மீலாது விழா ஓர் நடுநிலைப் பார்வை

நபி பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு பழைய பிரச்சினை என்றாளும் சமூகத்தில் ஆங்காங்கே புதிதாகப் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் இந்த கொண்டாட்டத்திற்க்கும் மார்கத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்பதை நடுநிலை தவறாமல் சில கேள்விகளை எழுப்பி பதில் தேடுவோம்.     
குறிப்பு : இங்கு அறிஞர்களின் கூற்றுகளை பதிவு செய்யும் போது (வஹ்ஹாபிகள் என்று அறியாமை காரணமாக சிலரால் அழைக்கப்படும்) உலமாக்களின் கூற்றுகளை முற்றாக தவிர்த்து ஏனைய உலமாக்களின் கூற்றுகளையே பதிவிடுவோம்.
🔵 நபிமொழிகளை அறிவிப்பு செய்த அறிவிப்பாளர்கள் யாராவது இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா..?
இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் அல்லது தாபிஉன்களில் யாராவது..? அல்லது ஸஹாபாக்களில் ஒருவராவது கொண்டாடினார்களா ..? சரி நபி (ஸல்) அவர்களாவது கொண்டாடிய அறிகுறிகள் இருக்கின்றனவா...?
எப்படி அப்பேர்பட்ட சமுகத்திற்க்கு வராத சிந்தனை எம்மில் சிலருக்கு வந்தது...?
🔵 இது பித்அத், இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது என யார்யார் கூறியுள்ளனர் (உலமாக்கள்)..?
மீலாது நபிக் கொண்டாட்டம் பித்அத் என்று கூறிய அறிஞர்கள்.
 இமாம் ஷாதிபி (ரஹ்( , நூல் அல்இஃதிஸாம் (1/34) | பதாவா அஷ்ஷாதிபி (203)
 இமாம் பாகிஹானி (ரஹ்) , நூல் அல் மவ்ரித் பீ அமலில் மவ்லித் (20-21)
 இமாம் இப்னுல் ஹாஜ் மாலிகி (ரஹ்) , நூல் : அல் மத்ஹல் (2/312)
 இமாம் முகம்மத் அல் ஹப்fபார் மாலிகி (ரஹ்) , நூல் அல்மிஃயாருல் முஃரிப் வல்ஜாமிஉல் முக்غரிப் (7/99-100)
 ஷெய்ஹ் அல் பஷீர் அல் இப்ராஹீமி (ரஹ்) நூல் : ஆஸாருல் அல் பஷீர் அல் இப்ராஹீமி (2/341)
 ஷெய்ஹ் முஹம்மத் அல் கஸாலி அவர்கள் கூறுவதாவது : இவ்வாறான கொண்டாட்டங்களை நிலைநாட்டுவதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதென்பது அடிப்படை இல்லாத வனக்கமாகும்.... அந்த வகையில் நாம் இந்தக் கொண்டாட்டங்கள் மற்றும் இவைகளின் விதங்களைப் பொருத்தமட்டில் பித்அத்துக்கள் என்ற பொதுவான சட்டத்தின் பக்கமே செல்கிறோம். அவைகள் காரணங்கள் சொல்லப்பட விடாமல் ஒழிக்கப்பட வேண்டும்..... இவைகளை முழுமையாக இல்லாமலாக்குவது ஆன்மீக லவ்கீக கடப்பாடு.... நூல் : லைஸ மினல் இஸ்லாம் (252)
 ஷெய்ஹ் யூஸுப் கர்ழாவி அவர்கள் இது தொடர்பாக பேசிய உரைகளைப் பார்க்கும் போது "இது மார்க்கத்தில் உள்ள வணக்கம் அல்ல, மாறாக அரசியல் நோக்கங்களுக்காக இஜிப்டில் பாதிமிய்ய காலகட்டத்தில் மக்களை அரசியல் விடயங்களில் ஈடுபடாமல் தடுக்கக் கையாண்ட யுத்தி என்று கூறுவதைக் காணலாம். (Al Jazeera)
🔵 இதை ஆதரிக்கும் உலமாக்களே ஏதேனும் இது தொடர்பாக விமர்சனங்கள் செய்துள்ளனரா...?
ஆம்.....
மவ்லித் நபி கொண்டாட்டத்தை ஆதரிக்கும் தரீகத்து ஷெய்ஹு மார்களில் ஒருவரான ஷெய்ஹ் #அப்துல்லா_அல்குغமாரி அவர்கள் கஸீததுல் புர்தா புகழ் பாடலுக்கு (ومن علومك علم اللوح والقلم) அதாவது மறைவான அறிவை அறியும் சக்தி நபி வர்களுக்கு உண்டு என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ள கவியடிக்கு மறுப்பத் தெரிவிக்கையில்
 நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைப் புகழும் நபர் மார்க்கத்தில் உறுதியில்லாத வற்றைக் கொண்டு புகழ் பாடுவதன் மூலம் பொய்யனாகி விடுகிறார், அத்தோடு நபி அவர்கள் "என் மீது வேண்டுமென்றே பொய்யுரைத்தவன் நரகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்" என்ற எச்சரிக்கைக்குள்ளாகி விடுவான்.....
அந்தவகையில் மவ்லித் புத்தகங்களில் காணப்படும் அடிப்படையற்ற அளவுகடந்த புகழாரங்களான மிஃராஜ் சம்பவம் போன்ற அம்சங்கள் எரிக்கப்பட்ட வேண்டும், அதனுடையவர்கள் அவைகளை வாசிப்பவர்கள் நரகில் எரிக்கப்படாமல் இருப்பதற்காக...... நூல் : முல்ஹக் அன் கஸீததில் புர்தா (77)
🔵 இதனை ஆதரித்து அறிஞர்கள் பத்வாக்கள் வழங்கியுள்ளனரா..?
இதனை ஆதரித்து பல அறிஞர்கள் தவறுதலாக தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர்... அவர்களை மதிக்கிறோம் கண்ணியப்படுத்துகிறோம்
 அவ்வனைத்து அறிஞர்களும் தற்காலத்தில் அரங்கேற்றப்படும் நிகழ்வுகளை ஆதரிக்கவில்லை மாறாக அவைகளை விமர்சித்துள்ளார்கள். அத்தோடு அவர்கள் அனைவரும் இது நபி அவர்களின் காலத்திலோ ஸஹாபாக்கள் மற்றும் தபிஈன்கள் காலத்திலோ காணப்படவில்லை என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தவறுகள் இன்றி அதை நிலைநாட்டுவது பித்ஆ ஹஸனா (நல்ல பித்ஆ) என்று கூறியுள்ளனர்[ உ+ம் இமாம் இப்னு ஹஞர் அஸ்கலானி, இமாம் ஸஹாவி, இமாம் ஸுயூதி (ரஹ்)]
நூல் : அல்பதாவா அல்குப்ரா (1/196)
அஸ்ஸீரா அல் ஹலபிbய்யா (1/83-84)
ஹாவி லில் பதாவா (1/229)
 பித்ஆ ஹஸனா என்று கருதி அனுமதி வழங்கிய உலமாக்கள் பொருத்தமட்டில் முந்தைய உலமாக்களின் பார்வையில் அவர்கள் தவறிழைத்தவர்களாவர்.
காரணம் மார்க்கத்தில் நல்ல பித்ஆ என்பது கிடையாது. இதைப்பற்றி ஸஹாபாக்கள் தொடக்கம் பல அறிஞர்கள் எச்சரித்துமுள்ளனர்.
ஏன் இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூட இது பற்றி கூறியதாவது ; "மார்க்கத்தில் பித்அத் என்பது கெட்ட விடயமே மாறாக மொழிரீதியாக பார்த்தால், எந்த ஒரு முன்னுதாரணமும் இல்லாமல் புதிதாக உறுவாக்கப்பட்டவை அது நல்லதோ கெட்டதோ பித்ஆ என்று சொல்லப்படும்." நூல் : பத்ஹுல் பாரி (13/253)
🔵 சிலர் இதற்கு சில குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸுகளில் ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறுகின்றனரே..?
அப்படி சொல்வோர் பொதுப்படையாக வந்த வசனங்களை வைத்து இது தான் இதறகு ஆதாரம் என்று எந்த ஒரு அறிஞரின் விளக்கங்களையும் மேற்கோள் காட்டாமல் தாமாகவே புரிந்து கொண்டு பேசுவார்கள்.
அப்படி யாரையாவது ஓர் அறிஞராவது இதற்கு இதுதான் விளக்கம் என்று சொல்லியுள்ளாரா என்று கேட்டால் அதற்கு பதில்கிடைப்பதில்லை.
ஸஹாபாக்கல் புரியாத விளக்கத்தையா இது விடயத்தில் இவர்கள் புரிந்தது விட்டார்கள்...?
🔵 அப்படி என்றால் இந்த பித்ஆவை யார் முதலில் உருவாக்கியது..?
மவ்லித் நபி கொண்டாட்டத்தின் துவக்கம்.
 இக் கொண்டாட்டம் முதலில் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பாதிமிய்யாக்கள் என்று தன்னை மக்கள் மத்தியில் பொய்யாக அறிமுகப்படுத்திய மஜூஸிய வழி வம்சத்தைச் சேர்ந்த உபைதியாக்களாகும். நூல் : கிதாபுர் ரவ்ழதைன் பீ அஹ்பாரித் தவ்லதைன் (200 - 202)
இவர்களைப் பற்றிய சில வறளாற்றாசிரியர்களின் கருத்து.
 இமாம் மக்ரீசி (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
இந்த ஆட்சியாளர்கள் அவர்களுடைய காலப் பகுதியில் பல பித்அத்தான கொண்டாட்டங்களையும் பிறந்தநாள் விழாக்களையும் புதிதாக உண்டாக்கிணார்கள். அவைகளுள்; மவ்லித் நபி, மவ்லித் அலி, மவ்லித் பாதிமா, மவ்லித் ஹஸன், மவ்லித் ஹுஸைன், அந்த சந்தர்ப்பத்தில் ஆட்சி செய்த அரசரின் மவ்லித் என்று பல கொண்டாட்டங்களைக் குறிப்பிடலாம்.... நூல் : அல் ஹிதத் : (2/436)
 இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இந்த உபைதியாக்கள் பற்றி கூறுவதாவது : பெரும் செல்வந்த ஆட்சியாளர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் அநியாயம் இழைக்கக் கூடியவர்களாகவும் பண்பாட்டில் அழுக்கானவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களின் ஆட்சியில் பல பித்அத்கள், வெருக்கத்தக்க நிகழ்வுகள் உறுவெடுத்தன, குழப்பவாதிகள் அதிகரித்தனர், பக்குவமான அறிஞர்கள் குறைந்து காணப்பட்டனர். நூல் : தாரீஹுல் ஹுலபா ( 16/456)
 இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்கள் கூறியதாவது : நான் (எனது நூலில்) உபைதிய்ய ஆட்சியாளர்களில் யாறையும் குறிப்பிடவில்லை காரணம்; அவர்களின் ஆட்சி முறையற்றது..
மேலும் அவர்களின் பாட்டனார் ஓர் மஜூஸி, இவர்களை பாதிமிய்யா என்று பெயர்சூட்டியவர்கள் பொதுமக்களில் ஜாஹில்கள் என்று கூறியுள்ளார்
இந்த மவ்லித் கொண்டாட்டத்தை முதலில் ஓர் ராபிழி (ஷீஆ) தான் ஆரம்பித்தான் என்ற விடயம் பின்னால் வந்த மவ்லித் ஆதரவாளர்களுக்கு சங்கடமாக அமைந்த போது இதனை முதலில் ஆரம்பித்தவர் அரசர் முழப்பர் அபூ ஸஈத் என்பவர்தான் என்று எண்ணி இந்த கூற்றை இமாம் இப்னு கஸீர் தான் கூறினார் என்று அவரோடு இணைத்துக் கூறிவிட்டனர் மாறாக விடயம் அவ்வாறல்ல இமாம் அவர்கள் அந்த அரசர் பற்றி கூறுகையில் : அவர் ரபீஉல் அவ்வல் மாதத்தில் மல்லித் கொண்டாட்டத்தை விமர்சையாக எடுப்பார்கள்... என்றார். மாறாக அவர்தான் முதலில் ஆரம்பித்தார் என்று கூறவில்லை. நூல் : அல்பிதாயா வன்னிஹாயா (13/136-137)
இப்படிப்பட்டவர்களிடம் இருந்துதானா இந்த பித்ஆவை எடுக்க வேண்டும்...?
🔵 இது எப்படி முஸ்லிம்களிடையே வேகமாகப் பரவியது..?
அதற்குரிய முக்கிய காரணிகளில் ஒன்று கிறிஸ்தவர்களை சூழ வாழ்ந்த முஸ்லிம்கள் அதாவது கிறிஸ்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கொண்டாடியபோது முஸ்லிம்களும் நபி அவர்களின் பிறப்பைக் கொண்டாட நேர்ந்தமை.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இமாம் ஸஹாவி (ரஹ்) (மவ்லிதை ஆதரிக்கும் அறிஞர்) அவர்கள் கூறியதாவது ; சிலுவை வாசிகள் தங்களது நபி பிறந்த இரவை பெரும் விழாவாக எடுக்கின்றனர் என்றால் முஸ்லிம்கள் (தங்களது நபி பிறப்பை) கண்ணியப்படுத்துவதில் அவர்களை விட குறிப்பிடத்தக்கவர்கள், சிறந்தவர்கள். என்றார்
அதற்கு மறுப்பாக இமாம் முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் : நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டோருக்கு மாற்றம் செய்ய ஏவப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள். நூல் : அல்மவ்ரிதுர் ரவி பில் மவ்லிதின் நபவி (29)
🔵 நபி (ஸல்) அவர்கள் எப்பொழுது பிறந்தார்கள் என்ற சரியான தகவல் உண்டா..?
 இது விடயத்தில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, காரணம் நபி அவர்களின் பிறந்த தினத்தைப் பற்றி வந்திருக்கும் பல அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமற்றவை. கிட்டத்தட்ட எட்டு நிலைப்பாடுகள் அறிஞர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அஸ்ஸீரா அந்நபவிய்யா(1/199) பார்க்க
அதிலும் ஹதீஸ்களையுடன் தொடர்புள்ள வரலாற்றாசிரியர்கள் ரபீஉனில் அவ்வல் பிறை 08 ல் பிறந்தார்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
 இமாம் இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறுவதாவது :  இதைத்தான் அல் ஹாபில் முஹம்மத் பின் மூஸா ஹுவாரஸ்மி (ரஹ்) அவர்கள் தேர்வு செய்துள்ளார்கள். காரணம் இமாம் மாலிக் அவர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் இதனை அறிவித்துள்ளார்கள்.  நூல்: அஸ்ஸீரா அந்நபவிய்யா : (1/199)
 வானவியல் ஆய்வளர்கின் கருத்துப்படி ரபீஉனில் அவ்வல் பிறை 9ல் பிறந்தார்கள் என்று உஸ்தாத் முஹம்மத் ஹில்ரி மற்றும் ஷெய்ஹ் முபாரக் பூரி போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நூல் : நூருல் யகீன் பீ ஸீரதி ஸெய்யிதில் முர்ஸலீன் (09), அர்ரஹீகுல் மஹ்தூம் (44)
 பிறை 12 என்பது பிரபலமான கருத்து, பல அறிஞர்களது கருத்தும் கூட , உ+ம் இப்னு இஸ்ஹாக் (ரஹ்) நூல் : அஸ்ஸீரா அந்நபவிய்யா : (1/199)
ஆகவே இது தொடர்பாக ஓர் ஸஹீஹான சான்று இல்லாமல் எப்படி பிறை 12 எனக் குறிப்பிடுவது...?
அப்படியே 12 நாம் குறிப்பிடுவோமாயின் அதே போன்று பல அறிஞர்களின் பிரபலமான கருத்துதான் நபி அவர்கள் இறந்ததும் அதே பிறை 12 ரபீஉனில் அவ்வல் மாதம் என்பது. இந்த நாளில் சந்தோசப்படுவதா அல்லது கவலைப் படுவதா...? ஸஹாபாக்கள் நபி பிரிந்த நாளில் எப்படி இருந்தார்கள்..?
அந்த வகையில் இக் கொண்டாட்டத்தில் அறியாமை காரணமாக ஈடுபடும் மக்களை அல்லாஹ் நல்வழிப் படுத்துவானாக...!
நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக...! ஆமீன்

சற்று சிந்திப்போம் நடுநிலை தவறாமல்.
                                                                                                          தொகுப்பு ;
                                                                                              Ahsan Ibnu Asman Muhajiri

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget