March 2018

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்நிய ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! மேலும், எம்மையும் தூய இஸ்லாத்தின் பால் நெறி பிறழாது உறுதியுடனும் பொறுமையுடனும் நிலைத்திருக்கச் செய்து ஈருலக வெற்றியைத் தந்தருள்வானாக!நஜ்ரானில் இருந்து வந்த ஒரு கிறிஸ்தவக் கூட்டம் மதீனாவுக்கு வந்து நபியவர்களிடம் இஸ்லாமிய மார்கத்தை தெரிந்து கொள்ள முற்பட்டவேலையில் ‘அவர்களது தொழுகையை மதீனா பள்ளிவாயலின் கிழக்கு பக்கமாக நிறைவேற்றியதாவும் அதற்கு நபியவர்கள் அனுமதி வழங்கியதாகவும்’ ஒரு செய்தியை வரலாற்று ஆசிரியரான இப்னு இஸ்ஹாக் என்பவர் பதிவு செய்துள்ளார்.  

இச்செய்தியை முஹம்மது இப்னு ஜஃபர் இப்னு அஸ்ஸுபைர் என்பவர் அறிவிப்பதாக பதிவு செய்கின்றார். ஆனால் இந்த செய்தி ஏற்றுக் கொள்ளக் கூடிய தரத்தில் இல்லை! காரணம், இந்த முஹம்மது இப்னு ஜஃபர் தாபியீன்களிடம் இருந்து செய்திகளை அறிவிப்பவராவார். முழுமையான அறிவிப்பாளர் வரிசை இங்கு அறுபட்டுள்ளமையினால் இச்செய்தியை ஆதரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூட இந்த செய்தியை ஸாதுல் மஆத் என்ற தனது நூலில் பதிந்திருந்தாலும் ஸாதுல் மஆத் நூலை பகுப்பாய்வு செய்யும் அறிஞர்கள், இந்த செய்தி அறிவிப்பாளர் வரிசை அறுபட்ட ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாகும்’ என குறிப்பிடுகின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்: அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.” (72:18)

இந்த செய்தியை சரியானதாக எடுத்து கொண்டாலும் இதனை வைத்து முஸ்லிம் அல்லாதவர்களை ‘பள்ளிவாயலுக்குள் அனுமதித்து அவர்களது வணக்க வழிபாடுகளை செய்வதற்கு’ உடந்தையாக இருக்க முடியாது.

‘தஃவா ரீதியாக அவர்களது வருகை இஸ்லாத்தை பற்றிய தெளிவை பெறுவதற்காக இருந்தால் மாத்திரம் அவர்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கலாம்’ என நல்வழி நடந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இக்கருத்தை இமாம் முஹம்மது இப்னு இப்ராஹீம் ஆல ஷெய்க் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழாக்கம் : மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர்,
அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா.

லுஉ  லுஉ  வல் மர்ஜான் (இமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒன்றிணைந்து அறிவித்த ஹதீஸ்கள்)
1 முதல் 20 வரை ] Tamil – தமிழ் –[ تاميلي
 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ  مَالِكِ يَوْمِ الدِّينِ
அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே  எல்லாப்புகழும். (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே
الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ
வானங்களையும் பூமியையும் படைத்து இன்னும் இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (6:1)
وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا
தனக்கு எந்த பிள்ளையும் எடுத்துக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். மேலும் ஆட்சியில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. உதவியாளன் எனும் இழிவும்  அவனுக்கு இல்லை என நபியே நீர் கூறுவீராக. இன்னும் பூரணமான முறையில் அவனை பெருமை படுத்துவீராக.(17:111)
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا (1)
தன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கி வைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் இ(ந்த வேதத்தை அவன் கோணலாக ஆக்க வில்லை.(18:1)
الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَهُ الْحَمْدُ فِي الْآَخِرَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். வானங்களில் உள்ளவைகளும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மேலும் மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும் அவன் ஞானமிக்கவனும் நன்கறிந்தவனுமாவான். (34:1)
الْحَمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلَائِكَةِ رُسُلًا أُولِي أَجْنِحَةٍ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
வானங்களையும் பூமியையும் படைத்தவனும் இரண்டிரண்டு மூம்மூன்று நன்நான்கு இறக்கை களையுமுடைய வானவர்களைத் தூதர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். படைப்பில் தான் நாடுவதை அவன் மேலும் அதிகரிப்பான் நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் (35:1)
لَهُ الْحَمْدُ فِي الْأُولَى وَالْآَخِرَةِ وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
அவனே அல்லாஹ். (உண்மையாக வனங்கப் படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. இம்மையிலும் மறுமையிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன. மேலும் அதிகாரமும் அவனுக்கே உரியதாகும். அவனிட மே நீங்கள் மீட்டப்படுவீர்கள் (28:70)
وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ
வானங்கள் மற்றும் பூமியில் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. முன்னிரவிலும் நண் பகலில் இருக்கும் போதும் துதி செய்யுங்கள் (30:18)
فَلِلَّهِ الْحَمْدُ رَبِّ السَّمَاوَاتِ وَرَبِّ الْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ  وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
வானங்களின் இரட்சகனும் பூமியின் இரட்ச கனுமான அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ் வுக்கே எல்லாப் புகழும். வானங்கள் பூமியின் பெருமை அவனுக்கே உரியதாகும். அவன் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன். (45:36.37)
لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் யாவற்றின் மீதும் பேராற்றலு டையவன்.(64:1)
وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ
இதன் பால் எமக்கு வழி காட்டிய அல்லாஹ்வக்கே எல்லாப் புகழும். அல்லாஹ் எமக்கு நேர்வழி காட்டியிருக்கா விட்டால் நாம் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். (7:43)
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ
இணைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் அனைத்து மதங்களை விடவும் இ(ம்மார்கத்)தை மேலோங்க செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு அனுப்பி வைத்தான். (9:33, 48: 28, 61:9)
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ
முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். மேலும் அவருடன் இருப்போர் நிராகரிப்பாளர்கள் மீது கடுமையானவர்களாகவும் தமக்கிடையே கருணையுடையோராகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அருட் கொடையையும் நாடி ருகூஊ செய்பவர்களா கவும் சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் அவர்களுடைய அடையாளம் அவர்களது முகங்களிலுள்ள சுஜூதின் அடையாளமாகும். (48:29)
وَالَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآَمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ
எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நல்லறங்களும் புரிந்து முஹம்மத் மீது இறக்கி வைக்கப்பட்டதை அது தமது இரட்சகனிடமிருந்துள்ள சத்தியம் என்றும் நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் போக்கி  அவர்களது நிலைமையையும் சீராக்கு வான்(47:2)
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
முஹம்மத் உங்களது ஆண்களில்  எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.எனினும் அல்லாஹ் வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையா கவும் இருக்கின்றார். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(33:40)
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا  وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا
நபியே நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளரா கவும் நன்மாராயம் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதியின்படி அழைப்பவராகவும் பிரகாசிக் கும் விளக்காகவும் அனுப்பி யுள்ளோம். (33: 45.46)
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
நபியே அகிலத்தாருக்கு அருட் கொடையாகவே யன்றி உம்மை நாம் அனுப்ப வில்லை.(21:107)
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
நிச்சயமாக அல்லாஹ் இந்த நபியின் மீது அருள் புரிகிறான். அவனது வானவர்களும் அவருக்காக அருளைத் தேடுகின்றார்கள். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவர் மீது ஸலவாத்துக் கூறி ஸலாமும் கூறுங்கள். (33:56)
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
யாஅல்லாஹ் இப்றாகீம் நபியின் மீதும் இப்றாகீம் நபியின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போன்று முஹம்மத் நபியின் மீதும் முஹம்மத் நபியின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவன் கீர்த்தி மிக்கவன். இப்றாகீம் நபியின் மீதும் இப்றாகீம் நபியின் குடும்பத்தார் மீதும் நீ அருள் வளம் (பரக்கத்) பொழிந்தது போன்று முஹம்மத் நபியின் மீதும் முஹம்மத் நபியின் குடும்பத்தார் மீதும் நீ அருள் வளம் பொழிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவன் கீர்த்தி மிக்கவன் .
நிற்க.
اللؤلؤ والمرجان فيما اتفق عليه الشيخان அல்லூஃலுஃ வல்மர்ஜான் பீமா இத்தபக அலைஹி அஷ் ஷைக்கானு எனும் இந்த நூல் ஹதீஸ்துறை இமாம்களான இமாம் புகாரியாகிய அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் இப்னு இப்றாகீம் இப்னு அல் முகீரா இப்னு பர்ஸின்பாஹ் அல்புகாரி அல்ஜூஹ்பி(ரஹ்) (ஹி.194- 256) அவர்களும் இமாம் முஸ்லிமாகிய அபுல்ஹஸன் முஸ்லிம் இப்னு அல்ஹஜ்ஜாஜ் இப்னு முஸ்லிம் அல்குஷைரி அந்நைஸாபூரி (ரஹ்) (ஹி.204-261)ஆகிய இருவரும் ஒரு மித்து அறிவித்த  ஹதீஸ்களை குறிப்பிடும் நூலாகும்.
இமாம் புகாரி(ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகிய இருவரினதும் நிபந்தனைகளுக்கேற்ப தொகுக்கப்பட்ட இந்த ஹதீஸ்களை ஒன்று திரட்டி ஒரு நூல் வடிவில் தொகுக்குமாறு தாரு இஹ்யாஹில் குத்பில் அரபிய்யா நிறுவனத்தின் பணிப்பாளரும் இந்நூலின் வெளியீட்டா ளருமான அஸ்ஸையித் முஹம்மத் அல்ஹலபீய் என்னை கட்டாயப்படுத்தினார்
கட்டாயப்படுத்தும் உரிமை அவருக்கும் அதனை கடைப் பிடிக்கின்ற உரிமை எனக்கும் உள்ளது. இப்பணியை மேற்கொள்வதை விட சிரமமான பணி வேறொன்று மில்லை. இமாம் புகாரி (ரஹ்) மற்றும் இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகிய இருவரும் தாங்கள் தொகுத்த ஹதீஸ் களை நாங்கள் இருவரும் ஏகோபித்து ஒன்றிணைந்து  அறிவித்த ஹதீஸ்கள் என்று எங்கும் குறிப்பிட வில்லை. எனவே இதனை நான் தொகுத்து எடுப்பது என்பது சிரமமான காரியம் என்பதற்கு இதுவே சான்றாகும்.
ஹதீஸ் துறையில் உலகமா அறிஞரான இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறும் போது இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகிய   இருவரும் ஒன்று பட்டு அறிவித்த ஹதீஸ் என்பது  ஹதீஸின் மூலத்தை இருவரும் ஒரே சஹாபியிட மிருந்து பெற்று அறிவித்த தாகும். அந்த சஹாபியிடமிருந்து பெற்ற ஹதீஸின் சொற்களின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் சரியே என்று கூறினார்கள்.
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் கிரந்தத்திற்கு விரிவுரை எழுதியவர்கள். அவர் அர்பஉன் நபவிய்யா எனும் நூலை தொகுத்த போது  இன்னமல் அஃமாலு பின்னியா எனும் ஹதீஸை கொண்டு தனது நூலை ஆரம்பித்துள்ளார்கள். இது இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்)ஆகிய இருவரும்  ஒன்றிணைந்து  அறிவித்த ஹதீஸ் என்பதை அன்னார் இதன் மூலம் சுட்டிக் காட்டி யுள்ளார்கள்.
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் இமாம் முஸ்லிம்(ரஹ்) அறிவித்த இந்த ஹதீஸூக்கு  மிக நெருக்கமாக உள்ளது என்று அவர்கள் கூறவில்லை. மாறாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது நூலில் அறிவித்த முதலாவது ஹதீஸ் என்று  குறிப்படுகிறார்கள். மேலும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவித்த சொற்களில் சில மாற்றங்களுடன் விளக்கப்படுத்தியு முள்ளார்கள்.
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்  தனது நூலில் ஆரம்பமாக குறிப்பிட்டுள்ள இன்னமல் அஃமாலு பின்னியாத் எனும் ஹதீஸின் அனைத்து வழிகளையும்  ஒன்று திரட்டி  இங்கு நான் கூறுவது பொருத்தமானதாகும். அத்துடன் இமாம் முஸ்லிம் (ரஹ்)அவர்கள் அறிவித்த இதே ஹதீஸின் மூலத்தை இப்புத்தகத்தை வாசிப்பவர் ஒப்பிட்டு பார்ப்பதற்கு இலகுவானதாக அமையவேண்டும் என்பதற்காக அதனையும் கொண்டு வந்துள்ளேன்.
عن عمر بن الخطاب رضي الله عنه.قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
 ‘செயல்கள் அனைத்தும், எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (பிறந்த நாட்டை துறந்து செல்லல்)  உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டிருக்கிறதோ அதுவாகவே அமையும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்  உமர் இப்னு கத்தாப்(ரலி)
உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் சஹீஹூல் புகாரியில் பின்வரும் ஏழு இடங்களில்  சில சொற்கள் மாற்றங்களுடன் கொண்டு வந்துள்ளார்கள்.
كتاب بدء الوحي  அத்தியாயம் 01. இறை செய்தி
பாடம்: இறை தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு இறைசெய்தி எப்படி ஆரம்பமானது.
عن عمر بن الخطاب رضي الله عنه.قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
 1. كتاب الإيمان அத்தியாயம் 02 இறை நம்பிக்கை
பாடம்: 41. செயல்கள் எண்ணத்தைக் கொண்டு அமைகின்றது.
عن عمر بن الخطاب رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال:
‘ الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ‘
 1. كتاب العتق அத்தியாயம்.49. அடிமையை விடுதலை செய்தல் பாடம் 06 அடிமையை விடுதலை செய்தல் மற்றும் விவாகரத்து செய்தல் ஆகியவற்றில் ஏற்படும் தவறும் மறதியும்.
عن عمر بن الخطاب رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال:
‘الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ‘
4        كتاب مناقب الأنصار அத்தியாம்: 63. அன்சாரிகளின் சிறப்புக்கள்
பாடம்: 45 நபி(ஸல்) அவர்களும் நபித் தோழர் களும் நாடு துறந்து செல்லல்
عن عمر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
          ‘ الأَعْمَالُ بِالنِّيَّةِ، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ ‘
 1. كتاب النكاحஅத்தியாயம். 67. திருமணம் .
பாடம் 05 எவர் ஒரு பெண் மணப்பதற்காக அல்லது நல்லதொரு காரியத்தை செய்வதற்காகா நாடு துறந்து செல்லல்
عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم:
‘العَمَلُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
 1. كتاب الإيمان والنذور; அத்தியாயம்: 83. சத்தியங்களும் நேர்சைகளும்
பாடம்: 23 சத்தியம் செய்வதில் நிய்யத் வைத்தல்
عن عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم، يقول:
‘ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ‘
 1. كتاب الحيل; அத்தியாயம்: 90. தந்திரங்கள். பாடம் 01 தந்திரத்தை விடுதல்
عن عمر بن الخطاب رضي الله عنه، قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول:
‘ يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ هَاجَرَ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ‘
இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை தனது நூலில் كتاب الإمارة  அத்தியாம் 33. ஆட்சிஅதிகாரம். பாடம்: எண்ணத்தை பொருத்தே செயல்கள் அமைகின்றன. (ஹதீஸ் எண் 155) ல் கொண்டு வந்துள்ளார்கள்.
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மேலே குறிப்பிட்ட வகையில் ஏழு இடங்களில் (வெவ்வேறு சொற்கள் அமைப்பில்) இந்த ஹதீஸை கொண்டு வந்த போதிலும் பின்வரும் வாசக அமைப்பிலுள்ள ஹதீஸை கிதாபுல் அய்மான் மற்றும்  கிதாபுல்ந் நுசூர் எனும் அத்தியாயத்தில் கொண்டுவந்துள்ளமை பொறுத்தமானதாக உள்ளது.
عن عمر بن الخطاب رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم:
‘ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ‘
இந்த லுஃலுஃ மர்ஜான் என்ற நூலின் பெறுமதியை  இப்னு சலாஹ் என்று பிரபல்யம்  பெற்ற அஸ்ஸெய்க்  தகியுத்தீன் அவர்கள்  கூறும் போது சஹீஹான ஹதீஸ்களின் வகைகளை பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
1.இமாம் புகாரி(ரஹ்) மற்றும் இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரின் நிபந்தனை அடிப்படையில் ஒன்றுபட்டு  அறிவித்த ஹதீஸ்கள்.
2.இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின்றி இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனித்து அறிவித்த சஹீஹான ஹதீஸ்
 1. இமாம் புகாரி (ரஹ்) இன்றி, இமாம் முஸ்லிம் (ரஹ்) தனித்து அறிவித்த ஹதீஸ்
 2. இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் நிபந்தனைக்கு உட்பட்ட சஹீஹான ஹதீஸாகும் என்றாலும் அவ்விருவரும் அதனை அறிவிக்க வில்லை.
 3. இமாம் புகாரி (ரஹ்)அவர்களுடைய நிபந்தனைக்கு உட்பட்ட சஹீஹான ஹதீஸ் எனினும் அதனை அவர்கள் அறிவிக்க வில்லை.
 4. இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களுடைய நிபந்தனைக்கு உட்பட்ட சஹீஹான ஹதீஸ் எனினும் அதனை அவர்கள் அறிவிக்க வில்லை.
 5. இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகியவர்களிடம் சஹீஹான ஹதீஸ் என்றாலும் அவ்விருவரின் நிபந்தனைக்கு உட்படாதவை
இதுவே சஹீஹான ஹதீஸ்களின் பிரதான பிரிவுகளாகும். இதில் மிக உயர்வானதும் ஹதீஸ்களை அறிஞர்கள் கூறக்கூடியதும் முதலாவது இலக்கத்தில் கூறப்பட்ட விடயமாகும். இந்த வகையைத் தான் இமாம் களான புகாரி (ரஹ்) அவர்களும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும்  ஏகோபித்து அறிவித்துள்ளனர்.  இதுவே  இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்)ஆகியோர் ஒன்று பட்டு அறிவித்துள்ளனர் என்பதன் கருத்தாகும்.  இதன் மூலம் முழு சமுதாயமும் ஒன்று பட்டுள்ளனர் என்று கருத்தல்ல.   எனினும் இவ்விருவரும் ஒன்று பட்டுள்ள விடயத்தில் முழு சமுதாயமும்  ஒன்று பட்டுள்ளது. இவ்வகை யிலுள்ள அனைத்து ஹதீஸ்களும் திட்டவட்ட மாக சஹீஹான தாகும். உறுதியான அறிவுக்கும்   சிந்தனைக்கும் உடன் பட்டு வரக்கூடியதுமாகும்.
அஷ்ஷெய்க் ஷன்கிதி (ரஹ்) அவர்கள் இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஏகோபித்து அறிவித்த ஹதீஸ்களை உள்ளடக் கியதாக
(زاد المسلم فيما اتفق عليه البخاري ومسلم)
ஸாதுல் முஸ்லிம் பீமா இத்தபக அலைஹி புகாரி முஸ்லிம் என்று எழுதிய இந்நூலைத் தவிர வேறொரு நூல்  தொகுக்கப் பட்டிருப்பதாக  எனக்கு தெரியவில்லை. என்றாலும் ஷன்கீதி (ரஹ்) புகாரி (ரஹ்)முஸ்லிம் (ரஹ்) ஆகிய இரு வரும் ஏகோபித்து அறிவித்த அனைத்து ஹதீஸ்களையும் இந்நூலில் தொகுத்திட வில்லை.
அகர வரிசை அடிப்டையில் நபி (ஸல்) அவர்களின் சொல் சார்ந்த ஹதீஸ்களையும் நபியவர்களின் வர்ணனைகளை குறிக்கக் கூடிய  “கான” (இருந்தது) என்று ஆரம்பிக்ககக் கூடிய ஹதீஸ்களையும் நஹா (தடுத்தார்கள்) என்று ஆரம்பிக்கக் கூடிய ஹதீஸ்களையும் மாத்திரம் தொகுத்துள்ளார்கள். அந்நூலில் காணப்படும் அனைத்து ஹதீஸ்களின் எண்ணிக்கை 1368 ஆகும்.
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ஷரஹ் சஹீஹ் முஸ்லிம் எனும் நூலில் (நபித் தோழர்களின் வார்த்தைகளுக்கும் நபிகளாரின் வார்த்தை களுக்கு மிடையிலுள்ள வேறு பாட்டை) பின் வருமாறு கூறுகிறார்கள்.
நாங்கள்  கூறினோம், அல்லது நாங்கள் செய்தோம், அல்லது அவர்கள் கூறுகின்றனர், அல்லது அவர்கள் இவ்வாறு செய்கின்றனர் அல்லது  நாங்கள் பார்க்காத வர்களாக இருந்தோம், அல்லது இதில் எவ்வித தவறையும் நாங்கள் பார்க்க வில்லை ஆகிய வார்த் தைகளுடன் ஒரு சஹாபி அறிவிக்கும் ஹதீஸ்  (மவ்கூபா அல்லது மர்பூஹா என்பதில்) இமாம் கள் கருத்து முரண்பாடு பட்டுள்ளனர்.
இமாம் அபூபக்கர் இஸ்மாயீலி அவர்கள் கூறும் போது  இவ்வாறான ஹதீஸ் மர்பூவாக (நபி (ஸல்) அவர்களின் செய்தியாக) அமையாது அது மவ்கூபாக (சஹாபியின் வார்த்தையாக) அமையும் என்கிறார்கள்.
ஹதீஸ் கலை, பிக்ஹூ கலை, ஊசூல் கலை அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் கூறும் போது  இவ்வாறான வார்த்தை பிரயோகமான செய்திகள்  நபி (ஸல்) அவர்களுடைய காலத்துடன் இணைக்கப் படவில்லை என்றால் அது மர்பூஊவாக மாட்டாது, மாறாக மவ்கூபாகும்.  அவ்வார்த்தை பிரயோகம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்துடன் இணைக்கப் படுமானால் உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் நாங்கள்  செய்யக் கூடியவர்களாக இருந்தோம், அல்லது அவர்களுடைய காலத்தில் செய்யக் கூடியவர் களாக இருந்தோம், அல்லது அவர்கள் எங்களுடன் இருக்கும் போது அல்லது எங்களுக்கு மத்தியில் இருக்கும் போது செய்யக் கூடியவர்களாக இருந்தோம் போன்ற முறை களில் அறிவிக்கப்படுமேயானால் அது மர்பூ ஆகும். இதுவே துல்லியமாக விளங்கக் கூடிய சரியான வழியாகும்.
அதாவது நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் செய்யப் பட்டிருந்தால் அதனை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள், அங்கீகரித்திருக்கின் றார்கள் என்பதே வெளிப்படையானதாகும். எனவே தான் இவ்வாறான ஹதீஸ் மர்பூஹ் எனப்படுகிறது.
பெரும்பாலும் ஹதீஸில் குறிப்பிடப்படும் அச் செயல் தெரியாத செயலாக இருக்குமேயானால்  அது மர்பூஹாகவும்  அதற்கு மாற்றமாக இருக்கு மேயானல் அது மவ்கூபாகும் என வேறு சிலர் கூறியுள்ளனர். இதே கருத்தை அபூ இஸ்ஹாக் அஷ் ஷிராதி அஷ் ஷாபி (ரஹ்) அவர்கள் உறுதியாக கூறியுள்ளார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.
இவ்வாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். இதனை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டோம் அல்லது இது சுன்னா  என்பதாக ஒரு நபித் தோழர் அறிவிப்பாரேயானால் அவை அனைத்தும் மர்பூஹாகும். பல கலைகளிலுமுள்ள பெரும் பாலான  அறிஞர்களின் சரியான முடிவு இதுவேயாகும். என இமாம் நவவி(ரஹ்) கூறுகின்றார்கள்.(நூல்: ஷரஹ் சஹீஹ் முஸ்லிம்)
இமாம் ஸைத் ஜமாலுத்தீன் காசிமி அவர்கள்  ஹதீஸ்களை அறிவிக்கும் அடிப்படை சட்ட விதிகள் எனும்  நூலில் குறிப்பிடும் போது  இமாம் தகியுத்தீன் இப்னு தைமியா (ரஹ்) அவர்களின்   சில தீர்ப்புக்களில் நபியர்வகளின் ஹதீஸ் என்பது பொதுவாக  அவர்களின் நுபூவத்திற்கு பின்னர் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றிலிருந்து அவர்களை ப் பற்றி அறிவிக்கப்பட்டதாகும் என்று கூறியுள்ளார்கள்.
இங்கு தான்  ஸாதுல் முஸ்லிம் பீமா இத்தபக அலைஹி அல்புகாரி வல் முஸ்லிம் எனும் நூலில்  இமாம் புகாரி இமாம் (ரஹ்) முஸ்லிம் (ரஹ்) ஆகியோர் ஏகோபித்து அறிவித்துள்ள ஹதீஸ் களை தொகுக்கப்பட்ட எண்ணிக்கைக்கும்  லுஃலுஃ வல்மர்ஜான் எனும் நூலில் தொகுக் கப்ட்டுள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கைக்கும்  இடையில் வேறுபாடு காணப்படுகிறது.
ஸாதுல் முஸ்லிம் பீமா இத்தபக அலைஹி அல் புகாரி வல் முஸ்லிம் எனும் நூலில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களின் எண்ணிக்கை 1368
லுஃ லுஃ வல்மர்ஜான் எனும் நூலில் தொகுக்கப்ட்டுள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கை 2006 ஆகும்.
வாசகரே! சஹீஹான உயர்ந்த அந்தஸ்திலுள்ள அனைத்து ஹதீஸ்களையும் தொகுத்த  இந் நூலை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
அதனை பாதுகாத்துக் கொள்ளுங்கள் உங்களது  இரு கரத்தினாலும்  பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
எங்கள் இரட்சகனே. நீ இறக்கியவற்றை நாம் நம்பிக்கை கொண்டு இத் தூதரையும பின் பற்றினோம். எனவே எங்களை சாட்சியாளர் களுடன் பதிவு செய்து கொள்வாயாக.(3:53)
PART 01
நபி(ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது பற்றிய கண்டிப்பு
 -01- حديث عليّ قال: قال النبيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا تكذِبوا عليّ، فإنه من كَذَبَ عليّ فَلْيَلِجِ النارَ
أخرجه البخاري في: 3 كتاب العلم: 38 باب إثم من كذب على النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 1. என் மீது பொய் சொல்லாதீர்கள். எவர் என்மீது பொய் சொல்கிறரோ அவர் நரகத்தில் நுழையட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலி (ரலி)
  02- حديث أَنَسٍ قال: إِنه لَيَمْنَعُنِى أَنْ أحدّثكم حديثًا كثيرًا أَنَّ النبيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: مَنْ تعمَّدَ عليّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ من النار
أخرجه البخاري في: 3 كتاب العلم: 38 باب إثم من كذب على النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 1. அதிகமாக உங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பவதை விட்டும் என்னை தடுக்கின்ற காரியம் என்னவென்றால் எவர் என் மீது வேண்டுமென்று பொய் சொல்கின்றாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸாகும் அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
-03   حديث أبي هُرَيْرَةَ عن النبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: ومَن كَذَب عليّ مُتعمِّدًا فليتبوَّأْ مَقْعَدَهُ من النار
أخرجه البخاري في: 3 كتاب العلم: 38 باب إثم من كذب على النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 1. எவர் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி)
 .04- حديث الْمُغِيرَةِ قال سمعتُ النبيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: إِنَّ كذِبًا عليّ ليس ككذِبٍ على أحدٍ، مَن كَذَبَ عليَّ مُتعمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ منَ النار
أخرجه البخاري في: 23 كتاب الجنائز: 34 باب ما يكره من النياحة على الميت
 1. என் மீது பொய் கூறுவது உங்களில் ஒருவர் மற்றவர் மீது பொய் சொல்வது போலல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தனது இருப்பிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் அறிவிப்பவர்: முகீரா(ரலி)
 2. இறை நம்பிக்கை பற்றிய பாடம்
இறை நம்பிக்கை என்றால் என்ன?  அதனது பண்புகளின் விளக்கம் என்ன
.05-  حديث أبي هُرَيْرَةَ قال كان النبيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بارزًا يومًا للناسِ فأَتاه رجلٌ فقال: ما الإيمان قال: الإيمان أن تؤمنَ بالله وملائكتِهِ وبلقائِهِ وبرسلِهِ وتؤمَن بالبعثِ قال: ما الإسلامُ قال: الإسلامُ أن تعبدَ اللهَ ولا تشركَ به وتقيمَ الصلاةَ وتؤدِّيَ الزكاةَ المفروضةَ وتصومَ رمضانَ قال: ما الإحسان قال: أن تعبدَ الله كأنك تراهُ، فإِن لم تكن تراه فإِنه يراك قال: متى الساعةُ قال: ما المسئولُ عنها بأَعْلَم مِنَ السائل، وسأُخبرُكَ عن أشراطِها؛ إِذا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذا تطاولَ رُعاةُ الإبِلِ البَهْمُ في البنيان، في خمسٍ لا يعلمهنَّ إِلاَّ الله ثم تلا النبيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (إِنَّ الله عنده علم الساعة) الآية: ثم أدبر فقال: رُدُّوه فلم يَرَوْا شيئاً فقال: هذا جبريل جاءَ يُعَلِّمُ الناسَ دينَهم
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 37 باب سؤال جبريل النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عن الإيمان والإسلام
 1. ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு மத்தியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி(ஸல்) அவர் களிடம் வந்து ஈமான் என்றால் என்ன என்று கேட்டார். நீ அல்லாஹ்வையும் அவனது வானவர்களை யும் அவனது சந்திப்பையும் அவனது தூதர் களையும் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்புவதையும் நம்பிக்கை கொள்வது ஈமானாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாம் என்றால் என்ன என்று அம்மனிதர் (மீண்டும்) கேட்டார். நீ அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணை வைக்கக் கூடாது. தொழுகையை நிலை நாட்டி  கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறை வேற்றி ரமழானில் நோன்பு நோற்பதும் இஸ்லாமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இஹ்ஸான் என்றால் என்ன என்று அம் மனிதர் கேட்டார். நீ அல்லாஹ்வை காண்பது போல் அவனை வணங்குவதாகும். நீ அவனை பார்க்காது விட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது இஹ்ஸானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மறுமை நாள் எப்போது வரும் என அம்மனிதர் கேட்டார். கேள்வி கேட்பவர் கேட்கப் படுபவரை விட (அதாவது என்னை விட நீங்கள்) நன்கு அறிந்தவர் என்றாலும் அதன் (சில) அடையாளங்களை உங்களுக்கு அறிவிக்கின்றேன். அடிமைப் பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பதும்,  கறுப்பு ஒட்டகம் மேய்ப்பவர்கள் கட்டிடங்கள் கட்டுவது மாகும். ஐந்து விடயங்கள் உள்ளன. அவைகளை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்; அவை மறுமை பற்றிய அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே உள்ளது அவனே மழையை இறக்குகின்றான். கருவறை யில் உள்ளவற்றை அவனே நன்கறிவான் எந்தோர் ஆன்மாவும் தான் நாளைக்கு எதை சம்பாதிக்கும் என்பதை அறியமாட்டாது. மேலும் எந்தவொரு ஆன்மாவும் தான் எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறிய மாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்த வன் மிக நுட்பமானவன் (31:34) என்ற வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
பிறகு அம்மனிதர் திரும்பிச் சென்று  விட்டார். அம் மனிதரை அழைத்து வாருங்கள்  என கூறிய போது அவரை தேடிச் சென்ற போது அவரை காணவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர் தான் ஜிப்ரீல்(அலை) மக்களின் மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்காக வந்தார் எனக கூறினார்கள்.     அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான தொழுகைகள்
.06 – حديث طَلْحَةَ بن عُبَيْد الله قال: جاءَ رجلٌ إِلى رسولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من أهل نجْدٍ ثائرُ الرأسِ يُسْمَعُ دوِيُّ صوتِهِ ولا يُفْقَهُ ما يقول، حتى دنا فإِذا هو يسأَل عن الإسلام؛ فقال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خمسُ صلواتٍ في اليومِ والليلةِ فقال: هل عليّ غيرُها قال: لا إِلاَّ أَنْ تَطَوَّعَ قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وصيامُ رمضانَ قال: هل عليّ غيره قال: لا إِلاَّ أَن تَطَوَّعَ قال، وذكر له رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزكاةَ قال هل عليَّ غيرُها قال ص:3 لا إِلاَّ أَنْ تَطَوَّعَ قال فأَدبر الرجل وهو يقول: والله لا أزيد على هذا ولا أَنْقصُ قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَفْلَحَ إِنْ صَدَقَ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 34 باب الزكاة من الإسلام
 1. நஜ்த் பகுதியை சேர்ந்த ஒரு மனிதர் பரட்டை தலையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது சப்தம் ரீங்காரமிடக் கூடியதாக இருந்ததே தவிர என்ன சொல்கிறார் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதரை நெருங்கி இஸ்லாம் என்றால் என்ன என்று கேட்டார். இரவிலும் பகலிலும் ஐந்து நேரம் தொழுவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைத் தவிர வேறேதும் என் மீது உள்ளதா எனக் கேட்டார். நீர் விரும்பி மேலதிகமாக செய்கின்றதைத் (தொழுகின்ற தைத்) தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் ரமழானில் நோன்பு நோற்பதும் இஸ்லாத்தின் கடமையா கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை தவிர வேறெதுவும் என்மீது உள்ளதா? எனக் கேட்டார். நீ விரும்பி மேலதிகமாக செய்கின்றதைத் (நோன்பு பிடிப்பதைத்) தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதைத் தவிர கூட்டவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன் எனக் கூறிவிட்டு திரும்பிச் சென்றார். இவர் உண்மை கூறினால் வெற்றிப் பெற்றுவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைத்துல்லாஹ் (ரலி)
சுவனத்தில் நுழையச் செய்யும் இறை நம்பிக்கை
7 – حديث أبي أيوبَ الأَنصاريّ رضي الله عنه أَنَّ رجلاً قال: يا رسول الله أخبرني بعمل يُدْخِلُني الجنة، فقال القوم: مَا لَهُ مَالَه فقال رسولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَبٌ مَّا لَهُ فقال النبيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تعبُدُ اللهَ لا تُشْرِكُ بهِ شيئًا وتُقيمُ الصَّلاةَ وَتُؤْتِي الزكاةَ وَتَصِلُ الرَّحِمَ ذرْها قَال كأنّه كانَ عَلى رَاحِلَتِهِ
أخرجه البخاري في: 78 كتاب الأدب: 10 باب فضل صلة الرحم
 1. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (வாகனத்தில் வந்து) என்னை சுவனத்தில் நுழையச் செய்யும் ஒரு காரியத்தை சொல்லித் தாருங்கள் எனக் கூறினார். அப்போது மக்கள் இவருக்கு என்ன நடந்தது? இவருக்கு என்ன நடந்தது? எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவருக்கு ஏதேனும் அவசரத் தேவை இருக்கலாம் எனக் கூறி விட்டு நீஅல்லாஹ்வை வணங்கவேண்டும் அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது நீ தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தை கொடுத்து இனபந்தை சேர்ந்து நடக்க வேண்டும் எனக்கூறினார்கள். பிறகு நீ (பிடித்துக் கொண்டிருக்கும் உன் வாகனத்தின் கையிற்றை விட்டு விட்டு) உன் வாகனத்தில் புறப்படு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அந்நேரத்தில்) கேள்வி கேட்டவர் தனது வாகனத்தில் உட்கார்ந்திருந் தார் போலும். என அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அறிவிக்கிறார்கள்.
.08 – حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ أَعْرابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقالَ: دُلَّني عَلى عَمَلٍ إِذا عَمِلْتُهُ دَخَلْتُ الجنة قَالَ: تَعْبُدُ اللهَ لا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقيمُ الصَّلاةَ المَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمفْروضَة وَتَصُومُ رَمَضانَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلى هذا فَلَمّا وَلّى، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلى هَذا
أخرجه البخاري في 24 كتاب الزكاة: 1 باب وجوب الزكاة
 1. ஒரு கிராமவாசி நபி (ஸல்)அவர்களிடம் வந்து எனக்கொரு காரியத்தை (அமலை) சொல்லித் தாருங்கள் அதனை நான் செய்தால் சுவனத்தில் நுழைய வேண்டும் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ அல்லாஹ்வை வணங்க வேண்டும் எதனையும் அவனுக்கு இணை யாக்கக்கூடாது நீ கடமையாக்கப்பட்ட தொழுகையை நிலை நாட்டி கடமையாக்கப் பட்ட ஸகாத்தையும் நிறைவேற்றி ரமழான் மாதத்தில் நோன்பும் நோற்று வரவேண்டும் என கூறினார்கள். என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதனை விட நான் (எதனையும்) அதிகரிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டு அந்த கிராமவாசி திரும்பிச் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எவர் சுவனவாசியை பார்க்க விரும்புகிறாரோ அவர் இவரை பார்த்துக் கொள்ளட்டும் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி)
இஸ்லாம் ஐந்து விடயங்கள் மீது  நிறுவப் பட்டுள்ளது என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று
9 – حديث ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بُنِيَ الإِسْلامُ عَلى خَمْسٍ شَهادَةِ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقامِ الصَّلاةِ وَإِيتاءَ الزَّكاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 2 باب دعاؤكم إيمانكم
 1. இஸ்லாம் ஐந்து விடயங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை: உண்மையாக வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்றும் சாட்சி கூறுவதாகும். மேலும் தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தை கொடுத்து ஹஜ்ஜை நிறைவேற்றி ரமழானில் நோன்பு நோற்பது மாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதும் மார்க்கக் கடமைகளை பேணுவதும் அதன் பால் அழைப்பு விடுப்பதும் என்ற கட்டளை
10 – حديث ابْنِ عَبّاس قَالَ إِنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ لَمّا أَتَوُا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنِ الْقَوْمُ أَوْ مَنِ الْوَفْدُ قَالُوا: رَبِيعَةَ قَالَ: مَرْحَبًا بِالْقَوْمِ أَوْ بِالْوَفْدِ غَيْرَ خَزايا وَلاَ نَدَامَى فَقالُوا: يا رَسُولَ اللهِ إِنَّا لاَ نَسْتَطِيعُ أَنْ نَأْتِيَكَ إِلاَّ في الشَّهْرِ الْحَرامِ، وَبَيْنَنَا وَبَيْنَكَ هَذا الْحَيُّ مِنْ كُفّارِ مُضَرَ، فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنا وَنَدْخُلْ بِهِ الْجَنَّةَ وَسَأَلُوهُ عَنِ الأَشْرِبَةِ فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ وَنَهاهُمْ عَنْ أَرْبَعٍ: أَمَرَهُمْ بِالإِيمانِ بِاللهِ وَحْدَهُ، قَالَ: أَتَدْرُونَ مَا الإِيمانُ بِاللهِ وَحْدَهُ قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: شَهادَةُ أَنْ لاَ إِلهَ إِلاّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَإِقامُ الصَّلاةِ وَإِيتاءُ الزَّكاةِ وَصِيامُ رَمَضَانَ وَأَنْ تُعْطُوا مِنَ الْمغنَمِ الْخُمُسَ وَنَهاهُمْ عَنْ أَرْبَعٍ: عَنِ الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالمُزَفَّتِ وَرُبَّما قَالَ المُقَيَّرِ وَقالَ: احْفَظُوهُنَّ وَأَخْبِرُوا بِهِنَّ مَنْ وَراءَكُمْ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 40 باب أداء الخمس من الإيمان
 1. அப்துல் கைஸ் என்பவரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இந்த கூட்டம் அல்லது தூதுக் குழவினர் யார் எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ரபீஆ வம்சத்தினர் என்றனர். மக்களே உங்கள் வருகை இழிவின்றி கைசேதமின்றி நல்வருகை யாகட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மிக தூரத்திலிருந்து வருகிறோம் எங்களுக்கும் உங்களுக்குமிடையில் நிராகரிப்பாளர்களான முளர் கூட்டத்தினர் உள்ளனர். யுத்தம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட  புனித மாதங்களைத்  தவிர உங்களிடம் எங்களுக்கு வரமுடியாது. எனவே எங்களுக்கு சில கட்டளைகளை இடுங்கள். அதனை எங்களுக்குப் பின்னால் (வரமுடியாமல்) இருக்கின்ற வர்களுக்கு அறிவிப்போம்  அதனை (செயல் படுத்துவததை) க்கொண்டு சுவனம் நுழைவோம் என கூறிய பின் சில வகை பானங்களைப் பற்றி  அம்மக்கள் கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் நான்கு கட்டளைகளை செயல் படுத்துமாறும் நான்கு கட்டளைகளை தடுத்துக் கொள்ளு மாறும் கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கை கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அல்லாஹ் வை நம்பிக்கை கொள்வது என்றால் என்ன என்று அறிவீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள் அதனை அல்லாஹ்வும் அவனது தூரும் நன்கறிவார்கள் எனக் கூறினார்கள். உண்மையாக வணங்கி வழிபடுவ தற்கு தகுதியானவன் அல்லாஹ் வைத தவிர வேறு கடவுள் இல்லை முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமா வார். மேலும் தொழுகையை நிலை நாட்டுவது ஸகாத் கொடுப்பது ரமழானில் நோன்பு நோற்பது போர் செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பகுதியை நீங்கள் (இஸ்லாமிய அரசுக்கு) செலுத்துவது என கட்டளை யிட்டார்கள்.
(மதுவை வைத்திருக்க பயன்படுத்தும்) மண் சாடிகள், சுரைக்காய் குடுவை,  பேரீத்த மரத்தின் அடிப்பாகத்தை  குடைந்து தயாரித்த மரப் பீப்பாய் தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவைகளை (பயன்படுத்துவதற்கு) தடை செய்தார்கள்.
இதனை நினைவில் கொண்டு, இங்கு வராது உங்களுக்கு பின்னால் உள்ளவர்களுக்கு சொல்லி விடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

11 – حَدْيث ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذاً رضي الله عنه عَلى الْيَمنِ قَالَ: إِنَّكَ تَقْدَمُ عَلى قَوْمِ أَهْلِ كِتَابٍ، فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبادَةُ اللهِ، فَإِذَا عَرَفُوا اللهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَواتٍ في يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذا فَعَلُوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللهَ فَرَضَ عَلَيْهِمْ زَكاةً مِنْ أَمْوالِهِمْ وَتَردُّ عَلى فُقَرائِهِمْ فَإِذا أَطَاعُوا بِها فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرائِم أَمْوالِ النَّاسِ
أخرجه البخاري في: 24 كتاب الزكاة: 41 باب لا تؤخذ كرائم أموال الناس في الصدقة
 1. முஆத்(ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் யமனுக்கு அனுப்பும் போது முஆதே நிச்சயமாக நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் செல்கிறீர்.எனவே முதலில் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடக்குமாறு அம்மக்களுக்கு நீ அழைப்பு விடு. அவர்கள் அல்லாஹ்வை அறிந்து ஏற்றுக்கொண்டால் ஒவ்வொரு நாள் இரவிலும பகலிலும் ஐவேளை தொழவேண்டும் என்று அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி யுள்ளான் என தெரிவித்து விடு. அதனை அவர்கள் ஏற்று செய்தால் அவர்களின்  செல்வங்களில்  ஸகாத்தை எடுத்து அதனை அவர்களிலுள்ள ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என தெரிவித்து விடு. இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிலி ருந்து ஸகாத்தை வசூலிக்கும் போது அவர்களின் செல்வங்களில் (நடுத் தரமானதை விடுத்து) உயர் தரமானதை எடுத்துக் கொள்ளக் வேண்டாம் என எச்சரிக்கின்றேன் என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
12 – حديث ابْنُ عَبّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعاذًا إِلى الْيَمَنِ فَقالَ: اتَّقِ دَعْوَةَ المَظْلُومِ فَإِنَّها لَيْسَ بَيْنَها وَبَيْنَ اللهِ حِجابٌ
أخرجه البخاري في: 46 كتاب المظالم: 9 باب الاتقاء والحذر من دعوة المظلوم
 1. நபி(ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது (முஆதே) அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைககு அஞ்சிக் கொள். ஏனெனில் நிச்சயமாக அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையில் திரையேதுமில்லை என கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
லாஇலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என கூறும் வரை மக்களுடன் போராடுமாறு வந்துள்ள கட்டளை
13 – حديث أَبي بَكْر وَعُمَر قَالَ أَبُو هُرَيْرَةَ: لَمّا تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكانَ أَبُو بَكْرٍ رضي الله عنه، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَب، فَقالَ عُمَرُ رضي الله عنه: كَيْفَ تُقاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُمِرْتُ أَنْ أُقاتِلَ النَّاسَ حَتّى يَقُولوا لا إِلهَ إِلاَّ اللهُ، فَمَنْ قالَها فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلاَّ بِحَقِّهِ، وَحِسابُهُ عَلى اللهِ فَقالَ أَبُو بَكْرٍ: وَاللهِ لأُقاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاةِ وَالزَّكاةِ، فَإِنَّ الزَّكاةَ حَقُّ الْمالِ، وَاللهِ لَوْ مَنَعُوني عَناقًا كَانوا يُؤَدُّونَها إِلى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقاتَلْتُهُمْ عَلى مَنْعِها
قالَ عُمَر رضي الله عنه: فَواللهِ ما هُوَ إِلاَّ أَنْ قَدْ شَرَحَ اللهُ صَدْرَ أَبي بَكْرٍ رضي الله عنه فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ
أخرجه البخاري في: 24 كتاب الزكاة: 1 باب وجوب الزكاة
13, நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்போது அரபி களில் சிலர் (ஸகாத் கொடுக்க மறுத்து) நிராகரிப்பாளர்களாக மாறினார்கள். அவர்களு டன் போர் தொடுப்பதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆயத்தமான போது உமர் (ரலி) அவர்கள்  அபூபக்கர்(ரலி) அவர்களிடம்  லாஇலாஹ இல்லல்லாஹூ  எனக் கூறும்வரை மக்களுடன் போராடுமாறு நான் ஏவப் பட்டுள்ளேன். எவர் அதனை கூறி விட்டாரோ அவரது தண்டனைக்குரிய குற்றத்தைத் தவிர அவரது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொண்டார்.   அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே. 
(அப்டியிருக்கும் போது அந்த இக்கலிமாவை ஏற்ற மக்களுடன் எப்படி நீங்கள் போர் புரிவீர்கள்) எனக் கேட்டார்கள்.  அதற்கு அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக   தொழுகையையும் ஸகாத்தையும் வேறு படுத்துகின்றாரோ அவருடன் நான் போர் புரிவேன்.  காரணம் ஸகாத் என்பது செல்வத் திற்குரிய உரிமையாகும். ஆல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்த ஒட்கத்தின் கையிற்றையேனும் தர மறுத்தால்  அதை மறுத்ததற்காக அவர்களுடன் போரிடுவேன் எனனக் கூறினார்.
உமர் (ரலி) அவர்கள் கூறும் போது அல்லாஹ் வின் மீது சத்தியமாக  அல்லாஹ் அபூபக்கர்(ரலி) அவர்களின் உள்ளத்தை (தீர்க்கமான இந்த முடிவில்) விசாலமாக்கி னான். அது தான் உண்மை என்பதை நான் அறிந்து கொண்டேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்

. 14 – حديث أَبي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُمِرْتُ أَنْ أُقاتِلَ النَّاسَ حَتّى يَقُولُوا لا إِلهَ إِلاّ اللهُ، فَمَنْ قَالَ لا إِلهَ إِلاّ اللهُ فَقَدْ عَصَمَ مِنّي نَفْسَهُ وَمالَهُ إِلاَّ بِحَقِّهِ، وَحِسابُهُ عَلى اللهِ
أخرجه البخاري في: 56 كتاب الجهاد: 102 باب دعاء النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى الإسلام والنبوة
 1. லாஇலாஹ இல்லல்லாஹூ (உண்மை யாக வணங்கி வழிபடுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை ) எனக் கூறும் வரை மக்க ளுடன் போராடுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன் எவர் அதனை கூறி விட்டாரோ அவரது தண்டனைக்குரிய குற்றத்தைத் தவிர அவரது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொண்டார். அவரது விசாரணை அல்லாஹ் விடமே உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹூரை ரா(ரலி)
.15 – حديث ابْنُ عُمَر أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أُمِرْتُ أَنْ أُقاتِلَ النَّاسَ حَتّى يَشْهَدوا أَنْ لا إِلهَ إِلاّ اللهُ وَأَنَّ مُحَمَّداً رَسُولُ اللهِ، وَيُقيمُوا الصَّلاةَ وَيُؤْتُوا الزَّكاةَ، فَإِذا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنّي دِمَاءَهُمْ وَأَمْوالَهُمْ إِلاّ بِحَقِّ الإسْلامِ، وَحِسابُهُمْ عَلى اللهِ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 17 باب فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم
 1. லாஇலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (உண்மையாக வணங்கி வழிபடுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்) என்று சாட்சி கூறி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தை நிறைவேற்றி வரும்வரை மக்களுடன் போரிடு மாறு நான் ஏவப்பட்டுள்ளேன் அதனை அவர்கள் செய்தால் இஸ்லாத்தின் தண்டனைக் குரிய குற்றத்தைத் தவிர அவர்களுடைய இரத்தத்தையும் அவர்களுடைய செல்வத்தை யும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வர். அவர்களுடைய விசாரனை அல்லாஹ்விடம் உள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
இறைநம்பிக்கையில் முதல் அம்சம் லாஇலாஹ இல்லல் லாஹூ (உண்மையாகவே வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ) என்று கூறுவதாகும்
16 – حديث المُسَيَّبِ بْنِ حَزْنٍ قَالَ: لَمّا حَضَرَتْ أَبا طَالِبٍ الْوَفاةُ جاءَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ عِنْدَهُ أَبا جَهْلِ بْنَ هِشامٍ وَعَبْدَ اللهِ بْنَ أَبي أُمَيَّةَ بْنِ المُغِيرَة، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأبي طالِبٍ يا عَمِّ قُلْ لا إِلهَ إِلاّ اللهَ كَلِمَةَ أَشْهَدُ لَكَ بِها عِنْدَ اللهِ، فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللهِ بْنِ أَبي أُمَيَّةَ يا أَبا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِب فَلَمْ يَزَل رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُها عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ المَقالَةِ حَتّى قَالَ أَبو طَالِبٍ، آخِرَ ما كَلَّمَهُمْ، هُوَ عَلى مِلَّة عَبْدِ المُطَّلِبِ، وَأَبى أَنْ يَقُولَ لا إِلهَ إِلاّ الله، فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمّا وَاللهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ ما لَمْ أُنْهَ عَنْكَ فَأَنْزَلَ اللهُ تَعالى فِيهِ (مَا كانَ لِلنَّبِي) الآية
أخرجه البخاري في: 23 كتاب الجنائز: 81 باب إذا قال المشرك عند الموت لا إله إلاّ الله
 1. (நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அப்போது (அங்கே) அவருக்கருகே (மக்காவின் தலைவர்களான) அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமையா இப்னி முகீரா இருப்பதைக் கண்டார்கள்.  அப்போது நபி(ஸல்) அவர்கள் என் பெரிய தந்தையே லாஇலாஹ இல்லல்லாஹூ என்ற (ஓரிறை கொள்கை) வார்த்தையை கூறுங்கள் அதன் மூலம் அல்லாஹ்விடம் உங்களுக்காக சாட்சி கூறுவேன் என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு உமையாவும் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை  புறக்கனிக்கப் போறீர்களா என அப்துல் முத்தலிபிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களோ தொடர்ந்தும் ஓரிறைகொள்கையை எடுத்து கூறிக் கொண்டே இருந்தார்கள். அவ்விருவரும் தாங்கள் கூறியதையே அபூதாலிபிடம் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அபூதாலிப், தான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருப்பதாக கூறி லாஇலாஹ இல்லல்லாஹூ என்ற வார்த்தையை கூற மறுத்து விட்டார்.  அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் (அல்லாஹ்வினால்) தடுக்கப்படும் வரை உங்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவேன் எனக் கூறினார்கள். அப்போது அல்லாஹ் “இணைவைப்பளர் தனது நெருங்கிள உறவின ராக இருப்பினும் அவர்கள் நரகவாசிகள் என்பது தமக்கு தெளிவான பின்னரும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவது இந்த நபிக்கோ நம்பிக்கை கொண்டோருக்கோ தகுமானதல்ல” (9:113) என்ற வசனத்தை இறக்கி வைத்தான். அறிவிப்பவர்: முஸய்யப் பின் ஹஸன்(ரலி)
எச்சந்தேகமுமின்ற அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார், சுவனத்திலும் நுழைவார்
 .17 حديث عُبادَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ شَهِدَ أَنْ لا إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لا شَريكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّ عِيسَى عَبْدُ اللهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ أَلْقاها إِلى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ عَلى مَا كَانَ مِنَ الْعَمَل
وزاد أحد رجال السند مِنْ أَبوَابِ الْجَنَّةِ الثمانِيَةِ أَيُها شَاءَ
أخرجه البخاري في: 60 كتاب الأنبياء: 47 باب قوله: (يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق
 1. உண்மையாக வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத தவிர வேறு கடவுள் இல்லை நிச்சயமாக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூருமாவார் நிச்சயமாக ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதரு மாவார் மேலும் மர்யம் அலை) அவர்களை நோக்கி அல்லாஹ் சொன்ன (ஆகுக) என்ற வார்த்தை (யில் பிறந்தவர்) அவனிடமிருந்து (ஊதப்பட்ட) உயிருமாவார் சுவர்க்கம் என்பது உண்மை நரகம் என்பதும் உண்மை என்று எவர் சாட்சி பகர்கிறாரோ அவருடைய செயலுக்கேற்ப அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவிப்பான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர்: உபாதா(ரலி)
18 – حديث مُعاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه قَالَ: بَيْنا أَنا رَدِيفُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْسَ بَيْني وَبَيْنَهُ إِلاّ أَخِرَةُ الرَّحْلِ، فَقالَ: يا مُعاذ قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ ثُمَّ سَارَ ساعَةً ثُمَّ قَالَ: يا مُعاذ قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ ثُمَّ سارَ سَاعَةً ثُمَّ قَالَ: يا مُعاذ قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ قَالَ: هَلْ تَدْري ما حَقُّ اللهِ عَلى عِبادِهِ قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: حَقُّ اللهِ عَلى عِبادِهِ أَنْ يَعْبُدوهُ وَلا يُشْرِكُوا بِهِ شَيْئاً ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: يا مُعاذُ بْنُ جَبَلٍ قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، فَقَالَ: هَلْ تَدْري ما حَقُّ الْعِبادِ عَلى اللهِ إِذَا فَعَلُوهُ قُلْتُ اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: حَقُّ الْعِبادِ عَلى اللهِ أَنْ لا يُعَذِّبَهُمْ
أخرجه البخاري في: 77 كتاب اللباس: 101 باب إرداف الرجُل خلف الرجُل
 1. (ஒருமுறை) நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். எனக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையில் ஒட்டகச் சேனையுடன் இணைந்த சாய்வுக் கட்டைத்தான் இருந்தது அப்போது நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் என (என்னை) அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ் படியக் காத்திருக்கின்றேன் கூறுங்கள் என்றேன். சற்று நேரம் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்  என (என்னை) நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ் படியக் காத்திருக்கின்றேன கூறுங்கள் என்றேன்.
சற்று நேரம் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்  என (என்னை) நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ்படியக் காத்திருக்கின்றேன் கூறுங்கள் என்றேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீது அடியாருக்குள்ள உரிமை என்னவென்று அறிவீரா எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் நன்கறிந்தவர்கள் என்று நான் கூறினேன். அடியார்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணையாக்கக்கூடாது என்பதே அவர்கள் மீதுள்ள கடமையாகும்  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சற்று நேரம் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்  என (என்னை) நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ்படியக் காத்திருக்கின்றேன கூறுங்கள் என்றேன்.  அவ்வாறு அடியார்கள் செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்வின்  மீதுள்ள உரிமை என்னவென்று அறிவீரா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ் வும் அவன் தூதரும் நன்கறிந்தவர்கள் என்று நான் கூறினேன். அவர்களை வேதனை செய்யாமல்  இருப்பது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
19 – حديث مُعاذ رضي الله عنه قَالَ: كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلى حِمارٍ يُقالُ لَهُ عُفَيْرٌ، فَقَالَ: يَا مُعاذُ هَلْ تَدْري حَقَّ اللهِ عَلى عِبادِهِ وَما حَقُّ الْعِبادِ عَلى اللهِ قُلْتُ اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: فَإِنَّ حَقَّ اللهِ عَلى الْعِبادِ أَنْ يَعْبُدُوهُ وَلا يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقَّ الْعِبادِ عَلى اللهِ أَنْ لا يُعَذِّبَ مَنْ لا يُشْرِكُ بِهِ شَيْئًا فَقُلْتُ يا رَسُولَ اللهِ: أَفَلا أُبَشِّرُ بِهِ النَّاسَ قَالَ: لا تُبَشِّرْهُمْ فَيَتَّكِلُوا
أخرجه البخاري في: 56 كتاب الجهاد: 46 باب اسم الفرس والحمار
 1. நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் உபைர் என அழைக்கப்படும் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் முஆதே! அல்லாஹ்வின் மீது அடியாருக்குள்ள உரிமையும் அடியார் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமையும் என்னவென்று அறிவீரா எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள் என்று நான் கூறினேன். அடியார் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால் அடியார்கள் அல்லாஹ்வையே வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணை வைக்கக் கூடாது அல்லாஹ்வின் மீது அடியாருக்குள்ள உரிமை அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே  இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக் கட்டுமா என நான் கேட்டேன். அவர்களுக்கு நீ நன் மாராயம் கூறாதே அப்படி செய்தால் அவர்கள் (நன்மைகள் செய்யாது) இருந்து விடுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: முஆத் (ரலி)
. 20 – حديث أَنَسِ بْنِ مالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعاذٌ رَديفُهُ عَلى الرَّحْلِ، قَالَ: يا مُعاذُ بْنَ جَبَلٍ قَالَ: لَبَّيْكَ يا رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، قَالَ: يا مُعاذُ قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ ثَلاثًا، قَالَ: ما مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لا إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ صِدْقًا مِنْ قَلْبِهِ إِلاَّ حَرَّمَهُ اللهُ عَلى النَّارِ قَالَ: يا رَسولَ اللهِ أَفَلا أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِروا قَالَ: إِذًا يَتَّكِلُوا وَأَخْبَرَ بِها مُعاذٌ عِنْدَ مَوْتِهِ تَأَثُّما
أخرجه البخاري في: 3 كتاب العلم: 49 باب من خص بالعلم قومًا دون قوم كراهية أن لا يفهموا
 1. ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களின் வாகனத்தில் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபலே என அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ்படியக் காத்திருக்கின்றேன கூறுங்கள் என முஆத் (ரலி) கூறினார் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை மூன்று முறை அழைக்க அவரும் அல்லாஹ்வின் தூதரே கீழ்படியக் காத்திருக்கின்றேன கூறுங்கள் என்று மூன்று முறை கூறினார்கள்.  எவர் ஒருவர்,  உண்மையாக வணங்கப்படத் தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று தனது உள்ளத்தால் உண்மைப்படுத்தி  சாட்சி கூறுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை தடைசெய்து  விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். அல்லாஹ்வின் தூதரே இதனை மக்களுக்கு அறிவிக்கட்டுமா இதைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என முஆத் (ரலி) கூறினார். அப்படியாயின் மக்கள் (நன்மைகள் செய்யாது இதில்) தங்கி விடுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஆத் (ரலி) அவர்கள் (இச்செய்தியை அறிவிக்காமல் மரணிப்பது ) பாவம் எனக்  கருதி மரணத்தின் போது இதனை மக்களுக்கு அறிவித்தார்கள்.  அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
தொகுத்தளித்தவர் : அஷ்ஷெய்க் முஹம்மத் புவாத் அப்துல் பாகீய்
 தமிழில் M.S.M.இம்தியாஸ் யூசுப்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget