November 2019

இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.
அல்குர்ஆன் பல விடயங்களை உதாரணங்கள் மூலமாகவும், உவமானங்கள் மூலமாகவும் விளக்குவதுண்டு. அவ்வகையில் “ஆடை” என்ற ஒப்புவமையை இரவு, இறையச்சம் என்பவற்றுக்கு அல்குர்ஆன் உவமிக்கின்றது. இவ்வாறே கணவன் மனைவி என்கிற உறவையும் இஸ்லாம் ஆடைக்கு ஒப்பிடுகின்றது.
“(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்”. 2:187
மேற்படி வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும் மனைவியைக் கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. மேற்கத்தேய நாடுகளில் ஆடை மாற்றுவது போல் தமது சோடிகளை மாற்றுவதை இதற்கு நாம் விளக்கமாகக் கொள்ள முடியாது. நாம் ஆடை விடயத்தில் கடைப்பிடிக்கும் நோக்குகள் குறித்து நிதானமாகச் சிந்தித்தால் “ஆடை” என்ற உவமானம் கணவன் மனைவி உறவுக்கு எவ்வளவு தூரம் ஒத்துப்போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆடை மானம் காக்கும், அவள் கற்பைக் காப்பாள் ஆடை அணிவதன் அடிப்படை நோக்கம் மானத்தை மறைப்பதாகும். ஆடை இல்லாதவன் அவமானப்பட நேரிடும். இல்லறத்தின் அடிப்படை நோக்கம் கற்பைக் காப்பதாகும். அது இல்லாதவன் கற்புத் தவறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
“இளைஞர்களே! உங்களில் வாய்ப் புள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், அது பார்வையைத் தாழ்த்தச் செய்யும், கற்பைக் காக்கும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம்:திர்மிதி, நஸஈ, அபூதாவூத், இப்னு மாஜா
வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்குச் சமனாகும். எனவே, ஆடை அணியத் தயாராகுங்கள்.
ஆடைத் தெரிவு : 
நாம் ஆடையைத் தெரிவு செய்யும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கின்றோம். எமக்கு ஆடை அளவாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றோம். அன்றாடம் கூலித் தொழில் செய்யும் ஒருவன் ஆயிரக்கணக்குப் பெறுமதியான ஆடைகளைத் தெரிவு செய்வதில்லை. தன் வருமானத்திற்கு ஏற்றதாக ஆடையைத் தெரிவு செய்கின்றான்.
இவ்வாறே எமது தகுதிக்குத் தக்கதாக ஆடையைத் தெரிவு செய்கின்றோம், மூட்டை சுமக்கும் ஒருவர் கோட் சூட்டைத் தெரிவு செய்யமாட்டார். தெரிவு செய்தாலும் அதற்கேற்ற வாழ்க்கை அவரால் வாழ முடியாது. சாதாரணமாக கோட் சூட் அணிந்த ஒருவனால் மக்கள் நிரம்பி வழியும் போது வாகனத்தில் பயணிக்க முடியாது. சொந்தமாக வாகனம் பிடித்துச் செல்ல வேண்டும். ஒரு பிச்சைக்காரன் தட்டை நீட்டினால் கூட தான் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ப உதவி செய்ய நேரிடும்.
அடுத்து எமது நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் தோதான ஆடையையே தெரிவு செய்கின்றோம். ஒரு ஆடைத் தெரிவுக்கே இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்றால் வாழ்க்கைத் துணை எனும் ஆடையைத் தெரிவு செய்ய இதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவதானம் செலுத்த வேண்டும்.
சிலர் தமது தகுதிக்கு மீறி பணக்கார பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அதற்கேற்ப வாழ முடியாமல் விழி பிதுங்கி நிற்பதை நாம் அனுபவ வாயிலாக கண்டு வருகின்றோம். அந்தப் பெண் பணக்கார வாழ்வுக்குப் பழக்கப்பட்டிருப்பாள், அவளது தகுதிக்கு ஏற்ப செலவு கொடுக்க முடியாமல் இவன் திண்டாடுவான். அந்தப் பெண் பணக்கார நட்புகளை ஏற்படுத்தியிருப்பாள். எந்த பணக்கார நட்புக்களுடனும் உறவுகளுடனும் இணைந்து செல்ல முடியாமல் இவன் திண்டாடுவான். 
இவன் வீட்டு விஷேசங்களுக்குப் பணக்காரர்களை அழைக்க நேரிடும். அவர்கள் அவர்களது தகுதிக்கு ஏற்ப அன்பளிப்புக்கள் வழங்குவர். அதேபோன்று அவர்கள் தமது விஷேசங்களுக்கு இவனுக்கு அழைப்பு விடுப்பர். இவன் தனது தகுதிற்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க முடியாது என்று கௌரவப் பிரச்சினை பார்ப்பான். மனைவியின் தகுதிக்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க பொருளாதாரம் இடம் கொடுக்காது. இவ்வாறான இக்கட்டுக்களுடன் வாழும் ஒருவனது இல்லறம் இனிமையானதாக இருக்காது. எனவே, மனைவி கணவன் எனும் ஆடையைத் தெரிவு செய்யும் போது மிகுந்த நிதானம் தேவை.
“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவையாவன ; அவளது பணத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக,
அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக.

நீர் மார்க்க முடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, அழிவிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மார்க்கமுடைய துணையைத் தெரிவு செய்வோமாக!
ஆடையில் அழகும் அந்தஸ்தும் :
மானத்தை மறைப்பதுதான் ஆடையின் அடிப்படை அம்சம்! எனினும் ஆடையைத் தெரிவு செய்யும் போது வெறுமனே அவ்ரத்தை மறைப்பதை மட்டும் நாம் கவனிப்பதில்லை. அந்த ஆடை எமக்கு அழகைத் தரவேண்டும் என்று விரும்புகின்றோம். அதன் மூலம் எமது உடல் சூடு, குளிரில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆடையின் மூலம் அந்தஸ்தை, மகிழ்ச்சியை என பல அம்சங்களையும் நாம் எதிர் பார்க்கின்றோம்.
இல்லற ஆடையாகிய வாழ்க்கைத் துணைக்கும் இந்த அம்சங்கள் பொருந்தும். வெறுமனே பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பது மட்டும் இல்லறத்தின் நோக்கமல்ல. அங்கே மகிழ்ச்சி நிலவ வேண்டும், கணவன் எனும் ஆடை மூலம் மனைவியும், மனைவி எனும் ஆடை மூலம் கணவனும் சமூகத்தில் பாதுகாப்பையும், அலங்காரத்தையும், அந்தஸ்த்தையும் அடைய வேண்டும். இவர் என் கணவர் என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணுக்கு பாதுபாப்பும், அந்தஸ்த்தும் மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும். இவன்தான் உன் கணவனா(?) என்ற ரீதியில் அவள் அவமானத்தையோ, அசிங்கத்தையோ, இவனின் மனைவி என்றால் எப்படிவேண்டுமானாலும் வளைத்துப் போடலாம் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையையோ ஒருபெண் சம்பாதிக்கக் கூடாது.
அவ்வாறே, இவளா உன் மனைவி(?) வேறு ஆள் கிடைக்க வில்லையா? என்ற தோரணையில் ஒரு கணவன் நோக்கப்படும் விதத்தில் மனைவியின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது.
இவ்வாறே, ஆடை அழகையும், அந்தஸ்தையும் அபயமற்ற நிலைமையையும் தர வேண்டும்.
ஆடையின் தன்மையறிந்து பணி செய்வோம்!
நாம் வெள்ளை நிற ஆடை அணிந்து வயலில் வேலை செய்ய மாட்டோம். மென்மையான ஆடையணிந்து கடின பணிகளில் ஈடுபடமாட்டோம். விளையாட்டுக்கு, வீட்டு வேலைக்கு, ஆலயத்திற்கு, தொழில் செய்வதற்கு என பணிகளுக்கு ஏற்ப ஆடை அணிகின்றோம். ஆடையின் தன்மையறிந்தே செயல்படுகின்றோம். இவ்வாறே இல்லறம் இனிமையாக அமைய வாழ்க்கைத்துணை எனும் ஆடை பற்றிய அறிவும் அதற்கேற்ற செயற்பாடும் அவசியமாகும்.
இல்லற வாழ்வில் இணைந்த இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவரின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து, விட்டுக் கொடுத்து அல்லது விட்டுப்பிடித்து செயல்பட அறிந்து கொள்ள வேண்டும்.
சில கணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு, தேநீர் இல்லாவிட்டால் கோபம் வரும். சிலருக்கு ஆடைகள் ஒழுங்காக கழுவப்படாவிட்டால் பிடிக்காது. சில பெண்களுக்கு கணவன், தன் குடும்பத்தவர் பற்றிய குறைகளைப் பேசினால் பிடிக்காது. இவ்வாறான பல பிடிக்காத விடயங்கள் இருக்கும். இவற்றைப் புரிந்து, தவிர்ந்து கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் நெருப்பானால் மற்றவர் பஞ்சாகாமல் நீராக இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஆடையை அறிந்து செயல்படும் பக்குவம் இன்பமான இல்லறத்திற்கு இன்றிய மையாததாகும்.
ஆடையின் குறையை மறைப்போம்: 
எமது ஆடையில் ஏதேனும் அழுக்கோ, அசிங்கமோ பட்டுவிட்டால், அல்லது ஏதேனும் கிழிவுகள் ஏற்பட்டுவிட்டால் எமது கௌரவத்திற்காக அதை மறைக்கவே முயல்வோம். அழுக்குப்பட்ட பகுதி வெளியில் தெரியாமல் அணியமுடியுமாக இருந்தால் அதை அப்படியே அணிவோம். இல்லற ஆடையையும் இப்படித்தான் நாம் கையாள வேண்டும். என் கணவர் மோசம், அவர் சரியில்லை. கருமி, முன்கோபக்காரர், மூர்க்கமாக நடப்பவர் என்று மனைவியோ, அவள் சரியில்லை ஒழுக்கமில்லாதவள், ஒழுங்காகப் பேசவோ, நடக்கவோ, சமைக்கவோ தெரியாதவள், ஆணவக்காறி, அடங்காப்பிடாரி என்று கணவனோ வாழ்க்கைத் துணை எனும் ஆடையை அசிங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
ஆடையில் அழுக்குப்பட்டால் :
நாம் எவ்வளவுதான் நிதானமாக நடந்தாலும் எமது ஆடையில் அழுக்குப்படவே செய்யும். அது கசங்கிப்போகும். அதற்காக அதை கழற்றி எறிந்தா விடுகின்றோம். அழுக்கு நீங்கக் கழுவி, மடிப்பு நீங்க அயன் பண்ணி மீண்டும் அணிந்து கொள்கின்றோம். ஏன் சின்னச் சின்ன கிழிசல்களைக் கூட தைத்து மறுபடியும் அணிந்து கொள்கின்றோம்.
இவ்வாறுதான் வாழ்க்கை வண்டி நகர நகர புதிய புதிய பிரச்சினைகள் புற்றீசல் போல் கிளர்ந்து வரலாம். அவை எமது தவறான அணுகு முறைகளால் பூதாகரமாகக் கூட மாறிப் போகலாம். இச்சந்தர்ப்பங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றாற்போல் செயல்பட்டு இல்லற ஆடையைக் கழற்றி எறிந்து விடக் கூடாது. அழுக்குப்பட்டால் கழுவுவது போல், நொறுங்கிப் போனால் அயன் பண்ணுவதுபோல், கிழிந்தால் தைத்துக்கொள்வது போல் சமாளித்துப் போகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு “முஃமினான ஆணும் (தன் மனைவியான) முஃமினான பெண்ணிடம் காணப்படும் சிறு சிறு குறைகளுக்காக அவளைப் பிரிந்துவிட வேண்டாம். அவளிடம் ஏதேனும் ஒன்றை அவர் வெறுத்தால் அவளிடம் இருக்கும் நல்லதைக் கண்டு திருப்தியுறட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் இதனையே கூறியுள்ளார்கள்.
ஆடையே அவமானமாக மாறல் :
ஆடையில் அழுக்கு நீக்குவது போல் இல்லற ஆடையின் குறைநீக்க இஸ்லாம் வழி கூறுகின்றது.
ஒரு பெண்ணிடம் கணவன் குறைகாணும் போது பின்வரும் வழிமுறைகளையே கையாள வேண்டும்.
01. இதமாக எடுத்துக்கூற வேண்டும். இதனால் அவள் திருந்தவில்லையாயின்
02. படுக்கையை வேறாக்கி அவளை உளவியல் ரீதியாக திருத்த முற்பட வேண்டும். அதனாலும் மாற்றம் ஏற்படவில்லையானால்
03. காயம் ஏற்படாதவாறு இலேசாக அடித்து விவகாரம் விகாரமாகிச் செல்வதை உணர்த்த வேண்டும்.
04. இதுவும் பயன்தராத பட்சத்தில் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இருவரிடம் விபரத்தைக்கூறி சுமூகமாக தீர்வு காண முயல வேண்டும்.
இதையும் தாண்டிவிட்டால் இருவரும் இனிமையாக இல்லறம் நடத்த முடியாது என்பது உறுதியாகும் போதும் மட்டும் தான் “தலாக்” என்கிற இறுதிக்கட்டத்திற்கு வர வேண்டும்.
ஒருவன் அணிந்த ஆடையே அவனுக்கு அவமானத்தை தருகின்றது என்றால், மானத்தை மறைப்பதற்குப் பதிலாக மானபங்கப் படுத்துகின்றது என்றால், அழகுக்குப் பகரமாக அசிங்கத்தையும், கௌரவத்திற்குப் பகரமாக அவமானத்தையும் தருகின்றது என்றால் அவன் அதைக் களற்றிப்போடுவதே சிறந்ததாகும். இந்த உரிமையை இஸ்லாம் பெண்களுக்கும் வழங்கியுள்ளது. ஆனால், சிலர் துரதிஷ்ட வசமாக இறுதி முடிவையே ஆரம்பத்தில் எடுத்து வருவது தான் ஆச்சரியமாகவுள்ளது.
                                                                                                                     அஷ்சேஹ்  இஸ்மாயில் ஸலபி

உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் தொடர்புடையது. தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற போது தனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து வாழலாம் என்று இவ்வுலக வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவதாகும். ஆனால் உண்மையான முஃமினின் வாழ்க்கையை பொருத்தமட்டில் அவன் உலக வாழ்வையும் பார்க்க மறுமையில் தான் ஈடேற்றமான வாழ்க்கையை பெற்றுக் கொள்ள வேணடுமென்பதில் அதிக கரிசனை காட்டுவான்.
அந்த வகையில்தான் ஒரு முஃமினின் இலட்சியம், நோக்கங்களில் மிகப் பிரதானமானது வானம் பூமியை விட விசாலமான சுவனத்தை அடைவதாகும். இந்த சுவனத்தை அடைவதாக இருந்தால் உண்மையில் நாம் செய்கின்ற அமல், இபாதத்கள் மட்டும் போதாதாகும். சுவனம் நுழைவதாக இருந்தால் அல்லாஹ்வுடைய றஹ்மத் கிடைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனை நாம் ஹதீஸ்கள் மூலமாகவும் அறியலாம்.
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து உங்களில் ஒருவர் தான் செய்த அமல்கள் மூலமாக சுவனம் நுழையமாட்டார். அல்லாஹ்வுடைய றஹ்மத் இருந்தாலே தவிர என்ற கருத்தில் கூறிய போது அல்லாஹ்வுடைய தூதரே நீங்களும் அல்லாஹ்வுடைய றஹ்மத் இல்லாமல் சுவனம் நுழைய முடியாதா என்று ஸஹாபாக்கள் கேட்க நானும் அல்லாஹ்வுடைய றஹ்மத் இல்லாமல் சுவனம் முடியாது என்று நபியவர்களே கூறினார்களென்றால் நானும் நீங்களும் கட்டாயமாக இது பற்றி சிந்திக்க வேண்டும்.
அந்த ஸஹாபாக்களது வாழ்வைப் பற்றி நாம் நாளாந்தம் அறிந்து கொண்டே இருக்கிறோம். அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வுக்காக தங்களது சொத்து செல்வங்களையெல்லாம் இழந்தார்கள். தங்களது சொந்த பந்தங்களை இழந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தங்களுடைய உயிரையும் துச்சமாக மதித்தவர்கள். அந்த ஸஹாபாக்களுக்கே இந்த நிலையென்றால் நானும் நீங்களும் எந்தளவு இந்த விடயத்தில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். எனவே அல்லாஹ்வுடைய றஹ்மத் பற்றிய சிறு அறிவு எமக்கு அவசியமாகும். எனவே இந்த தலைப்பை சில உப தலைப்புகளைக் கொண்டு அவதானிப்போம்.
01) அல்குர்ஆன் றஹ்மத் என்று எவைகளை அடையாளப்படுத்துகின்றது.
முதலாவது வசனம் 

{قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون}
“அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும் அவனுடைய கருனை கொண்டுமுள்ளதாகும். ஆகவே அவர்கள் அதைக் கொண்டு சந்தோஷமடையட்டும்.இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றை விட மிகச் சிறந்தது என்று நபியே நீர் கூறுவீராக” (10:58)

இவ்வசனத்துக்கு உலமாக்கள் விளக்கம் சொல்லும் போது இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் அல்குர்ஆனையே குறிக்கின்றது என்ற கருத்தில் விளக்கம் சொல்லி இருக்கின்றார்கள். ஏனெனில் அல்குர்ஆனது நாம் அறியாத விடயங்களை எமக்கு கற்றுத் தருகின்றது. எமக்கு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் எம்மை நரகை விட்டும் பாதுகாக்கின்றது. எனவே அல்குர்ஆன் அல்லாஹ்வின் மாபெரும் றஹ்மத்தாகும்.
இரண்டாவது வசனம்
{قل ياعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله}
“வரம்பு மீறி தவறு செய்த என்னுடைய அடியார்களே நீங்கள் அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்” (39:53)

இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் பாவமன்னிப்பு, தவ்பா ஏற்றுக் கொள்ளப்படுதல் என்ற அர்த்தங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு மனிதன் தவறுகள் செய்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்கின்ற போது அல்லாஹ் அவனது றஹ்மத்தினால் அவைகளை அப்படியே அழித்து விடுகிறான்.
மூன்றாவது வசனம்
{إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي}
“நிச்சயமாக உள்ளங்கள் பாவங்கள் பால் சாயக்கூடியதாகும். என்னுடைய இரட்சகன் அன்பு காட்டியவர்களைத் தவிர” (12:53)
இந்த வசனம் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றுடன் தொடர்புடையதாகும். அரசரின் மனைவி யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தவறான அழைத்ததன் பிற்பாடுதான் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த செய்தியைக் குறிப்பிட்டார்கள்.
எனவே ஒரு மனிதன் பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படுவதும் அல்லாஹ்வின் றஹ்மத்தில் உள்ளதாகும்.
நான்காவது வசனம்
{إن رحمت الله قريب من المحسنين}
“அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு சமீபத்தில் இருக்கிறது” (07:56)

இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்பது நன்மை கூலி என்ற அர்த்தங்களில் இடம்பெற்றிருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
ஐந்தாவது வசனம்
{ذكر رحمت ربّك عبده زكريا}
“இது உமது இரட்சகன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு புரிந்த அருள் பற்றி நினைவு கூர்வதாகும்.” (19:02)

இந்த வசனம் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதியவராக இருந்தும் பிள்ளை கிடைக்காத சந்தர்ப்பத்தில் இறைவனிடம் தனக்கு ஒரு பிள்ளையை தருமாறு பிரார்த்தித்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அன்பளிப்பாக வழங்கி அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். எனவே நாம் கேட்கின்ற பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதும் அல்லாஹ்வுடைய றஹ்மதில் உள்ளதாகும்.
ஆறாவது வசனம்
{ أولئك يرجون رحمة الله}
“அவர்கள் அருளின் பக்கம் ஆதரவு வைப்பார்கள்” (02:218)

இத்திருமறை வசனத்தில் வருகின்ற றஹ்மத் என்ற பதம் சுவனம், கூலி என்ற கருத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட திருமறை வசனங்களிலும் இதுவல்லாமல் இன்னும் சில வசனங்களில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் பல்வேறுபட்ட அர்த்தங்களில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வர்த்தங்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து விளங்குவதாயின் அல்லாஹ்வுடைய றஹ்மத் என்பது இறைவனிடமிருந்து கிடைக்கின்ற எல்லாவிதமான சிறப்புகள், அபிவிருத்திகளையும் குறிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக
வாழ்கின்ற காலப்பகுதியில் அல்லாஹ்வுடைய றஹ்மதை சரியான முறையில் பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..

                                                                                M.F.பர்ஹான் அஹமட் ஸலபி

இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற பொக்கிஷமாகும், உலக மக்கிளைடையே அல்லாஹ் அதற்கு வழங்கிய அங்கீகாரமே அவர்களது வாழ்க்கையில் பேணப்பட்ட உளத்தூய்மைக்கு பேதிய சான்றாகும்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்; ஓர் இலட்சம் ஸஹீஹான ஹதீஸ்களையும் இரண்டு இலட்சம் ஸஹீஹ் அல்லாத ஹதீஸ்களையும் மனனம் செய்துள்ளேன். நூல் – முகத்திமா இப்னுஸ் ஸலாஹ் – 10 இப்னுஸ் ஸலாஹ் ரஹிமஹுல்லாஹ்.
முஹம்மத் இப்னு ஹம்தவைஹி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தான் ஓர் இலட்சம் ஸஹீஹான ஹதீஸ்களையும் இரண்டு இலட்சம் ஸஹீஹல்லாத ஹதீஸ்களையும் மனனம் செய்துள்ளேன் என்று கூறியதை தாம் கேட்டதாக கூறியுள்ளார்கள். நூல் – முகத்திமது பத்ஹில் பாரி – 488. ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்,
இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவில் உறங்கச்சென்று இடையில் கண்விழித்தால் உடனே விளக்கைப் பத்தவைத்து தமக்கு ஞாபகத்துக்கு வருகின்ற ஹதீஸ்களையும் அதன் தெளிவுகளையும் எழுதிக்கொள்வார்கள்.
இப்படியாக ஓர் இரவில் மாத்திரம் கிட்டத்தட்ட இருபது தடவைகள் விழித்தெழுந்து ஹதீஸ்களையும் அதன் தெளிவுகளையும் எழுதிக் கொள்வார்கள். நூல் – அல்பிதாயா வந்நிஹாயா 11/31. இமாம் இப்னு கஸீர் அத்திமிஷ்கி ரஹிமஹுல்லாஹ்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் நான் ஸஹீஹுல் புஹாரியின் எந்த ஒரு ஹதீஸை எழுதுவதற்கு முன்பும் குளித்து சுத்தமாகி இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத் தொழுதுவிட்டே எழுதுவேன். நூல் – பத்ஹுல் பாரி – 1/7 ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்.
வுழுவுடன் பல்லாயிரக்கணக்கான ரக்அத்துக்கள் நபிலான தொழுகைகள் தொழுது, தொழுது பிரார்த்தித்து எழுதப்பட்ட ஹதீஸ் தொகுப்பே ஸஹீஹுல் புஹாரியாகும்.
அமீருல் முஃமினீன் பில் ஹதீஸ் இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
(எனது உஸ்தாத்) அலி இப்னு மதீனீ அவர்களைக் கண்டால் சிறுபிள்ளையைப் போன்று என்னை நான் அற்பமாகக் கருதிக் கொள்வேன். தத்கிரதுல் ஹுப்பாழ் – 2/428 இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ்.
தனது துறையில் தான் உச்சத்தில் இருந்த போதும் பெருமையற்று, சத்தியத்தில் நிலைத்திருந்த மூத்த அறிஞர்களை மதிக்கின்ற உயர்ந்த குணமே இமாமவர்களின் அறிவின் அபிவிருத்திக்கும் மக்களிடையே அவர்களுக்குள்ள நன்மதிப்புக்கும் மிகப்பெரிய காரணியாய் அமைந்தது.
இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களது இரு கண்களுக்கும் இடையில் முத்தமிடுவார்கள், பின்பு ஆசான்களுக்கெல்லாம் ஆசானே முஹத்திஸீன்களின் தலைவரே என்னை விடுங்கள் நான் உங்கள் கால்களை முத்தமிடுகிறேன் எனக்கூறுவார்கள் என்பதாக அஹ்மத் பின் ஹம்தூன் இன்திஸார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்கள் – அல் பிதாயா வந்நிஹாயா, தாரீஹ் பக்தாத், தாரீஹ் திமிஷ்க், தாரீஹ் நைஸாபூர்
அல்லாமா ஸஹாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ” உம்ததுஸ் ஸாமிஃ வல் காரி பீ பவாயிதி ஸஹீஹில் புஹாரி” என்ற அழகான நூலை தொகுத்துள்ளார்கள் அந்த நூலை அல்லாமா ஜாமிஃ ரிழ்வான் ஜாமிஃ அவர்கள் தஹ்கீக் செய்துள்ளார்கள், இதனை படிப்பதன் மூலம் ஸஹீஹுல் புஹாரியின் போங்கு பற்றிய தெளிவைப் பெற முடியும்.
அல்லாமா அப்துஸ் ஸலாம் முபாரக்பூரி அவர்கள் “ஸீரதுல் இமாம் அல் புஹாரி” என்ற தமது நூலில் ஸஹீஹுல் புஹாரியின் பயன்கள், புஹாரிக்கான விரைவுரைகள் பற்றிய மேலதிக விளக்கங்களை பதிவு செய்துள்ளார்கள்.
அல்லாமா முஹம்மத் இஸாம் அரார் அல் ஹுஸைனி அவர்கள் தமது “இத்திஹாபுல் காரி பிமஃரிபதி ஜுஹூதி வஅஃமாலில் உலமா அலா ஸஹீஹில் புஹாரி” என்ற நூலில் ஸஹீஹுல் புஹாரிக்கான விரிவுரைகளில் 375 நூல்களை குறிப்பிட்டுள்ளார்கள், இதில் ஒன்றையோ இரண்டையோ முழுமையாக வாசிக்க எம்மால் முடியாவிட்டாலும் கூட இப்படி விரிவுரை நூல்களை இமாம்கள் ஏன் எழுதினார்கள் என்பதனை சிந்தித்தாவது பார்க்க வேண்டும்.
காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு ஏசி அறைகளுக்ககுள் மடிக்கணினியின் முன் அமர்ந்து கொண்டு கண்மூடித்தனமாக இமாம்களை விமர்சிப்பவர்கள் இந்த துறைக்காக இமாம்கள் தமது வாழ்நாட்களையே எவ்வாறு அர்ப்பணித்திருக்கிறார்கள், அவர்கள் தமது மூத்த அறிஞர்கள், முன் வாழ்ந்த நல்லோர்களை எப்படி கீர்த்திப்படுத்தியுள்ளார்கள் என்பது பற்றி கொஞ்சமாவது சிந்தித்து செயல்படுவார்களாக!
எங்களுடைய அன்புக்குரிய இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு வழங்குவானாக!
                                                            
                                                         -அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி 

பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக் கொண்டோ அல்லது இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி இருப்பது விரும்பத்தக்கது.
கேள்வி : பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் சாட்சிசொல்ல வேண்டும் என்ற ரீதியில், நான் பர்ழான தொழுகையை தொழுத பின்னர் உபரியான சுன்னத்தான தொழுகையை தொழுவதற்காக வேண்டி இடத்தை மாற்றித்தொழுவது விரும்பத்தக்கதா?
பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே,
ஆமாம், பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக்கொண்டோ அல்லது இன்னொரு இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி விடுவது விரும்பத்தக்கது.
(இதிலே) மாற்றுதலில் மிகவும் சிறந்தது வீட்டிலிருந்தே தொழுகைக்காக செல்வதாகும். ஏனெனில், ஒரு மனிதனுக்கு கடமையான பர்ழான தொழுகைகளைத் தவிர மற்ற தொழுகைகளை வீட்டிலே தொழுவதுதான் சிறந்தது.
عن معاوية رضي الله عنه قال : (إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ ، أَنْ لَا تُوصَلَ صَلَاةٌ بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ) . رواه مسلم في صحيحه (1463)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “நீ ஜும்ஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை அல்லது பள்ளிவாயலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுக்கள் பேசாதவரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாதவரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக்கூடாது” என்று கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம் -1463)
இமாம் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸ்லிம் கிரந்தத்திற்கான தனது விளக்க நூலிலே கூறினார்கள் ; “இதிலே ஷாபிஃ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களின் கூற்றுக்கு ஆதாரம் உள்ளது. அதாவது பர்ழான தொழுகை தொழுத இடத்தை விட்டும் வேறு இடத்தில் உபரியான தொழுகைகளை தொழுவது விரும்பத்தக்கதாகும். இன்னும் ஸுஜுது செய்யும் இடங்களை அதிகப்படுத்திக்கொள்வதற்காகவும், உபரியான தொழுகையின் வடிவம் பர்ழான தொழுகையின் வடிவத்திலிருந்து வேறுபடுவதற்காகவும். உபரியானதை வீட்டில் தொழுவதே மிகவும் சிறந்தது, அப்படி இல்லை என்றால் அதே பள்ளிவாயிலிலோ அல்லது வேறு இடத்திலோ தொழுவது ஏற்றதாகும்.
அத்துடன் “கதைக்கின்ற வரை” என்ற வாசகத்தின் மூலம் இரண்டுக்கும் மத்தியிலான பிரிவு பேச்சின் மூலமும் அமையலாம் என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. என்றாலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதே மிகவும் சிறந்ததாகும்.” அல்லாஹ்வே அறிந்தவன்.
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : (أَيَعْجِزُ أَحَدُكُمْ إِذَا صَلَّى أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ أَوْ عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ ، يَعْنِي : السُّبْحَةَ) أي : صلاة النافلة بعد الفريضة.  أبو داود (854) وابن ماجه (1417) وصححه الألباني في صحيح سنن ابن ماجه .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “உங்களில் ஒருவர் பர்ழான தொழுகையை தொழுதால் முன்னால் சென்றோ அல்லது பின்னால் வந்தோ அல்லது வலதோ அல்லது இடதோ நோக்கிவந்து உபரியான தொழுகையை தொழுவதற்கு முடியாதா?” (ஆதாரம் : அபூதாவூத்-854, இப்னு மாஜா-1417) இமாம் அல்பானீ அவர்கள் இதனை ஆதாரபூர்வமானது என தனது “ஸஹீஹ் இப்னு மாஜா“வில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “பர்ழான தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்றவைகளின் பின்னரான உபரியான தொழுகைகளுக்கும் கடமையான தொழுகைகளுக்கும் மத்தியில் ஒரு இடைவெளி இருப்பது நபிவழியாகும்.

மாறாக, ஒரு தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் மத்தியில் எழுவதைக் கொண்டோ அல்லது பேசுவதைக் கொண்டோ பிரிக்காமால் தற்பொழுது அதிகமான மனிதர்கள் செய்வதைப்போன்று பர்ழான தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் சுன்னத்தான இரண்டு ரக்ஆத்துக்களை எந்தவித இடைவெளியுமில்லாமல் உடனே தொழக்கூடாது. இச்செயற்பாடு நபியவர்களால் தடைசெய்யப்பட்ட ஆதாரபூர்வமான ஒரு விடயமாகும். ஏனெனில் இபாதத்திற்கும் இபாதத் அல்லாததிற்கும் மத்தியில் வேறுபடுத்துவதைப்போன்று பர்ழுக்கும் சுன்னாவிற்கும் மத்தியில் வேறுபடுத்துவது இதன் ஹிக்மத்தாக இருக்கின்றது. எனவேதான் நோன்பு திறப்பதை விரைவுபடுத்துவதுடன், நோன்பு பிடிப்பதினை (ஸஹர் நேரத்தை) பிற்படுத்துவதும் விரும்பத்தக்க செயற்பாடாக உள்ளது.
அத்துடன் நோன்புப் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகைக்கு முன்னர் சாப்பிடுமாரும், ரமழான் மாதத்தை ஓர் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் நோன்பு நோற்று ரமழானை வரவேற்பதையும் தடுத்தார்கள். ஏனெனில், இவைகளெல்லாம் மார்க்கத்தில் ஏவப்பட்ட நோன்பிற்கும் மற்ற நோன்பிற்கும் மத்தியில் ஒரு பிரிவு இருக்கவேண்டும் என்பதுடன் இபாதத்திற்கும் இபாதத் அல்லாத காரியங்களுக்கு மத்தியிலும் ஒரு பிரிவு இருக்க வேண்டும் என்பதனாலாகும். இவ்வாறே அல்லாஹுத்தஆவால் கடமையாக்கிய ஜும்ஆ மற்றவைகளிலிருந்து வேறுபாடுகின்றது.“ (அல்பதாவா அல்குப்ரா 2-359)
“எனவே, பர்ழான மற்றும் சுன்னத்தான தொழுகைக்கு மத்தியில் ஒரு பிரிவு இருப்பதற்கான காரணி என்னவென்றால் ஒன்றை மற்றையதிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதாகும்.

இன்னும் சில அறிஞர்கள் அதற்கான மற்றுமொரு காரணியை குறிப்பிடுகின்றார்கள் : நாளை மறுமையில் அவனுக்காக ஸுஜுது செய்த இடங்கள் சாட்சிசொல்லும் என்பதனாலுமாகும்.” (முன்னர் கூறப்பட்ட இமாம் நவவீ அவர்களின் கருத்தை போன்ற கருத்தாகும்)
அர்ரம்லி அவர்கள் கூறினார்கள் : “ஸுஜுது செய்யுமிடங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக வேண்டி ஒரு பர்ழான தொழுகைக்குப் பின் இன்னொரு பர்ழான தொழுகையை தொழுவதற்கோ அல்லது சுன்னத்தான தொழுகையை தொழுவதற்கோ ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்தில் தொழுமிடத்தை மாற்றிக் கொள்வது சுன்னத்தான வழிமுறையாகும். ஏனெனில் இச்செயலின் மூலம் பூமியை இபாதத்தைக் கொண்டு உயிர்ப்பித்தான் என்பதால் அவனுக்காக வேண்டி அந்த இடங்கள் நாளை மறுமையில் சாட்சி சொல்லும். அப்படி ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்தில் மாற்ற முடியவில்லை என்றால் ஒருவருடன் பேசுவதின் மூலமாவது இரண்டு தொழுகைகளையும் பிரித்துக்காட்டுவாயாக.”(நிஹாயதுல் முஹ்தாஜ் 1-552)
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.
அரபியில் : https://islamqa.info/ar/116064
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

நபி பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு பழைய பிரச்சினை என்றாளும் சமூகத்தில் ஆங்காங்கே புதிதாகப் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் இந்த கொண்டாட்டத்திற்க்கும் மார்கத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்பதை நடுநிலை தவறாமல் சில கேள்விகளை எழுப்பி பதில் தேடுவோம்.     
குறிப்பு : இங்கு அறிஞர்களின் கூற்றுகளை பதிவு செய்யும் போது (வஹ்ஹாபிகள் என்று அறியாமை காரணமாக சிலரால் அழைக்கப்படும்) உலமாக்களின் கூற்றுகளை முற்றாக தவிர்த்து ஏனைய உலமாக்களின் கூற்றுகளையே பதிவிடுவோம்.
🔵 நபிமொழிகளை அறிவிப்பு செய்த அறிவிப்பாளர்கள் யாராவது இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா..?
இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் அல்லது தாபிஉன்களில் யாராவது..? அல்லது ஸஹாபாக்களில் ஒருவராவது கொண்டாடினார்களா ..? சரி நபி (ஸல்) அவர்களாவது கொண்டாடிய அறிகுறிகள் இருக்கின்றனவா...?
எப்படி அப்பேர்பட்ட சமுகத்திற்க்கு வராத சிந்தனை எம்மில் சிலருக்கு வந்தது...?
🔵 இது பித்அத், இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது என யார்யார் கூறியுள்ளனர் (உலமாக்கள்)..?
மீலாது நபிக் கொண்டாட்டம் பித்அத் என்று கூறிய அறிஞர்கள்.
 இமாம் ஷாதிபி (ரஹ்( , நூல் அல்இஃதிஸாம் (1/34) | பதாவா அஷ்ஷாதிபி (203)
 இமாம் பாகிஹானி (ரஹ்) , நூல் அல் மவ்ரித் பீ அமலில் மவ்லித் (20-21)
 இமாம் இப்னுல் ஹாஜ் மாலிகி (ரஹ்) , நூல் : அல் மத்ஹல் (2/312)
 இமாம் முகம்மத் அல் ஹப்fபார் மாலிகி (ரஹ்) , நூல் அல்மிஃயாருல் முஃரிப் வல்ஜாமிஉல் முக்غரிப் (7/99-100)
 ஷெய்ஹ் அல் பஷீர் அல் இப்ராஹீமி (ரஹ்) நூல் : ஆஸாருல் அல் பஷீர் அல் இப்ராஹீமி (2/341)
 ஷெய்ஹ் முஹம்மத் அல் கஸாலி அவர்கள் கூறுவதாவது : இவ்வாறான கொண்டாட்டங்களை நிலைநாட்டுவதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதென்பது அடிப்படை இல்லாத வனக்கமாகும்.... அந்த வகையில் நாம் இந்தக் கொண்டாட்டங்கள் மற்றும் இவைகளின் விதங்களைப் பொருத்தமட்டில் பித்அத்துக்கள் என்ற பொதுவான சட்டத்தின் பக்கமே செல்கிறோம். அவைகள் காரணங்கள் சொல்லப்பட விடாமல் ஒழிக்கப்பட வேண்டும்..... இவைகளை முழுமையாக இல்லாமலாக்குவது ஆன்மீக லவ்கீக கடப்பாடு.... நூல் : லைஸ மினல் இஸ்லாம் (252)
 ஷெய்ஹ் யூஸுப் கர்ழாவி அவர்கள் இது தொடர்பாக பேசிய உரைகளைப் பார்க்கும் போது "இது மார்க்கத்தில் உள்ள வணக்கம் அல்ல, மாறாக அரசியல் நோக்கங்களுக்காக இஜிப்டில் பாதிமிய்ய காலகட்டத்தில் மக்களை அரசியல் விடயங்களில் ஈடுபடாமல் தடுக்கக் கையாண்ட யுத்தி என்று கூறுவதைக் காணலாம். (Al Jazeera)
🔵 இதை ஆதரிக்கும் உலமாக்களே ஏதேனும் இது தொடர்பாக விமர்சனங்கள் செய்துள்ளனரா...?
ஆம்.....
மவ்லித் நபி கொண்டாட்டத்தை ஆதரிக்கும் தரீகத்து ஷெய்ஹு மார்களில் ஒருவரான ஷெய்ஹ் #அப்துல்லா_அல்குغமாரி அவர்கள் கஸீததுல் புர்தா புகழ் பாடலுக்கு (ومن علومك علم اللوح والقلم) அதாவது மறைவான அறிவை அறியும் சக்தி நபி வர்களுக்கு உண்டு என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ள கவியடிக்கு மறுப்பத் தெரிவிக்கையில்
 நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைப் புகழும் நபர் மார்க்கத்தில் உறுதியில்லாத வற்றைக் கொண்டு புகழ் பாடுவதன் மூலம் பொய்யனாகி விடுகிறார், அத்தோடு நபி அவர்கள் "என் மீது வேண்டுமென்றே பொய்யுரைத்தவன் நரகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்" என்ற எச்சரிக்கைக்குள்ளாகி விடுவான்.....
அந்தவகையில் மவ்லித் புத்தகங்களில் காணப்படும் அடிப்படையற்ற அளவுகடந்த புகழாரங்களான மிஃராஜ் சம்பவம் போன்ற அம்சங்கள் எரிக்கப்பட்ட வேண்டும், அதனுடையவர்கள் அவைகளை வாசிப்பவர்கள் நரகில் எரிக்கப்படாமல் இருப்பதற்காக...... நூல் : முல்ஹக் அன் கஸீததில் புர்தா (77)
🔵 இதனை ஆதரித்து அறிஞர்கள் பத்வாக்கள் வழங்கியுள்ளனரா..?
இதனை ஆதரித்து பல அறிஞர்கள் தவறுதலாக தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர்... அவர்களை மதிக்கிறோம் கண்ணியப்படுத்துகிறோம்
 அவ்வனைத்து அறிஞர்களும் தற்காலத்தில் அரங்கேற்றப்படும் நிகழ்வுகளை ஆதரிக்கவில்லை மாறாக அவைகளை விமர்சித்துள்ளார்கள். அத்தோடு அவர்கள் அனைவரும் இது நபி அவர்களின் காலத்திலோ ஸஹாபாக்கள் மற்றும் தபிஈன்கள் காலத்திலோ காணப்படவில்லை என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தவறுகள் இன்றி அதை நிலைநாட்டுவது பித்ஆ ஹஸனா (நல்ல பித்ஆ) என்று கூறியுள்ளனர்[ உ+ம் இமாம் இப்னு ஹஞர் அஸ்கலானி, இமாம் ஸஹாவி, இமாம் ஸுயூதி (ரஹ்)]
நூல் : அல்பதாவா அல்குப்ரா (1/196)
அஸ்ஸீரா அல் ஹலபிbய்யா (1/83-84)
ஹாவி லில் பதாவா (1/229)
 பித்ஆ ஹஸனா என்று கருதி அனுமதி வழங்கிய உலமாக்கள் பொருத்தமட்டில் முந்தைய உலமாக்களின் பார்வையில் அவர்கள் தவறிழைத்தவர்களாவர்.
காரணம் மார்க்கத்தில் நல்ல பித்ஆ என்பது கிடையாது. இதைப்பற்றி ஸஹாபாக்கள் தொடக்கம் பல அறிஞர்கள் எச்சரித்துமுள்ளனர்.
ஏன் இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூட இது பற்றி கூறியதாவது ; "மார்க்கத்தில் பித்அத் என்பது கெட்ட விடயமே மாறாக மொழிரீதியாக பார்த்தால், எந்த ஒரு முன்னுதாரணமும் இல்லாமல் புதிதாக உறுவாக்கப்பட்டவை அது நல்லதோ கெட்டதோ பித்ஆ என்று சொல்லப்படும்." நூல் : பத்ஹுல் பாரி (13/253)
🔵 சிலர் இதற்கு சில குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸுகளில் ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறுகின்றனரே..?
அப்படி சொல்வோர் பொதுப்படையாக வந்த வசனங்களை வைத்து இது தான் இதறகு ஆதாரம் என்று எந்த ஒரு அறிஞரின் விளக்கங்களையும் மேற்கோள் காட்டாமல் தாமாகவே புரிந்து கொண்டு பேசுவார்கள்.
அப்படி யாரையாவது ஓர் அறிஞராவது இதற்கு இதுதான் விளக்கம் என்று சொல்லியுள்ளாரா என்று கேட்டால் அதற்கு பதில்கிடைப்பதில்லை.
ஸஹாபாக்கல் புரியாத விளக்கத்தையா இது விடயத்தில் இவர்கள் புரிந்தது விட்டார்கள்...?
🔵 அப்படி என்றால் இந்த பித்ஆவை யார் முதலில் உருவாக்கியது..?
மவ்லித் நபி கொண்டாட்டத்தின் துவக்கம்.
 இக் கொண்டாட்டம் முதலில் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பாதிமிய்யாக்கள் என்று தன்னை மக்கள் மத்தியில் பொய்யாக அறிமுகப்படுத்திய மஜூஸிய வழி வம்சத்தைச் சேர்ந்த உபைதியாக்களாகும். நூல் : கிதாபுர் ரவ்ழதைன் பீ அஹ்பாரித் தவ்லதைன் (200 - 202)
இவர்களைப் பற்றிய சில வறளாற்றாசிரியர்களின் கருத்து.
 இமாம் மக்ரீசி (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
இந்த ஆட்சியாளர்கள் அவர்களுடைய காலப் பகுதியில் பல பித்அத்தான கொண்டாட்டங்களையும் பிறந்தநாள் விழாக்களையும் புதிதாக உண்டாக்கிணார்கள். அவைகளுள்; மவ்லித் நபி, மவ்லித் அலி, மவ்லித் பாதிமா, மவ்லித் ஹஸன், மவ்லித் ஹுஸைன், அந்த சந்தர்ப்பத்தில் ஆட்சி செய்த அரசரின் மவ்லித் என்று பல கொண்டாட்டங்களைக் குறிப்பிடலாம்.... நூல் : அல் ஹிதத் : (2/436)
 இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இந்த உபைதியாக்கள் பற்றி கூறுவதாவது : பெரும் செல்வந்த ஆட்சியாளர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் அநியாயம் இழைக்கக் கூடியவர்களாகவும் பண்பாட்டில் அழுக்கானவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களின் ஆட்சியில் பல பித்அத்கள், வெருக்கத்தக்க நிகழ்வுகள் உறுவெடுத்தன, குழப்பவாதிகள் அதிகரித்தனர், பக்குவமான அறிஞர்கள் குறைந்து காணப்பட்டனர். நூல் : தாரீஹுல் ஹுலபா ( 16/456)
 இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்கள் கூறியதாவது : நான் (எனது நூலில்) உபைதிய்ய ஆட்சியாளர்களில் யாறையும் குறிப்பிடவில்லை காரணம்; அவர்களின் ஆட்சி முறையற்றது..
மேலும் அவர்களின் பாட்டனார் ஓர் மஜூஸி, இவர்களை பாதிமிய்யா என்று பெயர்சூட்டியவர்கள் பொதுமக்களில் ஜாஹில்கள் என்று கூறியுள்ளார்
இந்த மவ்லித் கொண்டாட்டத்தை முதலில் ஓர் ராபிழி (ஷீஆ) தான் ஆரம்பித்தான் என்ற விடயம் பின்னால் வந்த மவ்லித் ஆதரவாளர்களுக்கு சங்கடமாக அமைந்த போது இதனை முதலில் ஆரம்பித்தவர் அரசர் முழப்பர் அபூ ஸஈத் என்பவர்தான் என்று எண்ணி இந்த கூற்றை இமாம் இப்னு கஸீர் தான் கூறினார் என்று அவரோடு இணைத்துக் கூறிவிட்டனர் மாறாக விடயம் அவ்வாறல்ல இமாம் அவர்கள் அந்த அரசர் பற்றி கூறுகையில் : அவர் ரபீஉல் அவ்வல் மாதத்தில் மல்லித் கொண்டாட்டத்தை விமர்சையாக எடுப்பார்கள்... என்றார். மாறாக அவர்தான் முதலில் ஆரம்பித்தார் என்று கூறவில்லை. நூல் : அல்பிதாயா வன்னிஹாயா (13/136-137)
இப்படிப்பட்டவர்களிடம் இருந்துதானா இந்த பித்ஆவை எடுக்க வேண்டும்...?
🔵 இது எப்படி முஸ்லிம்களிடையே வேகமாகப் பரவியது..?
அதற்குரிய முக்கிய காரணிகளில் ஒன்று கிறிஸ்தவர்களை சூழ வாழ்ந்த முஸ்லிம்கள் அதாவது கிறிஸ்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கொண்டாடியபோது முஸ்லிம்களும் நபி அவர்களின் பிறப்பைக் கொண்டாட நேர்ந்தமை.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இமாம் ஸஹாவி (ரஹ்) (மவ்லிதை ஆதரிக்கும் அறிஞர்) அவர்கள் கூறியதாவது ; சிலுவை வாசிகள் தங்களது நபி பிறந்த இரவை பெரும் விழாவாக எடுக்கின்றனர் என்றால் முஸ்லிம்கள் (தங்களது நபி பிறப்பை) கண்ணியப்படுத்துவதில் அவர்களை விட குறிப்பிடத்தக்கவர்கள், சிறந்தவர்கள். என்றார்
அதற்கு மறுப்பாக இமாம் முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் : நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டோருக்கு மாற்றம் செய்ய ஏவப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள். நூல் : அல்மவ்ரிதுர் ரவி பில் மவ்லிதின் நபவி (29)
🔵 நபி (ஸல்) அவர்கள் எப்பொழுது பிறந்தார்கள் என்ற சரியான தகவல் உண்டா..?
 இது விடயத்தில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, காரணம் நபி அவர்களின் பிறந்த தினத்தைப் பற்றி வந்திருக்கும் பல அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமற்றவை. கிட்டத்தட்ட எட்டு நிலைப்பாடுகள் அறிஞர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அஸ்ஸீரா அந்நபவிய்யா(1/199) பார்க்க
அதிலும் ஹதீஸ்களையுடன் தொடர்புள்ள வரலாற்றாசிரியர்கள் ரபீஉனில் அவ்வல் பிறை 08 ல் பிறந்தார்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
 இமாம் இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறுவதாவது :  இதைத்தான் அல் ஹாபில் முஹம்மத் பின் மூஸா ஹுவாரஸ்மி (ரஹ்) அவர்கள் தேர்வு செய்துள்ளார்கள். காரணம் இமாம் மாலிக் அவர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் இதனை அறிவித்துள்ளார்கள்.  நூல்: அஸ்ஸீரா அந்நபவிய்யா : (1/199)
 வானவியல் ஆய்வளர்கின் கருத்துப்படி ரபீஉனில் அவ்வல் பிறை 9ல் பிறந்தார்கள் என்று உஸ்தாத் முஹம்மத் ஹில்ரி மற்றும் ஷெய்ஹ் முபாரக் பூரி போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நூல் : நூருல் யகீன் பீ ஸீரதி ஸெய்யிதில் முர்ஸலீன் (09), அர்ரஹீகுல் மஹ்தூம் (44)
 பிறை 12 என்பது பிரபலமான கருத்து, பல அறிஞர்களது கருத்தும் கூட , உ+ம் இப்னு இஸ்ஹாக் (ரஹ்) நூல் : அஸ்ஸீரா அந்நபவிய்யா : (1/199)
ஆகவே இது தொடர்பாக ஓர் ஸஹீஹான சான்று இல்லாமல் எப்படி பிறை 12 எனக் குறிப்பிடுவது...?
அப்படியே 12 நாம் குறிப்பிடுவோமாயின் அதே போன்று பல அறிஞர்களின் பிரபலமான கருத்துதான் நபி அவர்கள் இறந்ததும் அதே பிறை 12 ரபீஉனில் அவ்வல் மாதம் என்பது. இந்த நாளில் சந்தோசப்படுவதா அல்லது கவலைப் படுவதா...? ஸஹாபாக்கள் நபி பிரிந்த நாளில் எப்படி இருந்தார்கள்..?
அந்த வகையில் இக் கொண்டாட்டத்தில் அறியாமை காரணமாக ஈடுபடும் மக்களை அல்லாஹ் நல்வழிப் படுத்துவானாக...!
நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக...! ஆமீன்

சற்று சிந்திப்போம் நடுநிலை தவறாமல்.
                                                                                                          தொகுப்பு ;
                                                                                              Ahsan Ibnu Asman Muhajiri

நாம் நாள் தோறும் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அவைகளில் சில நேரங்களை வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நேரங்களை உலகக் காரியங்களுடன் தொடர்புடையவைகளாக ஆக்கியிருக்கின்றோம். இந்தடிப்படையில் நாம் செய்கின்ற வணக்கங்களுடன் சம்பந்தப்பட்ட காரியங்களையும் பிரித்துக் காட்டுவது இந்த நிய்யதாகும்.

நாம் செய்கின்ற வணக்கங்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தால் நிய்யத் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன…”
(புஹாரி முஸ்லிம்)

எனவே இக்கட்டுரையின் மூலமாக நிய்யத் என்றால் என்ன? அதனுடைய சரியான இடம் என்ன? சமூகத்தில் இந்த விடயத்தில் காணப்படுகின்ற பித்அத்கள் என்ன? என்பதை தெளிவுபடுத்தலாமென நினைக்கிறேன்.

நிய்யத் என்றால் என்ன ?

மொழி ரீதியாக நிய்யத் ( نية ) என்ற சொல் நவா ( نوى ) என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். நவா என்றால் எண்ணினான் என்பது பொருளாகும். நிய்யத் என்றால் நாடுதல் என்பது பொருளாகும்.

(பதாயிஉஸ் ஸனாயிஃ 1/127 ) (ஜாமிஉல் உலூம் வல்ஹுகும் பக்கம் 15)
மார்க்க ரீதியாக நிய்யத் என்பதன் விளக்கத்தை இமாம்கள் பின்வருமாறு தெளிவு படுத்துகின்றார்கள்.

இமாம் இப்னு ஆப்தீன் என்பவர் சொல்லும் போது, “நிய்யத் என்றால் ஒரு செயலை செய்கின்ற போது அதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதாகவும் கட்டுப்படுவதாகவும் நாடுதல். (ஹாஷியா : 1/105)

இமாம் நவவி றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள் “நிய்யத் என்றால் ஒரு பர்ளையோ அல்லது ஏதாவது ஒன்றை செய்யும் போது உள்ளத்தினால் உறுதி கொள்வதாகும். (அல் மஜ்மூஃ 1/353)

இப்படி ஒவ்வொரு இமாம்களும் விளக்கம் சொல்லியிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட இந்த விளக்கங்கள் யாவும் உணர்த்துகின்ற பொருள் உள்ளத்தினால் நாடுவதாகும்.

நிய்யத்தினுடைய இடம் என்ன ?

இன்று சமூகத்தில் இருக்கின்ற மார்க்க சட்டதிட்டத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றுதான் நிய்யத்தினுடைய சரியான இடம் எதுவென்பது பற்றியாகும். அதிகமான உலமாக்கள் சொல்லக் கூடிய விளக்கம் நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளமாகும். (அல் பதாவா அல் குப்ரா 2/95) (அதபுத் துன்யா வத்தீன்- பக்கம் 18)

இந்த வாதத்தினை முன்வைப்பவர்கள் அல்குர்ஆனில் உள்ளத்துடன் சம்பந்தப்பட்டு வருகின்ற (7:179)(6:25)(22:46) ஆகிய வசனங்களை ஆதாரமாக காட்டுவதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸூன்னாவிலிருந்தும் “உடலில் ஒரு சதைப் பகுதி இருக்கிறது. அது சீராகினால் உடல் முழுதும் சீராகி விடும் அது கெட்டு விட்டால் உடல் முழுதும் கெட்டுவிடும் அதுதான் உள்ளமாகும். (புஹாரி :52) (முஸ்லிம் :1599)

என்ற ஹதீஸினைக் கூறுகின்றார்கள். இந்தடிப்படையில் எல்லா நடவடிக்கைகளையும் தீர்மானிப்பது உள்ளமாகத்தான் இருக்கின்றது. எனவே நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளமாகும் எனக் கூறுகின்றனர். இன்னும் சில இமாம்கள் நிய்யத்தினுடைய இடமாக தலைக்கும் உள்ளத்திற்கும் இடைப்பட்ட பகுதி எனக் கூறுவதன் மூலம் வாயினால் மொழிவதை சூசகமாகக் கூறுகின்றார்கள். (தப்யீனுல் ஹகாயிக் 4/32) (அல் பஹ்ருல் முஹீத் 1/122)

என்றாலும் இவர்களுடைய வாதம் ஏற்றுக் கொள்ள முடியாததாகக் காணப்படுகின்றது. எனவே நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளமாகும்.
நிய்யத்தை வெளிப்படையாக மொழிவதன் சட்டம்: நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளம் என்பதில் அதிகமான உலமாக்கள் ஏகோபித்திருந்தாலும் வாயினால் மொழிவதன் சட்டத்தில் சிலர் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.

சில உலமாக்கள் வாயினால் மொழிவதென்பது மார்க்கம் சொல்லித் தராத விடயமாகும் என்று கூறுகின்றனர். இப்படியே இமாம் இப்னு தைமியா ரஹிமகுல்லாஹ் அவர்கள் அல் பதாவா அல் குப்ரா (1/214) என்ற நூலிலும் அல் புரூஃ (1/139) என்ற நூலிலும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இப்படி மார்க்கம் சொல்லித் தராத காரியம் என்று சொல்லக்கூடிய உலமாக்களில் சிலர் ஹஜ்ஜுடைய நேரத்தை மாத்திரம் அதிலிருந்து விதிவிலக்களிக்கின்றார்கள். இதல்லாத மற்றைய வணக்கங்களுக்கான நிய்யத்தை வாயினால் மொழிவதை பித்அத் என்று சொல்கின்றனர். (அல் இக்னா 1/24)

இவ்வாறு ஹஜ்ஜினுடைய நிய்யத் விடயத்தில் விளக்கம் சொல்லக்கூடிய உலமாக்கள் அதனை இரகசியமாக செய்வதே விரும்பத்தக்கது என்றும் கூறியிருக்கின்றார்கள். இது முதலாவது சாராரது வாதமாகும்.

இன்னும் சில உலமாக்கள் எல்லா அமல்களது நிய்யத்தையும் வாயினால் மொழிவது விரும்பத்தக்க காரியம் என்கின்றனர். இவ்வாறு சொல்லக்கூடியவர்கள் யாரென்றால் இமாம் அபூ ஹனிபா றஹிமஹுல்லாஹு அவர்களைப் பின்பற்றக்கூடியவர்களும் (ஹாஷியா 1/108) இமாம் ஷாபிஃ றஹிமஹுல்லாஹ் அவர்களை பின்பற்றுபவர்களுமே(மஜ்மூஃ 6/302)

இந்தக் கருத்தினை சொல்லக்கூடிய இந்த இரண்டு சாராரும் வாயினால்தான் மொழிய வேண்டும் என்று கூறவில்லை. மாற்றமாக வாயினால் மொழிவது விரும்பத்தக்கதே என்று கூறியிருப்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

▪இந்த இரண்டு சாராரும் வைக்கக்கூடிய ஆதாரங்கள்.

இரண்டாவது சாராரான நிய்யத்தை வாயினால் மொழிவது விரும்பத்தக்கது எனக்கூறக் கூடியவர்கள் ஹஜ் உம்ராவின் போது தல்பியாக்களை வெளிப்படையாக சொல்கின்றீர்களே எனவே நிய்யத்தை வாயினால் மொழிவதும் விரும்பத்தக்கதாகும் எனக் கூறுகின்றனர்.

உண்மையில் தல்பியா என்பது வேறு நிய்யத் என்பது வேறு. இவ்விரண்டுக்குமிடையே எந்தத் தொடர்பும் கிடையாது. நிய்யத் என்பது ஒன்றை செய்வதற்கு முன் அந்தக் காரியத்தை அந்தக் காரியத்தை செய்யப் போகின்றேன் என உள்ளத்தால் எண்ணுவதைக் குறிக்கின்றது. தல்பியா என்பதன் பொருள் பதிலளித்தல் என்பதாகும். அல்லாஹ் ஹஜ் உம்ராவை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டிருக்கிறான். 

எனவே ஹஜ் உம்ராவை நிறைவேற்ற அந்த இடங்களுக்கு வந்து அல்லாஹ்வுடைய கட்டளைக்கு பதிலளித்துவிட்டேன் என்று கூறுவது தல்பியாவாகும். எனவே தல்பியா என்பது ஒரு செய்யுகின்ற போது கூறுவது. நிய்யத் என்பது ஒரு செயலை செய்வதற்கு முன் எண்ணுவதைக் குறிக்கின்றது. எனவே யாரெல்லாம் ஹஜ் உம்ராவை நிய்யத்தினுடைய விடயத்துக்கு ஆதாரம் காட்டுகின்ற

                                                      
                                                                        மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget