பெருங்குற்றங்கள் குறைய துக்குத்தண்டனை தீர்வாகுமா.?

பல சிறைச்சாலைகள் பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவெ இருக்கின்றவர்களும் உண்டு , அவர்களின் வழக்குகள் காலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டும் உள்ளது. இதுவும் அநீதியாகாதா?
இது போன்ற விஷயங்கள் தொடருகிற சூழ்நிலையில் இஸ்லாம் சொல்லும் மகத்தான தீர்வு என்ன?
“ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு” அல்குர்ஆன் : 2:178
மேற்காணும் வசனங்கள் போன்ற இன்னும் சில வசனங்கள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதை மேலோட்டமாக காணும் சிலர் மனிதாபிமானவை அல்ல, கொடுரமானது என நினைப்பர். ஆனால் உள்நோக்கமில்லாமல் நடுநிலையாக யோசிக்கின்ற எவரும் இது மனித சமூகத்திற்கு நன்மையானது என விளங்குவர், துக்குத்தண்டனை கூடாது என வாதிடுபவர்களோ போன உயிர் மீண்டும் வருமா? என்ற வார்த்தையை முன்வைக்கின்றனர்.

இதே கண்ணோட்டத்தில் நாம் பார்த்தால் கற்பழித்தவனுக்கு துக்குத்தண்டனை கொடுப்பதால் கற்பு மீண்டும் வருவதில்லை, இழந்ததை மீட்பது பாதிக்கப்பட்டவனுக்கு நோக்கமல்ல, மாறாக அவன் பாதித்த காரியத்தில் அவனுக்கு மன அமைதிபெறவும், பிற மக்களுக்கு பாடமாக அமையவும் இஸ்லாம் சொல்லும் நீதமே மகத்தான தீர்வாகும்.
இந்த சட்டத்தின் நோக்கம் குற்றவாளி தப்பித்துச்செல்ல கூடாது, தண்டனை பெற வேண்டும் என்பதே! ஆனால் தவறை முறையாக நிருபிக்காமல் அப்சல் குரு, கசாப் போன்றவர்களை துக்குத்தண்டனை கொடுக்கிறோம் என்று அவசர அவசரத்தோடு அநீதமாக தண்டனை நிறைவேற்றுவதும் கண்டிக்கத்தக்கது.
இஸ்லாம் சொல்லுகிற அடிப்படையில் தண்டனை நிறைவேற்றுவதை பார்க்கும் எவரும் தவறு செய்ய துணிய மாட்டார். தவறு செய்தவன் மீண்டும் அந்த தவறை செய்ய முடிவதில்லை அல்லது அச்சம் ஏற்படுகிறது.
சுதந்திரமானவனாலும், அடிமையானாலும், பெண்ணானாலும் சரி கொலை செய்தவனை பழி வாங்குவது கூடும். சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் மன்னிக்கப்படுமானால் இதற்காக நிர்ணயிக்கப் பெறும் நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்த வேண்டும். மாறாக ஒருவன் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு கால சூழல், எதிரான பொய் சாட்சிகளை ஆதாரம் காட்டி திசை திருப்ப முடியாது. இஸ்லாம் சொல்லும் தீர்வின் மூலம் எளிதாகவும், விரைவாகவும் முடிவு காண முடியும்.
எல்லா இடங்களிலும் சிறைச்சாலைகளை அதிகப்படுத்தி, சொகுசு திட்டத்தோடு குற்றாவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கூடாது என்று முடிவெடுத்தால் குற்றங்களை எங்கணம் குறைப்பது? உச்சநீதிமன்றமே தவறை உண்மைபடுத்தி அதே உச்சநீதிமன்றமே துக்குத்தண்டனையை நிறுத்தி, ஆயுள் தண்டனையாக குறாத்து விடுதலையும் செய்கின்றது. குற்றவாளி தண்டனை பெறாத போது அந்த குற்றவாளிக்கு வாழ்த்துகளும் குவிகின்றது. இந்த நிலைபாடு குற்றம் செய்வதற்கு வழிவாசல்களை திறந்து தான் வைக்கின்றன.
இஸ்லாம் சொல்லும் குற்றவியல் தண்டனைச் சட்டம் நிறைவேற்ற படவில்லையென்றால்
  • பதினைந்து இருபது வருடங்கள் அரசாங்க செலவில் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறான்
  • ஒரு நபரை கொலை செய்தவன், பத்து கொலைகளை துணிச்சலோடு செய்கிறான், நாளிதழில் “10 கொலை செய்தவன் கைது” என்று தலைப்புச்செய்தி வருகிறது, (10 கொலையும் ஒரே நேரத்தில் செய்யவில்லை).
  • அடைக்கப்படும் சிறைகளில் பல காலம் தங்குவதால் கூட்டாக திட்டமிட்டு வெளியே வந்து மேலும் பல தவறுகளை செய்கிறான்.
  • மூன்று வேளை உணவு, ஆடை, உறக்கம் இதுபோல எண்ணற்ற வசதிகள் குற்றவாளிகளுக்கு செய்யப்படுகிறது.
  • மருத்துவ வசதி, பொழுதுபோக்கு இப்படி இருக்கும் போது “35 முறை சிறைச்சென்றவர் மீண்டும் கைது” என்கிற வாசகம் ஏன் நாளிதழில் இடம்பெறாது?
  • சில மாதங்களோ, வருடங்களோ தான் தண்டனை என்று இருக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்கள் சீர் தூக்கி பார்க்கப்படுவதில்லை
  • தண்டனைகள் முறையாக நிறைவேற்றப்படாததால் குற்றவாளி விடுதலை அடைந்த பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளவர் குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் போதே கொலை செய்து சர்வசாதாரணமாக பாதிக்கப்பட்டவரே குற்றவாளியாக மாறு அவல நிலை நீடிக்கின்றது.
  • இஸ்லாத்தின் தண்டனைச்சட்டங்களை பின்பற்றாத அரசாங்கத்தின் கீழ் உள்ள மக்களின் உயிர்களை, கற்புகளை, உடமைகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலை தான் அரசாங்கத்திற்கு ஏற்படும்.
இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதில் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால் எந்த மக்களிடம் சொத்தையும், கற்பையும் திருடுகிறானோ, எந்த மக்களை கொலை செய்கிறானோ அவர்களின் வரி பணத்திலேயே குற்றவாளிகளின் உடம்புகள் வளர்க்கப்படுகிறது.
அவர்களுக்காக அவர்களுடைய வேதமாகிய தவ்றாத்தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: “உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயத்திற்கும் (காயமாக) நிச்சயமாக பழிவாங்கப்படும்” என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) அறமாக விட்டுவிட்டால் அது அவருடைய தீய செயலுக்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்! அல்குர்ஆன் : 5:45
அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் : 2:179
இந்த இரண்டு வசனங்களையும் சிந்திக்கும் போது குற்றவாளிகளை தட்டி தடவி கொடுப்பதை விட்டு விட்டு இஸ்லாம் சொல்லுகிற படி தண்டனை நிறைவேற்றப்பட்டால் உலகத்தில் பெருங்குற்றங்கள் சமுதாயத்திலிருந்து விடுபடும்!
                                                                                                            மெளலவி மில்லத் பிர்தௌசி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget