காதலர் தினம் உருவான உண்மை வரலாறு.!

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.'(அல்குர்ஆன்-5:51)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் திடனாக பின்பற்றுவீர்கள். அவர்கள் யூதர்களும், கிறிஸ்தவர்களுமா? அல்லாஹ்வின் தூதரே என்று நாம் கேட்டோம். ஆதற்கு நபியவர்கள் வேறு யாரை எனக்கூறினார்கள்.' அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி), நூல்:புஹாரி-3456  

இன்று நாட்டிற்கு நாடு, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு காதலர் தினம்; நமது இஸ்லாமிய இளைஞர் யுவதிகளால் வெகுவாக கொண்டாடப்படுவது நாம் யாவரும் அறிந்த ஒன்றுதான். இதை யூத,  கிறிஸ்தவ கலாச்சாரமாக எடுப்பதா? அல்லது சினிமாக்கலாச்சாரமாக ? என்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்தபோதும் இஸ்லாமியக் கலாச்சாரம் இல்லை என்பது நாம் யாவரும் அறிந்த விடயம்.

இதைக்கொண்டாடுவதில் பாடசாலை மாணவ,மாணவிகள் தொடக்கம் இதற்கு பரிசுபொருட்கள் விற்கும் இஸ்லாமிய தொழிலதிபர்கள் வரைக்கும் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். 'வெலன்டைன் டே' என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன? இதற்கு காதலர் தினம் என பெயர் வைத்தது யார்? இதனால் நமது சமூகம் ஈமானிய அடிப்படையில் மற்றும்  சமூக அமைப்பில் எவ்வாறான இழப்புக்களை சந்திக்கிறது என்பதை தயவுசெய்து சிந்திக்க வேண்டும்.

'வெலன்டைன் டே' என்ற இந்த தினம் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்து தற்போது பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ரோமர்கள் தங்கள் கால்நடைகள், மற்றும் பொருளாதாரம் என்பவற்றுக்குப் பொருப்பான கடவுளாக லூப்பர்ஸ் எனும் கடவுளை வணங்கி வந்தனர். இந்தக் கடவுளுக்கு நாலாம் நூற்றாண்டில் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பூஜை  நடத்தி விழாக்கொண்டாடினர். 

அன்றைய தினத்தில் ஒரு ஆட்டை அறுத்து அதன் தோலை மற்றும் ஆட்டு இரத்தத்தில் துவட்டி அதனை இரு இளைஞர்கள் அணிந்துகொண்டு ஒரு இளம்பெண்ணை சவுக்கால் அடிப்பார்கள். அப்பெண் நல்லமுறையில் குழந்தை வளர்ப்பால் என்றும், நல்லமுறையில் குடும்பப் பொறுப்புள்ள பெண்ணாக திகழ்வாள் என்றும் அந்த இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் அச்சமூகத்தால் பெரும் மதிப்பு கிட்டியது.

காலப்போக்கில் இந்த சிலை வணக்கம் வேறு வடிவம் பெற்றது. அதாவது இளம் பெண்களின் பெயர்கள் ஒரு துண்டுச்சீட்டில் எழுதப்பட்டு ஒரு சாடியில் போடப்படும். பின் அதிலிருநது வாலிபர்கள் ஒவ்வொரு துண்டாக எடுப்பார்கள். அத்துண்டில் யார்பெயர் இருக்குமோ அந்தப்பெண் ஒரு வருடத்திற்கு அந்த வாலிபருடன் தற்காலிக மனைவியாக வாழவேண்டும் என்ற விபச்சார கலாச்சாரமாக இந்த 'வெலன்டைன் டே' எனும் காதலர் தினம் உருப்பெற்றது.

இதனை lobber galiya day என அப்போது அழைக்கப்பட்டது. பின்பு கிறிஸ்தவ அமைப்புக்கள் இதனை நிறுத்த பெரிதும் முயற்சித்து முடிவில் தோற்றுப்போனது.

இதனை நிறுத்த முடியாதபோது கி.பி. 496இல் பொப் கிளாஸியஸ் என்பவர் இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டார்.அதன் விளைவாக பெண்களின் பெயர்களுக்கு பதிலாக துறவிகளின் பெயர்கள் துண்டுச்சீட்டில் எழுதப்பட்டு அதனை அந்த துறவியை பின்பற்றி வாழவேண்டும் என திட்டமிட்டார். இந்த துறவிகள்தான் 'வெலன்டைன்' என அழைக்கப்பட்டனர்.  50க்கு மேற்பட்ட வெலன்டைன்களின் கதைகள் கிறிஸ்தவர்களினால் சொல்லப்படுகிறது. 1660இல் மன்னர் இரண்டாம் சார்லஸ் தனது மன இச்சைக்காக மீண்டும் இதனை விபச்சார கலாச்சாரமாகவே ஆரம்பித்தார்.

இது எவ்வாறு இருந்தபோதும் இத்தினத்தை கொண்டாடுவதன் மூலம் அனாச்சாரம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதனால் 1776இல் பிரான்ஸில் இது தடைசெய்யப்பட்டது. தொடர்ந்து இதே ஆண்டில் இததாலி, ஒஸ்றியா, ஹங்கேரி, ஜேர்மனி, போன்ற நாடுகளிலும் தடைசெய்யப்பட்டது. இதற்கு முன்னதாகவே இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்டது.

ஆமெரிக்காவில் வியாபார நோக்கில் 1840இல் Ester.A.Hawlend  என்பவரால் முதல் காதலர்தின அட்டை வெளியிட்பட்டது. அப்போது 50000 அமெரிக்க டொலரை இலாபமாக ஈட்டினர். அதைத் தெடார்ந்து இன்றுவரை காதலர்தினப் பரிசுபொருட்கள், வாழ்த்து அட்டைகள் என அமர்க்களமாக நடக்கிறது.

எனவே இது ஒரு சிலை வணக்கத்தில் உருவாகி அனாச்சாரத்தில் நடைபோட்டு வியாபாரத்தில் நிலைப்பட்டாலும் இஸ்லாத்தின் விரோதிகளான யூத,  கிறிஸ்தவர்களின் செயலாவும், மானக்கேடான செயலாகவும் உள்ளது. இதனை உருவாக்கியவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ நமது சமூகம் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பின்பற்றுவதை நமதூர் சுவர்களும், வானொலி, தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி போன்ற ஊடகங்களும் உண்மைபடுத்துகிறது.

5:55.நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.

அல்லஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;. நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.(அல்குர்ஆன்-5:56)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நீங்கள் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளர்கள். உங்கள் கண்காணிப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி (மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்) ஆதாரம் புஹாரி

எனவே நாம் அனைவரும் தானும் மாறி தம் சமூகத்தையும் கண்காணிப்போமாக!

                                                            மௌலவி அப்துல் ஹமீத் (ஷரஈ)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget