நோன்பாளி அதிகமாக வாயை சுத்தப்படுத்துவது நபிவழியாகும்

ஆமிர் பின் ரபீஆ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னால் எண்ணி முடிக்க முடியாத அளவிற்கு மிக அதிகமாக நபிகளார் (ஸல்) அவர்கள் (மிஸ்வாக்) வாயை சுத்தம் செய்து கொள்வார்கள்.. புஹாரி.

நோன்பு காலங்களில் காலை வேளையிலோ பகல், மாலை என எந்நேரமாக இருப்பினும் வாயை, பற்களை சுத்தம் செய்து பிறருக்கு எவ்வித தொந்தரவும் இல்லாது இருப்பதே நபிவழியாகும்.

எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

இந்த நபி மொழியை வைத்துக்கொண்டு இது ஏன் சொல்லப்பட்டது என்ற பின்னணி தெரியாது வாயை துர்நாற்றத்துடன் வைத்திருப்பது சிறந்த காரியம் என்றும் அது அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தரும் ஒரு செயலாக பார்ப்பதுவும் சாதாரண ஒரு மனிதனின் பொதுப் புத்தி கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்ற ஓர் அம்சமாகும்.

பல விடுத்தம் வாயை சுத்தம் செய்தாலும் எதுவுமே உண்ணாத பட்சத்தில் நமது குடல் காய்ந்து தவிர்க்க முடியாத நிர்ப்பந்த நிலையில் எம்மையறியாமலே வெளிப்படுகின்ற அந்த வாடையையே இந்த நபி மொழி குறித்து நிற்கிறதே தவிர .. சுத்தம் ஈமானின் பாதி என முழங்கும் மார்க்கமே அசுத்தத்தையும் துர்நாற்றத்தையும் ஊக்கு விக்கின்றது என்ற பிழையான புரிதல்களை மக்களிடையே கொண்டு செல்லாது மேற்சொல்லப்பட்ட நபிமொழியோடு இதனை இணைத்து நோக்குவதே மிகப்பொருத்தமாகும்.

இமாம் அபூ பக்ர் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் எமது மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் நோன்பாளியின் வாயின் வாடையை நபிகளார் புகழ்ந்தது நோன்பாளியோடு ஒருவர் பேசும் போது அவர் நோன்பாளியின் வாய் வாடையை அருவருப்பாகக் கருதிவிடக்கூடாது என்பற்காக கூறினார்களே தவிர வாயை சுத்தம் செய்யாமல் இருப்பதனை ஊக்குவிக்கும் நோக்கிலல்ல..
என்று கூறியுள்ளார்கள்.

நோன்பாளியின் இயல்பான வாய்வாடையே அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும் என்றால் அதுவே சுத்தப்படுத்தப்பட்டு தூய்மையான நறுமணத்துடன் இருக்கும் போது அந்த நோன்பாளியின் வாய் வாடை அதை விட பன்மடங்கு அல்லாஹ்விடத்தில் சிறந்ததாகவே இருக்கும்.

                                                                                   - அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget