ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரம் எப்போது?

தற்பொழுது எமது பிரதேசத்தில் சொல்லப்படுகின்ற ஸுப்ஹுத் தொழுகைக்கான அதான் அத்தொழுகையின் ஆரம்பத்தை தீர்மானிக்கின்ற‌ அதான் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.ஏனனில் ஸுப்ஹின் ஆரம்ப நேரத்தை விடவும் சுமார் 25 அல்லது 20 நிமிடங்களுக்கு முன் இவ்வதான் சொல்லப்படுகிறது என்பதே உண்மையாகும். 
இதன் உண்மை நிலை அறியாமல் எம்மில் பலர் ஸுப்ஹின் அதானைத் தொடர்ந்து 5 நிமிடங்களின் பின் அத்தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.குறிப்பாக றமழான் காலத்தில் இவ்வாறு நடைபெறுவதைக் காணலாம். ஏனய காலங்களில் ஸுப்ஹு அதான் சொல்லப்பட்டு 30 நிடங்களின் பின் சரியாக ஸுப்ஹின் ஆரம்ப நேரத்தில் தொழும் எமது சகோதரர்கள் றமழான் காலத்தில் 5 நிமிடங்களின் பின் தொழுவதைப் பார்க்கிறோம்.
இவ்வாறு தற்பொழுது எமது பிரதேசத்தில் சொல்லப்படுகின்ற ஸுப்ஹுத் தொழுகைக்கான அதானைத் கவண‌த்திற் கொண்டு ஆரம்ப நேரத்தை முடிவு செய்வ‌தால் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன.
(1.றமழான் காலங்களில் அதிகமான மஸ்ஜித்களில் ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரம் வருவதற்குமுன் அத்தொழுகையை நிறைவேற்றல். ஒரு தொழுகை நிறைவேற அத்தொழுகையின் நேரம் நுழைந்திருப்பது அவசியமாகும்.
(2.நோயாளிகள்,வயது முதிந்தோர்,பஜ்ர் நேரம் வரைக்கும் விழித்திருந்தோர் ஸுப்ஹுடைய அதான் சொல்லப்பட்ட உடனேயே தமது இடங்களில் ஆரம்ப நேரம் வருவதற்கு முன் அத்தொழுகையை நிறைவேற்றல்.
(3.சகோதரிகள் குறித்த நேரத்தில் சொல்லப்படும் அதானைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் தமது வீடுகளில் ஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றல்.
(4.ஸுப்ஹுடைய அதான் சொல்லப்பட்ட மறுநிமிடமே அதிகமான சகோதர,சகோதரிகள் பஜ்ருடைய ஸுன்னத் தொழுகையை தொழுகின்றனர். ஆரம்ப நேரம் வருவதற்கு முன் தொழுவதால் பஜ்ருடைய ஸுன்னத் தொழுகையின் நன்மையை இழக்கும் நிலை உருவாகுதல்.
(5.நடைமுறையில் உள்ள ஸுப்ஹுடைய அதானைக் கவண‌த்திற் கொண்டு ஸஹர் செய்வதை முற்படுத்தல். நபிகளார் ஸஹரைப் பிற்படுத்தி உள்ளதை ஹதீஸ்களில் காணலாம்.அழ்ழாஹ்வின் தூதரின் ஸஹருக்கும் ஸுப்ஹுத் தொழுகைகும் இடையில் சுமார் 50 வஸனங்கள் ஓதும் அளவுகு இடைவெளி இருக்கும் என்பது ஹதீஸ்.
(6. நடைமுறையில் உள்ள ஸுப்ஹுடைய அதானைக் கவண‌த்திற் கொண்டு ஸஹர் சாப்பாட்டை நிறுத்திவிடல். அழ்ழாஹ் சாப்பிடுவதற்கு அனுமதித்த நேரத்தை தாமாக தடுத்துக் கொள்வதால் அதான் கூறும் நேரத்தில் விழித்தவர் ஸஹர் செய்யாமல் தன்னால் நோன்பை கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்து நோன்பை நோற்காது விடுவதைக் காணலாம்.
(7.நடைமுறையில் உள்ள ஸுப்ஹுடைய அதானைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் மாதவிடாய்,பிரசவத்தீட்டு சுத்தமானால்கூட அதான் சொல்லப்பட்டு விட்டது பஜ்ரு உதயமாகி விட்டது என்று என்னி பர்ளான நோன்பை விட்டு விடல். இவ்வாறு பல விபரீதங்கள் உருவாகுவதைக் காணலாம்.
எனவே தற்பொழுது ஸுப்ஹுத் தொழுகைக்காக சொல்லப்படும் அதான் அத்தொழுகையின் ஆரம்ப நேரத்தைத் தீர்மானிக்கும் அதானா? என்பதை தெளிவுபடுத்துவதே எமது நோக்கமாகும். பொறுமையோடு இதை வாசித்து நீங்கள் தெளிவு பெற வேண்டும்.
ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரம் குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் இரண்டுவிதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு சாரார் சற்று வெளிச்சம் கழந்த இரவின் கடைசி இருல் எனக் கூறுகின்றனர். மற்றொரு சாரார் ஸுப்ஹின் வெளிச்சம் தோன்றியபின் எனக் கூறுகின்றனர். இவ்வாறு இரு கருத்துக்கள் நிலவக் காரணம் குறித்த விடயம் சம்பந்தமாக இடம்பெறும் இருவிதமான நபிகளாரின் ஆதாரபூர்வமான செய்திகளேயாகும்.
ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரம் இரவின் இறுதி சற்று வெளிச்சம் கலந்த இருள்தான் என்பதற்கான‌ ஆதாரங்கள்.
أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، قَالَتْ: «كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ»
(1ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுது முடித்ததும் பெண்கள் போர்வைகளால் போர்த்திக் கொண்டு (வீடுகளுக்குப்) புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள். ) 
புஹாரி 867. (முஸ்லிம் 1134.)
இந்த செய்தியி நபி ஸல் அவர்கள் , ஸுப்ஹுத் தொழுகையை அதன் ஆரம்ப நேரமான இரவின் கடைசி இருளில் தொழுதுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. எனினும் ஆயிஷா(ரழி) அவர்கள் குறிப்பிடும் காரணம் தொடர்பாக இரண்டு கருத்துக்கள் காணப்படுகின்றன.
1) இருள் காரணம்
2) தங்களை போர்வைகளால் மறைத்திருந்தது காரணம்.
முஸ்னத் அபீ யஃலா என்ற கிரந்தத்தில் ஆயிஷா(ரலி) கூறும் செய்தி பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
أَنَّ عَائِشَةَ قَالَتْ: «لَوْ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النِّسَاءِ مَا نَرَى لَمَنَعَهُنَّ مِنَ الْمَسَاجِدِ كَمَا مَنَعَتْ بَنُو إِسْرَائِيلَ نِسَاءَهَا، لَقَدْ رَأَيْتُنَا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ فِي مُرُوطِنَا، وَنَنْصَرِفُ وَمَا يَعْرِفُ بَعْضُنَا وُجُوهَ بَعْضٍ»(مسند ابي يعلى)
ஆயிஷா(ரலி) கூறினார்கள். நாங்கள் தற்போது பார்ப்பது போன்று நபியவர்கள் பெண்களைப் பார்த்திருந்தால் பனூ இஸ்ரவேளர்கள் தங்களது பெண்களை தடுத்தது போன்று பள்ளிவாயளுக்கு வராமல் தடுத்திருப்பார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர்வைகளால் போர்த்திக் கொண்டு ஸுபுஹ் தொழுகையைத் தொழுவோம். தொழுதுவிட்டு திரும்பும் போது எங்களில் சிலர் சிலருடைய முகங்களை அறியமாட்டோம்.
இந்த செய்தியில் இருல் என்ற காரணம் சொல்லப்பட்வில்லை என்பதை கவ‌ணத்திற் கொண்டு இரண்டாவது காரணத்தையும் சிலர் சரிகண்டுள்ளனர்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ قَرِيبًا مِنْ خَيْبَرَ بِغَلَسٍ، ثُمَّ قَالَ: ” اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ {فَسَاءَ صَبَاحُ المُنْذَرِينَ}

(2. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே ஸுப்ஹுத் தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். பிறகு ‘அல்லாஹ் மிகப் பெரியவன்! கைபர் வீழ்ந்தது! ஒரு கூட்டத்தினரின் மீது நாம் தாக்குதல் தொடுத்தால் அவர்களின் முடிவு கெட்டதாக அமையும்!” என்று கூறினார்கள். புஹாரி 947.
عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو هُوَ ابْنُ الحَسَنِ بْنِ عَلِيٍّ، قَالَ: سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنْ صَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالهَاجِرَةِ، وَالعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ، وَالمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ، وَإِذَا قَلُّوا أَخَّرَ، وَالصُّبْحَ بِغَلَسٍ»
(3 முஹம்மத் இப்னு அம்ர் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையை நண்பகலிலும் அஸர்த் தொழுகையைச் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போதும் மக்ரிப் தொழுகையைச் சூரியன் மறைந்தவுடனும் தொழுவார்கள். மக்கள் கூடிவிட்டால் இஷாவை முன்னேரத்திலும் மக்கள் குறைவாக இருந்தால் தாமதப் படுத்தியும் தொழுவார்கள். ஸுப்ஹை இருளில் தொழுவார்கள்’ என விடையளித்தார்கள்.(புஹாரி 565.)
குறித்த செய்திகளில் ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரமான இரவின் இறுதிப் பகுதியின் இருளில் நபியவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதை அறியலாம்.
ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரம் பஜ்ருடைய வெளிச்சம் தோன்றியபின் தான் என்பதற்கான‌ ஆதாரங்கள்.
عَنْ أَبِي بَرْزَةَ، ” كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ، وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى المِائَةِ، وَيُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَالعَصْرَ وَأَحَدُنَا يَذْهَبُ إِلَى أَقْصَى المَدِينَةِ، رَجَعَ وَالشَّمْسُ حَيَّةٌ

(1அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார். எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது லுஹர் தொழுபவர்களாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிரிடன் (அதாவது ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும். (புஹாரி 541.)
இதே அறிவிப்பு முஸ்லிமில் 1139 வது இலக்கத்தில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றிலொரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பார்கள். ஃபஜ்ர் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள். தொழுது முடித்துத் திரும்பிச்செல்லும் போது எங்களில் ஒருவர் மற்றவரின் முகத்தை அறிந்து கொள்வார்.
 ط
عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ: «صَلِّ مَعَنَا هَذَيْنِ – يَعْنِي الْيَوْمَيْنِ – فَلَمَّا زَالَتِ الشَّمْسُ أَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ أَمَرَهُ، فَأَقَامَ الظُّهْرَ، ثُمَّ أَمَرَهُ، فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرَ، فَلَمَّا أَنْ كَانَ الْيَوْمُ الثَّانِي أَمَرَهُ فَأَبْرَدَ بِالظُّهْرِ، فَأَبْرَدَ بِهَا، فَأَنْعَمَ أَنْ يُبْرِدَ بِهَا، وَصَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ أَخَّرَهَا فَوْقَ الَّذِي كَانَ، وَصَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ، وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، وَصَلَّى الْفَجْرَ فَأَسْفَرَ بِهَا»، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: «وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ»
(2.புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது; நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “நம்முடன் இவ்விரு நாட்கள் தொழுங்கள்!” என்று கூறினார்கள். (அன்றைய தினம்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது, பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கும் பிறகு இகாமத்தும்) சொல்லுமாறு உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.

பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். அப்போது சூரியன் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் (வானில்) தெரிந்தது. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் மறையும்போது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.
பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் செம்மேகம் மறையும்போது இஷாத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (ஃபஜ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் வைகறை புலரும்போது ஃபஜ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.
இரண்டாம் நாள் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் வெப்பம் தணிந்த பின் லுஹ்ர் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் வெப்பம் தணிந்த பின், நன்கு வெப்பம் குறைந்திருந்த வேளையில் இகாமத் சொன்னார்கள். பின்னர் சூரியன் உயர்ந்திருக்கவே அஸ்ர் தொழுதார்கள். முந்திய நாளைவிடச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். 

செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுதார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்ற பின் இஷாத் தொழுதார்கள். நன்கு வெளிச்சம் வந்த பின் (சூரிய உதயத்துக்கு முன்) ஃபஜ்ர் தொழுதார்கள். பிறகு “தொழுகை நேரம் குறித்து என்னிடம் வினவியவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “நான் (இதோ இருக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் (இரு தினங்களாகக்) கண்ட நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம்தான் உங்கள் (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்” என்று கூறினார்கள்.(முஸ்லிம்1078.)
حَفْصَةُ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَضَاءَ لَهُ الْفَجْرُ، صَلَّى رَكْعَتَيْنِ»(مسلم)
(3ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது; நபி (ஸல்) அவர்கள் வைகறை (ஃபஜ்ர்) வெளிச்சம் வந்த பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.(முஸ்லிம்1307.)
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَمْنَعَنَّ أَحَدًا مِنْكُمْ أَذَانُ بِلَالٍ – أَوْ قَالَ نِدَاءُ بِلَالٍ – مِنْ سُحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ قَالَ يُنَادِي – بِلَيْلٍ، لِيَرْجِعَ قَائِمَكُمْ وَيُوقِظَ نَائِمَكُمْ» وَقَالَ: «لَيْسَ أَنْ يَقُولَ هَكَذَا وَهَكَذَا – وَصَوَّبَ يَدَهُ وَرَفَعَهَا – حَتَّى يَقُولَ هَكَذَا» – وَفَرَّجَ بَيْنَ إِصْبَعَيْهِ
(4அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (அல்லது பிலாலின் அழைப்பு) அவரைத் தடுத்துவிடவேண்டாம். உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் திரும்புவதற்காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காவுமே பிலால் “அறிவிப்புச் செய்கிறார்” அல்லது “அழைக்கிறார்”.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்;
இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கையைக் கீழே தாழ்த்திப் பின்னர் மேலே உயர்த்திக் காட்டி, இவ்வாறு இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்) அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கைவிரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு (அடிவானில் நாலா பாகமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்) என்று கூறினார்கள்.(முஸ்லிம்1994.)
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاءِ – وَهِيَ الَّتِي يَدْعُو النَّاسُ الْعَتَمَةَ – إِلَى الْفَجْرِ، إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُسَلِّمُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ صَلَاةِ الْفَجْرِ، وَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ، وَجَاءَهُ الْمُؤَذِّنُ، قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ، حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلْإِقَامَةِ».
(5.நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (“அல்அத்தமா” என மக்கள் அழைக்கும்) இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்; ஒவ்வோர் இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் சலாம் கொடுப்பார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்.

தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் தொழுகைக்கு அறிவிப்புச் செய்து முடித்து, வைகறை வெளிச்சம் பளிச்சிட்டிருக்க, (தம்மைத் தொழுகைக்கு அழைப்பதற்காக) அறிவிப்பாளர் வரும் போது எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்; பிறகு ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக (தம்மை அழைக்க) அறிவிப்பாளர் வரும்வரை வலப் பக்கத்தின் மீது சாய்ந்து படுத்திருப்பார்கள். (முஸ்லிம்1340.)
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْفِرُوا بِالْفَجْرِ فَإِنَّهُ أَعْظَمُ لِلْأَجْرِ»
(6 ராபிஃ பின் ஹதீஜ் அறிவிக்கிறார்கள். நபியவர்கள் பஜ்ர் தொழுகையை வெளிச்சமாக்குங்கள் ஏனனில் அது கூலியால் வளுப்பமானதாகும். எனக் கூறினார்கள். (திர்மிதி,அபூதாவுத்)
மேற்குறித்த செய்திகளில் ஸுப்ஹுடை ஆரம்ப நேரமான பஜ்ருடைய வெளிச்சம் தோன்றியபின் நபியவர்கள் தொழுள்ளார்கள் என்பதை அறியலாம்.
இவ்வாறு ஆதாரபூர்வமான இரண்டு விதமான அறிவிப்புக்கள் இடம்பெரும் போது ஒன்றை விட்டு ஒன்றை எடுக்காமல் இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும். அறிஞர்கள் குறித்த விடயத்தில் அவ்வாறே ஹதீஸ்கள் அனைத்தையும் ஒன்றினைத்து முடிவு கண்டுள்ளனர்.
அந்த முடிவு என்ன என்பதை அறிவதற்குமுன் இருட்டில் தொழுதார்கள் என்ற செய்திகள் அனைத்திலும் இடம்பெறும் “அல் கலஸ்” என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் என்ன என்பதை அறபு அகராதிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனனில் ஸுப்ஹுடை ஆரம்ப நேரம் இரவின் இறுதி இருள்தான் எனக் கூறுவோர் குறித்த ஹதீஸ்களில் இடம் பெறும் “அல் கலஸ்” என்ற சொல்லை எடுத்துக்காட்டி தற்பொழுது றமழானில் ஸுப்ஹுடைய ஆதான் கூறப்பட்டு 5 நிமிடங்களில் தொழப்படும் தொழுகை சரியான நேரத்தில்தான் தொழப்படுகிறது எனக் கூறுகின்றனர். இவ்வாறு “அல் கலஸ்” உடன் சம்பந்தப்பட்ட செய்திகளை எடுத்துக்காட்டி தமது வாதத்தை நிறுவ முற்படுவது தவறு என்பதே எமது நிலைப்பாடாகும்.
அல் கலஸ் என்ற சொல்லுக்கு அறபு அகராதிகள் கூறும் அர்த்தம்.
لسان العرب6/ 156))
جمال الدين ابن منظور الأنصاري الرويفعى الإفريقى (المتوفى: 711هـ)
الغلَس: ظُلْمَةُ آخِرِ اللَّيْلِ إِذا اخْتَلَطَتْ بِضَوءِ الصَّباح
ஹிஜ்ரி 711ல் மரணித்த இமாம் ஜமாலுத்தீன் இப்னு மன்ளூர் அல் அன்ஸாரி அவர்கள் தமது லிஸானுல் அறப் என்ற அகராதி நூலில் பாகம் 6 பக்கம் 156 இல் அல்கலஸ் என்றால் “காலை வெளிச்சம் கழந்த இரவின் கடைசி இருள்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
المعجم الوسيط (2/658 ))
الْغَلَس) ظلمَة آخر اللَّيْل إِذا اخْتلطت بضوء الصَّباح)
அல் முஃஜமுல் வஸீத் என்ற அகராதி நூலில் பாகம் 2 பக்கம் 658இல் “காலை வெளிச்சம் கலந்த இரவின் இறுதி) பகுதியின் (இருள்” என அந்நூலைத் தொகுத்த நான்கு முக்கிய அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
معجم اللغة العربية المعاصرة (2/1632 )
د أحمد مختار عبد الحميد عمر (المتوفى: 1424هـ
ظُلمة آخر الليل إذا اختلطت بضوء الصَّباح “قام لأداء صلاته في الغَلَس”
ஹிஜ்ரி 1424 இல் மரணித்த துக்தூர் அஹ்மத் முஹ்தார் அப்துல் ஹமீத் உமர் அவர்கள் தமது முஃஜமுல் லுகா அல் அரபிய்யா அல் முஆஸ்ரா எனும் நூலில் பாகம் 2 பக்கம் 1632இல் அல்கலஸ் என்றால் “காலை வெளிச்சம் கலந்த இரவின் இறுதி) பகுதியின்) இருள்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
النهاية في غريب الحديث والأثر (3/ 377)
ابن الأثير (المتوفى: 606هـ
الغَلَس: ظُلْمَةُ آخِرِ اللَّيْلِ إِذَا اخْتَلَطَتْ بِضَوْءِ الصَّبَاحِ.
ஹிஜ்ரி 606இல் மரணித்த இமாம் இஸ்ஸுத்தீன் இப்னுல் அதீர் அவர்கள் தமது அன்நிஹாயா பீ கரீபில் ஹதீதி வல் அதர் என்ற ஹதீஸ்களில் இடம்பெறும் சொல்லுகளுக்குரிய அர்த்தத்தைத் தெளிவு படுத்தும் அரபு அகராதி நூலில் பாகம் 3 பக்கம் 377இல் அல்கலஸ் என்றால் “காலை வெளிச்சம் கலந்த இரவின் கடைசி இருள்”எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
تاج العروس من جواهر القاموس (16/310 )
محمد بن محمد بن عبد الرزاق المرتضى الزبيدي (المتوفى: 1205هـ)
ظُلْمَةُ آخر اللَّيْل إِذا اخْتَلَطتْ بضَوْءِ الصَّبَاح
ஹிஜ்ரி 1205இல் மரணித்த இமாம் முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னு அப்துர் ரஸ்ஸாக் அல்முர்தலா அஸ்ஸுபைதி அவர்கள் தமது அகராதி நூலான தாஜுல் அரூஸ் மின் ஜவாஹிரில் காமூஸ் எனும் நூலில் பாகம் 16 பக்கம் 310இல் அல்கலஸ் என்றால் “காலை வெளிச்சம் கழந்த இரவின் கடைசி இருள்”எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
مقاييس اللغة (4/ 390)
أَحْمَدَ بْنِ فَارِسِ (المتوفى: 395هـ
الْغَلَسُ، وَذَلِكَ ظَلَامُ آخَرِ اللَّيْلِ
ஹிஜ்ரி 395இல் மரணித்த இமாம் அஹ்மத் இப்னுல் பாரிஸ் அவர்கள் தமது மகாயீஸுல் லுகா என்ற அரபு அகராதி நூலில் பாகம்4 பக்கம் 390 இல் அல்கலஸ் என்றால் ” இரவின் (இறுதிபகுதியின்) இருள்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
تهذيب اللغة (8/ 69))
أَبُو مَنْصُور مُحَمَّد بن أَحْمد بن طَلْحَة بن نوح بن الْأَزْهَر الأزهريّ
الغَلَسُ: أوَّلُ الصُّبْح الصادقِ الْمُنْتَشِر فِي الْآفَاق
தல்ஹதுப்னு நூஹ் இப்னுல் அஸ்ஹர் அல் அஸ்ஹரி அவர்கள் தமது தஹ்தீபுல் லுகா என்ற அகராதி நூலில் பாகம் 8 பக்கம் 69 இல் அல்கலஸ் என்றால் “அடிவானத்தில் வெளிச்சம் பரவுவது ஸுப்ஹின் ஆரம்பம்”எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
القاموس المحيط (ص: 561
مجد الدين محمد بن يعقوب الفيروزآبادي المتوفى سنة 817 هـ
الغلس، محركة: ظلمة آخر الليل
ஹிஜ்ரி 817இல் மரணித்த இமாம் மஜ்துத்தீன் முஹம்மத் இப்னு யஃகூப் அல் பய்ரூஸ் ஆபாதி அவர்கள் தமது அல் காமூஸுல் முஹீத் என்ற அகராதி நூலில் பக்கம் 561இல் அல்கலஸ் என்றால் ” இரவின் (இறுதிபகுதியின்) இருள்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேற்குறித்த அறபு அகராதிகளில் அல் கலஸ் என்ற சொல்லுக்கு “காலை வெளிச்சம் கலந்த இரவின் கடைசி இருள்”என்ற பொருல் உள்ளதைக் காணலாம்.
மேலும் பஜ்ர் என்ற சொல்லுக்கு காலை வெளிச்சம் என்பதே அர்த்தமாகும் ஹதீஸ்களில் பஜ்ர் என்ற வாசகம் இத்தொழுகையோடு அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளதை அவதானிக்களாம்.
பஜ்ர் என்ற சொல்லுக்கு காலை வெளிச்சம் என்றே அரபு அகராதிகளும் குறிப்பிடுகின்றன. லிஸானுல் அரப்,முஹ்தாருஸ் ஸிஹாஹ்,அல் காமூஸுல் முஹீத் போன்ற அகராதி நூட்களில் இதைக் காணலாம்.
فأما دخول وقت الصلاة بتبينه فلا خلاف فيه من أحد من الأمة) . المحلى لابن حزم (3/192)
இமாம் இப்னு ஹ்ஸ்ம் அவர்கள் தமது முஹல்லா பில் ஆதார் என்ற நூலில் பாகம் 3 பக்கம் 192இல் வெளிச்சம் தெளிவாகுவதன் மூலமே ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் ஆரம்பமாகிறது இதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது எனக் குறிப்பிடுகிறார்கள்.
وأول وقت الفجر إذا انشق الفجر: أي ظهور الضوء المنتشر، (الروضة الندية (1/71)

இமாம் சித்தீக் ஹஸன் ஹான் அவர்கள் தமது அர் ரவ்ழா அந்நதிய்யா என்ற நூலில் பாகம் 1 பக்கம் 71இல் பஜ்ருடைய ஆரம்பம் பரந்த அமைப்பில் வெளிச்சம் வெளியாகுவதாகும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
فإذا رأيت البياض ممتداً من الشمال إلى الجنوب فقد طلع الفجر ودخل وقت الصلاة ، أما قبل أن يتبين فلا تُصل الفجر). الشرح الممتع
அஷ்ஷைஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் அவர்கள் தமது அஷ்ஷறஹுல் மும்திஃ எனும் நூலில் வடக்கிருந்து தெற்கு நோக்கி நீண்டதாக வெளிச்சத்தை நீ பார்த்தால் பஜ்ர் உஅதயமாகி விட்டது மேலும் தொழுகை நேரமும் நுழைந்து விட்டது.அவ்வாறில்லையானால் (வெண்மை தெளிவாக இல்லையானால் பஜ்ர் தொழுகை தொழப்படக்கூடாது எனக் குறிப்பிடுகிறார்கள்.
لا ينبغي للإنسان في صلاة الفجر أن يبادر في إقامة الصلاة ، وليتأخر نحو ثلث ساعة أو (25) دقيقة حتى يتيقن أن الفجر قد حضر وقته). [شرح رياض الصالحين (3/216
மேலும் அஷ்ஷைஹ் அவர்கள் தமது ஷறஹு ரியாழிஸ் ஸாலிஹீன் எனும் நூலில் பாகம் 3 பக்கம் 261இல் ஒரு மனிதன் ஸுப்ஹுத் தொழுகைக்காக அவசரமாக இகாமத் சொல்லாமல் 20 அல்லது 25 நிடங்கள் சென்று பஜ்ர் உதயமாகியது உறுதியாகும் வரை பிற்படுத்தட்டும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
الـحافظ ابن حجر العسقلاني ، قال: (تنبيه): من البدع المنكرة ما أحدث في هذا الزمان من إيقاع الأذان الثاني قبل الفجر بنحو ثلث ساعة في رمضان [فتح الباري: ( 4/ 199)]
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் தமது புஹாரி விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் பாகம் 4பக்கம் 199இல் இக்காலத்தில் உருவாகியுள்ள வெறுக்கப்பட்ட பித் அத்தில் உள்ளதுதான் றமழானில் 20 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது அதானைக் கூறுவது எனக் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு பஜ்ருடைய நேரம் குறித்து அறபு அகராதிகளும்,அறிஞர்களும் மிகத் தெளிவாக கூறியுள்ளதைக் காணலாம்.
இன்று பெரும்பாலான நாடுகளில் ஸஊதியின் உம்முல் குரா கலண்டரை வைத்தே தொழுகை நேரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.குறித்த கலண்டரில் ஸுப்ஹுடைய அதான் 20‍‍_25 நிமிடங்களுக்கு முன் சொல்லப்படுவதாக வானியல் அறிஞர்கள் ஆய்வுகளின் பின் கூறியுள்ளனர்.அவர்களில் பிரதானமான அறிஞர்களாக
அத்துக்தூர் ஸுலைமான் இப்னு இப்றாஹீம் அத்தன்யான் கஸீமில் உள்ள குல்லியதுஸ் ஷரீஆவின் கற்பித்தல் குழுவின் உருப்பினர்.
அல் உஸ்தாத் அப்துல்லாஹ் இப்னு இப்றாஹீம் அத்துர்கி
அத்துக்தூர் முஹம்மத் அஹ்மத் ஸுலைமான் எகிப்திலுள்ள முக்கிய வானிலை ஆய்வால‌ளர். போன்றோரைக் குறிப்பிடலாம்.
எமது நாட்டிலும் உம்முல் குரா கலண்டரில் உள்ளது போன்று ஸுப்ஹுடைய அதான் சரியான பஜ்ருடைய நேரம் வருவதற்கு 20_25 நிமிடங்களுக்கு முன் கூறப்படுகிறது என்பதே உண்மையாகும். எமது கலண்டரில் ஷாபி மத்ஹபினருக்கு ஒரு தொழுகை நேரமும் ஹனபி மத்ஹபினருக்கு இன்னொரு தொழுகை நேரமும் போடப்பட்டுள்ளதைக் காணலாம்.
சூரிய உதயம் ஷாபி மத்ஹபினருக்கு ஒரு நேரமாகவும் ஹனபி மத்ஹபினருக்கு இன்னொரு நேரமாகவும் போடப்பட்டிருந்ததை நாம் யாரும் மறக்க முடியாது.ஒரே சூரியனின் உதயம் மத்ஹபின் அடிப்படையில் இரண்டு நேரம் உதிப்பதாக கூறப்பட்டுள்ளது சிரிப்புக்குறிய விடயமாகும். எமது கலண்டரில் இவ்வாறு பல தவருகள் காணப்படுகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
எனவே தற்போது எமது பகுதியில் சொல்லப்படும் அதான் ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரத்தை விட 20 அல்லது 25 நிமிடங்களுக்கு முன்பே சொல்லப்படுகிறது இந்த அதானைக் கவணத்திற் கொண்டு உடனடியாக எமது ஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றுவதைத் த‌விர்த்துக் கொள்ள வேண்டும்.
இருட்டில் தொழுதார்கள் என்ற செய்திகள் அனைத்திலும் இடம்பெறும் “அல் கலஸ்” என்ற சொல்லுக்கு “காலை வெளிச்சம் கல‌ந்த இரவின் கடைசி இருள்”என்பதே சரியான அர்த்தமாகும்.நாம் மேலே குறிப்பிட்ட செய்திகளில் ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரம் குறித்து இரண்டு விதமான அறிவிப்புக்கள் இடம் பெறுகின்றன. ஒன்று அல் கலஸ் “காலை வெளிச்சம் கலந்த இருள்”உடைய நேரம்.
இரண்டாவது அல் இஸ்பார் “பஜ்ருடைய வெளிச்சம் தோன்றியபின்”உடைய நேரம். ஆதாரபூர்வமான இரு விதமான‌ அறிவிப்புக்கள் இடம்பெரும் போது ஒன்றை விட்டு ஒன்றை எடுக்காமல் இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.குறித்த விடயம் தொடர்பாக அரிஞர்கள் அவ்வாறே இணைத்து முடிவு செய்துள்ளனர்.
ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்பிக்கும் போது இரவின் கடைசி இருளாகவும் முடிக்கும் போது வெளிச்சம் பரவத் தொடங்குவதாகவும் அமைய வேண்டும் என்பதே அம்முடிவாகும்.
இதையே பின்வரும் அரிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.
إعلام الموقعين عن رب العالمين (2/290 )
فَيَدْخُلُ فِيهَا مُغَلِّسًا وَيَخْرُجُ مِنْهَا مُسْفِرًا كَمَا كَانَ يَفْعَلُهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -؛ فَقَوْلُهُ مُوَافِقٌ لِفِعْلِهِ، لَا مُنَاقِضٌ لَهُ،
இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸி அவர்கள் தமது இஃலாமுல் முவக்கியீன் எனும் நூலில் பாகம் 2 பக்கம் 290இல் குறிப்பிட்டுள்ளார்கள்.
شرح معاني الآثار (1/ 184)
الدُّخُولُ فِي الْفَجْرِ فِي وَقْتِ التَّغْلِيسِ , وَالْخُرُوجُ مِنْهَا فِي وَقْتِ الْإِسْفَارِ , عَلَى مُوَافَقَةِ مَا رَوَيْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابِهِ. وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدِ بْنِ الْحَسَنِ رَحِمَهُمُ اللهُ تَعَالَى
ஹிஜ்ரி 321ல் மரணித்த இமாம் அபூ ஜஃபர் அத்தஹாவி அவர்கள் தமது ஷரஹு மஆனியல் ஆதார் எனும் நூலில் பாகம் 1 பக்கம் 184இல் குறிப்பிட்டுள்ளார்கள்.
إرواء الغليل في تخريج أحاديث منار السبيل (1/ 287)
وبالجمع بينها وبين هذا نستنتج أن السنة الدخول فى الغلس والخروج فى الإسفار ,
இமாம் நாஸிருத்தீன் அல் அல்பானி அவர்கள் தமது இர்வாஉல் கலீல் பீ தஹ்ரீஜி மனாரிஸ் ஸபீல் எனும் நூலில் பாகம் 1 பக்கம் 287இல் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் ஸைள‌ஈ,ஐனி போன்றோரும் இக்கருத்தை சரிகண்டுள்ளார்கள்.
இவ்வாறு இணைத்து விளங்க வேண்டும் எனக் கூறுவோர் அதற்கு சான்றாக இரண்டு செய்திகளை முன் வைக்கின்றனர்.
عَنْ أَبِي صَدَقَةَ، مَوْلَى أَنَسٍ قَالَ: سَأَلْتُ أَنَسًا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كَانَ يُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ بَيْنَ صَلَاتَيْكُمْ هَاتَيْنِ، وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَالْعِشَاءَ إِذَا غَابَ الشَّفَقُ، وَالصُّبْحَ إِذَا طَلَعَ الْفَجْرُ إِلَى أَنْ يَنْفَسِحَ الْبَصَرُ
1) அபூ ஸதகா என்பவர் அனஸ்(ரலி) அவர்களிடம் நபியவர்களின் தொழுகை குறித்து வினவிய போது அனஸ்(ரலி)அவர்கள் நபியவர்கள் எந்த நேரத்தில் எந்தந்தத் தொழுகைகளைத் தொழுதார்கள் என்பதைக் குறிப்பிட்டார்கள் அப்போது பஜ்ர் தொழுகையை பஜ்ர் உதயத்தில் ஆரம்பித்து பார்வையில் வெளிச்சம் தெரியும் வரைக்கும் தொழுதார்கள் எனக் கூறினார்கள். )ஹதீஸ் சுருக்கம் ( (அஹ்மத்,நஸாஈ)
(2ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார்: நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். ‘கடமையான தொழுகைகளை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நீங்கள் முதல் தொழுகை என்று கூறக் கூடிய நண்பகல் தொழுகையை (நடு வானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்’ என்றார்கள். 

மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்துவிட்டேன். ‘கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை நபி(ஸல்) அவர்கள் விரும்புபவர்களாக இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்’ என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.(771.புஹாரி)
குறித்த செய்திகளில் ஸுப்ஹுத் தொழுகையின் ஆரம்ப நேரம் வெளிச்சம் கலந்த இரவின் இருதி(ப்பகுதியின்)இருளில் ஆரம்பித்து வெளிச்சம் பரவ ஆரம்பிக்கும் போது முடியக்கூடியதாக‌ அமைய வேண்டும் என்பதை அறியலாம்.
பொதுவாக நபியவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நீளமாக தொழுவிப்பார்கள் என்பதை புஹாரியில் இடம்பெறும் குறித்த செய்தியில் பார்க்கிறோம்.

*முடிவாக தற்பொழுது எமது பிரதேசத்தில் சொல்லப்படுகின்ற ஸுப்ஹுத் தொழுகைக்கான அதான் அத்தொழுகையின் ஆரம்பத்தை தீர்மானிக்கின்ற‌ அதான் இல்லை இவ்வதான் பஜ்ரின் ஆரம்ப நேரத்தை விட 20அல்லது25 நிமிடங்கள் முந்தியே சொல்லப்படுகிறது.
*அல் கலஸ் என்பது காலை வெளிச்சம் கலந்த இரவின் கடைசி இருள் என்பதே அகராதிகள் கூறும் அர்த்தமாகும்.
*நபியவர்கள் அல் கலஸில் தொழுதார்கள் என்ற செய்தியை வைத்து தற்பொழுது சொல்லப்படும் அதானைத் தொடர்ந்து 5அல்லது 10 நிமிடங்களில் தொழுவது தவறாகும்.
*றமழான் காலங்களில் நமது பகுதிகளில் அதிகமான மஸ்ஜித்களில் ஸுப்ஹு அதானைத் தொடர்ந்து 5 அல்லது 10 நிமிடங்களில் தொழுவது தவறாகும்.எமது வசதிக்காக மார்க்க சட்டங்களை மாற்றக்கூடாது.மார்க்கத்தில் புதிய அம்சங்களை உருவாக்கவும் கூடாது.
*ஆயிஷா(ரலி)அவர்களின் செய்தி இருட்டில் தொழுததற்குறிய ஆதாரம் கிடையாது ஒருவரைப் பார்த்தால் அவர் யாரென்றுதான் அடையாளம் தெறியாதே தவிர சற்று வெளிச்சம் காரணமாக ஒருவர் நிற்கிறார் என்பதை அறிய முடியும் அந்தளவு வெளிச்சம் இருக்கும்.
*நாம் பயன்படுத்தும் காலக் கலண்டரில் தவருகள் காணப்படுகின்றன அதில் முக்கிய தவருகளில் ஒன்றுதான் ஸுப்ஹுடைய அதான் பஜ்ர் நேரம் வருவதற்கு முன் சொல்லப்படுவதாகும்.
*பஜ்ர் என்ற சொல்லுக்கு காலை வெளிச்சம் என்பதே அர்த்தம் ஹதீஸ்களில் பஜ்ர் என்ற வாசகம் இத்தொழுகையோடு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே எமது ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரம் வருவதற்கு முன் தொழுது பாழ்படுத்தி விடாமல் ஹதீஸ்களில் கூறப்பட்ட நேரத்தில் உரிய முறையில் தொழுது நன்மைகளை அடைந்து கொள்வதற்கும்,தெளிவு கிடைக்கும் போது அதை தனிமனித விறுப்பு,வெறுப்புக்கப்பால் எடுத்து நடப்பதற்கும் முயற்சிப்போமாக!
அழ்ழாஹ்வே மிக அறிந்தவன்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget