உழ்ஹிய்யா (குர்பானி) பிராணியை எப்போது பலியிட வேண்டும்.?

ஒரு அமலை நாம் நிறைவேற்றும் போது அந்த அமலை எப்போது எப்படி செய்வது என்ற அறிவு எங்களிடம் இருப்பது அவசியம். அந்த அறிவு இல்லாமல் நாம் ஒரு அமலை நிறைவேற்றும் போது பல நன்மைகளை தவற விட்டுவிடுவோம் சில வேலை முழு நன்மைகளையும் தவற விடும் நிலை கூட ஏற்பட்டு விடும்.
அதனால் ஒரு அமலை நாம் செய்ய முன் அந்த அமல் குறித்து சொல்லப்பட்டுள்ள முழு தகவல்களையும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் பின்னர் அந்த அமலை அதற்குரிய முறையே செய்து அந்த அமலின் சிறப்புக்களையும் கூலிகளையும் முழுமையாக அடைந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  
உதாரணமாக:
ஜும்ஆவுக்கு போவது ஒவ்வொரு ஆண்கள் மீதும் கட்டாயக்கடமை அதே நேரம் நேர காலத்துடன் போவது மேலதிக சிறப்புக்களை பெற்றுத்தரும் காரியம் என்பதை போல் உழ்ஹிய்யா வழங்குவது வலியுறுத்தப்பட்ட சுன்னா அதனை அதற்குரிய மிக பொறுத்தமான நாளில் வழங்குவது பல மடங்கு நன்மைகளை பெற்றுத்தரும்.
இன்று முன்னைய காலங்களை விட அதிகமானவர்கள் உழ்ஹிய்யா என்ற இந்த அமலை நிறைவேற்றுகின்றனர் ஆனால் பலரும் ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் இந்த அமலை நிறைவேற்றுவதில் பொடுபோக்காக செயல்படுகின்றனர் காரணம் துல் ஹஜ் பிறை 10 (பத்தினுல்) செய்யப்படும் அமல்களுக்குரிய கூலியை அறியாதமையாகும்.
1) துல் ஹஜ் பிறை-10 (பத்தில்) உழ்ஹிய்யா வழங்கினால் தான் ஜிஹாதை விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமலை செய்த கூலி எங்களின் உழ்ஹிய்யா அமலுக்கு கிடைக்கும்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (துல்ஹஜ் பத்து) நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நல்லமல் கிடையாது என்று நபி(ஸல்) கூறினார்கள். ‘ஜிஹாதை விடவுமா?’ என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி(ஸல்) கூறினார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம்: 13. இருபெருநாள்கள்
2) கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள். (அல்குர்ஆன் 22 : 28)
இப்னு அப்பாஸ் ரலி மற்றும் இப்னு உமர் ரலி ஆகியோர் அய்யாமிம் மஃலூமாத் என்பது துல் ஹஜ் முதல் பத்து நாட்களை தான் குறிக்கின்றது என்று விளக்கம் கூறியுள்ளார்கள்
3) நபி ஸல் அவர்கள் தனது உழ்ஹிய்யா பிராணிகளை எப்போது அறுத்தார்கள்?
நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் பராஃ (ரலி) – நூல் புகாரி (951)
ஒரு (ஹஜ்ஜுப் பெருநாளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) – நூல் : புகாரி (5500)
5552. இப்னு உமர்(ரலி) கூறினார், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம்: 73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நபி ஸல் அவர்கள் தொழுகைக்கு அடுத்தபடியாக செய்த அமல் உழ்ஹிய்யா பிராணிகளை அறுத்து பலியிடல் என்ற அமலைத் தான் என்பதை இந்த ஹதீஸ்கள் எங்களுக்கு தெளிவாக விளக்குகின்றது எந்த அளவுக்கு என்றால் தொழும் திடலுக்கு தமது உழ்ஹிய்யா பிராணிகளை அவர்கள் கொண்டு சென்று திடலிலே அந்த வணக்கத்தை நிறைவேற்றி உள்ளார்கள் என்பதை கூட இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றது.
4)பிறை 11,12’13 பற்றி நபி ஸல் கூறிய செய்தி
அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்-ஹஜ் பிறை 11,12,13) உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுபைஷா (ரலி) – நூல் : முஸ்லிம் (2099)
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் “அய்யாமுத் தஷ்ரீக்” நாட்களில் அனுப்பி, “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்; “மினா”வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். – மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்” எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் 2100 அத்தியாயம்-13: நோன்பு
5) நபி ஸல் அவர்கள் துல் ஹஜ் பிறை பத்து பெருநாள் தினத்தில் மட்டுமே அறுத்து பழியிட்டுள்ளார்கள் வேறு நாட்களில் உழ்ஹிய்யா பிராணிகளை அறுத்தமைக்கு சான்றுகள் கிடையாது
6) யவ்முன் நஹ்ர் (அறுத்துப் பலியிடும் நாள்)
ஈதுல் அல்ஹா (அறுத்து பலியிடும் பெருநாள்) என்ற பெயர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை தவிர வேறு நாட்களுக்கு இல்லை. எனவே அந்த நாளில் குர்பானி உடைய அமலை செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும்..
குறிப்பு:
உழ்ஹிய்யா பிராணிகளை எப்போது வரை அறுக்லாம்? என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துக்கள் முன்வைக்கபட்டடு உள்ளது மேலும் பிறை 10, மற்றும் 11,12,13 ஆகிய அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் அறுத்துபலியிடலாம் என்ற கருத்து சில நபித்தோழர்கள் மற்றும் பல அறிஞர்களால் அவர்களின் இஜ்திஹாத் அடிப்படையில் முன்வைக்கப் பட்டுள்ளது என்றாலும் இவற்றில் பிறை பத்தில் அறுத்துபலியிடுவதை வஹியின் நிழலில் நான் மிகவும் சரியான கூற்றாக காணுகின்றேன் அல்லாஹ் மிக அறிந்தவன்.
                                                                                              அஷ்சேஹ் இன்திகாப் உமரி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget