ஏய் மனிதா.! ஒரு நாள் உன் தோலும் பேசும்.

அல்லாஹ்வின் எதிரிகள் நரக நெருப்பில் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் எல்லோரும் அணிவகுத்துக் கொண்டுவரப் படுவார்கள். கடைசியில் அவர்கள் அந்த நெருப்பை அடையும்போது அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும் அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி சாட்சி கூறும்.   
அப்போது அவர்கள் தம் தோல்களை நோக்கி எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுகிறீர்கள்? என்று கேட்பார்கள். அதற்கு அவை எல்லாப் பொருட்களையும் பேசும்படி செய்யும் அல்லாஹ்வே எங்களைப் பேசும்படிச் செய்தான். அவன்தான் உங்களை முதல்முதலில் படைத்தான். பின்னர் நீங்கள் அவனிடமே கொண்டுவரப்படுவீர்கள் என்றும் கூறும்.
உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உங்கள் பாவங்களை நீங்கள் மறைத்துக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கவில்லை. மேலும் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றில் அதிக மானவற்றை அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள். (அல்குர்ஆன் 41:19-22)
உலகத்தில் மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்பட்டு பதியப்படுகின்றது. மனிதனோடு ஒட்டியிருக்கும் அவனுடைய உறுப்புக்களே அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும். அவன் செய்யக்கூடிய தவறுகளையெல்லாம் உண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும். அந்த உறுப்புக்கள் ஒன்றுவிடாமல் உள்ளது உள்ளபடி அல்லாஹ்வின் முன்னிலையில் அம்பலப்படுத்திவிடும். அப்படிப்பட்ட அதிபயங்கர நாள்தான் மறுமைநாள்.
அந்த நாளில் தனக்குரியவன் என்பதற்காக மனிதனோடு ஒட்டியிருக்கும் தோல்கள் உண்மையை மறைத்துவிடாது. அவனுக்கு சாதகமாகவும் பேச முற்படாது. அந்த நேரத்தில் மனிதன் கைசேதக் குரலுடன் தனது தோலைப் பார்த்து, எங்களுக்கு எதிராக நீங்கள் சாட்சி சொல்லலாமா? என்று வேதனையோடு கேட்பான். அப்போது அல்லாஹ்தான் என்னைப் பேசவைத்தான் எனத் தோல் கூறும்போது, இவனால் ஒன்றும் செய்ய முடியாது.
தோலும் பேசுமா? என்று தங்கள் புத்தியில் உரசிப் பார்த்து இதை நிராகரிக்க முற்படுவார்களானால், அந்த மறுமை நாளில் வாய் பேசமுடியாமல் முத்திரையிடப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget