குர்ஆனில் காபிர்களை கண்ட இடத்தில் கொல்ல சொல்கிறதா? பாகம்-02

காபிர்களை கண்ட இடத்தில் நீங்கள் கொல்லுங்கள்.(2:191) என்று குறிப்பிடுவதாக கூறும் இவ்வசனத்தினை கவனிப்போம்.


உண்மையில் இஸ்லாத்தை ஏற்காத மக்களை கொல்லும் படி கூறும் வசனமல்ல இது. நீண்ட தொடருடைய வசனங்களில் ஒரு சொற்றொடரை மட்டும் எடுத்துக் கொண்டு இவர்கள் தப்பான விளக்கம் தருகிறார்கள். இவர்கள் காண்பிக்கும் வசனம் 2:191ம் வசனமாக இருந்தாலும் அதன் தொடர் 2:190ம் வசனத்திலிருந்து துவங்கி 2:193 வசனங்கள் வரை நீண்டுச் செல்கிறது. இந்த வசனங்களை முழுமையாகப் படித்து விட்டே முடிவுக்கு வர வேண்டும் இதுவே அறிவாளிகளின் அழகிய அணுகுமுறையாகும்
2:190 வசனத்திலிருந்து 193ம் வசனம் வரையுள்ள முழுமையான வசனங்களை முதலில் அமைதியாகப் படியுங்கள் 
அல்குர்ஆன் இப்படி கூறுகிறது 'எவர்கள் உங்களுடன் போராடுகின்றார்களோ அவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்புமீறுபவர்களை நேசிக்க மாட்டான். (போரின் போது களத்தில்) அவர்களை நீங்கள் கண்ட இடத்தில் கொல்லுங்கள். இன்னும் உங்களை அவர்கள் வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியது.
மஸ்ஜிதுல் ஹராமில் உங்களுடன் அவர்கள் போராடும்வரை நீங்கள் அவர்களுடன் போரிட வேண்டாம். ஆனால் உங்களுடன் அவர்கள் போரிட்டால் அவர்களை நீங்கள் கொல்லுங்கள். இதுதான் நிராகரிப்பாளர்களுக்கான கூலியாகும். எனினும் அவர்கள் போரிடாது விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்.
குழப்பம் நீங்கி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள் ஆனால் அவர்கள் போரிலிருந்து விலகிக் கொள்வார்களேயானால் அநியாயக்காரர்கள் மீதே தவிர எந்த வரம்பு மீறுதலும் கூடாது. (2: 190: 191: 192.193)
இந்த வசனங்களை நிதானமாக படிப்பவர்கள் இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து நல்லதொரு முடிவுக்கு வருவார்கள்.
``உங்களை எதிர்த்து போரிட வருகின்றவர்களுடன் போரிடுமாறு'' வசனம் ஆரம்பிக்கின்றது. நிச்சயமாக இவ்வசனம் போருடன் தொடர்ப்பான வசனமாகும். நபி முஹம்மத் (ஸல்) அவர்களை எதிர்த்து முஸ்லிம்கைள இல்லாதொழிக்க முஸ்லிம்களின் நாடானான மதீனா மீது போர் தொடுக்க மக்காவிலிருந்து வரும் எதிரிகளை எதிர்த்து போரிடுமாறு அனுமதி வழங்கி அருளப்பட்ட வசனமாகும்.
நபி(ஸல்) அவர்கள பிறந்து வளர்ந்த நாடான மக்காவில் தமது 40 வது வயதில் இஸ்லாமிய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். ஏக இறை கொள்கையை முன்வைத்து மக்களை ஒழுக்க ரீதியாக பண்பாட்டு ரீதியாக செம்மைப்படுத்தும் பணியில் ஈடுப்படடார்கள். இந்நிலையில் மக்கத்து மக்கள் இறை கொள்கைக்கு எதிராக கடுமையான எதிர்புக்களை காண்பித்து வன்முறைகளில் ஈடுப்படடார்கள்.
நபிகளாரையும் அவருடன் இருந்த முஸ்லிம்களையும் துன்புறுத்தி சித்திரவதைகளுக்கு உட்படுத்தினார்கள். உடமைகளை பறித்து அட்டூழியங் கள் புரிந்தார்கள். சமூகப்பகிஷ்கரிப்புக்கு ஆளாக்கி பசி பட்டினியில் வதைத் தார்கள். சிலரை கொலையும் செய்தார்கள். இக்கொடுமைகள் 13 வருடங்கள் தொடராக நிகழ்ந் தன.இக்காலக் கட்டங்களில் ஷஷஅல்லாஹ்வை காலை மாலை துதிக்கும் படியும் அவனைச் சார்ந்திருக்கும்படியும் நிராகரிப்பாளர்கள் அழகிய முறையில் வெறுத்து விடும் படியும்'' அல்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.
பொறுமையை கைகொள்ளுமாறும் நற்கூலியில் நல்லெண்ணம் வைக்குமாறும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்தோழர்களுக்கு அறிவுறுத்தினார்கள். முடிந்தவரை அகிம்வழியில் தான் பயணித்தார்கள்.
ஆனால் எதிரிகள் விட்டபாடில்லலை. இறுதியில் நபி(ஸல்) அவர்களை கொலை செய்யவும் முனைந்தார்கள். தம் தோழர்களை நாட்டை விட்டு வெளியேறும் படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள். பக்கத்து நாடான மதீனா, நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களை வரவேற்று அடைக்களம் கொடுத்து இஸ்லாத்திற்கு ஆதரவுதெரிவித்தது.
இந்நிலையில்,இஸ்லாம் மதீனாவில் வளரக்கூடாது முஸ்லிம்களை விட்டு விடக் கூடாது கருவறுக்க வேண்டும் என்று மக்காவிலுள்ள நிராகரிப்பாளர்கள்; மதீனா மீது போர் தொடுக்க விளைகிறார்கள். மதீனாவை ஆக்கிரமிக்க வரும் எதிரிகளை எதிர்த்து- மக்காவிலிருந்து உங்களை வெளியேற்றியது போல் மதீனா மண்ணிலிருந்து அவர்களை நீங்களும் வெளி யேற்றிட வேண்டும் என்றும் போர் களத்தில் கண்ட இடத்தில் அவர்களை கொன்று விட வேண்டும் என்றும் அல்லாஹ்வின் கட்டளை வந்தது.
இந்த வசனத்தில் அவர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்ற கட்டளை போர்களத்தில் எதிரிகளுடன் புரியும் சண்டையைப் பற்றி குறிப்பிடுவதாகும்.

விளக்கம் தொடரும் இன்ஷாஅல்லாஹ்

                                                                            அஷ்சேஹ் இம்தியாஸ் யூசுப் ஸலபி 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget