தெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளை பிரார்தித்தவனாக!
பிறையினுடைய விவகாரம் இன்று பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பேசப்படுவதை காண்கிறோம்.
பிறையினுடைய விவகாரம் உண்மையில் குர்ஆன் சுன்னாவில் தெளிவான ஓர் விடையமே. இருந்தபோதிலும் இம் மஸ்அலாவில் சர்வதேசப் பிறை என்றும் நாட்டுக்கு நாடு உள்ளூர் பிறை என்றும் பிரதானமான இரண்டு கருத்துக்கள் இருந்துவருகின்றது.

அதில் நமது ஆய்வின் பிரகாரம் நாம் சர்வதேசப் பிறையை 100 வீதம் சரி காண்கிறோம்.
சர்வதேச பிறை என்பது உலகத்தின் எப் பாகத்தில் பிறை தென்பட்டதாக சட்சியத்தின் அடிப்படையில் செய்தி வந்தாலும் அந்தப் பிறையை உலக முஸ்லீம்கள் அனைவரும் அவர்கள் மாதத்தை அடையும் போதோ அல்லது முடிக்கும் போதோ எடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதாகும்.....

ஆதாரம்:- 01

🌒பிறையை கண்டு நோன்பு பிடியுங்கள் பிறையை கண்டு நோன்பை விடுங்கள் பிறை மறைக்கப்பட்டால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் (புஹாரி)

🌛இங்கு பிறையை கண்டு நோன்பு வையுங்கள் என்றுதான் கூறப்படுகிறதே ஒழிய அந்தந்த நாட்டில் காணுங்கள், இந்த இந்த பகுதியில் காணுங்கள் என்றில்லை. குர்ஆனோ ஹதீஸோ நாடுகளாக எல்லை போடவில்லை. அது நாமாக ஏற்படுத்திக் கொண்டது. எனவே பிறை ஒன்றுதான், தலைப்பிறை ஒரு மாதத்தில் ஒரு முறைதான் தென்படும், அதனால் எங்கு முதல் பிறை தென்படுகிறதோ அந்தப் பிறையையே உலக முஸ்லீம்கள் மாதத்தை ஆரம்பிக்கவும் மாதத்தை முடிக்கவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

🌗பிறையை நாம் மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்துவிட்டே எதிர்பார்க்க வேண்டும்.
உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 02:186)

மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்யும் அச்சமையம் எம் நாட்டிலோ எம் நேரத்தை ஒத்த நாடுகளிளோ பிறை தென்படவில்லை என வைத்துக் கொண்டால் நமக்கு பின் வருகிற ஏதாவது ஒரு நாட்டில் பிறை தென்பட வாய்ப்பு உண்டு.
அப்படி தென்பட்ட செய்தி சாட்சிகளின் அடிப்படையில் ஊர்ஜிதமான முறையில் கிடைக்கப்பெற்றால் அதுவே எல்லா முஸ்லீம்களுக்கும் மாதத்தை ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் பிறையாகும்... அதை ஏற்று நோன்பெடுப்பதும் நோன்பை விடுவதும் கடமையாகும்.

ஆதாரம்:- 02

நபித்தோழர் ஒருவர் கூறுகின்றார் எங்களுக்கு ஷவ்வாலின் பிறை மறைக்கப்பட்டிருந்ததால் நாங்கள் நோன்பாளியாக கலையை அடைந்தோம் அப்போது பகலின் இறுதியில் ஒரு பிரயாணக் கூட்டம் வந்து அவர்கள் நேற்று பிறையை கண்டதாக நபிகளாரிடம் சாட்சி சொன்னார்கள்.அப்போது நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுகைக்கு வெளியேறுமாறும் நபிகளார் மக்களுக்கு கட்டளை இட்டார்கள்.. (முஸன்னப் இப்னு அபீ ஷைபா ---------------9461/முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்- 📚7339)

இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர் வழியாக வந்திருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வுக்குட்படுத்தினால் இதில் நபிகளார் இட்ட கட்டளை நபிகளாரையும் ஸஹாபாக்களையுமே தெளிவாக குறிக்கின்றது. காரணம் நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் நோன்போடு இருந்தார்கள் என்பதே இந்த ஹதீஸின் ஆரம்பமாகும்.

இங்கு தமது பிரதேசத்தில் பிறை காணப்படாத பொழுது வெளியூரில் இருந்து பிறை கண்டதாக வந்த சாட்சியத்தை நபிகளார் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த நிலைப்பாடே பிறை விடையத்தில் குர்ஆன் ஹதீஸை ஒத்ததாகும்.

சர்வதேசப் பிறையை மறுக்க அனேகரிடம் எழுகின்ற கேள்வி என்னவெனில் நமக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையில் நேர வித்தியாசமுண்டே???

பதில்👉👉உலக நாடுகள் நேர அளவில் வித்தியாசப்படுவது உண்மையிலும் உண்மையே அதனை நாம் ஏற்றே நம் நிலைப்பாட்டை எவ்வித நடைமுறை சிக்கலுமின்றி முன்வைக்கின்றோம்..

உதாரணமாக இலங்கையில் இருப்பவர்கள் ஞாயிரு மாலை 06.00 மணியளவில் பிறையை பார்கிறோம்🌙பிறை தென்படவில்லை... அதே நேரம் இலங்கைக்கு அடுத்தடுத்து வரும் நாடுகள் 👉🏿உதாரணமாக:-  சவூதியில் இருப்பவர்கள் பிற்பகல் 3.30 மணியில் இருப்பார்கள் இன்னும் சில நாடுகள் பிப.2.00, 1.00,12.00,காலை10.00, 09.00, 08.00 .......இப்படி இந்த நாடுகளில் இருப்பவர்கள் இன்னும் பிறை பார்கும் நேரத்தை அடையாமலிருப்பார்கள்...
இதில் எந்த சிக்கலும் இல்லை நேரம்தான் நமக்கும் அவர்களுக்குமிடையில் வித்தியாசம்.....  நாள் அல்ல எவ்வளவுதான் நேர வித்தியாசம் ஏற்பட்டாலும் அது கூடி குறையுமே ஒழிய நாள் வித்தியாசமாகாது. 

நான் மேலே குறிப்பிட்ட நேர வரையறையில் இருப்பவர்களும் அதே ஞாயிற்றுக் கிழமையில்தான் இருப்பார்கள், இதில் என்ன சிக்கலுண்டு? நாம் பிறை பார்த்துவிட்டு தென்படாததால் இரவு 10.00 மணியில் இருப்போம் அப்போதுதான் சவூதியில் பிறை பார்பார்கள் அதே ஞாயிரு பிறை தென்பட்டவுடன் பிறையினுடைய செய்தியை எமக்கு அறிவிப்பார்கள் நாமும் அந்த சாட்சியத்தை நபிகளார் மேற்சொன்ன செய்தியில் ஏற்றது போல் ஏற்றுக்கொள்வோம்.. 

இப்பொழுது இரண்டு பேறும் திங்கள் சஹர் சொய்வோம் நாம் சஹர் செய்து 02.30 மணித்தியாலத்தின் பின் அவர்கள் சஹர் செய்வார்கள் எல்லாம் ஞாயிருதான்....இதில் என்ன குழப்பம் நமக்கு??? இப்படித்தான் மற்றைய நாடுகளும் நேரத்தால் வேறுபடும்.

அது போன்றதொரு வாதம்தான் நம்மவர்கள் அமெரிக்க நேரம் நம்மை விட 12.00 மணித்தியாளங்கள் வித்தியாசம் என்று அது சாத்தியமில்லை என்பார்கள்.

இது கூட நம்மவர்களின் புரிதலில் ஏற்பட்ட தவரேயாகும்... அமெரிக்காவுக்கும் நமக்கும் நேரம்தான் வித்தியாசம் உதாரணம் நாம் திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியில் இருக்கும் பொழுது அமெரிக்கர்கள் அப்பொழுதுதான் திங்கட்கிழமை அதிகாலை 12.00 மணிக்குள் நுழைகிறார்கள். நாம் திங்கள் மாலை 06.00 மணிக்கு பிறை பார்கும் போது அவர்கள் திங்கள் காலை 06.00 மணிக்கு அதே தினத்தில்தான் இருப்பார்கள். இவ் வேளை நமக்கு பிறை தென்படாமல் அமெரிகாவில் பிறை தென்பட்டுவிட்டால்.. அமெரிக்கர்கள் பிறை காணும் நேரத்தில் நாம் அடுத்த நாள் செவ்வாய் காலையை 30ஆக பூரணப்படுத்தி அந்த செய்தி கிடைக்காதவரைக்கும் நோன்போடு இருப்போம்...

செய்தி வந்துவிட்டால் நோன்பை விட வேண்டும் அடுத்த நாள் பெருநாள் எடுக்க வேண்டும்..அதற்குறிய ஆதாரம் மேலே குறிப்பிட்ட பிரயாணக்கூட்டத்தின் செய்தியாகும்...அந்த மாதம் நோன்பை ஆரம்பிக்கும் மாதமெனில் தகவல் கிடைத்தவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நாம் சாப்பாட்டை நிறுத்தி செய்தி கிடைத்த நேரத்திலிருந்து நோன்பை தொடர வேண்டும்...இதற்கு ஆதாரம் அரபா நோன்பின் செய்தி....

இப்படி சர்வதேசப் பிறையில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலுண்டு சிந்தியுங்கள் நண்பர்களே!!! நமது நாட்டில்தான் பிறைபார்க்க வேண்டும் என நபிகளார் எந்த எல்லையும் இடவில்லை என்பதே உண்மையிலும் உண்மை......
01-நமக்கு லைலதுல் கத்ர் இரவு ஒரு நாள்தான்.
02-நமக்கு அரபா தினம் ஒரு நாள்தான்.
03- நமக்கு வெள்ளிக்கிழமையும் ஒரு நாள்தான்.
04- நமது உலகம் அழிவதும் ஒரு நாள்தான்.

தலைப் பிறை மட்டும் எப்படி இரண்டாக முடியும்??? அல்லது இரு தலைப்பிறைகள்தான் பிறக்க சாத்தியமுண்டா??
எம் அனைவருக்கும் இம் மஸ்அலாவில் போதிய தெளிவை வல்ல இறைவன் வழங்கிடுவானாக!           ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.

                                                                                   ஆக்கம்-ஜே.எம்.சாபித் (ஷரயி)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget