ரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.?

மறுமை நாளில் முஃமின்களுக்கு கிடைக்க கூடிய அதி உயர்ந்த பரிசு தான் சுவர்க்கமாகும்.

இந்த சுவர்க்கத்திற்குள் பல படித்தரங்கள் உள்ளன.

மேலும் சுவர்கத்திற்கு எட்டு வாசல்களும் உள்ளன.

இந்த வாசல்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்காக திறந்து இருக்கும்.

நோன்பாளிகளை கண்ணியப் படுத்தும் விதமாக பல சிறப்புகளுக்கு மத்தியில் இப்படியான நிகழ்வுகளையும் காணலாம்.

பின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.

“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 3277, முஸ்லிம் 2121)

மேலும்“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 1899)

சுவர்க்கத்திற்கு பாபுஸ் ஸலாஹ் (தொழுகை வாசல்) என்று ஒரு வாசல் உள்ளது . அதில் தொழுகையாளிகள் மட்டும் அதன் வாசல் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.  

அதே போல் பாபுஸ் ஸதகா (தர்ம வாசல்) அதில்தர்மம் செய்தவர்கள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.

அதே போல் பாபுல் ஜிஹாத் (போராளிகளின் வாசல்) அதில் அல்லாஹ்விற்காக போராட்டம் செய்த தியாகிகள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள். 

அதே போல் பாபுர் ரய்யான் (நோன்பாளிகள் வாசல்) நோன்பு பிடித்தவர்கள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.

“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் 'ரய்யான்' என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.(புகாரி 3257)

எனவே ரமலான் காலத்தில் நோன்பாளிக்காக சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டு, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள்.

அதே போல நாம் வுளு செய்து விட்டு வுளுவுடைய து ஆவை ஒதினால் அந்த நேரத்தில் அதற்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும் என்பதையும் நபியவர்கள் கூறினார்கள்.

நபியவர்கள் காட்டித் தந்த அனைத்து அமல்களையும் தொடராக செய்து அல்லாஹ்வுடைய அருளை பெறுவோமாக !


                                                                                               மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget