ற இறைத்தூதர்(ஸல்) அல்லாதோரை பின்பற்றிக்கொண்டும், பித்’அத்தை உயிர்ப்பித்துக்கொண்டு சுன்னாவை விட்டு விட்ட நிலையிலே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதான தன நேசத்திற்காக யார் வாதாடுகிறாரோ அவர் தான் இறைதூதரை நேசிப்பதாக கூறும் வாதாட்டத்திலே பொய்யர் ஆவார். ஏனெனில் ஒரு நேசகர் எப்போதும் தன நேசதிற்குரியவரை தான் பின்பற்றுவார்.

மவ்லிதுன்நபி மேலும் ஏனைய பித்அத’ஆன் செயற்பாடுகளை உயிர்பிப்பதைக்கொண்டு இறைதூதரின் சுன்னாவுக்கு முரணான பித்அத்தை புதிதாக உருவாக்கக்கூடியோர் அல்லது நபி(ஸல்) அவர்களது விடயத்தில் இதை விட பெரியதோர் வரம்பு மீறிய செயற்பாட்டை செய்து அல்லாஹ்விடமில்லாமல் நபியவரிடம் பிரார்த்தித்து, அவரிடம் புகழ்வேண்டி, அவர் மூலம் பாதுகாப்பு தேடக்கூடியவர்கள்- இவ்வனைத்தோடு சேர்த்து அவர்கள் தாம் நபி(ஸல்) அவர்களை நேசிப்பதாக கூறுவதானது மிகப் பாரியதொரு பொய்யாகும்.

அவர்களோ அல்லாஹ் பின்வரும் வசனத்திலே கூறிக்காட்டுபவர்களைப்போன்றோர் ஆவர். “அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம். (அவர்களின் கட்டளைகளுக்கு) நாங்கள் கீழ்படிக்கிறோம் என்றும் கூறுகின்றனர். பின்னர், அவர்களில் ஒரு பிரிவினர் அதற்கு பிறகு புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) விசுவாசிகள் அல்லர்”
(அந்நூர்: 47).

ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) இது போன்ற விடயங்களை விட்டும் தடுத்திருக்கிறார். ஆனால் அவர்களோ தாம் அவரை நேசிப்பதாக கூறி அவர் தடுத்தவற்றிலே முரண்படுகின்றனர். அதற்கு மாறு செய்கின்றனர். அந்த வகையில் அவர்கள் பொய்ப்பித்து விட்டனர். நாம் அல்லாஹ்விடம் (அனைத்தின் ) ஈடேற்றத்திற்காகவும் பிரார்த்திப்போம்.

                                                                                            தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபிக் கல்லூரி
மேலும்பார்க்க > 
 

உள்நாட்டுப்பிறை என்றும் சர்வதேச பிறை என்றும் கணிப்பீட்டு அடிப்படையிலான பிறை என்றும் பிரிந்து ஒவ்வொரு சாராரும் தாம் சரி என்று நினைக்கும் கொள்கையில் நமது இபாதத்களை ஆரம்பித்திருக்கிறோம். உண்மையில் சர்வதேசப்பிறை தொடர்பான ஒரு தெளிவை அல்குர்ஆன் அஸ்-ஸூன்னா அடிப்படையில் எமக்கு கற்றுத்தாருங்கள் என மக்களில் ஒரு சாரார் வேண்டிக் கொண்டதற்கிணங்க அது தொடர்பான ஆதாரங்களை எம்முன் வைக்கின்றார் மௌலவி அவர்கள்.
நடுநிலைமையோடு சிந்தித்து விளங்கிக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக இருப்பதனால் அனைவரும் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் கட்டாயம் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.
 


சர்வதேச பிறை எழுத்து வடிவில்
                             * தலைப்பிறை ஓர் பார்வை
                             * ஒரே சமுதாயம் – ஒரே பிறை
                             * சர்வதேசப்பிறை ஓர் அறிமுகப்பார்வை
                             * சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனங்களும் விளக்கங்களும்...
                      

   உமர் (றழி) அவர்களின் ரமழான் கால இரா வணக்கம் 21 ரகாஅத்களா? அல்லது 11 ரகாஅத்களா?

ரமழான் காலத்து இரவுத் தொழுகை (தராவீஹ்) எத்தனை ''ரகஅத்'' என்பதில் அறிஞர்களிடையில் பல கருத்துக்கள் இருந்து வந்துள்ளது. 47,41,36,23,11 என பல கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது. என்றாலும் பெரும்பாலும் 23 தொழப்படுவதை அவதானிக்கலாம். இதேவேளை மற்றொரு சாரார் ''11ரகஅத்''களை உலகின் பல கோணங்களிலும் தொழுது வருகின்றனர்.
 
ஆதாரங்கள்.
இவ்விருசாராரும் சில ஆதாரங்களை முன்வைத்து தமது கருத்தை நியாயப்படுத்துகின்றனர். ''23 ரகஅத்''களை ரமழான் கல இராவணக்கமாகத் தொழுதுவருபவர்கள் முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடுவது உமர் (றழி) அவர்களைத் தொட்டும் வருகின்ற செய்தியையே.. (''உமர் (றழி)' அவர்கள் ''21ரகஅத்'' களை மக்களுக்கு தொழுவிக்குமாறு உபை இப்னு கஃப் (றழி), தமீமுத்தாரி (றழி) ஆகிய இருவருக்கும் கட்டளையிட்டார்கள்'' இந்த செய்தி இமாம் அப்துர்ரசாக் அவர்களுக்குரிய ''முஸன்னப்'' என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.  இது ஓர் முக்கியமான ஆதாரமாகும். இவ்வாறே, இன்னும் சிலர் நபிகளாரைத் தொட்டும் ஒரு செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

''ரசூலுள்ளாஹ் (ஸல்) அவர்கள் ரமழானிலே 20 ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்தார்கள்''
இதை ''இப்னு அப்பாஸ் (றழி) அவர்களைத் தொட்டும் ''இமாம் தபரானி ''அல்-முஃஜம்'' என்ற கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள்.  என்றாலும் ''20 ரக்அத்'' தராவிஹ் தொழுகையை ஆதரிக்கக் கூடிய பெரும்பாண்மையான அறிஞர்கள் இந்த செய்தியை ஆதாரமனாதாகக் குறிப்பிடவில்லை. ஏனென்றால், இந்த ஹதீஸ் 'ஓர் பலவீனமான ஹதீஸ்'' என்று அவர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூறுகின்றார்கள்.

அதாவது, இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய ''இப்ராஹீம் இப்னு உத்மான்'' எனும் அறிவிப்பாளர் ''பலவீனமானவர்'' என ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதால் இவருடைய செய்தியை ஆதாரமாக ஏற்கமுடியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான காலத் தொழுகைபற்றி ஸஹீஹூல் புஹாரி கிரந்தத்தில்   வந்த ஹதீஸிற்கு, மேற்சொன்ன ஹதீஸ் முற்றிலும் முரணானதாகவும் இருப்பதால் அதை ஹதீஸ்கலை அறிஞர்கள் ''பலவீனமானது'' என ஒரே கரத்தைத் தெரிவித்துள்ளனர்.
 
புஹாரிக் கிரந்தத்தில் வரும் ஹதீஸ் பின்வருமாறு:
''ரமழானில் நபிகளாரின் தொழுகை எவ்வாறு இருந்தது என ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமழானிலோ அல்லது ரமழான் அல்லாத காலத்திலோ 11ஐ விட அதிகமாகத் தொழுததில்லை'' என்று அவர்கள் கூறினார்கள்.
 
இவ்வாறு தெளிவாக நபி (ஸல்) அவர்களின் ரமழான் காலத் தொழுகை பற்றி வந்துள்ளதால் ''20 ரக்ஆத்'' கள் ''தராவீஹ்'' தொழுகின்றவர்கள் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட உமiர் (ரழி) அவர்களின் செய்தியையே பிரதான ஆதாரமாக முன்வைக்கின்றனர்.  மேலும், அலி (ரழி) அவர்களைத் தொட்டும் இதே போன்று வரக்கூடிய சில செய்திகளையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

இதனுடன், எனது ஸூன்னத்தையும், குலபாஉர் ராசீதீன்களின் ஸூன்னத்தையும் பற்றிப் பிடியுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் சொன்னதை ஆதாரமாகக் காட்டி உமர் (ரழி), அலி (ரழி) போன்றவர்கள் நேர்வழி பெற்ற கலீபாக்களாக இருப்பதால் அவர்களைப் பின்பற்றுவதில் குற்றமில்லை என்று குறிப்பிடுகின்றனர்.
 
பதில்கள்
''11 ரக்அத்'' களை ரமழான்கால இராவணக்கமாகத் தொழுது வருபவர்கள் இவர்களின் இந்த வாதங்களுக்குக் கூறும் பதில் என்னவென்பதை தற்போது பார்ப்போம்.  உமர் (ரழி) அவரகள் ''21ரக்அத்'' கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக வருகின்ற செய்தியை ஆய்வு செய்த போது, அந்த செய்தி உண்மைக்குப் புறம்பான செய்தியாக தெரியவந்தது.
 
அல்ஹதீஸில் ஓர் விதி  அதை விபரிப்பத்ற்கு முன் பலவீனமான ஹதீஸ்களின் வகைகளில் ஒன்றான ''ஷாத் ஆன ஹதீஸ்'' என்பதைப்பற்றித் தெரிந்திருப்பது உதவியாக இருக்கும். இதைப்பற்றி, இதே இணையத்தளத்தில் ''வித்ருத் தொழுகையில் குனூத்'' எனும் தலைப்பில் தெளிவுபடுத்தியுள்ளேன். அதைப் பார்த்துக் கொள்ளவும்.

எனவே, சுருக்கமாகக் கூறுவதாயின், ஒரு ஆசரியரிடம் கேட்ட பல நம்பகமான மாணவர்கள் ஓர் செய்தியை ஒரே விதமாகக் கூறியிருக்க, அவர்களை விட நம்பகத்தன்மையில் ஏதோ ஓர் விதத்தில் குறைந்தவர் அச் செய்தியை அவர்களுக்கு மாற்றமாக கூறினால் அந்த தனிப்பிட்டவரின் செய்தி மறுக்கப்பட்டதாகக் கருதப்படும் இதற்கே ''ஷாத்'' என்று கூறப்படும்  இந்த விதியை எம்மனக்கண் முன் வைத்துக் கொண்டு ஆய்வுக்குள் நுழைவோம்.

உமர் (ரழி) அவர்கள் எத்தனை ''ரக்ஆத்''கள் தொழுவிக்குமாறு கட்டளை இட்டார்கள் என்ற செய்தியை அறிவிக்கக் கூடியவர் ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற ஸஹாபியாவார். அவரிடமிருந்து அந்த செய்தியை அறிவித்தவர் ''முஹம்மத் இப்னு யூசுப்'' என்ற தாபீயீன்களைச் சேர்ந்த மிக உறுதியான அறிவிப்பாளர் ஆவார். இவர் ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற ஸஹாபியின் பேரனுமாவார்.  இந்த இரண்டாம் நபரிடமிருந்து அந்த செய்தியை அறிவித்தவர்கள் ஆறு பேர்களாகும். இதில் நான்குபேர் ''11ரக்அத்''களை தொழுவிக்குமாறு கட்டளை இட்டதாகத் தெரிவிக்கின்றனர். ஐந்தாமவர் ''13ரக்அத்'' கள் என்றும் ஆறாமவர் ''21ரக்அத்'' கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

''11ரக்அத்''கள் எனக் குறிக்கப்பட்ட நான்கு பேர் 
01. இமாம் மாலிக் : இவர் நம்பகத்தன்மையில் மிக உச்ச நிலையில் உள்ள அறிவிப்பாளர். இவருடைய செய்தியை அவருக்குரிய கிரந்தமான ''முஅத்தா'' என்ற கிரந்தத்தில் காணலாம்.
 
02. இமாம் யஹ்யா இப்னு ஸயீத் அல் கத்தான் : மனன சக்தியில் மலை எனப் போற்றப்பட்டவர்.  இவருடைய செய்தியை இமாம் அபூஷைபாவுக்குரிய ''முஸன்னப்'' என்ற கிரந்தத்தில் காணலாம்.

03. அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் : உறுதியான அறிவிப்பாளர் இவருடைய செய்தியை இமாம் ''ஸயீத் இப்னு மன்சூர்'' அவர்களின் ''ஸூனன்'' என்ற கிரந்தத்தில் காணலாம்.

04. இஸ்மாயில் இப்னு ஜஃபர் (அல் - மதனீ) : இவர் நம்பகத்தன்மையான உறுதியான அறிவிப்பாளர்
இவரின் செய்தி ''அஹாதீதுல் இஸ்மாயீல்'' என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
 
இதில் முதல் மூன்று பேரும் ''11ரக்அத்''களை உமர் (ரழி) அவர்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள் என ''முஹம்மத் இப்னு யூசுப்'' என்பவர் அவரின் பாட்டன் ''ஸாயிப்'' என்ற ஸஹாபியிடம் கேட்டு தங்களுக்குச் சொன்னதாக ஒரே வார்த்தையில் அறிவித்துள்ளார்கள். 

நான்காமவர் உமர் (ரழி) காலத்தில் 11 ரக்அத் தொழுபவர்களாக இருந்தார்கள் என அறிவித்துள்ளார்.  இந்த செயல் நபி (ஸல்) அவர்களின் செயலுக்கு முற்றிலும் நேரபாடானதாகும். அதாவது நிச்சயமாக உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவாரேயன்றி அவருக்கு மாறு செய்பவர் அல்ல. அதனால் நபி (ஸல்) அவர்களின் தொழுகை ''11ரக்அத்'' களாக இருந்ததின் காரணமாக அதைப் போன்றே மக்களுக்கும் தொழுவிக்குமாறு ஏவியது நபிகளாரை பின்பற்றியதாக அமைகின்றது. இந்த நான்கு உச்சமான நம்பிக்கை கொண்ட அறிவிப்பாளர்களின் செய்திக்கு மாற்றமாக ஒருவர் ''13ரக்அத்'' கள் என்றும் மற்றவர் ''21ரக்அத்''கள் என்றும் அறிவித்துள்ளனர்.

''13ரக்அத்'' கள் எனக் குறிப்பிட் ஐந்தாவதுவர்  இவர் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் : ''இவரின் நம்பத்தன்மையில் அறிஞர்கள் குறைகண்டு விமர்சித்துள்ளார்கள்''  இவர் ''13ரக்அத்'' களை தொழுவிக்குமாறு உமர் (ரழி) அவர்கள் ஏவினார்கள் என ''முஹம்மத் இப்னு யூசுப்'' சொன்னதாக அறிவிக்கின்றார். அதனால் இந்தப் '13ரக்அத்'' கள் என்பது மிக நம்பகமானவர்களின் செய்திக்கு மாற்றமாக வந்ததின் காரணமாக இந்த அறிவிப்பு மேலே விவரிக்கப்பட்ட ''ஷாத்'' என்ற பலவீனமாக ஹதீஸின் வகையில் சேர்க்கப்பட்டு மறுக்கப்பட்டுவிடும்.

21 ரக்அத் என அறிவிக்கும் ஆறாமவர் தாவுத் இப்னு கைஸ். இவர் உறுதியானவராக இருந்தாலும் அவரிடமிருந்த அறிவித்தவர் இமாம் அப்துர்ரஸ்ஸாக் ஆகும்.  இவருடைய இறுதிக்கட்டத்தில் இவரின் மனனத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுவிட்டது. இவர் தனது கிரந்தத்தில் ''21 ரக்அத்'' தொழுவிக்குமாறு உமர் (ரழி) அவர்கள் கட்டளை இட்டதாக பதிவு செய்த செய்தி மிக நம்பகரமான உச்ச நிலையிலுள்ள அறிவிப்பாளர்களின் ''11ரக்அத்'' என்ற கூற்றிற்கு முரணானதாகும்.

எனவே, மிக நம்பகரமான மூன்று அறிவிப்பாளர்களின் ''11 ரக்அத்'' என்ற செய்திக்கு மாற்றமாக குறைபாடு உள்ள தனிநபரின் இச்செய்திவருவதால் இது ''ஷாத்'' என்ற பலவீனமான ஹதிஸின் அடிப்படையில் மறுக்கப்பட்டதாகும்.  இந்த மாற்றமான அறிவிப்புக்கு மற்றுமொரு காரணமும் கூறப்படுகின்றது. அதாவது   இமாம் அப்துர்ரஸ்ஸாக்கின் கிரந்தத்தில் நோன்பின் பாடத்தை அறிவித்த அறிவிப்பாளர் ''இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம்'' என்பவர் ஆகும். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பல விமர்சனங்களுக்குட்பட்டு நம்பகத்தன்மை விடயத்தில் குறை கூறப்பட்டவர்.  அது மட்டுமன்றி ''இமாம் அப்துர்ரசாக்''கைத் தொட்டும் பல முரண்பாடான செய்திகளை நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்தார்'' என்று இனங்காணப்பட்டவர்.

அதனால் ''இருபத்தியொரு ரக்அத்'' என இங்கு குறிப்பிட்டதற்கு இவரும் காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. எனவே நியாயமான பார்வையுள்ள எந்தவொரு நபரும், துல்லியமாக ஆய்வு செய்யப்பட்ட இத்தரவுகளை முன்வைத்துப் பார்க்கின்ற போது ''உமர் (ரழி) அவர்கள் மக்களுக்ககு தொழுவிக்குமாறு ஏவியது, நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகைக்கும் நேர்பாடான ''11 ரக்அத்'' கள் தான் என மிகத் தெளிவாக விளங்கும்.

மேலும் ''23 ரக்அத்'' இரவுத் தொழுகை தொழுகின்றவர்கள் காட்டுகின்ற அந்த ஆதாரம் பலவீனமானதுதான் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இன்னும் ''உத்தமமான ஸஹாபி'' உமர் (ரழி) அவர்கள் நபிகளாருக்கு மாறு செய்தார்கள் என்று பலவீனமான அறிவிப்புக்களை வைத்து அவர் மீது குற்றம் சுமத்துவதிலிருந்து நாம் எம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.  அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக..

''20 ரக்அத்'' கள் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம்
''ஸாயிப் இப்னு யசீதை''த் தொட்டும் ''யஸீத் இப்னு ஹூஸைபா'' என்பவர் அறிவிக்கிறார். உமர் (ரழி) அவர்களின் காலத்திலே ரமழானில் (மக்கள்) ''20 ரக்அத்'' கள் தொழுபவர்களாக இருந்தனர். இதனை இமாம் பிர்யாபீ ''அஸ் - ஸியாம்'' என்ற தனது கிரந்தத்திலும் இமாம் பைஹகீ, அஸ் - ஸூனன்'' என்ற தனது கிரந்தத்திலும் குறிப்பிட்டுள்ளனர். இதனையும் ஒரு முக்கியமான ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். என்றாலும் இந்த ஆதாரம் இரண்டு வகையில் மறுக்கப்பட்டுவிடும்.

முதலாவது மறுப்பு இந்த செய்தியை ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற ஸஹாபியைத் தொட்டும் அறிவிக்கக்கூடிய ''யசீத் இப்னு ஹூஸைபா'' என்பவர் உறுதியான அறிவிப்பாளராக இருந்தாலும் அவரைப்பற்றி இமாம் அஹ்மத் ஒரு சந்தர்ப்பத்தில் விமர்சித்தும் உள்ளார்.  அதாவது ''மிக உறுதியான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாகவும் சில வேளைகளில் செய்திகளை சொல்லிவிடக் கூடியவர்'' என்பதற்குரிய வார்த்தையை குறிப்பிட்டுள்ளார். மேலும் ''உமர் (ரழி) அவர்கள் ''11 ரக்அத்'' களை தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள் என்ற செய்தியை ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற ஸஹாபியிடமிருந்து செவியுற்ற அவரின் பேரரான ''முஹம்மத் இப்னு யூசுப்'' என்பவரை விட இவர் நம்பகத்தன்மையில் சற்று குறைவானவர். அதாவது ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற இந்த ஸஹாபியிடமிருந்து இரண்டு பேர் செவியுறுகிறார்கள்.

01. முஹம்மத் இப்னு யூசுப் : இவர் மிக மிக உறுதியான நம்பகமான அறிவிப்பாள்ர் என இமாம்களால் கூறப்பட்டவர் (இவர்தான் ''11 ரக்அத்'' கள் எனக் குறிப்பிட்டவர்)
 
02. யசீத் இப்னு ஹூஸைன்பா : ''20 ரக்அத்'' கள் எனக் குறிப்பிட்டவர், இவரும் உறுதியானவர் ஆனால் முதலாம் நபரை விட உறுதி குறைந்தவர். 
 
எனவே இவ்விருவரும் முரண்படும் போது, ஹதீஸ்கலை விதியின் படி முதலாம் நபரின் அறிவிப்பே முற்படுத்தப்பட்டு ஏற்கப்பட வேண்டும். இரண்டாம் நபரின் அறிவிப்பு ஆரம்பத்தில் விபரித்த ளயீபான ஹதீஸின் வகையில் ஒன்றான ''ஷாத்'' என்ற வகையின் சட்டத்தின்படி பலவீனமாகக் கருதப்பட்டு மறுக்கப்பட்டுவிடும்
 
இரண்டாம் மறுப்பு 
ஒரு வாதத்திற்கு ''இந்த செய்தி உண்மையானதுதான்'' என்று வைத்துக் கொண்டாலும் ''20ரக்அத்''களைத் தொழுவது ''ஸூன்னத்'' என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது. ஏனென்றால் இங்கு குறிப்பிடுவது உமர் (ரழி) காலத்தில் வாழ்ந்த சில மக்கள் ''20ரக்அத்''கள் தொழுத செய்தியாகும். மக்களின் நடவடிக்கை ஸூன்னாவாக ஆக முடியாது. இதனால் தான் உமர் (ரழி) அவர்கள் நபியவர்களைப் பின்பற்றி மக்களுக்கு ''11ரக்அத்'' களைத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுக்கு நேர்பாடாக மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரழி) அவர்கள் கட்டளையிட்ட அந்த ''11ரக்அத்'' களைத்  ஸூன்னாவாக எடுக்க வேண்டும்.

நபிகளாரின் வழிமுறைக்கும் உமர் (ரழி) அவர்களின் கட்டளைக்கும் மாற்றமாக மக்கள் ''20ரக்அத்'' கள் தொழுது வந்த செய்தி'' யை ஒரு போதும் ஆதாரமாகக் கொண்டு செயற்பட முடியாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இவைகள் தவிர இன்னும் சில செய்திகள் வந்துள்ளன அவையனைத்தும் பலவீனமானவையாகும்.

01. உமர் (ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் ''23ரக்அத்'' கள் தொழுதார்கள் என ''யசீத் இப்னு ரூமான்'' என்பவர் அறிவிக்கின்றார். இந்த செய்தி இமாம் மாலிகின் ''முஅத்தா'' என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இந்த ''யசீத்'' உமர் (ரழி) அவர்களின் இறப்பின் பின்னரே பிறந்தவர் என்பதால் அவருடைய செய்தியும் நம்பமுடியாததாகும்.

02. அலி (ரழி) காலத்தில் மக்கள் ''20ரக்அத்'' கள் தொழுதார்கள் என்று இரண்டு அறிவிப்பாளர்கள் வரிசையூடாக செய்திகள் பதியப்பட்டுள்ளது. ஓர் அறிவிப்பாளர் வரிசையில் ''அபுல் ஹஸ்னா'' என்ற ஒரு அறிவிப்பாளர் இடம்பெறுகின்றார். இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் விலாசமோ நம்பகத்தன்மையோ சொல்லப்படாத அறிவிப்பாளர்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இரண்டாம் அறிவிப்பாளர் வரிசையில் ''ஹம்மாத் இப்னு சுஐப்'' என்ற ளயீபான பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இதனால் இவர் இடம் பெறும் அறிவிப்பும் மறுக்கப்பட்டதாகும்.
எனவே ''குலபாஉர் ராசீதீன்கள் காலத்தில் மக்கள் ''23 ரக்அத்''கள் தொழுது வந்தாலும் அவர்கள் அதை அங்கீகரித்ததினாலும் நாங்களும் தொழுகின்றோம் என்று வாதிடக் கூடியவர்களிடம் அதனை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு சரியான ஆதாரங்களும் இல்லை. இன்னும், அபூபக்கர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகிய இரு நேர்வழி பெற்ற கலீபாகக்களைத் தொட்டும் இந்த விடயத்தில் சரியான செய்திகள் எதுவும் பதியப்படவில்லை.

இறுதியாக உமர் (ரழி) அவர்களைத் தொட்டும் வந்த செய்தியின் உண்மை நிலைபற்றி வாசகர்களான நீங்கள் புரிந்திருப்பீர்கள். எனவே ரமழான் கால இராவணக்கம் ''11ரக்அத்'' களாகவே இருப்பதினால் அதனையே நாம் கடைப்பிடிப்போம்.

மேலும் அதற்கு மாற்றமாக ''(நேர்வழி பெற்ற கலீபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரழியல்லாஹூ அன்ஹூ) போன்றவர்கள் ''23 ரக்அத்'' கள் தொழுதார்கள் அல்லது தொழக்கட்டளையிட்டார்கள் என்ற தவறான வாதத்தை இதன் பின்னர் தவிர்ந்து கொள்வோம்.
''அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக''
 
                                                                                                                   மௌலவி அன்சார் (தப்லீகி)
மேலும்பார்க்க >
                     * நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்ட... 
                     * ரமழான் காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு.(ஹைளு)
                     * தராவீஹ் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?
                     * ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூ...
                     * மகத்துவமிக்க இரவில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள்...
                     * ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்...!! 
 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget