பெண்களின் பெயருக்கு முன்பாக "ஜனாபா" என்று குறிப்பிடலாமா.?

கேள்வி:    நம்மவர்கள் திருமண அழைப்பிதழ்களிலும், கடிதங்கள் எழுதும்போதும் 'ஜனாப் - ஜனாபா' என்று பெயருக்கு முன்னால் எழுதுகின்றனரே! இது சரியா? இதன் அர்த்தம் என்ன.? (குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!)
பதில்:    ஜனாப் என்பது ஃபாரசீகச் சொல். அது அரபு மொழியிலும் பயன்படுத்தப்படுள்ளது. ஜனாப் என்ற சொல்லுக்கு சமூகம் என்று பொருள். இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறைவனின் சமூகம் என்பதற்கு 'இலா ஜனாபிஹி' என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
பழங்காலத்தில் தமிழகத்தில் மற்றும் இலங்கையிலும் கடிதம் எழுதும்போது 'சமூகம்' என்று மரியாதை காட்டி எழுதியிருக்கிறார்கள். நம்மில் பலர் 'ஜனாப்' என்ற சொல் ஆண்பாலை குறிப்பதாக எண்ணிக்கொண்டு, அதற்குப் பெண்பாலாக "ஜனாபா" என்று பயன்படுத்துகின்றனர். இது தவறு.
"ஜனாபா" என்ற அரபிச்சொல்லுக்கு "பெருந்தொடக்கு" என்று பொருள். எனவே பெண்களின் பெயருக்கு முன்பாக "ஜனாபா" என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் "ஜனாப்" என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும். சமூகம் என்பதன் அர்த்தம் "பெரியோர் முன்னிலை" - "பெரியோர் மீது காட்டும் மரியாதைச் சொல்"   

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget