சகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்

சகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள்
உட்பட செய்து கொண்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் 

நபிகளாரில் அழகிய முன்மாதிரி எமக்கிருக்க இத்தகைய சகவாழ்வின் முன்னோடிகள் யார்.? நபிகளாரின் மக்கா வாழ்வு இணைவைக்கும் பெரும்பான்மை சமூகத்துடனாக இருந்தது. அவர்கள் இஸ்லாத்துக்கு முரணான எந்த ஒரு நிகழ்விலாவது கலந்து கொண்டதுன்டா..?

சகவாழ்வு என்பது இஸ்லாத்தின் தனித்துவத்தை சிதைப்பதன்று. அவரவரின் மார்க நிலைப்பாடுகள் மற்றும் கலாசாரங்களை பேணி வாழ சுதந்திரமளிப்பதோடு பொது விடயங்களில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் உதவி ஒத்தாசையோடு நடப்பதுமே சகவாழ்வு. இதை நபிகளாரின் மதீனா வாழ்வு எங்களுக்கு அழகிய பாடமாகச் சொல்கின்றது.

நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த போது மதீனாவை சுற்றி இருந்த யூதர்களுடன் ஒர் ஒப்பந்தம் செய்தார்கள் அது என்ன ஒப்பந்தமெனில் மதீனாவுக்கு வெளியே உள்ள ஒரு கூட்டம் எங்களை தாக்க வந்தால் எங்களோடு இணைந்து நீங்களும் அவர்களை தாக்க வேண்டும். அது போல் உங்களை யாரேனும் தாக்க வந்தார்கள் என்றால் உங்களோடு இணைந்து அவர்களை நாமும் தாக்குவோம் என சகவாழ்வு அடிப்படையில் நாட்டின் தேசிய பாதுகாக்க நபிகளார் யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தார்கள்.

சகவாழ்வு என்பது இந்த அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே ஒழிய இஸ்லாமிய கொள்கைக் கோற்பாடுகளை சிதைப்பதாக இருக்க கூடாது.

இன்று நிர்பந்தம் எனும் சூழல் இல்லாது இருக்க நிர்பந்தம் எனும் சூழலை சகவாழ்வு என்ற பெயரில் நம் தலைமைகள் உருவாக்கி விடுவார்களோ என அச்சம் கொள்கின்றேன் . இன்று சகவாழ்வின் பெயரால் செய்யப்படும் வரம்பு மீறல்கள் நாளைய எம் சந்ததியினருக்கு தினிக்கப்படலாம் என்பதை மறந்து விட வேண்டாம்.

கொள்கையை இழந்து உரிமைகளையோ உடமைகளையோ பெறவேண்டிய அவசியம் நமக்கில்லை .

وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏
(இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்களும் அவர்களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 3:146)

சோதனைகள் இறைவனை நொருங்குவதற்கே அன்றி இஸ்லாத்தை விட்டு வெளியேற அல்ல. அல்லாஹ் யாரை விரும்புகின்றானோ அவரை சோதிப்பான் இந்த உலகில் அதிகம் சோதிக்கப்பட்டோர் மனிதப்புனிதர்களான நபிமார்கள்.

நாம் வளைந்து கொடுக்க வேண்டும்எ ன்றே அவர்களும் விரும்புகின்றனர்
وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
(முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர் திருக்குர்ஆன் 68:9

(நபியே) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்காவிட்டால் அவர்களை நோக்க்கி கொஞ்சம் சாய்ந்திருப்பீர். அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையை சுவைக்க செய்திருபோம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காணமாட்டீர். (சூரா பனூ இஸ்ராஈல் - 17:74,75)

இதன் முடிவு இஸ்லாத்தை விட்டே வெளியேற வேண்டி நிற்கும் . அப்போது தான் இறை மறுப்பாளர்களை இவர்கள் திருப்திபடுத்த முடியும்.
وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ‏

(நபியே!) யூதர்களும் கிறிஸ்தவர்களும், அவர்களுடைய வழி முறையை நீர் பின்பற்றாத வரை உம்மைப் பற்றி மன நிறைவடையவே மாட்டார்கள். “அல்லாஹ் காட்டிய வழியே நேர்வழியாகும்” என்று அவர்களிடம் நீர் தெளிவாகச் சொல்லி விடும். மேலும் இந்த ஞானம் உம்மிடம் வந்த பிறகும், அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின் அல்லாஹ்வின் பிடியிலிருந்து காப்பாற்றும் நண்பரோ உதவியாளரோ எவரும் உமக்கு இருக்கமாட்டார். அல்குர்ஆன் :

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!” (அல்குர்ஆன் : 3:147)

முஸ்லிம்கள் கோழைகள் அல்ல. நல்லிணக்கம் என்ற போர்வையில் பயத்தின் உச்சகட்டம்! அல்லாஹ்வின் உதவியில் சந்தேகப்பட்டவர்கள்! 

இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது. அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு. எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு. நல்லிணக்கம் என்ற பெயரிலேயே அல்லாஹ்வுக்கு இணை வைப்பது அவர்களுடைய மத வழிபாடுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் எந்த இடத்திலே அனுமதித்துள்ளது ?முஸ்லிம்கள் வெசாக் கொடியை கட்டி நல்லுறவை ஏற்படுத்துகிறார்களாம்?
இதற்குதான் நபிகளார் சொன்னார்கள் வஹ்ன் என்று
-உலக ஆசை, மரண பயம் 2:107
2:107 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
இனியும் முஸ்லிம்கள் அமைதியாக இருந்தால் இந்த தலைவர்கள் நடுத்தெருவில் விட்டு விடுவார்கள். எனவே முஸ்லிம்கள் சிந்திக்காவிட்டால் பலவந்தமாக உங்களுக்கு அவர்கள் மார்க்கத்தை திணிப்பார்கள்.

                                                                             அஷ்சேஹ்  இன்திகாப் உமரி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget