பயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.?

நாம் பயணம் செய்யும் போது விரும்பினால் நோன்பை நோற்ற நிலையில் பயணம் செல்லலாம். இல்லா விட்டால் நோன்பை நோற்காமல் விட்டு, விட்டு ரமலானுக்கு பிறகு அந்த நோன்பை களா செய்யலாம்.

“ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!' என்று கூறினார்கள். (புகாரி 1946)

மேலும் “ அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள். ( புகாரி 1947)

மேலும் “ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்பான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்க வில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது! 

'நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பைவிட்டும் இருக்கிறார்கள். (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர் விட்டு விடவும் செய்யலாம்!' (புகாரி 1948)

எனவே பயணத்தில் செல்பவர் சக்தியுள்ளவராக இருப்பாரேயானால் அவர் விரும்பினால் நோன்பை நோற்றுக் கொள்ளலாம். பலகீனமானவர் என்றால் பயணத்தில் நோன்பை நோற்காமல் ஊரில் இருக்கும் போது அந்த நோன்பை களா செய்து கொள்ளலாம்.

பஸ் ஓட்டுனர் (டிரைவர்), அல்லது தொழிலே ஓட்டுனர் (டிரைவர்) என்றால் அவர்கள் ரமலானில் நோன்பை பிடிப்பதே பொருத்தமாகும். ஏன் என்றால் இப்படி பட்டவர்கள் ரமலானிலும் பயணம் தான் ரமலான் அல்லாத காலத்திலும் பயணம் தான்.
எனவே பயணிகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்திக் கொண்டு நோன்பு விடயத்தில் நடந்து கொள்ளவும். அல்லாஹ் போதுமானவன்.

                                                                                      மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget