நோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்?

வினா: நோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று கூறுகின்றார்களே ! இது சரியானதுதானா.?   

விடை:
''அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பால் கஷ்டப்படுத்தமாட்டான்'' (சூறா அல் - பகறா 286)

எனவே நோன்பு பிடிக்க சக்தியற்ற முதியவர்கள் நோன்பை பிடிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் எந்த ஒரு ஆதாரமான ஹதீஸ்களும் வரவும் இல்லை.

ஒருவர் தனக்கு கடமையான ஒன்றைவிட்டால் அதற்கு பிராயச்சித்தம் செய்யலாம். நோன்பு பிடிக்க சக்தியே இல்லாத முதியவர் அவருக்கு நோன்பு கடமை இல்லை. எனவே தன் மீது கடமை இல்லாத ஒன்றைச் செய்யாததனால் அதற்குப் பிராயச் சித்தமாக ஆகாரம் வழங்க வேண்டும் என்பது அர்த்தமற்ற வாதமாகும்.

எனவே நோன்பு நோற்க சக்தி இல்லாத முதியவர்கள் கழாச் செய்வதோ, ஆகாரம் வழங்குவதோ கடமை இல்லை.
வயதான முதியவர்களுக்கு ஐவேளை தொழுகை இறுதிவரை கடமையாக உள்ளதால் அதே போன்று நோன்பு கடமையானதாக இருக்கலாம் தானே என்று சிலர் கேட்கலாம்.

தொழுகையைப் பொறுத்தவரை பருவமடைந்த அனைவரும் எல்லா நிலையிலும் எப்போதும் தொழ வேண்டும். அவர்கள் அவர்களின் சக்திக்கேற்ப நின்றோ, இருந்தோ, சாய்ந்தோ தொழுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறைந்துள்ளது.

ஆனால் ஸகாத், ஹஜ், நோன்பு இது மூன்றும் அனைவருக்கும் கடமையானது அல்ல. இவ் ஒவ்வொன்றிற்கும் அதனைச் செய்வதற்கென சக்தியை அவன் பெற்றால் தான் அவன் மீது கடமையாகும். அந்த சக்தியைப் பெறாதவருக்கு இவைகள் கடமையாகமாட்டாது.

எனவே தொழுகையோடு ஒப்பிட்டு கியாஸ் என்ற அடிப்படையில் நோன்பிற்கும் அதே சட்டத்தை கொடுக்கக் கூடாது.
 
                                                                     T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget