மச்சான், மதினி உறவுகள் எவ்வாறு இருக்க வேண்டும்.?

மச்சான், மதினி உறவு என்பது எல்லா குடும்பங்களிலும் சர்வ சாதாரணம். மச்சானோடு மதினி கொஞ்சி விளை யாடுவதும், மதினியோடு மச்சான் ஓடி பிடித்து விளையாடுவதும் முட்டி மோதி செல்வதும், இரட்டை வசனங்கள் பேசுவதும், தனிமையில் உட்கார்ந்து உரையாடுவதும், தனிமையில் (ஒரே வாகனத்தில்) பிரயாணம் செய்வதும் அன்றாட வாழ்வில் மிக மிக சாதாரணமாக காணப்படுகிறது. 

முஸ்லிம் குடும்பம் முஸ்லிமல்லாத குடும்பம் என்ற வேறுபாடுகளின்றி பொது நல சிந்தனையோடு சிறகடித்து பறக்கும் இக்காட்சியை காணமுடிகிறது.
தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி, அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி என்று இந்த உறவு முறைக்கு(?) இனிமை சேர்க்கிறார்கள்.
இனிமையான இந்த உறவு முறைகளைத் தான் பலரும் விரும்புகிறார்கள். ஷஷசின்னஞ்சிறுசுகள் எப்படியெல்லாம் இருக்கின்றதென்று பாருங்கள் என்று பெற்றோர்களும் இந்த உறவுக்கு உரமூட்டுகிறார்கள்.

தன்னுடைய கணவரின் வருகையை எதிர்பார்த்திருப் பதை விட மச்சானின் வருகையை எதிர்பார்த்து, அவனுக்காக தேனீர் ஊற்றிவைத்து, சமயல் செய்து வைத்து, துணிமணிகளை கழுவி, அயன்பண்ணி வைத்து வழிமேல் விழிவைத்து கதவருகில் காத்திருக்கிறாள் மதினி. மச்சான் தனது விருப்பு வெறுப்புக்களையும் இன்ப துன்பங்களையும் மதினியிடம் மனம் விட்டு பரிமாறிக் கொள்வார்.

மச்சான் அணியும் ஆடைகளை தெரிவு செய்து அழகு பார்ப்பதும், உற்சாகத்தோடு தட்டிக் கொடுப்பதும் மதினியின் அன்றாட பணிகளில் ஒன்று! மதினியின் செயல்களை அவதானித்து அவ்வப்போது, அறிவுரைகளை அள்ளி வழங்குவதும் மச்சானின் முக்கிய கடமைளில் ஒன்று. எத்தனை இறுக்கமான உறவு? இதமான பாசபிணைப்பு?

கணவன் மனைவி என்ற அந்த பந்தத்தில் கூட இத்தனை பிணைப்பு இருக்க முடியாது. பார்க்க முடியாது. உலகிலுள்ள அத்தனை பேரும் இந்த உறவுமுறையை ஆதரித்தாலும் இஸ்லாம் மட்டும் எதிர்க்கிறது. காரணம் குடும்ப வாழ்வின் சீர்கேட்டின் ஊற்றுக்கண் இந்த உறவுமுறை என்கிறது.
கணவனுக்கென்று மாத்திரம் சொந்தமான அந்த மனைவி தன்னுடைய அத்தனை சில்மிஷங்கள், சல்லாபங் களையும் கணவனுடன்தான் பரிமாற வேண்டும் என்கிறது.

மச்சான் என்பவன் உனக்கு அன்னியன். மதினி என்பவள் உனக்கு அன்னியவள். எனவே அன்னிய ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது உறவாடுவது, பயணிப்பது, பார்ப்பது, பேசுவது, தொடுவது அநாகரிக மானது என்கிறது. இஸ்லாத்தின் பார்வையில் மச்சான், மதினி உறவு சின்ன வீடு வைத்துக் கொள்வத்கு சமமானது. அந்த அசிங்கத்தை அகற்றி விடுவதற்கே இந்த உறவு முறையை தடுக்கிறது இஸ்லாம்.

கணவனுடைய மரணத்திற்குப் பின் அல்லது விவாகரத் திற்குப் பின் அந்த பெண்ணை (மதினியை) கணவனுடைய சகோதரன் (மச்சான்) விரும்பினால் மணம் முடிக்கலாம். மணம் முடிப்பதற்கு அவள் ஆகுமாக்கப்பட்ட பெண்ணாக இருப்பதனால் தான் எச்சந்தர்ப்பத்திலும் இவ்விருவரினதும் உறவை அன்னியப்படுத்துமாறு நாகரீக பண்பாட்டை போதிக்கிறது இஸ்லாம்.

மச்சான் மதினி உறவினால் சீரழிந்து போன குடும்பமும், முறிந்து போன உறவுகளும் உண்டு. சிலநேரம் மச்சான் மதினி உறவு உடலுறவாக மாறியதுமுண்டு. ஓடிப்போய் கணவன் மனைவியாக வந்ததுமுண்டு. இன்னும் நடந்துகொண்டு இருப்பதுமுண்டு.

தன்னுடன் உடன் பிறந்த சகோதரன் (தம்பி÷அண்ணன்) தனது மனைவியோடு தப்பாக நடந்து விட்டானே என்று ஆத்திரம் தாங்காமல் அவனைத் தேடி கொலை செய்கி றான். அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்கிறான்.

கணவன் தனது தங்கை÷அக்காவுடன் தவறான முறையில் நடந்து விட்டானே என்று மனைவி கணவனை நஞ்சூட்டிக் கொன்று விடுகிறாள். அல்லது விவாகரத்துப் பெற்று பிரிந்துவிடுகிறாள். குடும்பத்தின் மானம் மரியாதை கலங்கப்படுத்தப்பட்டு விட்டதே! பலரும் காரித் துப்புகிறார்களே என்று பெற்றோர்கள் தலைமறைவாகி விடுகிறார்கள்.

நாளாந்தம் இப்படியான அவலங்கள் எல்லா குடும்பங்களிலும் நடக்கத்தான் செய்கிறன. சில விடயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. மற்றும் சில விடயங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. இந்த அசிங்கமான உறவை அதன் பயங்கரமான விளைவை தடுப்பதற்காகத்தான் மச்சான் மதினி உறவை இஸ்லாம் கண்டிக்கிறது.

பெண்கள் இருக்கமிடத்திற்கு செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்று அன்சாரி நபித் தோழர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவருடைய உறவினர் மரணத்திற்கு நிகரானவர் எனக் கூறினார்கள். (அறிவிப்ப வர்: உக்பா பின் ஆமிர் (ரழி), நூல்: புகாரி)

எந்த உறவு முறை மரணத்திற்கு சமமானது. மரணத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நபியவர்கள் எச்சரித் தார்களோ அந்த எச்சரிக்கை குடும்ப மட்டத்தில் புறக்கணித்த போது ஏற்பட்ட விபரீதங்களைத்தான் அன்றாடம் சமூகத்தில் காண்கிறோம். இப்படியான விவகாரம் மீடியாவில் வராத நாட்களே கிடையாது.

எனவே, மச்சான் மதினி உறவு முறை இனிமையான தல்ல இழிவானது. அசிங்கமானது. இஸ்லாமிய ஒழுக்கப் பண்பாட்டு முறைக்கு எதிரானது. குடும்ப, சமூக அமைப் புக்கு வேட்டு வைக்கக் கூடியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எமது குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கும்போது அவர்கள் பருவ வயதை அடையும் போது மஹ்ரமியத் என்கின்ற ஆண்-பெண் உறவு எது? என்பதை கண்டிப்பாக போதிக்க வேண்டும். நடைமுறைப்படுத்த வேண்டும்.

சாதி மத இன பேதமின்றி அனைவரும் சுகமான குடும்ப வாழ்வை மேற்கொள்ள விரும்பினால் இஸ்லாம் கூறும் இந்த ஒழுங்கு முறையை பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget