நிர்வாண கோல ஆடை அணியும் பெண் அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்.!

Rochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:-
மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் பெண்ணின் நிர்வாண கோல ஆடை, அவள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், (சுவர்க்கத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருந்து, ஷைத்தானின் தூண்டுதலினால் அல்லாஹ்வுக்கு மாறு செய்த) ஆதம், மற்றும் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட வேளையில்தான் அவ்விருவருடைய ஆடைகளையும் அவர்களை விட்டும் கழட்டி, அவ்விருவருடைய வெட்கஸ்தலங்களையும் அவ்விருவருக்கும் அவன் காட்டினான்” என்ற அல்லாமா பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இக்கூற்று என்னில் தாக்கம் செலுத்தி வேதனைப்படுத்தியது.
அல்லாஹ் மீது ஆணையாக! இக்கூற்று உள்ளங்களை உசுப்பி, கண்களை கண்ணீர் வடிக்கச் செய்கின்றது; அத்துடன் எமது நிலையையும் மீட்டிப் பார்க்க வைக்கின்றது. நிர்வாண கோலமும், அலங்காரங்களை வெளிக்காட்டித் திரியும் நிலையும் அதிகரித்துக் காணப்படும் வேதனையான நிகழ்வையே இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கண்ணியத்திற்குரிய என் சகோதரனே!
சில ஆசாபாசங்கள், மனவிருப்பங்கள் இருக்கின்றன; அவற்றை இவ்வுலகில் அல்லாஹ் தடைசெய்து, பின்னர் அவற்றிற்கு ஒப்பானதை, அல்லது மதுபானம் போன்று பெயரில் அதற்கு ஒப்பாக இருப்பதை சுவர்க்கத்தில் அவன் ஆகுமாக்கியிருக்கின்றான். ஆனால், ஆடை களைந்து நிர்வாண கோலத்தில் இருக்கும் இந்த விடயத்தைத் தவிர! இதை இவ்வுலகிலும் அல்லாஹ் தடைசெய்து, சுவர்க்கத்திலும் தடுத்தே இருக்கின்றான். மாறாக, (ஆடை மூலம்) மறைத்திருப்பதை சுவன இன்பங்களில் ஒன்றாகவும் அவன் ஆக்கியிருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்கமாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாகவும் இருக்கமாட்டீர்!” (அல்குர்ஆன், 20:118)
சகோதரனே! உன்னைநான் எச்சரிக்கின்றேன்…..
இந்த நிர்வாண கோல ஆடை பெருநாட்களிலும், திருமண வைபவங்களிலும், வேறு சந்தர்ப்பங்களிலும் கண்ணுக்குத் தெரியும் வகையில் அதிகமாகவே வெளிப்படத் தொடங்கிவிட்டன. எனவே, என் அன்புச் சகோதரர்களே! உங்கள் ஆண் பிள்ளைகளுக்கும், உங்கள் பெண் பிள்ளைகளுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் ஆடைகளைத் தெரிவு செய்யும் விடயத்தில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்! ஏனெனில், அவர்கள் உங்கள் பொறுப்பின் கீழ் இருக்கின்றார்கள். அவர்கள் குறித்து அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்”!
قال الأخ Rochdi Amrane في فيس بوك:-
[ أوجعني قول ابن باز رحمه الله تعالى لما قال: “لباس المرأة العاري دليل غضب الله عليها، لأن آدم وحواء عليهما السلام لمّا غضب الله عليهما نزع عنهما لباسهما وأراهما سوءاتهما”.
والله إن هذا الكلام يزلزل القلوب ويبكي العيون، ويجعلنا نراجع أنفسنا! ونحن نرى واقعنا الأليم الذي كثر فيه التّعرّي والتبرج…..
ولايخفى عن علمك أخي العزيز أن هناك شهوات حرّمها الله في الدنيا ثم أباح في الجنة ما يشابهها أو يشابه إسمها كالخمر و….. إلا التّعرّي فإن الله حرّمه في الدنيا وفي الجنة، بل وجعل الستر من نعيم الجنة لما قال جلّ وعلا: « إنّ لك ألاّ تجوع فيها ولاتعرى » (سورة طه، الآية – ١١٨ )
أحذّر أخي
فالتّعرّي يظهر للعيان أكثر في الأعياد والأعراس والمناسبات فاعتنوا إخواني باختيار ملابس العيد لأبنائكم وبناتكم وأهليكم فهم تحت رعايتكم، وأنتم مسئولون أمام الله عنهم! ]
 அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமே! நிரந்தர (வாழ்வைத் தரும்) மரத்தையும், அழிவில்லாத ஆட்சியைக் குறித்தும் உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? எனக்கூறி ஷைத்தான் அவரிடம் ஊசலாட்டத்தை உண்டுபண்ணினான். அவ்விருவரும் அதிலிருந்து உண்டதும் அவ்விருவரது வெட்கத்தலங்கள் அவ்விருவருக்கும் வெளிப்பட்டன. சுவனத்தின் இலைகளால் அவ்விருவரும் தம்மை மூடிக்கொள்ள முயன்றனர். ஆதம் தனது இரட்சகனுக்கு மாறு செய்தார். அதனால் அவர் வழி தவறினார். பின்னர் அவரது இரட்சகன் அவரைத் தேர்வு செய்து, அவரை மன்னித்து, நேர்வழியும் காட்டினான்” (அல்குர்ஆன், 20:120 – 123)
தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget