இஜ்திஹாதும் உலமாக்களுடைய பத்துவாக்களும்

இறைவன் தனது அடியார்களின் ஈருலக வாழ்க்கைக்காக சிறந்த வழிகாட்டலை இஸ்லாம் எனும் மார்க்கத்தினூடாக தெளிவுபடுத்தியுள்ளான். இஸ்லாம் என்பது அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்ற இரு மூலாதாரங்களை கொண்டதாகும். மனிதன் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எல்லாக்காலத்திலும் தீர்வு சொல்லும் மார்க்கமாக இஸ்லாம் மாத்திரமே உள்ளதென்பதும், அது எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தெளிவான தீர்வை தன்னகத்தே கொண்டிருப்பதை தெளிவுபடுத்துகிறது.

இதனடிப்படையில் ஒவ்வொரு அறிஞரும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவில் நேரடியாக வராத புதிய பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் முயற்சிப்பதே இஜ்திஹாத் எனப்படும். எந்த ஓர் அறிஞ்சரும் வேண்டுமென்று மார்க்க விபகாரங்களில் முரண்பாடுகளை உருவாக்குவதில்லை. அவ்வாறு செயற்படுபவன் இஸ்லாமிய மார்கத்தில் உண்மையான அறிஞனாக இருப்பதற்கு தகுதியற்றவன்.

ஓவ்வொருவரும் தமக்கு கிடைத்த ஹதீஸ்களின் அடைப்படையில் பெறப்பட்ட ஆய்வுளின் முடிவுகளை அறிவிக்கின்றனர். ஆய்வின் அடிப்படையில் பெறப்பட்ட முடிவு தவறானது எனத் தெரிந்த பின்பும் அதில் பிடிவாதமாக இருப்பதும் அறிவுடைமையாகாது. இதனை நபியவர்கள் தெளிவுபடுத்தும் போது 'மார்க்கத் தீர்ப்புச் சொல்லும் ஓர் அறிஞ்சன் ஆய்வு செய்து சரியான முடிவை முன்வைத்தால் அவனுக்கு இரு கூலிகளும், தவறான முடிவை (தனது ஆய்வில் சரிகண்டு) முன்வைத்தால் ஒரு நற்கூலியும் கொடுக்கப்படும் என நபியவர்கள் கூறியுள்ளார்கள்' ஆதாரம்(புஹாரி முஸ்லிம்)

கருத்து வேறுபாடு உள்ள விடயத்தில் அல்லது மார்க்கத்தில் எழும் புதிய பிரச்சினைகள் பற்றி தனது முயற்சியை முழுமையாக பிரயோகித்து அல்குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையில் தீர்வு காண்பதற்கான முயற்சியில் இஸ்லாத்தை பற்றிய ஆழ்ந்த அறிவுள்ள உலமாக்கள் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள்.
 இவ்வாறான பிரச்சினைகளில் தீர்வுகாண்பதற்கான வழிமுறையை இஜ்திஹாத் எனும் விடயத்தின் மூலம் இஸ்லாம் மறுமைநாள் வரை அனுமதிக்கின்றது. இதனால்தான் இஸ்லாம் எவ்வாறான பிரச்சினையை எதிர்நோக்கினாலும் அதற்கான தீர்வை தெளிவாக வழங்கி, காலத்தால் உயிர்வாழும் மார்க்கமாகவுள்ளது.

ஆனால் இன்று சில உலமாக்கள் இஜ்திஹாத் விடயத்தை தவறாக விளங்கி தப்பும் தவறுமாக எழுதியும், பிரச்சாரம் செய்தும் வருகின்றனர். அதன் அடிப்படையில் குறிப்பாக பிறைபற்றிய விடயத்தில் இது இஜ்திஹாத்துக்குரிய பிரச்சினை என்றும் இஜ்திஹாத்துடைய விடயத்தில் சர்வதேசப் பிறையை ஆதரிக்கக்கூடியவர்கள்   மற்றவர்களிடத்தில் சளிப்புத்தன்மையுடன், பொறுமையுடன் நடப்பதில்லையென சித்தரிக்க பிரயத்தனம் எடுத்தும், பிரச்சாரம் செய்தும் , எழுதியும் வருகின்றார்கள். இதன் உண்மைநிலையை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இஜ்திஹாத்துடைய மஸ்அலாவில் அவர்கள் முன்வைக்கும் விடயம் தான் இரண்டு சாராரும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் உண்மையில் அவர்கள் இதில் நீதமான நடைமுறையை கடைப்பிடிக்கின்றார்களா? என்று பார்த்தால் அவர்களே மேலும் முரண்பாடுகளை ஏற்படுத்துவது போல் தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர்.

இஜ்திஹாத்தில் ஈடுபடும் அறிஞ்சன் தனக்கு மிச்சரியானதென எடுக்கும் தீர்ப்பை தானும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்றுமாறு சொல்வார். அதற்கு மாற்றமாக தான் இஜ்திஹாத்தின் மூலம் பெறும் முடிவு சமூகத்தின் ஒற்றுமையை குழைக்கும் என்றோ அல்லது சமூக நடைமுறைக்கு மாற்றம் என்பதனால் அதனை வெளியடாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவில் ஆதாரம் கிடையாது.

ஆனால் இன்று இஜ்தஜஹாத் பற்றி தெளிவுபடுத்த வந்த சில மௌலவிமார்கள் இஜ்திஹாத் விடயத்தில் சமூக ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது சமூக நடைமுறைக்கு முரண்படாத வகையில் இருக்க வேண்டும் , என்ற வியடத்தை வலியுறுத்தி வருகின்றார்கள். இது அவர்களின் சொந்த விளக்கமாகும். அப்படியான ஒரு விதியை எந்த ஒரு சட்டக்கலை அறிஞ்சரும் முன்வைக்கவில்லை.

விரலசைத்தல், நெஞ்சில் தக்பீர் கட்டுதல் போன்ற விடயங்களுக்காகவே சமூகத்தை பிரித்துக் கூறுபோட்டு அதற்காக தனிப்பள்ளி கட்டி அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் தூய்மையான முறையில் ஈடுபட வேண்டும் எனக் கூறியவர்கள் பிறைவிடயத்தில் மாத்திரம் சமூக ஒற்றுமையை கட்டிக்காக்க முயற்சிக்கின்றதன் மருமமென்ன? தனது அந்தஸ்து, கௌரவம் பேணப்பட வேண்டும் என்பதைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்?.

இஜ்திஹாத் விடயத்தில் யாரும் யாரையும் குறைசொல்லக் கூடாது, வெறுக்கக்கூடாது எனக்கூறுபவர்கள்தான் சர்வதேசப் பியையை பின்பற்றுபவன் என்பதற்காக குத்பாக்கள், பயான்கள் கொடுப்பதற்கு மறுப்பதோடு மாற்றுக்கொள்கையுடையவர்கள் போல் சித்தரித்து சமூகத்தில் பிழையாக காட்ட முயற்சிக்கின்றனர்.

அவர்கள் நியாய உணர்வுடையவர்களாக இருந்தால் பிறை விடயம் இஜ்திஹாத்துடைய விடயமெனக்கருதினால் ஏனைய ஆய்வுக்குரிய விடயத்தில் எவ்வாறான நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமோ அதே நடைமுறையைத்தானே கடைப்பிடிக்க வேண்டும். சர்வதேச பிறை என்பதும், மார்கத்தில் உள்ள விடயம் தான். அவர்கள் சரியாகப்பட்டதை அவர்கள் செய்யட்டும். நீங்கள் உங்களுக்கு சரியாகப்பட்டதை செய்யுங்கள், என்றல்லவா பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அதற்கு மாற்றமாக ' சஹாபாக்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடுள்ள விடயம், இதனால் இதனால் மக்களே நீங்கள் உள்நாட்டுப் பிறையிலேயே இருந்து கொள்ளுங்கள். சர்வதேச பிறையைப் பேசுபவர்கள் குளப்பக்காரர்கள்' என பெரிய குற்றம் புரிந்தவர்கள் போல் சிலர் சமூகத்தில் சித்தரிக் முயற்சிக்கின்றீர்களே இதுதான் உங்கள் நடுநிலை போக்கா ? சஹாபாக்களிலே இரண்டு சாராரும் இருந்ததாகக் கூறும் அவர்கள் ஏன் இந்த விடயத்தில் சஹாபாக்கள் நடைமுறையைக் கூட பின்பற்றத்தவறியது.

இரண்டில் அவர்கள் எதைசரிதான் என்கின்றார்களோ அதை ஆதாரபூர்வமாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதே அழகிய நடைமுறை. அதற்கு மாற்றமாக இதை மாத்திரம் இஜ்திஹாத்துடைய பிரச்சினை என அடையாளப்படுத்தி சமூக நடைமுறையுடன் ஒற்றுமையாக செய்வோம் என பிரயத்தனம் எடுக்கின்றார்களே அது ஏன்? இது மாத்திரமா இஜ்திஹாத்துடைய பிரச்சினை ? விரலசைப்பதா இல்லையா? சூறத்துல் பாத்திஹாவை சத்தமிட்டு ஓதப்படும் தொழுகையில் ஓதுவதா இல்லையா ? தக்பீர் எங்கே கட்டுவது? போன்ற விடயங்களை பிரச்சினையாகவே அவர்கள் கருதுவதில்லையா ஏன்? 

முழு உலகத்திற்கும் ஒரே நாளில் பெருநாள் இருக்கு வேண்டும்மென சர்வதேசப் பிறையை பின்பற்றுபவர்கள் கூறுவது ஹதீஸை நடைமுறைப்படுத்துவதற்காகவே அன்றி அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவிற்கு மாற்றமாக இருந்தாலும் சரி என்ற ஒற்றுமை வாதத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதல்ல. மாறாக நபி அவர்களின் சுன்னா தெளிவாக வலியுறுத்துவதாலேயே செய்கின்றோம். ஆனால் சிலர் இந்த விடயத்தை ஒற்றுமைவாதத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்காக செய்கின்றோம் என சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.

ஒரு வீட்டிலே இரண்டு பெருநாள்கள் வருவது ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கின்றது. அதனால் சர்வதேசத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த வந்தவர்கள் வீட்டுக்குள் பிளவை ஏற்படுத்தியா? விமர்சிக்கின்றார்கள். சத்தியத்தை நடைமுறைப்படுத்தும் போது எங்கிருந்தும் பிளவு வரலாம். அது பிரச்சினையல்ல.

சில உலமாக்கள் ஏதோ சர்வதேசப் பிறையை பின்பற்ருபவர்கள் பிறைபார்த்தல் என்ற விடயத்தை விட்டு பிறை கேட்டல் என்ற நடைமுறையை பின்பற்றுவதாக சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள். பிறை பார்த்தல் என்ற கூற்றில் அவர்கள் சரியாக நடைமுறைப்படுத்துகின்றார்களா ? என்று பார்த்தால் ஏதோ ஓர் ஊடகத்தில் கேட்டுத்தானே நோன்பு வைக்கின்றார்கள், பெருநாள் கொண்டாடுகிறார்கள். 

வித்தியாசம் அவர்கள் இலங்கைக்குள் மட்டும்தான் கேட்போம், ஏற்றுக் கொள்வோம். நீதமான முஸ்லிம் வேறு எங்கிருந்து சொன்னாலும் கேட்கமாட்டோம் என அடம்பிடிக்கின்றார்கள். நாங்கள் எங்கிருந்து நீதமான சாட்சிகள், சாட்சி சொன்னாலும் கேட்போம். அது வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற முஸ்லிமாக இருக்கலாம், அல்லது நிரந்தரமாக வசிப்பவராக இருக்கலாம். அவர்கள் நீதமானவர்களா ? என்பதைத்தான் பார்ப்போம்.

பிறை விடயம் இஜ்திஹாத்துடைய அம்சமென அடிக்கடி பேசியும் எழுதியும் வரும் சில சகோதர மௌலவிகளிடம் சில கேள்விகள் :
1.அவர்கள் உண்மையில் பிறைவிடயத்தில் இஜ்திஹாத் செய்வதுதான் உள்நாட்டுப்பிறையை சரிகான்கின்றார்களா ? அப்படியானால் ஏன் அவர்கள் என்ன அடிப்படையில் இது நியாயமெனத் தெளிவு படுத்துவதை விட்டு விட்டு இஜ்திஹாதுடைய விடயமாக மாத்திரம் சமுகத்திற்கு சித்தரிக்கின்றார்கள்.?                     
                      
2.ஒரு ஆய்வாளன் சர்வதேசப் பிறையை தனது ஆய்வின் மூலம் 100மூ சரிகண்டால் அது சமூக நடைமுறைக்கு மாற்றமென்பதால் மௌனியாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றார்களா ? அப்படிக் கூறினால் இஜ்திஹாத் விடயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையை அவர்களே மீறியதாக அமையுமே ? அவர்களே ஒரு விடயத்தை தினிப்பதாக அமையுமே?

3.இஜ்திஹாதுடைய விடயத்தில் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும் எனக்கூறும் அவர்களே அதே கட்டுரையில் முன்னுக்குப் பின் முரனாக செயற்படுகின்றார்களே? அதிலேயே சர்வதேசப் பிறையை பின்பற்றுபவர்களை நையாண்டி பன்னித்தானே கருத்தை முன்வைக்கின்றார்கள். இப்படியான அவர்கள் போக்கு ஒற்றுமையை ஏற்படுத்துமா ? அல்லது மேலும் பிரிவினையை தோற்றுவிக்குமா ?

4. ஒருவருடைய தீர்வு தவறாக இருந்தால் தீர்வை வெளியிட்டவர் தண்டிக்கப்படக்கூடாது. ஆனால் தவறான முடிவு புறக்கனிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவு படுத்தும் அவர்கள் நியாயமான முறையில் பிறைவிடயத்தில் எந்த தீர்ப்பை சரிகாண்கின்றார்கள்.? சர்வதேச பிறையை வலியுறுத்தும் உலமாக்களை ஏன் வெறுக்கின்றார்கள்.?

5. பிறை விடயத்தை உண்மையில் அவர்கள் இஜ்திஹாதுடைய விடயமாக கருதினால் ஏன் இஜ்திஹாதுடைய விடயத்திற்கு நடந்து கொள்ளும் நடைமுறைக்கு மாற்றமாக செயற்படுகின்றார்கள். சர்வதேசப் பிறையை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக ஜும்ஆ கொடுப்பதை நிறுத்துகின்றார்கள். பயான்கள் கொடுப்பதை நிறுத்துகின்றார்கள். குழப்பவாதிகள் போன்று அடையாளப்படுத்த முயற்சிக்கின்றார்கள். இதுதான் நீங்கள் இஜ்திஹாத் விடயத்தில் கடைப்படிக்கும்

6.இஜ்திஹாதுடைய விடயத்தில் நடந்து கொள்ளும் நடைமுறைகளையெல்லாம் கூறிவிட்டு பிறை விடயத்தில் சுயஆய்வை விட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கூறி இஜ்திஹாத் பற்றிய ஒழுங்கு விதிகளை மீறி தங்களுக்கு தாங்களே முறன்படுகிறிர்களே ஏன் அப்படி ஒரு ஆய்வின் சுய ஆய்வை விட்டுக் கொடுக்க வேண்டும். ஆதற்கு என்ன ஆதாரம்? இது கூட அவர்கள் வலிந்து மற்றவர்களுக்கு தங்கள் கருத்தை தினிக்க முயற்சி செய்கின்றார்களே, ஏன் இந்த முரண்பாடான வேலை.

7.இஜ்திஹாத் முடிவு சரியாக இருந்தாலும் இயக்க ஒற்றுமையும், ஆலிம்களின் கௌரவமும்தான் அவர்களுக்கு முக்கியமா? இப்படி பல கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

உலமாக்களே சமூகத்தின் அந்தஸ்திற்காகவும், கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவும் சத்தியத்தை மறைக்காதீர்கள். நீங்கள் கருத்து வேறுபாடுள்ள விடயமாக கண்டால் அவைபற்றி தெளிவை பெறுவதற்கான முயற்சிகள், கலந்தாலோசனைகள் செய்யுங்கள். பெரும்பான்மை எனக்கூறி பித்அத்வாதிகளுடன் கடைப்படிக்கும் போக்கை விட மோசமான போக்கை கைவிடுங்கள். நடுநிலைப் போக்கை கடைப்படியுங்கள். சத்தியத்தை சத்தியமாக உரையுங்கள். அதில் வளைந்து நெளிந்து கொடுக்காதீர்கள்.
                                    மௌலவி அமீருல் அன்சார் (மக்கி)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget