காதலர் தினம்: முஸ்லிம் உம்மத்தை காவு கொண்ட தினம்

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வரையறுத்த மார்க்க எல்லைகளுக்கு அப்பால் "நவீனம்" என்ற பெயரில் சீரழிந்து போன சமுதாயத்தின் சீர் கெட்ட நடைமுறைகளில் ஒன்றுதான் இந்த காதலர் தினம்.

இஸ்லாமிய இளைஞர்களும் யுவதிகளும் இந்த காதல் எனும் வலையில் சிக்கி தத்தளிப்பதற்கு காரணம் "காதல்" என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும், இஸ்லாத்தின் அடிப்படை அறிவும், நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமல் இருப்பதேயாகும்.

அந்நிய ஆணும் பெண்ணும் தேவையின்றி பழகுவதை ஹராமாக்கிய எம் மார்க்கம் ஓருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என சொல்லித் தர மறக்க வில்லை .

அதாவது அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, பெண் பார்த்து , பெண்ணிண் விருப்பத்துடன் மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று திருமண விடயத்தில் அழகான நடைமுறையை கற்றுத்தந்துள்ளது. இதை நாம் சரியாக பின்பற்றினால் உண்மையான காதலுக்கு எம் சமூகம் சொல்லும் அர்த்தம் கேவலமான ஒன்றாக ஆகிவிடும்.

காதலர் தினத்தின் பின்னணி எங்கள் நபி (ஸல் ) அவர்களின் வழிமுறைகளை புறந்தள்ளுமாறு தூண்டுவதே ஆகும். எதற்காக "பெப்ரவரி 14" தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது. கிறிஸ்துவ போதகர் "வேலன்டைன்" என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த "வேலன்டைன் தினம்".

1660ல் மன்னர் "இரண்டாம் சார்லஸ்" என்பவர்தான் இதனைக் முதன் முதலில் கொண்டாட ஆரம்பித்தார். பெப்ரவரி 14 ஆம் திகதி கொண்டாடப்படும் இந்த நாளை வியாபார நோக்கத்திற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளனர். வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போட்டனர்.

கி.பி.1840-ல் எஸ்தர் ஏ.ஹவ்லண்ட் என்பவர் முதன்முதலாக அமெரிக்க காதலர்தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது. இதன் பிறகு ‘வேலன்டைன் தொழிற்சாலை’ என்னும் பணம் திரட்டும் தொழிற்சாலை அமோக வளர்ச்சிப் பெற்றது. இன்று இந்த ஜாஹிலிய்யா சீர்கேட்டின் பலம் எங்கும் வியாபித்திருக்கிறது. கலாச்சாரத்திலும் , அன்றாட மனித வாழ்விலும் அது பிண்ணிப்பினைந்துள்ளது.

அதுமட்மல்லாமல் மீடியாவும் அதன் பிடிக்குள்ளேதான் இருக்கிறது. இதனால்தான் முஸ்லிம்கள் காதலர் தினத்தையும் வரவேற்று, அரவணைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம்களாகிய நாம் இவற்றின் பிடியிலிருந்து வெளியில் வரவேண்டும். எனவே அன்னிய, யூத கிறுஸ்தவர்களின் கலாச்சாரங்களிலிருந்து எம்மை நாம் பாதுகாக்க வேண்டும். விஷேடமாக இளம் வாலிபர்கள் தங்களுடைய காதலை புனிதப் படுத்தக் கூடியதாக அத்தினத்தை விழாக்கோலமாக்குகிறார்கள்.

நபியவர்கள் கூறினார்கள் *அவர்கள் ( யூத கிறிஸ்தவர்கள்) உடும்புப்பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைந்துகொள்வீர்கd  பிகளாரின் இந்த எதிர்வுகூறலின் படி இன்று யூத கிறுஸ்தவர்களை அடியொட்டி பின்பற்றுகின்றோம். காதலர் தினம்” மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவான தினம்!

அன்றய தினத்தில் எம் இஸ்லாமிய பாடசாலை மாணவர்கள் பச்சை, மஞ்சள், நீலம் என்று அத்தினத்தை அங்கீகரிக்கும் முகமாக அவர்களின் காதலின் சம்மதத்தை தெரிவிப்பதற்காகவோ அல்லது எதிர்ப்பதற்கோ தனக்கென்ற அடையாளங்களை இந்நிறங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
 இதுவெல்லாம் அத்தினத்தை கொண்டாடுதேயன்றி வேறில்லை.

மேலும் sms களிலும் Facebook , whatsup போன்ற சமூக வலையத் தலயங்களிலும்
வாழ்த்துக்களை பரிமாறுவதன் மூலமும் நம்மவர்கள் இத்தினத்தை உயிர் ப்பிக்கின்றனர். "காதலர் தினம்" என்ற ஒன்றே மார்க்கதில் இல்லையென்றால் எதற்காக அடையாளங்களும் பரிசுப்பொருட்களும்??? எப்போதும் ஒரு முஸ்லிம் தனித்துவமான தன் தீனை கொண்டு கண்ணியப்பட வேண்டும்.

படைத்த இரட்சகனை பயந்துகொள்வோமாக!!
ஒவ்வொரு வருடமும் ஆண் ,பெண் ஹறாமான உறவு முறை காதலர் தினம் என்ற பெயரில் பல்வேறுபட்ட கோணங்களில் மெருகேறிக்கொண்டே போகின்றது. ”நட்பு தூய்மையானது "ஆண் பெண் உறவு புனிதமானது அதனை கொச்சைப் படுத்தக்கூடாது" என்று கலாச்சாரத்தை சீர்குலைக்கும் மேற்கத்திய சதி என புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் பெண்ணிண் கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று கூறுமளவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
"நபியே விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக!””தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30-31) 

பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வதை பற்றி உங்களை எச்சரிக்கிறேன்". என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (நூல்: புகாரி முஸ்லிம்)

ஒரு ஆணும் பெண்ணும் எக்காரணம் கொண்டும் தனித்து இருக்கவே கூடாது என்று கூறும் மார்க்கத்தில் இருக்கும் நாம் இந்த கேவலமான ஆண் பெண் நட்பு கலாச்சாரத்தை பேசுவது எந்த வகையிலும் நியாயமாகாது. எனவே இஸ்லாம் கூறும் ஆண் பெண் உறவு பற்றிய விளக்கம் மிகத் தெளிவானது, புனிதமானது. அதனைத் தாண்டிப் போகும் செயலை இஸ்லாம் தடை செய்கிறது.

”விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி . எனவே மார்க்கம் கற்றுதந்த ஆண்,பெண் உறவுமுறையை ஹலாலலான முறைப்படி பேணி
அல்லாஹ்வின் தண்டனை யில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வோம்.


                                                                             மௌலவி றாசியா (ஷரயியா )

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget