சோதனைகளை தாங்கிக் கொள்வதால் ஏற்படும் ஈருல நன்மைகள்!

இறை விசுவாசிகளைப் பரீட்சிக்கவே அல்லாஹ் சோதனையை ஏற்படுத்துகிறான். சோதனையின் போது ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நிற்பவர் யார்? கொள்கையை விட்டு விட்டு வந்த வழியிலேயே திரும்பிச் செல்பவர் யார்? சோதனையின் போது கலக்கமடைந்து கோபப்படுபவர் யார்? எவ்வளவு சோதனை வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு தீனுக்காகப் பாடுபடுபவர் யார்? என அடையாளம் காட்டிடவே அல்லாஹ் சோதனையை ஏற்படுத்துகிறான்.
சோதனை எனும் அல்லாஹ்வின் பரீட்சையில் நாம் வெற்றி பெற்று விட்டால் இவ்வுலகில் மகிழ்ச்சியும், மகத்தான கூலியையும் நிச்சயம் நாம் பெற்றுக் கொள்வோம். சோதனையைத் தாங்கிக் கொண்டமைக்காக அற்பமான இவ்வுலகிலேயே நாம் மகிழ்ச்சியையும், கூலியையும் அடைந்து கொள்வோமென்றால் அமைதி, மன்னிப்பு, ஈடேற்றம், உணவு போன்ற கருவூலங்களின் அதிபதியான அந்த அல்லாஹ்வின் முன்னிலையில் நமக்கான கூலி எப்படியிருக்கும்?

 கண்ணியமான அல்லாஹ் கூறுகிறான்: (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (அல்குர்ஆன் 89: 27‍ 30)

சாந்தியடைந்த ஆத்மா எனும் வார்த்தையின் மூலம் அல்லாஹ்வை முழுமையாக ஈமான் கொண்டு அதன் மூலம் அமைதியடைந்த‌ உள்ளத்தையே அல்லாஹ் இங்கு நாடுகிறான். அந்த உள்ளம் சோதனையைக் கண்டு திடுக்கிடாது. தீயவற்றையும் ஏவாது. அல்லாஹ்வின் ஒவ்வொரு சோதனைக்குப் பின்னரும் நிச்சயமாக மகிழ்ச்சியான செய்தி உண்டு. இது இறைத்தூதர்களின் வரலாறுகள் மூலம் நமக்கு நிறூபிக்கப்பட்ட பேருண்மையாகும்.
தொள்ளாயிரத்தி ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்த இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களையும், அவர்களது அழைப்புப் பணியையும் அந்தக் காலத்து மக்கள் நிராகரித்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் தஃவாப் பணியை தடுத்து நிறுத்தி நபியவர்களை சோதனைக்குள்ளாக்கினார்கள். ஆனால் அல்லாஹ் நபியையும், அவருடன் ஈமான் கொண்ட இறை விசுவாசிகளையும் சோதனையிலிருந்தும், "தூபான்" எனும் வெள்ளத்திலிருந்தும் காப்பாற்றினான். பலவீனர்களாகவும், வெகு சொற்பமாகவும் இருந்த அந்த முஃமின்களை அல்லாஹ் பூமியை ஆளக்கூடியவர்களாக மாற்றினான்.
நபி யஃகூப் (அலை) அவர்கள், தனது மகனான யூஸுப் நபியை பல வருடங்களாகப் பிரிந்திருந்து சோதனையைச் சந்தித்தார்கள். தனது மகனை நினைத்து அழுதழுது நபி யஃகூபுடைய‌ இரண்டு கண்களும் வெளுத்துப் பஞ்சடைந்து விட்டன. பல வருடங்களுக்குப் பின்னர் அல்லாஹ் நபி யஃகூப் (அலை) அவர்களுக்கு பார்வையையும், மகனையும், கண்ணியத்தையும் திரும்ப வழங்கினான்.
நபி யூஸுப் (அலை) அவர்கள் குடும்பத்தை இழந்தும், பெண்களின் சோதனைக்கு ஆளாகியும், சிறை வாசம் அனுபவித்தும் பல சோதனைகளைச் சந்தித்தார்கள். பல வருடங்களுக்குப் பின்னர் அல்லாஹ் அவர்களை விட்டு கவலையையும். துன்பத்தையும் நீக்கினான். பின்னர் எகிப்து தேசத்தின் களஞ்சியங்களுக்குப் பொறுப்புதாரியாகவும் ஆக்கி கண்ணியப்படுத்தினான்.
நபி அய்யூப் (அலை) அவர்கள் பல வருடங்களாக நோயைச் சந்தித்து சோதனைக்குள்ளானார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியத்தையும், இழந்த குடும்பத்தையும் மீட்டிக் கொடுத்தான்.
சோதனையின் போது பொறுமை செய்யும் பொறுமையாளர்களின் சிறந்த வழிகாட்டியாகவே நபி அய்யூப் (அலை) அவர்கள் மாறிப் போனார்கள்.
ரஹ்மானின் உற்ற நண்பர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் நெருப்பைக் கொண்டு சோதித்தான். ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டியதற்காக அவர் நெருப்புக் குண்டத்தினுள் வீசப்படும் போது பொறுமையாளராக இருந்ததால் அந்த நெருப்பு குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் மாறிப் போனது. பின்னர் அல்லாஹ் இப்றாஹீமிடம் அவரது மகனான இஸ்மாயீலை அறுக்குமாறு கட்டளையிட்டுச் சோதித்தான். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தான் கண்ட கனவை உண்மைப்படுத்திய போது அல்லாஹ் மகத்தானதொரு பலியை இஸ்மாயீலுக்குப் பகரமாக ஆக்கி, நபி இப்றாஹீம் (அலை) அவர்களை கண்ணியப்படுத்தினான்.

அல்லாஹ்வுடன் நேரடியாக உரையாடிய நபி மூஸா (அலை) அவர்கள், அக்காலத்து தாகூத்தாக விளங்கிய பிர்அவ்னின் மூலம் பல அடக்கு முறைகளைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் விரோதியான‌ ஆட்சியாளனிடமிருந்து ஏற்பட்ட அனைத்து விதமான சோதனைகளையும் நபியவர்கள் தாங்கிக் கொண்டதால் பிற்காலத்தில் பிர்அவ்னின் ஆட்சியையே அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான்.

எங்களுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்தான வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கும் எவரும் நபியவர்களின் "சோதனை வாழ்வை" இலகுவில் அடையாளம் கண்டு கொள்வார். அவர்களுடைய வாழ்வின் எத்துனை சோதனை? எத்துனை வேதனை? குப்பார்களால் அவர்கள் சந்தித்த துன்ப துயரங்களையும், அவர்கள் மேற்கொண்ட பொறுமையையும் படிக்கும் போது உள்ளம் நெகிழ்ந்து போகிறது சுப்ஹானல்லாஹ்!
ஓரிறைக் கொள்கையை நிலை நாட்ட அவர்கள் தஃவாப் பணி செய்த வேளையிலும், அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்குவதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டமான ஜிஹாதை கையிலெடுத்த வேளையிலும் அவர்கள் பலத்த சோதனைகளைச் சந்தித்தார்கள். பூமியில் பலவீனர்களாக இருந்த அல்லாஹ்வின் தூதருக்கும், அவர்களது தோழர்களுக்கும் அல்லாஹ் "இஸ்லாமிய‌ தேசத்தை" (islamic state) அமைத்துக் கொடுத்தான். கஷ்டம் நீங்கி மகிழ்வான வாழ்வை அவர்கள் அனுபவித்தார்கள்.
அல்லாஹுத்தஆலா உண்மையாளர்களையும், பொறுமையாளர்களையும் அறிந்து கொள்ள இவ்வாறு சோதிக்கிறான். சோதனையின் மூலம் அணிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. பின்னர் பொறுமையாளர்களுக்கு நன்மாராயம் ஏற்படுகிறது. அல்லாஹ்வின் படைப்புக்களில் அல்லாஹ் ஏற்படுத்திய‌ வழிமுறை இதுதான்! முஃமின்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் நிலையானவைகள் அல்ல. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. (அல்குர்ஆன் 94:05,06)

ஒரு இறை விசுவாசி சோதனையைச் சந்திக்கும் போது அவன் பொறுமையைக் கடைப்பிடிக்காமல் விட்டால் அவன் மூன்று பேராபத்துக்களைச் சந்திப்பான்.
01. கொள்கையில் தடுமாற்றத்தைச் சந்திப்பான். இது தோல்வியில் கேவலமான ஒரு நிலையாகும்.
02. சோதனை ஏற்பட்டமைக்காக அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் நிலையைச் சந்திப்பான். இது தோல்வியில் நடுத்தர நிலையாகும்.
03. சோதனை ஏற்பட்டமையால் இறை நிராகரிப்புக்குச் செல்லும் நிலையை அடைவான். (அல்லாஹ் எம்மைக் காப்பானாக!) இன்று எத்தனையோ மனிதர்கள் ஈமான் கொண்டதற்குப் பின்னர் அல்லாஹ்வை நிராகரித்து குப்பார்களாக மாறிப்போயுள்ளார்கள். அவர்கள் இறை நிராகரிப்புக்குச் சென்றமைக்கான காரணத்தை நாம் அலசினால் அவர்கள் சோதனையைத் தாங்காமல் தடுமாறியதையும், இறுதியில் இறை நிராகரிப்பிற்குச் சென்றமையையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

கொள்கைத் தடுமாற்றமாக இருந்தாலும், அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் மனோ நிலையாக இருந்தாலும், இறை நிராகரிப்பிற்குச் செல்லும் பயங்கர நிலையாக இருந்தாலும் இவைகள் அனைத்தும் ஒரு அடியானின் இம்மை, மறுமை வாழ்வை அழிக்கும் கெடுதிகளின் துவக்கமே என்பதில் சந்தேகம் கிடையாது.
சோதனையைச் சுமந்து கொள்ளத் தயாரில்லாத அடியான் முதலில் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விடுகிறான். தூய்மையான அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்கள் நம்முடைய அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு யாதொரு தீங்கேற்படும் பட்சத்தில் உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர். (அல்குர்ஆன் 30:36)

அடியான் தனது இரட்சகனின் அருளில் நம்பிக்கையிழந்தால் அவனை அல்லாஹ் வழிகேடர்களின் பட்டியலில் சேர்த்து விடுகிறான். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: "வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்" என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார். (அல்குர்ஆன் 15: 56)

ஒருவன் வழிகேடனாக இருந்தால் அவன் எப்படி முஃமினாக இருக்க முடியும்? முஃமினும், வழிகேடனும் ஒரு போதும் சமமாக மாட்டார்கள். திருந்தி தவ்பா செய்து கொண்டவரைத் தவிர. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், இரக்கமுடையவனும் என்பதை நாமனைவரும் நன்கறிந்து வைத்துள்ளோம்.
சத்தியக் கொள்கையான ஓரிறைக் கொள்கையை சுமந்தமைக்காகவும், குர்ஆன், ஸுன்னாவை ஓங்கி முழங்கியமைக்காகவும், பலரும் பேசப் பயப்படும் அல்ஜிஹாது பீ ஸபீலில்லாஹ்வையும், இஸ்லாமிய கிலாபாவையும் எடுத்தியம்பியமைக்காகவும் சிறைக்கூடங்களிலும், மறைவிடங்களிலும் குப்பார்களாலும், முர்தத்களாலும் கஷ்டங்களைச் சந்திக்கும் கொள்கை உறவுகளை அல்லாஹ் ஒரு போதும் கைவிடமாட்டான் எனும் உறுதியான‌ எண்ணத்துடன் இதை நிறைவு செய்கிறேன்.
                                                             அஷ்ஷேஹ் :- ஸஹ்றான் ஹாஷிம்


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget