July 2018

முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர்.
ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் பெண்கள் இப்போது அணியும் ஆடையைத்தான் முப்பது வருடங்களுக்கு முன்னரும் அணிந்தார்களா?
குறிப்பிட்ட சில காலங்களுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற நிலை இந்த சமுதாயத்தில் இருந்துள்ளது. அவர்கள் மேலாடை போடும் போது நீங்கள் இதற்கு முன் போடவில்லை, இப்போது ஏன் போடுகின்றீர்கள்? எனக் கேட்டால் அது நியாயமாகுமா?
அபாயா அந்நிய நாட்டு ஆடை என்கின்றனர். அரபுக் கலாசாரம் என்றும் விமர்சிக்கின்றனர்;. அபாயா அந்நிய கலாசாரம் என்றால் இன்றைய எமது இலங்கை மக்கள் அணியும் ஆடையமைப்பு இலங்கைக் கலாசாரமா?
ஐரோப்பிய கலாசார ஆடையை அணிந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையை அந்நிய அரபு கலாசார ஆடை என்று கூறுவது அறியாமை அல்லவா?
இந்த ஆடையமைப்பு அரேபிய கலாசாரம் என்பதையும் தாண்டி உலகளாவிய அமைப்பில் முஸ்லிம்; பெண்கள் அணியும் ஆடையாக மாறிவிட்ட பின்னரும் இப்படிப்பேசுவது அறியாமையையும், காழ்ப்புணர்வையும்தான் வெளிப்படுத்துகின்றது.
வரலாற்று ஓட்டத்தில் ஹிஜாப்:
ஹிஜாப் என்றால் மறைப்பு என்பது அர்த்தமாகும். ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைத்து ஆடை அணியும் முறைக்கே இப்படிக் கூறப்படும். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு முன்னரே, மோஸஸ் காலத்துக்கு முதல் கொண்டே முகம் மூடி, முக்காடிட்டு ஆடை அணியும் வழமை இருந்துள்ளது. முக்காட்டை நீக்குவது பெண்ணை இழிவுபடுத்துவதின் அடையாளமாக உள்ளது.
பழைய ஏற்பாட்டில் ஹிஜாப்:
இதே வேளை, முக்காடிட்டு மறைத்துக் கொள்வது நல்ல பெண்களின் அடையாளமாக பைபிள் பேசுகின்றது.
‘ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள்.’ (ஆதியாகாமம்: 24:65)
இந்த வசனம் அரபு பைபிளில்: பஅகததில் புர்கா வத கத்தத்’ – புர்காவை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டாள் என்று எழுதப்பட்டுள்ளது.
(The Universal Jewish Encyclopaedia) இந்த வார்த்தை முகத்தை மூடும் துணியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் என்ற விளக்கத்தைத் தருகின்றது. The International Standard BIBLE Encyclopaedia – 1915/5/3047.
அந்தக் காலத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பெண்கள் முகத்தை மூடப் பயன்படுத்தும் துணியை இது குறிக்கும் என்று குறிப்பிடுகின்றது. இதிலிருந்து சுதந்திரமான நல்ல பெண்கள் முகத்தை மூடுவதை வழமையாகக் கொண்டிருந்தனர் என்பதை அறியலாம்.
முக்காட்டை நீக்குவது அவமானத்தின் சின்னமாகப் பார்க்கப்பட்டுள்ளது
‘ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையிலிருக்கவேண்டும்,’ (எண்ணாகமம்: 5:18)
விபச்சாரம் செய்த பெண்களின் முக்காட்டை நீக்குவது அவளைக் கேவலப்படுத்துவதாக அமைகின்றது.
பழைய ஏற்பாட்டின் மற்றும் பல வசனங்கள் ஆடைக் குறைப்பு என்பது இழிவின் அடையாளமாகப் பேசப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டில் ஹிஜாப்:
புதிய ஏற்பாடு ஹிஜாபை இஸ்லாத்தை விட வலியுறுத்தி ஒரு பெண் தனது தலையை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றது.
‘ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளா விட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.’ (1 கொரிந்தியர்: 11:6)
முக்காடு போடாவிட்டால் மொட்டை அடிக்கச் சொல்கின்றது. பைபிளின் படி மொட்டை அடிப்பது கேவலமானதாகும். அதே போல் ஒரு பெண் தலையைத் திறந்திருப்பதும் கேவலமானதாகும்.
இந்து, பௌத்த மதங்களில் ஹிஜாப்:
இந்து மதமும் பெண் தன் உடல் அழகைக் காட்டக் கூடாது. குனிந்த பார்வையுடன் இருக்க வேண்டும் என்று போதிக்கின்றது. உனக்ககாகப் படைத்த உன் சீமாட்டிக்குக் கூறு. உன்னுடைய கண்களைத் தாழ்வாக்கிக் கொள். பார்வையை மேல் நோக்காதே! அது உன் பாதத்தை நோக்கியதாக இருக்கட்டும். பிறர் எவரும் உன் வெளித் தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்! (ரிக் வேதம், நூல் 08, வேத வரி 33, மந்திரம் 19, 
பௌத்தத்தின் அடிப்படையில் ஒரு பெண் தனது கரண்டைக் காலுக்கு மேல் உயரும் விதத்தில் ஆடை அணியக் கூடாது. அதே வேளை, முகத்துக்குக் கீழே கழுத்துப் பகுதிகள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். பெண் தன்னை மறைத்துக் கொள்வதைத்தான் ஹிஜாப் என இஸ்லாம் கூறுகின்றது.
முஸ்லிம் பெண்களின் ஆடை:
ஒரு முஸ்லிம் பெண் இன்று அவள் அணியும் அபாயா என்கின்ற இந்த ஆடையைத்தான் அணிய வேண்டும் என்பது கட்டாயமன்று. ஒரு பெண் அணியும் ஆடை,
  • மெல்லியதாகவோ,
  • இறுக்கமானதாகவோ,
  • ஆணின் ஆடை போன்றோ,
  • அதிக வாசனை பூசியதாகவோ,
  • அரை குறையானதாகவோ இருக்கக் கூடாது.
இந்த ஒழுங்கு முறைக்கு அபாயா என்ற இந்த வடிவமைப்புதான் வசதியானதாக உள்ளது. அதை அணிய வேண்டாம் என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. அத்துடன் இந்த ஆடை அமைப்பு ஒன்றும் புதியதும் கிடையாது. முஸ்லிம் நாடுகளில் காலாகாலமாக அணியப்பட்டு வருவதுதான். இலங்கைக்கு சற்று தாமதித்து அறிமுகமாகியுள்ளது. இலங்கையிலும் கன்னியாஸ்திரிகள் இதற்கு ஒப்பான ஆடையைத்தான் அணிகின்றனர். எனவே, இந்த ஆடை முறையை எதிர்ப்பது இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வும், போதிய புரிதல் இல்லாத செயலுமாகும்.
பொதுவான பார்வை:
இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைப் பேணும் அடிப்படையில்தான் ஆடை அணிந்து வந்துள்ளனர். ஒரு சமூகம் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினால் அடுத்த சமூகம் அதற்காக வெறுப்படைய வேண்டியதில்லை. தமது தனித்துவத்தைப் பேணத் தெரியாதவர்கள் அடுத்தவர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்க முயலக் கூடாது.
ஒரு பௌத்த மதகுரு அணியும் ஆடை அமைப்பும் அதன் நிறமும் ஒருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எனவே, அவர் அதை அணியாமல் இருக்கலாம். ஆனால், அதை அவர் எதிர்க்க முடியாது. அந்த ஆடை பிடிக்காவிட்டாலும் அந்த ஆடையை அணிந்தவரை அவசியம் மதித்து கண்ணியப் படுத்தத்தான் வேண்டும்.
ஒரு பூசாரி மேல் சட்டை போடாமல் இருப்பது பார்ப்பதற்கு நாகரிகமற்ற போக்காக ஒருவருக்குப் படலாம். ஆனால், அந்த அடையாளத் துடன் ஒருவரைக் கண்டால் அவர் ஒரு கொள்கை அடிப்படையில் அப்படி ஆடை அணிவதால் அவரை மதிப்பது மற்றவர்கள் மீது கடமையாகின்றது.
இவ்வாறே கிறிஸ்தவ மத போதகர்கள், கன்னியாஸ்திரிகள் அணியும் ஆடை ஒருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவர்களை அகௌரவப்படுத்த முடியாது. அவர்கள் தமது மதத்தின் மீது கொண்ட பற்றுதலை மதித்து அவர்களை கண்ணியப்படுத்துவது அனைவரின் மீதும் கடமையாகின்றது.
இவ்வாறே இலங்கையில் உள்ள ‘வெத்தா’ எனப்படும் வேடுவ இன மக்கள் கச்சை மட்டும் அணிந்து கையில் கோடரி வைத்திருப்பர். நாம் யாரும் இப்படி இருக்க விரும்ப மாட்டோம். என்றாலும் இவ்வாறு ஒரு வேடுவ இன மக்களைக் கண்டால் அவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்குவது நமது கடமையல்லவா?
இவ்வாறே ஒரு முஸ்லிம் பெண் அணியும் அபாயாவோ அதன் நிறமோ உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஒருவர் தான் அணியும் ஆடை அனைவருக்கும் பிடித்த முறையில் அணிய முடியாது. இருந்தாலும் ஒழுக்கத்தையும் தனது மார்க்கத்தின் மீது கொண்ட பற்றுதலின் அடிப்படையிலும் இவ்வாறு ஆடை அணிபவர்களை மதித்து நடக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இதை அனைவரும் உணர்ந்து நடந்து கொண்டால் நல்லதொரு நல்லிணக்க நிலை உருவாகும்.
எல்லா மதங்களும் பெண்களுக்கான ஒழுக்கமான ஆடையமைப்பை வலியுறுத்தியுள்ளன. ஏனைய சமயத் தலைவர்கள் தமது மத போதனைகளுக்கு ஏற்ப தமது மதப் பெண்களை ஆடையணிவிப்பதில் தோற்றுப் போயுள்ளனர். தமது மதப் பெண்களை மாற்ற முடியாது என்ற நிலையில் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய அடிப்படையில் ஆடை அணிவதை எதிர்த்து தமது தோல்வி மனப்பான்மையை வெளிப்படுத்தி வருவது வேதனைக்குரியதாகும்.
எனவே, அபாயாவை எதிர்ப்பதை விட்டு விட்டு தத்தமது சமூகப் பெண்களின் ஆடையமைப்பை ஒழுக்கமானதாக அவரவர் மதக் கலாசாரத்திற்கு ஏற்றதாக மாற்ற முயல்வதே ஆரோக்கியமானதாகும்.
                                                                                                         அஷ்ஷேஹ் இஸ்மாயில் ஸலபி 

இவ்வாரான விழாக்களில் பங்கு பெற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: அபூ தாவூத்
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் மாற்று மதத்தவர்கள் வாழும் ஒரு பூமியில் வாழ்ந்து அவர்களின் விழாக்கள், நிகழ்வுகளில் பங்கு கொண்டால் மரணிக்கும் வரை அந்த கூட்டத்திற்கு ஒப்பாகி நாளை மறுமையில் நஷ்டமடைவார்.  
இந்த மாதிரியான விழாக்களில் பங்கு கொள்வது அவர்களை உற்ற நேசர்களாக எடுத்துக் கொள்ளும் பாவத்தை சம்பதிக்க வேண்டி வரும்
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5:51)
ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும் உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்;…(60:01)

பெருநாள் விழாக்கள் என்பது அவர்களது சமயம் சார்ந்த விடயம் அது ஒரு சாதாரன வழமையோ, உலக காரியமோ அல்ல. காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாற்கள் உள்ளன. இது எமது பெருநாள் ‘ என்றார்கள். எனவே அவர்களது பெருநாள் என்பது அவர்களது இறை நிராகரிப்பு மற்றும் இணைவைப்பபை பிரதிபளிக்கக் கூடியதாக இருக்கும்.
அன்றியும் அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரியம் நடக்கும் இடத்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். (25:72)

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் உலமாக்கள் அன்னிய மதத்தவர்களின் பெருநாள் விழாக்களை குறிக்கின்றது என்கின்றனர்.
மேலும் இந்த பெருநாள்களில் வாழ்த்து அட்டைகளை பகிர்வது, அவற்றை விற்பனை செய்வது, மேலும் அவர்களது பெருநாள் தினங்களில் அவர்களது வீடுகளை அலங்கரிக்கும் மின் விளக்குகளை காட்சிப்படுத்துவது, விற்பனை செய்வது, கிரிஸ்மஸ் மரங்கள், பலூன்கள், ஏனைய அவர்களது உணவு பண்டங்களை பரிமாருவது, விற்பனை செய்வது என எல்லா வகையான செயற்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டிய தடை செய்யப்பட்ட விடயங்களாகும்…
                                                                                                 மௌலவி ரிஸ்கான் மதனி

ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும் . இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான்.
“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி : 1773
“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1521
“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520
இத்தகைய நன்மைகளை பெற்றுத்தரக்கூடிய , பாவங்களுக்கு பரிகாரமான , பெண்களின் ஜிஹாத் என்று வரணிக்கபப்ட்ட ஹஜ்ஜின் நன்மைகளை அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளினால் ஹாஜிகள் இழந்து விடுகிறார்கள்.
இதனை சிறந்த உதாரணத்துடன் விளங்குவதாக இருந்தால் ஒரு மனிதன் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து ஒரு வீட்டை கட்டுகின்றான் அதிலே நல்ல வண்ணங்களை பூசுகின்றான், அழகான மின் விளக்குகளை பொருத்துகின்றான் , உயர் ரக தண்ணீர் குழாய்களை அமைக்கின்றான் .

இவற்றில் எதுவுமே அவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையெனில் அவன் எவ்வளவு கைசேதம் அடைவானோ அதைவிட மிகப்பெரும் கைசேதம் உடல் உழைப்புடன் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து மிகப்பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஹஜ்ஜுக்கு சென்று அதன் நன்மையை முழுமையாக அடையாத ஹாஜி.

எனவே இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹாஜிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதின் மூலம் தவறுகளில் விழாமல் அவர்களை தடுப்பதோடு அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள்
1. அல்லாஹ்விற்காக அந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்றுவதுடன்
அல்லாஹ்வுடைய தூதர் காண்பித்து தந்த அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்
சிலர் பகட்டை வெளிப்படுத்தும் நோக்கில் ஊராரை அழைத்து விருந்துபசாரம் செய்வதும் , மேளதாளங்களோடு , தோரணங்களை தொங்க விட்டு மாலை அணிந்து ஊர்வலம் செல்வதும் ஊர் முழுக்க போஸ்டர்கள் அடிப்பது கட்டவுட்கள் வைப்பதும் இது போன்ற மார்க்கம் காண்பித்து தராத சில செயல்பாடுகளில் ஹஜ்ஜுக்கு செல்லும் முன்பும் , சென்று திரும்பும் போதும் இவ்வாறு செய்கின்றனர் இது போன்ற செயல்களினால் உளத்தூய்மை (இக்லாஸ்) அடிபட்டு முகஸ்துதி மேலோங்கி ஹஜ்ஜின் மூலம் அடையும் நன்மைகளை இழந்துவிடுகிறார் .
2.மற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றவில்லையெனில் அல்லது அதிலே குறை ஏற்பட்டிருப்பின் அவர்களிடம் அதற்காக வருத்தம் தெரிவித்து விட்டு ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் . குறிப்பாக (பெற்றோர்கள் , கணவன் மனைவி , இரத்த பந்த உறவினர்கள், நண்பர்கள் )
3. ஹஜ் என்ற இந்த இபாதத்தை நிறவேற்ற நாடுபவர்கள் அது குறித்த விஷயங்களை குர் ஆன் சுன்னா அடிப்படையில் முறையாக கற்றுத்தேர்ந்த ஆசிரியர் மூலம் பயிலவேண்டும்
“உங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறையை என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்” . அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி யல்லாஹு அன்ஹு) , 
நூல் : முஸ்லிம் 1297
4….எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது … 2:197
5.பொருளாதாரம் மிகத்தூய்மையானதாக இருக்க வேண்டும் . அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டுப் பின்வரும் இரு வசனங்களை ஓதிக்காட்டினார்கள்: 

தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன்(23:51). “நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், 1686 )
6. ஹஜ், உம்ராவிற்கு செல்பவர்களிடம் துஆ செய்யுமாறு வேண்டுதல் : நான் நபி (ஸல் ) அவர்களிடம் உம்ரா செல்வதற்காக அனுமதி வேண்டினேன் எனக்கு அனுமதி அளித்தார்கள் ” எனது சகோதரனே உனது து ஆவில் எங்களை மறந்து விடாதே என்று கூறினார்கள் உமர் (ரலி ) கூறினார்கள் உலகம் முழுவதை விட இந்த வார்த்தை எனக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. அறிவிப்பவர் : உமர் (ரலி ), 
நூல் : அபூதாவூத் 1280
7. பெண்கள் தனியாக ஹஜ்ஜுக்கு செல்லக் கூடாது : “எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி 3006 , முஸ்லிம் 1341)
பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று ஏராளமான நபி மொழிகள் காணக்கிடக்கின்றன . என்றாலும் ஹஜ் , உம்ரா நடத்தும் சில நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை கணக்கில் கொண்டு தவறான முறையில் இவர் அவருக்கு மஹ்ரம் அவர் இவருக்கு மஹ்ரம் என்று காண்பித்து தங்களோடு அழைத்துச் செல்கின்றனர். இதுவும் தடுக்கப்பட்ட ஒன்றே…

                                                                                     மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

எனவே இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹாஜிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதின் மூலம் தவறுகளில் விழாமல் அவர்களை தடுப்பதோடு அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
மச்சான், மதினி உறவு என்பது எல்லா குடும்பங்களிலும் சர்வ சாதாரணம். மச்சானோடு மதினி கொஞ்சி விளை யாடுவதும், மதினியோடு மச்சான் ஓடி பிடித்து விளையாடுவதும் முட்டி மோதி செல்வதும், இரட்டை வசனங்கள் பேசுவதும், தனிமையில் உட்கார்ந்து உரையாடுவதும், தனிமையில் (ஒரே வாகனத்தில்) பிரயாணம் செய்வதும் அன்றாட வாழ்வில் மிக மிக சாதாரணமாக காணப்படுகிறது. 

முஸ்லிம் குடும்பம் முஸ்லிமல்லாத குடும்பம் என்ற வேறுபாடுகளின்றி பொது நல சிந்தனையோடு சிறகடித்து பறக்கும் இக்காட்சியை காணமுடிகிறது.
தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி, அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி என்று இந்த உறவு முறைக்கு(?) இனிமை சேர்க்கிறார்கள்.
இனிமையான இந்த உறவு முறைகளைத் தான் பலரும் விரும்புகிறார்கள். ஷஷசின்னஞ்சிறுசுகள் எப்படியெல்லாம் இருக்கின்றதென்று பாருங்கள் என்று பெற்றோர்களும் இந்த உறவுக்கு உரமூட்டுகிறார்கள்.

தன்னுடைய கணவரின் வருகையை எதிர்பார்த்திருப் பதை விட மச்சானின் வருகையை எதிர்பார்த்து, அவனுக்காக தேனீர் ஊற்றிவைத்து, சமயல் செய்து வைத்து, துணிமணிகளை கழுவி, அயன்பண்ணி வைத்து வழிமேல் விழிவைத்து கதவருகில் காத்திருக்கிறாள் மதினி. மச்சான் தனது விருப்பு வெறுப்புக்களையும் இன்ப துன்பங்களையும் மதினியிடம் மனம் விட்டு பரிமாறிக் கொள்வார்.

மச்சான் அணியும் ஆடைகளை தெரிவு செய்து அழகு பார்ப்பதும், உற்சாகத்தோடு தட்டிக் கொடுப்பதும் மதினியின் அன்றாட பணிகளில் ஒன்று! மதினியின் செயல்களை அவதானித்து அவ்வப்போது, அறிவுரைகளை அள்ளி வழங்குவதும் மச்சானின் முக்கிய கடமைளில் ஒன்று. எத்தனை இறுக்கமான உறவு? இதமான பாசபிணைப்பு?

கணவன் மனைவி என்ற அந்த பந்தத்தில் கூட இத்தனை பிணைப்பு இருக்க முடியாது. பார்க்க முடியாது. உலகிலுள்ள அத்தனை பேரும் இந்த உறவுமுறையை ஆதரித்தாலும் இஸ்லாம் மட்டும் எதிர்க்கிறது. காரணம் குடும்ப வாழ்வின் சீர்கேட்டின் ஊற்றுக்கண் இந்த உறவுமுறை என்கிறது.
கணவனுக்கென்று மாத்திரம் சொந்தமான அந்த மனைவி தன்னுடைய அத்தனை சில்மிஷங்கள், சல்லாபங் களையும் கணவனுடன்தான் பரிமாற வேண்டும் என்கிறது.

மச்சான் என்பவன் உனக்கு அன்னியன். மதினி என்பவள் உனக்கு அன்னியவள். எனவே அன்னிய ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது உறவாடுவது, பயணிப்பது, பார்ப்பது, பேசுவது, தொடுவது அநாகரிக மானது என்கிறது. இஸ்லாத்தின் பார்வையில் மச்சான், மதினி உறவு சின்ன வீடு வைத்துக் கொள்வத்கு சமமானது. அந்த அசிங்கத்தை அகற்றி விடுவதற்கே இந்த உறவு முறையை தடுக்கிறது இஸ்லாம்.

கணவனுடைய மரணத்திற்குப் பின் அல்லது விவாகரத் திற்குப் பின் அந்த பெண்ணை (மதினியை) கணவனுடைய சகோதரன் (மச்சான்) விரும்பினால் மணம் முடிக்கலாம். மணம் முடிப்பதற்கு அவள் ஆகுமாக்கப்பட்ட பெண்ணாக இருப்பதனால் தான் எச்சந்தர்ப்பத்திலும் இவ்விருவரினதும் உறவை அன்னியப்படுத்துமாறு நாகரீக பண்பாட்டை போதிக்கிறது இஸ்லாம்.

மச்சான் மதினி உறவினால் சீரழிந்து போன குடும்பமும், முறிந்து போன உறவுகளும் உண்டு. சிலநேரம் மச்சான் மதினி உறவு உடலுறவாக மாறியதுமுண்டு. ஓடிப்போய் கணவன் மனைவியாக வந்ததுமுண்டு. இன்னும் நடந்துகொண்டு இருப்பதுமுண்டு.

தன்னுடன் உடன் பிறந்த சகோதரன் (தம்பி÷அண்ணன்) தனது மனைவியோடு தப்பாக நடந்து விட்டானே என்று ஆத்திரம் தாங்காமல் அவனைத் தேடி கொலை செய்கி றான். அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்கிறான்.

கணவன் தனது தங்கை÷அக்காவுடன் தவறான முறையில் நடந்து விட்டானே என்று மனைவி கணவனை நஞ்சூட்டிக் கொன்று விடுகிறாள். அல்லது விவாகரத்துப் பெற்று பிரிந்துவிடுகிறாள். குடும்பத்தின் மானம் மரியாதை கலங்கப்படுத்தப்பட்டு விட்டதே! பலரும் காரித் துப்புகிறார்களே என்று பெற்றோர்கள் தலைமறைவாகி விடுகிறார்கள்.

நாளாந்தம் இப்படியான அவலங்கள் எல்லா குடும்பங்களிலும் நடக்கத்தான் செய்கிறன. சில விடயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. மற்றும் சில விடயங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. இந்த அசிங்கமான உறவை அதன் பயங்கரமான விளைவை தடுப்பதற்காகத்தான் மச்சான் மதினி உறவை இஸ்லாம் கண்டிக்கிறது.

பெண்கள் இருக்கமிடத்திற்கு செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்று அன்சாரி நபித் தோழர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவருடைய உறவினர் மரணத்திற்கு நிகரானவர் எனக் கூறினார்கள். (அறிவிப்ப வர்: உக்பா பின் ஆமிர் (ரழி), நூல்: புகாரி)

எந்த உறவு முறை மரணத்திற்கு சமமானது. மரணத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நபியவர்கள் எச்சரித் தார்களோ அந்த எச்சரிக்கை குடும்ப மட்டத்தில் புறக்கணித்த போது ஏற்பட்ட விபரீதங்களைத்தான் அன்றாடம் சமூகத்தில் காண்கிறோம். இப்படியான விவகாரம் மீடியாவில் வராத நாட்களே கிடையாது.

எனவே, மச்சான் மதினி உறவு முறை இனிமையான தல்ல இழிவானது. அசிங்கமானது. இஸ்லாமிய ஒழுக்கப் பண்பாட்டு முறைக்கு எதிரானது. குடும்ப, சமூக அமைப் புக்கு வேட்டு வைக்கக் கூடியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எமது குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கும்போது அவர்கள் பருவ வயதை அடையும் போது மஹ்ரமியத் என்கின்ற ஆண்-பெண் உறவு எது? என்பதை கண்டிப்பாக போதிக்க வேண்டும். நடைமுறைப்படுத்த வேண்டும்.

சாதி மத இன பேதமின்றி அனைவரும் சுகமான குடும்ப வாழ்வை மேற்கொள்ள விரும்பினால் இஸ்லாம் கூறும் இந்த ஒழுங்கு முறையை பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget