- விஷகடிகளுக்கு ஓதிப்பார்க்க நபி(ஸல்) அனுமதித்துள்ளனர். ( அறிவிப்பவர்: -ஆயிஷா (ரழி) நூல்: புகாரி-5741, முஸ்லீம் )
- நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது “குல்ஹுவல்லாஹு அஹது, குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்நாஸ்” ஆகிய சூராக்களை ஓதி தமக்குத் தாமே ஊதிக்கொண்டார்கள். நோய் கடுமையானபோது அவற்றை நான் ஓதி அவர்கள் மீது ஊதிவிட்டேன். மேலும் அவர்களது கைக்கு மட்டும் இருக்கும் பரக்கத்தின் காரணமாக, அவர்களது கையாலேயே அவர்களுக்குத் தடவிவிட்டேன் ( அறிவிப்பவர்: -ஆயிஷா(ரழி) நூல்: புகாரி-5735, முஸ்லீம் )
- நபி (ஸல்) அவர்கள் தமது சில மனைவிமார்களுக்கு ஓதிப்பார்ப்பார்கள். அப்போது,
குர்ஆன் அல்லாதவற்றைக் கொண்டு ஓதிப்பார்ப்பது, தாயத்துகள் அணிவது, தலையணை மந்திரம் ஆகியவை ஷிர்க்காகும். ( அறிவிப்பவர்:- இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: அஹ்மத், அபூதாவுத் )
اللَّهُمَّ ربَّ النَّاسِ، أَذْهِب الْبَأسَ ، واشْفِ ، أَنْتَ الشَّافي لا شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ ، شِفاءً لا يُغَادِرُ سقَماً
“அல்லாஹும்ம ரப்பன்நாஸ் அத்ஹிபில் பஃஸ்,வஸ்ஃஃபீஹ், வ அன்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லாலா ஷிஃபாவுக ஷிஃபா அன் லாயுகாதிரு ஸகமா” என ஓதி தம் வலதுகையால் தடவுவார்கள் ( அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள் நூல் புஹாரி-5742 )
(பொருள்: இறைவா! மனிதர்களின் இரட்சகனே! துன்பத்தைப் போக்கி எந்த நோயையும் விட்டுவிடாமல் நிவாரணமளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிக்ககூடியவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறெதும் நிவாரணமாகாது )
பயன்கள்:-
- குர் ஆனைக் கொண்டும் ஹதீஸ்களில் வந்திருக்கின்ற துஆகளைக் கொண்டும் ஓதிப்பார்க்க மார்க்கம் அனுமதித்துள்ளது.
- குர் ஆன் அல்லாதவற்றைக் கொண்டும் ஹதீஸ்களில் வராத து ஆக்களைக் கொண்டும் ஓதிப் பார்ப்பது தடுக்கப்பட்டிருக்கின்றது.
- அல்லாஹ்வை விடுத்துமற்றவர்களை அழைக்கின்ற து ஆக்களைக் கொண்டு ஓதிப்பார்ப்பது மிகப்பெரும் ஷிர்க்காகும்.
- ஒரு மனிதன் தனக்குத் தனே குல் அவூது பிரப்பில்ஃபலக், குல் அவூது பிரப்பின் நாஸ் ஆகிய சூராக்களைக் கொண்டு ஓதிப் பார்த்துக் கொள்ள மார்க்கம் அனுமதித்துள்ளது. அடுத்தவரை ஓதிப்பார்க்கச் சொல்லக் கூடாது
Post a Comment
அடுத்தவரை கொண்டு ஓதிப்பாற்பது கூடாது என்பது ஹதீஸ் எண் 5735 புஹாரி கு மாற்றமாக உள்ளது.